Wednesday, January 6, 2010

எப்பிடி இவரால முடியுது ?

தமிழ்நாட்டில என்ன தப்பு நடந்தாலும் அதற்கு காரணம் யார்தெரியுமா? அது ரஜினியேதான் , இன்னும் கொஞ்ச நாட்களில் இது சட்டமூலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்படலாம். என்னதான் ரஜினியை தலை, வால்களிலிருந்து வாலில் இருக்கும் முடிகள்வரை விமர்சித்தாலும் எதற்கு எந்தப்பதிலும் சொல்லாமல் மௌனத்தையும் புன்னகையையும் பதிலாக கொடுக்கும் ரஜினியை பார்த்தால் வியப்பாக இருக்கும்.

காவிரி, ஒகேனக்கல் பிரச்சனையா? முதலாவதாக ரஜினியை கூப்பிடுவார்கள், வந்தால் குட்டையை கலக்குவது வராவிட்டால் முடிந்தவரை ரஜினியை கேவலப்படுத்துவது . சினிமா சம்பந்தபட்ட நிகழ்வுகளுக்கு ரஜினியை அழைப்பது, வராவிட்டால் திட்டுவது வந்தால் அவரது பேச்சில் குற்றம் கண்டுபிடித்து அதற்க்கு வேறு அர்த்தம் கற்பித்து ரஜினியை விமர்சிப்பது . ஈழப்போராட்டமா ரஜினியை அழைப்பது , வராவிட்டால் ரஜினிக்கு தமிழ் உணர்வில்லை என்று கூறுவது (இங்கு மட்டும்தான் வந்ததல் எந்த விமர்சனமும் வரவில்லை). படம் தோல்விஎன்றால் பழியை தூக்கி ரஜினிமீது போடுவது , ரஜினி காசு திருப்பிகொடுத்தாலும் அதையும் விமர்சிப்பதென்று ஒரே குஷ்டமப்பா சாரி கஷ்டமப்பா. அதுதவிர ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்குகிறார், ரஜினி ஓமம் வளர்க்கிறார், யாகம் செய்கிறார் என நரிவெருட்டும் போதெல்லாம் ஏதாவதொரு செய்தியை போட்டு ரஜினியை வம்புக்கிழுப்பது இவர்களுக்கு வடிக்கையாகிப்போய்விட்டது. இந்த வரிசையில் ரஜினி ஜக்குபாய் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதையும் ஒருவழியாக கயிறு திரிச்சாச்சு.

இப்படி இவர்கள் ரஜினியை தாக்கும் நோக்கம் என்ன?

1 ) ரஜினியை பிடிக்காத சில நடிகர்களது வயித்தெரிச்சல்.

2 ) ரஜினியை அரசியலில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள்

3 ) ரஜினியை பிடிக்காத, மற்றும் ரஜினியை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டு பின்னர் அவரது அசுர வளர்ச்சிகண்டு தமது கருத்து தோற்றுப்போன விரக்தியில் இருக்கும் எழுத்தாளர்கள்.

4 ) ரஜினியிடம் கால்சீற் வாங்கமுடியாது தோற்றுப்போன இயக்குனர்கள்.

5 ) எப்படியென்றாலும் ரஜினியின் பேரை அடையில் போட்டால் காசு பாக்கலாம் என நினைக்கும் சில பத்திரிகைகள்.

என ஒரு குழுவே ரஜினியை குறிவைத்து கல்லாலடிக்க காத்திருக்கிறது. இவர்களுக்கு காவரியில் நீர் வருவதைவிட, ஒகேனக்கல் பிரச்சனயைவிட, இலங்கையில் யுத்த நிறுத்தத்தைவிட ரஜினி குறிப்பிட்ட போராட்டங்களுக்கு வருகிறாரா என்பதே முக்கியம். வராவிட்டால் ரஜினியை 'தமிழன்' இல்லை என்று விமர்சிப்பது, வந்தால் அவரது பேச்சில் குற்றம் குறை கண்டுபிடித்து ஊதிப் பெரிதாக்குவதென்று இந்தகுழு இதையொரு வேலையாகவே செய்கிறது. என்ன செய்வது 'காய்த்த மரம்தானே கல்லடி படும் ' , இதனால் இவர்களுக்கு என்ன லாபம் ? வேறொன்றுமில்லை நேரடியாக மோத துணிவில்லாவிட்டாலும் மறைமுகமாக குள்ளநரிகளைப் போலாவது மோதிவிட்டோமே என்றதொரு ஆத்ம திருப்திதான்.

ரசிகர்கள் கொதிப்படையும் இந்த சம்பவங்களை ரஜினி எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார் என்பது உண்மையில் ஆச்சரியமே, இதற்கும் ரஜினி ஒரு விழாவில் (சந்திரமுகி வெற்றிவிழாவில் ) குட்டிக்கதை மூலம் விளக்கியிருப்பார்.

ரசிகர்களுக்காக அந்தக் குட்டிக்கதை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின, அவை மலையேற ஆரம்பிக்கும்போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான் " என்று கூறினார் , உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது. சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் " மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்துவிட்டால் என்ன செய்யப்போகின்றன " என்றார், உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் " உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடையமுடிந்தது" என்று கேட்டார். அதற்கு அந்தத்தவளை கூறிய பதில் " எனக்கு காது கேட்காது " என்பதாகும். இந்தக் கதையா கூறிமுடித்த ரஜினி "அதேபோலத்தான் இந்த ரஜினிகாந்துக்கும் காது கேட்காது " என்றார்.

இந்தக் கதையிலிருந்து ரஜினி எந்தளவுக்கு பக்குவபட்டவர் என்பது புரிகிறதா? இன்று ரசிகர்களுக்கும் இதே பக்குவநிலைதான் வேண்டும்.போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் நாம் தலைவர் வழியில் நமது கடமையை சரியாக செய்வோம்.

இந்தப்பதிவை எழுத்தத்தூண்டியது வேறொருவலைப்பூவில் கிரி அவர்கள் எழுதிய பின்னூட்டமே.

18 வாசகர் எண்ணங்கள்:

கிரி said...

நீங்க கடைசியா (ரஜினி) கூறிய கதை தான் ரொம்ப பொருத்தம்.. :-)

பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறேன் ஆனால் அனைத்து நேரங்களிலும் அப்படி இருக்க முடிவதில்லை :-)

ஆனா எப்படியெல்லாம் யோசிக்கறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு! கோபமில்லை பழகி விட்டது :-))இந்த அனுபவம் கூட ரஜினியிடம் இருந்து கற்றதே!

பாசகி said...

கலக்கீட்டிங்க பாஸ்... ஆனா தலைவர் இதெல்லாம் கண்டுக்காம இருக்க பழகிக்கிட்டார், நாமளும் கொஞ்ச கொஞ்சமா அப்படி மாறிக்கணும்...

BOSS said...

very good u r right 100%
karurkirukkan.blogspot.com

haran said...

அதில நம்ம லோஷன் அண்ணாவும் அடக்கம் (வெற்றி FM அறிவிப்பாளர்

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

அது எப்படி? கடைசியா கேட்டக் கேள்வி மட்டும் அந்தத் தவளைக் காதுல விழுந்தது. குட்டம் சீ..குற்றம் கண்டுபிடித்தே சிலர் பேர் வாங்கிக்கிறாங்கப்பா....

இரா. கோபிநாத் said...

ரஜினி சொன்னாருங்கருதுக்காக எதை வேண்டுமானாலும் யோசிக்காமா நம்பிடுவீங்களா.... தவளைக்குத்தான் காது கேட்காதே... அப்புறம் எப்படி அது காது கேட்காதுன்னு பதில் சொல்லியிருக்கும்? ஊமை போய் கடையில கோல்கேட் கொடுங்கன்னு கேட்ட மாதிரி இருக்கு உங்க கதை.... அவர் சொன்னது வேற மாதிரி இருந்திருக்கலாம்.... எழுத்து வடிவத்தில் கொண்டு வந்தப்போ பிழையாயிருக்கும்னு நினைக்கிறேன்...

எப்பூடி ... said...

கிரி

// பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறேன் ஆனால் அனைத்து நேரங்களிலும் அப்படி இருக்க முடிவதில்லை :-) //

உண்மைதான், அவரது தியானம்தான் அவரது மிகப்பெரும் பலம் என்று நினைக்கின்றேன்

....................................

பாசகி

//கலக்கீட்டிங்க பாஸ்... ஆனா தலைவர் இதெல்லாம் கண்டுக்காம இருக்க பழகிக்கிட்டார், நாமளும் கொஞ்ச கொஞ்சமா அப்படி மாறிக்கணும்...//

முயற்சி பண்ணுவோம்

....................................

BOSS

//very good u r right 100%//

thanks

.....................................

haran

//அதில நம்ம லோஷன் அண்ணாவும் அடக்கம் (வெற்றி FM அறிவிப்பாளர்//

இந்த ஆட்டத்துக்கு நான் வரல்ல.....

எப்பூடி ... said...

செந்தாரப்பட்டி பெத்துசாமி

//அது எப்படி? கடைசியா கேட்டக் கேள்வி மட்டும் அந்தத் தவளைக் காதுல விழுந்தது. குட்டம் சீ..குற்றம் கண்டுபிடித்தே சிலர் பேர் வாங்கிக்கிறாங்கப்பா....//

தவளை தனக்கு காது செவிடென்று கூறவில்லை, மாறாக காத்து கேட்காது என்று கூறியதன் அர்த்தம் தான் மற்றவர்களது எதிர்மறையான பேச்சுக்களை காதில் வேண்டவில்லை என்வதாகும்.

அப்படிப்பார்த்தால் "ரஜினிகாந்த்துக்கும்காது கேட்காது" என்று ரஜினி கூறியதன்படி ரஜினி என்ன உண்மையிலேயே காது கேலாதவரா?

குட்டம் சீ.. குற்றம் கண்டுபிடிக்கும்போது மப்பு மாதிரி சீ.. மக்கு மாதிரி இருக்கக்கூடாது

.........................................

இரா. கோபிநாத்

//ரஜினி சொன்னாருங்கருதுக்காக எதை வேண்டுமானாலும் யோசிக்காமா நம்பிடுவீங்களா....//


நான் உங்க கிட்ட "இங்க வாங்க இரா. கோபிநாத், நான் ரஜினி என்ன சொன்னாலும் நமபிடுவன்" என்று சொன்னமாதிரி ஞாபகம் எனக்கு இல்லை.

அது தவிர நியாயத்தை யாரு சொன்னாலும் நம்பலாம்.


// தவளைக்குத்தான் காது கேட்காதே... அப்புறம் எப்படி அது காது கேட்காதுன்னு பதில் சொல்லியிருக்கும்? ஊமை போய் கடையில கோல்கேட் கொடுங்கன்னு கேட்ட மாதிரி இருக்கு உங்க கதை....//

பாட்டி வடை சுட்ட கடையில கூடத்தான் நரி போய் காகத்தை "ஒரு பாட்டுப்பாடு " என்று கேட்கும், அப்பிடிப்பார்த்தால் காகத்துக்கு நரியின் பாசை விளங்குமா என்ன ?

தமிழில உதாரணத்துக்கு இப்படி ஆயிரம் கதைகள் இருக்கு, இவற்றுக்கு உதாரணக்கதைகள் என்று பெயர்.

// அவர் சொன்னது வேற மாதிரி இருந்திருக்கலாம்.... எழுத்து வடிவத்தில் கொண்டு வந்தப்போ பிழையாயிருக்கும்னு நினைக்கிறேன்...//

அவர் கூறிய அர்த்தம் இதேதான், உங்களுக்கு சந்தேகமென்றால் சந்திரமுகி வெற்றிவிழா vcd அல்லது dvd யில் போய் பாருங்க

velanaiTamilan said...

Well There is only one superstar in tamilcinema, and its non than our Rajini. We have alot to learn from this Man.

எப்பூடி ... said...

velanaiTamilan

//Well There is only one superstar in tamilcinema, and its non than our Rajini. We have alot to learn from this Man.//

thanks for your compliment.

R.Gopi said...

BOSS

Wonderful write-up on our Thalaivar...

What you have written here is all TRUE....

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றுவார் தூற்றலும், இவருக்கு ஒண்ணும் ஆகாது ஜி...

www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com

எப்பூடி ... said...

R.Gopi

//போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றுவார் தூற்றலும், இவருக்கு ஒண்ணும் ஆகாது ஜி...//

சில ஜென்மங்களுக்கு இது புரியாது.

ஞானப்பழம் said...

அவ்வளவு பெரிய ரஜினி ரசிகன் இல்லையென்றாலும் அவர் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.. மிகவும் அருமையான கதை!!

எப்பூடி ... said...

ஞானப்பழம்

//அவ்வளவு பெரிய ரஜினி ரசிகன் இல்லையென்றாலும் அவர் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.. மிகவும் அருமையான கதை!!//


நன்றி , கருத்துக்கள் சரியாக இறக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எல்லோருக்கும் வரவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட.....

பஹ்ரைன் பாபா said...

"" தமிழ்நாட்டில என்ன தப்பு நடந்தாலும் அதற்கு காரணம் யார்தெரியுமா? அது ரஜினியேதான் , இன்னும் கொஞ்ச நாட்களில் இது சட்டமூலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்படலாம் ""

""" இவர்களுக்கு காவரியில் நீர் வருவதைவிட, ஒகேனக்கல் பிரச்சனயைவிட, இலங்கையில் யுத்த நிறுத்தத்தைவிட ரஜினி குறிப்பிட்ட போராட்டங்களுக்கு வருகிறாரா என்பதே முக்கியம். வராவிட்டால் ரஜினியை 'தமிழன்' இல்லை என்று விமர்சிப்பது, வந்தால் அவரது பேச்சில் குற்றம் குறை கண்டுபிடித்து ஊதிப் பெரிதாக்குவதென்று இந்தகுழு இதையொரு வேலையாகவே செய்கிறது. என்ன செய்வது 'காய்த்த மரம்தானே கல்லடி படும் ' """

எப்பூடி ... said...

பஹ்ரைன் பாபா

நன்றி பாபா,

Siva said...

தப்பா நினைக்காதீங்க.என்னால முடியல. அந்தத்தவளை கூறிய பதில் " எனக்கு காது கேட்காது.அவங்கள்லாம் சொன்ன போது கேட்காத காது "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடையமுடிந்தது ?என்ற போது மட்டும் எப்படி கேட்டது?

ஐயையோ நான் தமிழன் said...

ஆரம்பத்தில் தலைவர் பற்றி (வம்பிழுக்கும்) விமர்சனங்கள் படிக்கும்போது ஆத்திரப்படுவேன். காலப்போக்கில் அவரே அவற்றை கண்டு கொள்வதில்லை என்று தெரிந்த பின்னர். பொறுமையை கடைப்பிடிக்க பழகி விட்டேன். இதுவும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது தான்.

"விடியும் வரை கத்தினாலும் தவளைக்கு தான் நஷ்டம் அதுபோல் எத்தனை விமர்சகர்கள் கத்தினாலும் அவரவர்க்கு தான் நஷ்டம்."

தலைவர் எப்போதும் வளர்ந்து கொண்டேதான் இருப்பார். அவர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)