Monday, January 4, 2010

சுகாஷினி என்னும் புதுமைப்பெண்.

ஜெயா டிவியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் திருமதி சுகாசினி மணிரத்தினம் 'ஹாசினியின் பேசும்படம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்,நான் பர்க்கத்தொடங்கிய நேரம் சுகாசினி தராசை வைத்து காமடி பண்ணும் நேரம்.வழமையாக ஜெயா டிவி பக்கம் போகாத ரிமோட் அன்று தவறுதலாக ஜெயா டிவி பக்கம் சென்றுவிட்டது. அன்று அவர் விமர்சனம் செய்தபடங்கள் 'பா' மற்றயது 'ஓடிப்போகலாமா' என்று நினைக்கிறேன் , அவர் நியாயதராசை கையில் எடுக்கும் போதுதான் பார்க்க தொடங்கியதால் விமர்சனத்தில் என்ன கூறினார் என்பது தெரியவில்லை.ஆனால் அவர் 'பா' படத்திற்கு இரண்டு மைனஸ் பாயிண்ட்டுகள் சொன்னார், உண்மையில் இவருக்கு மேல்மாடி பிசகி விட்டதுபோல் இருந்தது.

1 ) அமிதாப் நன்றாகத்தான் நடித்துள்ளார் ஆனால் எமக்கு இது புதிதில்லை, நாம் இது மாதிரி பாத்திரங்களை 'பதினாறு வயதினிலே' , அபூர்வ சகோதரர்கள்' போன்ற படங்களில் பார்த்துவிட்டோம். கமல் பண்ணினதோட பார்க்கும்போது அமிதாப் பாதிதான் பண்ணியிருக்கிறார்.ஆனாலும் ஒரு கமெர்சியல் நாயகன் இந்தளவு பண்ணியதே பெரியவிடயம்

2 ) ஹிந்திக்கு வேண்டுமானால் இவை புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழ், தெலுங்கில் இப்படி பல படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன, உதாரணமாக 'மொவுனராகம்' ext ..... என்று சொல்லிகொண்டே போகலாம், ஹிந்தியில் இப்படி ஒரு படம் வருவது இதுதான் முதல்த்தரம், இதுவும் ஒரு மைனஸ் பாயிண்ட்.

இவைதான் சுகாசினி கூறிய மைனஸ் பாயிண்ட்கள்.நான் 'பா' படம் இதுவரை பார்க்கவில்லை, ஆனால் 'பா'படத்தில் அமிதாப்பின் நடிப்பாற்றலை இதுவரை யாரும் விமர்சித்து பதிவெழுதி பார்த்ததில்லை. சரி அமிதாப் கமலை விட குறைவாகவே நடித்திருக்கட்டும் அது எப்படி மைனஸ் பாயிண்ட் ஆகும்? அது தவிர சுகாசினி எதற்கு கமலுடன் அமிதாப்பை ஒப்பிடவேண்டும்? அமிதாப் கமர்சியல் முகமூடியை கழற்றி எத்தனை நாளாச்சு? அமிதாப் தனது வயதுக்கு தகுந்த வேடங்களில் நடிப்பது போன்றா கமலாக இருக்கட்டும் ரஜினியாக இருக்கட்டும் (சாரி தலைவா) நடிக்கிறார்களா? முதல்முறையாக ஒரு மொழியில் வித்தியாசமான படம் வெளிவருவது எப்படி மைனஸ் பாயிண்ட் ஆகும்?சுகாசினி வழமையாகவே நல்லபடங்கள் , அல்லது நல்ல திறமையான நடிப்பாற்றல் உள்ள படங்கள் வந்தால் அவற்றை மணிரத்தினத்தின் படங்களுடனும், கமலின் படங்களுடனும் ஒப்பிட்டு விமர்சிப்பது வழக்கம், சிலசமயம் புதிய படங்களை இந்த இரு சிகரங்களுடனும் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் உண்டு. எதற்காக இந்த வேலை இவருக்கு? இவருக்கு மணியும், கமலும் முறையே கணவனும், சித்தப்பாவும்தான் அதற்காக இவரா மணிரத்தினத்தையும் , கமலஹாசனையும் எங்களுக்கு நினைவுபடுத்தவேண்டும் ? இவர் தன்னை மணிக்கும், கமலுக்கும் ஒரு பிரச்சார பீரங்கியாக காட்டிக்கொள்ள முனைவதுபோல் தெரிகிறது.

அது தவிர இவர்தான் பெண்களுக்கே முன்னுதாரணம் போலும், பெண்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவிப்பது தான்தான் என்பது போலும் பேசுவது ரொம்ப காமடியாக இருக்கும். இப்படித்தான் நாடோடிகள் பார்வையில் சமுத்திரக்கனியிடம் " இறுதியில் துரோகம் செய்யும் அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும் அடிப்பது போன்ற காட்சிகளில் பெண்ணை அடிக்காததுபோல எடுத்திருக்கலாமென்று நினைக்கிறேன், ஏனெனில் திரையரங்குகளில் ஆண்கள் அந்தப் பெண்ணுக்கு அடிக்கும் போது விசிலடிப்பது ஆணாதிக்கத்தை காட்டுவதாக இருக்கிறது "என்று கூறினார். எனக்கு புரியவில்லை அந்தக்காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்? அந்தப்பையனை அடித்துவிட்டு அந்தப்பொண்ணுக்கு புத்திமதி கூற சொல்கிறாரா? அது மட்டும் ஆணாதிக்கமில்லையா? இவரது கருத்து பெண்களை உயர்வாக காட்டுவதைவிட ஆண்களை மோசமானவர்களா காட்டுவதாகவே படுகின்றது.

இப்படி பல கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் பெண்களை உயர்வு படுத்துகிறாரோ இல்லையோ ஆண்களை சிறுமைப்படுத்தவே முற்பட்டிருக்கிறார், இதற்கு இன்னுமொரு உதாரணம் இவர் இயக்கியதாக கூறப்படும் இந்திரா படத்தில் நாயகியான இவரது தங்கை அனுஹாசனை பல ஆண்கள் அசிங்கம் செய்வது போன்ற காட்சியை எடுத்திருப்பார், இதன் மூலம் ஆண்களை வக்கிரம் பிடித்தவர்கள் போல் காட்டி தனது அற்பசந்தோசத்தை வெளிக்காட்டியிருப்பார்.

பெண்களுக்கு முன்னுதாரணங்கள் பலபேர் இருக்கிறார்கள். அன்னை தெரேசா, அன்னை இந்திரா, மாக்கிரட் தச்சர், பெனாசிர் பூட்டோ... என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் மணிரத்தினம், கமலஹாசன் என்னும் இரண்டு சாதனை ஆண்களின் பின்னால் இருந்துகொண்டு தான்தான் பெண்ணினத்திற்கே காவல் என்பது போன்ற இவரது நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமானவை . அதுதவிர இன்றைய பெண்கள் சுஹாசினியின் கருத்து கேட்டுத்தான் தம்மை ஆணாதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டிய நிலையில் இல்லை. இவரைவிட சுயமாக சொந்தக்காலில் நிற்கும் , சுயமாக போராடி தலைமைதத்துவத்தை வகிக்கும் பெண்கள் இன்று அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் என்பதை மேதகு சுகாசினி அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுதவிர எல்லா ஆண்களையும் வக்கிரகாரர்களாகவும் பெண்ணாதிக்கம் உடையவர்களாகவும் சித்தரிப்பதையும் தயவுசெய்து நிறுத்துங்கள். காலம் மாறிவிட்டது இன்னமும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து குப்பை கொட்டாதீர்கள்.

21 வாசகர் எண்ணங்கள்:

கிரி said...

இவங்க விமர்சனம் மிக கேவலமாக இருக்கிறது.

ஒரு படத்தை பற்றி பேசும் போது குறிப்பாக பா போன்ற படங்களை பற்றி பேசும் போது..இதைப்போல அறிவுகெட்டத்தனமான ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் கூறியது போல அமிதாப் தன் வயதுக்குரிய படங்களில் நடிக்கிறார், இதற்க்கு என்ன பதில் கூறுவார் விமர்சன மேதை சுகாசினி.

ஸ்ரீநி said...

http://sangadhi.blogspot.com/2009/12/blog-post_13.html

Indhaa thala padhivu, nee kttu naan kudkkaalaenna ???

ஸ்ரீநி said...

thala ivarin vimarsanathil deepak masandhin saayalum, thuli tim sebastian saayalum iruppadhu paartheergalendraal theriyum.

Adha vida indha tharasula coin vilra satham kettaa yenakku " aaaaayaaaaaaaaaa " nndra ninaivu varum

சதீஷ் said...

//இவர் தன்னை மணிக்கும், கமலுக்கும் ஒரு பிரச்சார பீரங்கியாக காட்டிக்கொள்ள முனைவதுபோல் தெரிகிறது//
அப்படி தெரியுரதெல்லாம் இருக்கட்டும்.
'ஹாசினியின் பேசும்படம்' - இந்த நிகழ்ச்சிக்கு ஒலக பிளாக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு இடுகை போட்டு நீர் இதற்கு பி.பீ. ஆகிவிட்டீரே!!!!!!!

சரவணன். ச said...

பாவம் மனிரத்தினம்
எப்படி இத கட்டி மேய்கிறாரோ....
இந்த லிஸ்டில் ரேவதி, ரோகினி & ராதிகாவியும் சேத்துக்கொள்ளுங்கள்

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//நீங்கள் கூறியது போல அமிதாப் தன் வயதுக்குரிய படங்களில் நடிக்கிறார், இதற்க்கு என்ன பதில் கூறுவார் விமர்சன மேதை சுகாசினி.//

சரியாக சொன்னீர்கள், அமிதாப்பை விமர்சிக்கும் அளவிற்கு இவர் என்ன பெரிதாய் சாதித்து விட்டார்?

.....................................

ஸ்ரீநி

//thala ivarin vimarsanathil deepak masandhin saayalum, thuli tim sebastian saayalum iruppadhu paartheergalendraal theriyum.

Adha vida indha tharasula coin vilra satham kettaa yenakku " aaaaayaaaaaaaaaa " nndra ninaivu varum//

எனக்கு இவரதி காயின் புதிய படங்களுக்கு போடும் வாய்க்கரிசி போல இருக்கும்

....................................

Sathish

//அப்படி தெரியுரதெல்லாம் இருக்கட்டும்.
'ஹாசினியின் பேசும்படம்' - இந்த நிகழ்ச்சிக்கு ஒலக பிளாக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு இடுகை போட்டு நீர் இதற்கு பி.பீ. ஆகிவிட்டீரே!!!!!!!//

ஓகோ நீங்கள் தான் சுகாசினியின் பிரச்சார பீரங்கியா? ஹி ஹி ஹி...

.................................

சரவணன். ச

//பாவம் மனிரத்தினம்
எப்படி இத கட்டி மேய்கிறாரோ....
இந்த லிஸ்டில் ரேவதி, ரோகினி & ராதிகாவியும் சேத்துக்கொள்ளுங்கள்//

நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி இவர்களில் ராதிகா கொஞ்சம் பரவாயில்லை , அதுக்காக என்னை ராதிகாவின் பிரச்சார பீரங்கி என்று சொல்லிவிடாதீர்கள் ....ஹி ஹி ....

hayyram said...

realy gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com

Vasanth said...

இவங்களுக்கு பெரிய அறிவுஜீவினு நெனப்பு.. பல சமயம் கடுப்பாகியிருக்கேன்.. சமீபத்துல கூட ஏதோ ஒரு பொது நிகழ்ச்சியில ஏ.ஆர்.ரகுமான புதுசா introduce பண்ற மாதிரி ஓவர் பில்ட் அப்.. உங்களுக்கு இணையா தமிழ் சினிமாவுல சாதனை பண்ணவங்கனு ஒரு நாளு பேரு பேர மட்டும் சொன்னாங்க.. காமெடி என்னானா அதுல இளையராஜா, எம்.ஜி.ஆர், ரஜினி இருந்த மாதிரி ஞாபகம் இல்ல!!

அ.ஜீவதர்ஷன் said...

hayyram

//realy gud. continue//

thanks, i,ll come there.

....................................

சேலம் வசந்த்

//இவங்களுக்கு பெரிய அறிவுஜீவினு நெனப்பு.. பல சமயம் கடுப்பாகியிருக்கேன்.. சமீபத்துல கூட ஏதோ ஒரு பொது நிகழ்ச்சியில ஏ.ஆர்.ரகுமான புதுசா introduce பண்ற மாதிரி ஓவர் பில்ட் அப்.. உங்களுக்கு இணையா தமிழ் சினிமாவுல சாதனை பண்ணவங்கனு ஒரு நாளு பேரு பேர மட்டும் சொன்னாங்க.. காமெடி என்னானா அதுல இளையராஜா, எம்.ஜி.ஆர், ரஜினி இருந்த மாதிரி ஞாபகம் இல்ல!!//

ரகுமானை இவர் புருஷன்தானே அறிமுகம் செய்தது , அதுதான் அந்தபில்டப் . இவர் சொல்லித்தான் இளையராஜா, எம்.ஜி.ஆர், ரஜினி போன்றவர்களை மக்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை . இளையராஜாவை காலம் உரிய இடத்தில் நிச்சயம் வைக்கும் என்பதால் அவரைப்பற்றி விமர்சிப்பவர்களையும், கண்டு கொள்ளாமல் விட்டவர்களையும் மறப்போம்.

Henry J said...

தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

ஜெட்லி... said...

:)

வந்தியத்தேவன் said...

சுஹாசினி கமலுடன் கதைப்பதில்லை. கமலின் பொன்விழா நிகழ்ச்சிகளில் கூட அவரோ அவரது தந்தை சாருஹாசனோ இல்லை மணிரத்னமோ கலந்துகொள்வதில்லை. இவர் சில படங்களுக்குச் செய்யும் விமர்சனங்கள் உலக மகா மொக்கையாக இருக்கும்.

அ.ஜீவதர்ஷன் said...

ஜெட்லி

// :) //

உங்கள் வருகைக்கு நன்றி.

.......................................

வந்தியத்தேவன்

//சுஹாசினி கமலுடன் கதைப்பதில்லை. கமலின் பொன்விழா நிகழ்ச்சிகளில் கூட அவரோ அவரது தந்தை சாருஹாசனோ இல்லை மணிரத்னமோ கலந்துகொள்வதில்லை. இவர் சில படங்களுக்குச் செய்யும் விமர்சனங்கள் உலக மகா மொக்கையாக இருக்கும்.//

நீங்கள் சொல்வது சரி, ஆனாலும் சுகாசினி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமலை புகழ்வதை நீங்கள் இனிமேல் அவதானித்துப் பாருங்கள்.உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஏன் வாத்தியாரே அதைப் போய் பார்த்திங்க. ஒரு நல்ல டிரஸ் போட தெரியாம ஒழுங்கான அறிவு இல்லாம ஏதோ மணிரத்தினத்துக்கூட படுத்தா மட்டும் அறிவு வந்திருச்சுன்னு கிறுக்குதனமா உளரத போய் பெரிசா எடுத்துக்கிட்டா எப்படி.

நான் சூர்யாவை சின்ன வயசுலையே பார்தேதிருக்கேன் அப்படின்னு சொல்லி தனக்கும் சினிமாவை தெரியும் சொல்லிக்கிற பொம்பள அது. ஏதோ சமூக சீர்திருத்தம் பண்ண புரப்பிட்ட மாதிரி சீன் போட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கு.!

அ.ஜீவதர்ஷன் said...

ஜகதீஸ்வரன்

//ஏன் வாத்தியாரே அதைப் போய் பார்த்திங்க. ஒரு நல்ல டிரஸ் போட தெரியாம ஒழுங்கான அறிவு இல்லாம ஏதோ மணிரத்தினத்துக்கூட படுத்தா மட்டும் அறிவு வந்திருச்சுன்னு கிறுக்குதனமா உளரத போய் பெரிசா எடுத்துக்கிட்டா எப்படி.


நான் சூர்யாவை சின்ன வயசுலையே பார்தேதிருக்கேன் அப்படின்னு சொல்லி தனக்கும் சினிமாவை தெரியும் சொல்லிக்கிற பொம்பள அது. ஏதோ சமூக சீர்திருத்தம் பண்ண புரப்பிட்ட மாதிரி சீன் போட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கு.!//


:-)

Anonymous said...

சுஹா'சனி'யின் பேசும் படம்.
http://ilavarasanr.blogspot.com/2009/07/blog-post_27.html

thayavu senju padinga makkale!!!
Arumaiyana padhicvu eluthiyulla eppdu aasiriyaruku vaazhthukal.

அ.ஜீவதர்ஷன் said...

Ilavarasan.R


//Arumaiyana padhicvu eluthiyulla eppdu aasiriyaruku vaazhthukal.//

thanks

tamilanban said...

சுகாசினி ஒரு நாகரீகம் தெரியாதவள் பணம் என்னும் பசை தேடுபவள் அது எங்கு இருந்தாலும் ஒட்டிக்கொள்வாள் பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் தர குறைவாக விமர்சனம் செய்வாள் அது இருக்கட்டும் நீங்க ஏன் ஜெயா டி வி குபோனிங்க அதுவே பெரிய தவறு

எப்பூடி.. said...

farook

//சுகாசினி ஒரு நாகரீகம் தெரியாதவள் பணம் என்னும் பசை தேடுபவள் அது எங்கு இருந்தாலும் ஒட்டிக்கொள்வாள் பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் தர குறைவாக விமர்சனம் செய்வாள் அது இருக்கட்டும் நீங்க ஏன் ஜெயா டி வி குபோனிங்க அதுவே பெரிய தவறு//

விடுங்க பாஸ், ராவனாவில படத்தை மட்டும் விமர்சித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பார்த்த பெரிய மைனசே அம்மணியோட வசனம்தான், ஆனால் இவங்க மற்ற எல்லோரையும் விமர்சிபாங்க! தவறுதலா ரிமோட் அந்தப் பக்கம் போய்விட்டதென்று பதிவிலேயே எழுதியிருக்கிறேனே பாஸ் :-)

madrasminnal said...

oru dhadava suhasini jaya tv la sonnadhu "tamil maakkalukku theatre la padam paakkumbodhu decency paththala. mobile off panna maattaanga. adhanaaladhaan naan sathyam la padam paakkuren".ammaa suhasini thaaye, sathyam la padam paakkadhavan ellaam kaattuvaasiyaa?? cinema oru entertainment. mobile call vandha pesittu poraanga. onakku enna. avan amma,manaivi kooda rendu nimisham pesunaa dhesa dhrogamaa??. naangalum ulaga cinema paakravangadhaan. hasini pesum padhathula yaar vandhaalum, indha amma udane aaramibichidum... "andha gaalathula ennai maadhiri actors ellaam... andha gaalathula naan camera assistant work pannumbodhu... mani direct pannrappo.... chiranjeevi en friendu..." indha kosuva adichi verattungappaa...

எப்பூடி.. said...

siva

//oru dhadava suhasini jaya tv la sonnadhu "tamil maakkalukku theatre la padam paakkumbodhu decency paththala. mobile off panna maattaanga. adhanaaladhaan naan sathyam la padam paakkuren".ammaa suhasini thaaye, sathyam la padam paakkadhavan ellaam kaattuvaasiyaa?? cinema oru entertainment. mobile call vandha pesittu poraanga. onakku enna. avan amma,manaivi kooda rendu nimisham pesunaa dhesa dhrogamaa??. naangalum ulaga cinema paakravangadhaan. hasini pesum padhathula yaar vandhaalum, indha amma udane aaramibichidum... "andha gaalathula ennai maadhiri actors ellaam... andha gaalathula naan camera assistant work pannumbodhu... mani direct pannrappo.... chiranjeevi en friendu..." indha kosuva adichi verattungappaa...//

:-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)