Saturday, January 30, 2010

பரபரப்பில் யாழ்ப்பாணம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் இலங்கையின் கபினட் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவைகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுத்த மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு யாழ்மக்கள் ஓட்டுப்போடாததால் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளினால் மனமுடைந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் யாழ் குடாநாடு பரபரப்பாக உள்ளது.

இதனால் அவரது ஆதரவாளர்கள் கர்த்தாலை அனுஷ்டிக்கின்றார்கள் , இதன் பிரகாரம் இதுவரை யாழ்நகரில் பஸ் போக்குவரத்து எதுவும் இடம் பெறவில்லை, சந்தைகள் கடைகள் பூட்டப்பட்டுள்ளன, வியாபாரிக்க கடை வாசலில் என்ன நிலைமை என்று தெரியாமல் விழிபிதுங்க காத்திருக்கின்றனர். உண்மை நிலை தெரியாததால் வியாபாரிகள் கடைகளை திறப்பதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஒருபகுதியினர் கடைகளை திறக்க வேண்டாமென்று கூறியபோதும் இராணுவத்தினர் கடைகளை திறக்குமாறு வலியுறுத்துவதால் வியாபாரிகள் நிலை இருதலை 'கொள்ளி எறும்பாக' உள்ளது.

இன்று அலுவலகம் , பாடசாலைகல் இல்லை என்பதால் உத்தியோகஸ்தர்களும் , மாணவர்களும் கூட வீதிகளில் இல்லாமையாழ் யாழ்ப்பாணம் வெறிச்சோடி காணப்படுகிறது. அமைச்சர் 'டக்ளசின்' ராஜினாமா சம்பந்தமான உண்மை நிலையை முடிந்தவரை சிறிது நேரத்தின் பின்னர் இதே பதிவில் இணைகின்றேன்.

பிந்திய இணைப்பு

காலை ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பித்த பதற்றம் ஒன்பது மணிக்கு முடிவுக்கு வந்தது. யாழ் நகரின் பிரதான சந்தை தொகுதியான திருநெல்வேலிக்கு வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவரது ஆதரவாளர்களிடம் இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்தைகடைகள் திறக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ராணுவத்தால் கடைகள் திறக்கப்பட்டால் 'கர்த்தால்' செயலிழந்துவிடும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தானாக முன்வந்து கடைகளை திறந்து வைத்ததாகவும் பேச்சுக்கள் உள்ளன. அதேபோல கோண்டாவில் பஸ்டிப்போக்கு சென்ற டக்லஸ் தேவானந்தா அவர்கள் அங்கும் பஸ் சேவைகளை வழமைபோல ஆரம்பிக்குமாறு பணித்தார். இதனை தொடர்ந்து யாழ்குடாநாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.

7 வாசகர் எண்ணங்கள்:

giriraji said...

நடக்கும் என்பார் நடக்காது
பிறகு பிழைப்புக்கு என்னவழி

ஞானப்பழம் said...

கர்த்தால் - என்றால்?

mallari said...

பந்த்

எப்பூடி ... said...

giriraji

//நடக்கும் என்பார் நடக்காது
பிறகு பிழைப்புக்கு என்னவழி//

வேணாம் , வலிக்குது.

................................................
ஞானப்பழம்

//கர்த்தால் - என்றால்?//

கடைகள் அடைக்கப்படும் , பஸ் போக்குவரத்துக்கள் இருக்காது.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் , பாடசாலைகள் என்பன இயங்காது,யாரும் வீட்டை விட்டு வெளியே போகமாட்டார்கள்.முன்பெல்லாம் கர்த்தால் நடத்துபவர்களால் வீதிகளில் டயர்கள் எரிக்கப்படும்.

எப்பூடி ... said...

mallari

//பந்த்//

அட ஆமாங்க, உங்க பின்னூட்டத்த முதலே பாத்திருந்தா கஸ்ரப்பட்டு ஜோசிச்சு எழுதியிருக்க தேவையில்லை ஹி ஹி ஹி , நன்றி.

Atchu said...

அரசியல்வாதிகள் கோமாளிகள்.....

இவர்களுக்கு வேர வேலையே இல்லையா????

எப்பூடி ... said...

Atchu

//அரசியல்வாதிகள் கோமாளிகள்.....

இவர்களுக்கு வேர வேலையே இல்லையா????//


இந்த விளையாட்டுக்கு நான் வரலையப்பா...ஹி ஹி ஹி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)