Friday, January 29, 2010

ஜனாதிபதி தேர்தல் துளிகள்.
நிறையப்பேர் இது சம்பந்தமான பதிவுகள் போட்டலும் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கின்றேன்.

1 ) இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜானாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இரண்டுதடவைகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் சந்திரிக்காவிற்கு அடுத்து மஹிந்தவின் பெயர் இடம் பிடித்தாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது இதுதான் சாதனை, இதற்கு முன்னைய சந்திரிக்காவின் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டது.

2 ) தமிழர் பிரதேசங்களான யாழ்ப்பாணம் , வன்னி , திருகோணமலை, மட்டக்களப்பு , நுவரெலிய ,திகாடுமல்ல(முன்னைய அம்பாறை ) மாவட்டங்களில் (6/22) சரத் பொன்சேகரா வெற்றி பெற்றுள்ளார் .இவை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அவர் வெற்றி பெறவில்லை . ஆக மொத்தத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தமிழ் வாக்காளர்களால் கிடைத்த வெற்றி என்பதை அவரே மறுக்க மாட்டார்.

3 ) வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலுள்ள தமிழ்பேசும் மக்கள் தமிழ் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய 'சரத் பொன்சேகராவை' ஆதரித்தது தமிழ் மக்கள் இன்னமும் கூட்டமைப்பு மீது வைத்துள்ள நம்பிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது அவர்களுக்கு புரிந்தால் சரி.

4 ) அரச ஊடகங்களில் தேர்தலுக்கு முதல்நாள் முழுவதும் கூட்டமைப்பின் சம்பந்தனுடன் பிரபாகரன் இருக்கும் புகைப்படமும், பொன்சேகராவுடன் சம்பந்தன் இருக்கும் புகைப்படமும் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. அதுதவிர கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் வழங்கிய பேட்டியில் பொன்சேகராவுடன் தமது ஒப்பந்தம் சுயநிர்ணயம் சம்பந்தமானது என்று கூறியதும் மீண்டும் மீண்டும் ஒளிபரபபப்பட்டது.

5 ) தேர்தல் காலங்களில் அரசஊடகங்களும் அரசநிறுவனங்களும் தன்னை புறக்கணித்ததாக குற்றம் சாட்டியுள்ள தேர்தல் ஆணையாளர் தனக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார், இதனால் தன்னை ஓய்வுபெற்ற அனுமதிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.இதை போன்று சென்ற தேர்தலிலும் கேட்டிருந்தார்

6 ) பொன்சேகராவை ஜனாதிபதியாக்கிவிட்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தான் பிரதமராகி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜானாதிபதி முறைமையை ஒழித்து அதன் பின்னர் நாட்டின் தலைவராக தன்னை நிலை நிறுத்த திட்டம் தீட்டிய ரணில் விக்கிரமசிங்கவின் கனவு தகர்ந்து போனது. இதற்காகத்தான் 1948 இல் இருந்து சென்ற தேர்தல்வரை ஒவ்வொரு தேர்தலிலும் 'ஐக்கிய தேசிய கட்சி' யின் சின்னமாகவிளங்கிய யானை சின்னத்தையே 'ரணில்' கைவிட்டார் என்பது குட்டித்தகவல்.

7 ) யாழ்ப்பாணத்தில் ஓட்டுக்களை பிரிப்பதற்காக 30 கோடி ரூபா பெற்றுக்கொண்டதாக கிசுகிசுக்கப் பட்ட சிவாஜிலிங்கம் இலங்கை முழுவதும் 9682 வாக்குகளை பெற்றாலும் யாழ்ப்பாணத்தில் 3285 வாக்குகளை மாத்திரம் பெற்று பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து இனந்தெரியாத இரண்டு நபர்களளுக்கு அடுத்து ஐந்தாவதாக வந்துள்ளார். மொத்த இலங்கை என்று பார்த்தால் இவர் 9 ஆவது இடத்தில் வந்துள்ளார்.

8 ) யாழ்ப்பாணத்தில் மக்கள் ஓட்டுப்போடுவதை தடுப்பதற்காக குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்டாலும் வாக்களிப்பு குறைவாக இருந்தமைக்கு அது முக்கிய காரணமில்லை.கிட்டத்தட்ட 30 % வீதமானவர்களுக்கு ஓட்டுக்கள் வரவில்லை ( புதுப்பிக்க படவில்லை ) , அதேபோல கிட்டத்தட்ட 30 % ஆனவர்கள் உயிருடனோ அல்லது நாட்டிலோ இல்லை. மீதி இருந்தவர்களில் யாருக்கு போட்டுத்தான் என்ன என்றவர்களும், பஞ்சிப்பிடித்தவர்களும் , இந்திய குடியரசுதின சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் என்று ஒரு பகுதியினர் வாக்களிக்க செல்லவே இல்லை.

9 ) இலங்கையின் 'படித்தமக்கள்' என்று சொல்லப்படும் யாழ்ப்பாண மக்களால்தான் இந்த ஆண்டு அதிக செல்லாத ஓட்டுக்கள் போடப்பட்டன, 3 .65 % ஆன ஓட்டுக்கள் நிராகரிக்கப் பட்டவை. இதற்கு முக்கியகாரணம் மக்கள் குழப்பியடிக்கப்பட்டதே ஆகும். வாக்குசாவடிகளில் நின்ற சிலர் இந்த தடவை 'புள்ளடிக்கு' பதில் 'ஒன்றுதான்' போடவேண்டுமென்று தவறாக வழிகாட்டியதன் பெயரில் பிழையாக வாக்களித்தவர்கள்தான் நிராகரிக்கபட்ட வாக்குக்கள் அதிகரிக்க காரணமாக இருந்துள்ளார்கள்.

10 ) 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தால் வென்றுள்ளதால் என்னதான் முறைகேடுகள் என்று எதிர்கட்சிகள் துள்ளினாலும் மக்கள் கணக்கெடுக்கப் போவதில்லை. ஆனால் ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களிக்காததால் அவர் தங்கள் மீது கோபத்தில் இருக்கலாமென எண்ணி 'யாழ்மக்கள்' மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதை காணக்கூடியதாக இருக்கிறது, ஆனால் இதுவரை மோசமான சம்பவங்கள் ஒன்றும் வடக்கில் இடம்பெறவில்லை,இனியும் இடம்பெறாதென்றே தோன்றுகின்றது. இனிவரும் நாட்களில் அபிவிருத்தி பணிகளில் கவனம்செலுத்தி இலங்கை அமைதியான நாடாக கட்டி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார், நல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லதே.

4 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

///ஆனால் ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களிக்காததால் அவர் தங்கள் மீது கோபத்தில் இருக்கலாமென எண்ணி 'யாழ்மக்கள்' மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதை காணக்கூடியதாக இருக்கிறது, ///
நல்ல பண்புகளைக் கொண்டவர்கள் அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்கள்.. அதுவும் உங்கள் நாடு தற்போது இருக்கும் சூழலில் பாகுபாடு காட்டினால் அவருக்கு அவப்பெயரே வரும் என்ற விழிப்பும் அரசியில் தலைவர்களுக்கு இருக்கும்.. அதனால் தேர்ந்தெடுக்கப் பட்டோர் நல்லதே செய்வார்கள் என நம்பலாம்.. பத்திரிக்கையாளர்கள் விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் உங்கள் அரசு..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//பத்திரிக்கையாளர்கள் விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் உங்கள் அரசு..//

உண்மைதான் , இப்பொது ஒரு சுவிஸ் பெண் பத்திரிகையாளறது விசாவையும் ரத்து செய்து திருப்பி அனுப்பப்போகிறார்கள் .

ஞானப்பழம் said...

நல்ல வேளை அந்தப் பெண் காணாமல் போகாமல் 'இருக்கிறார்களே' என மகிழ்ந்துகொள்ளுங்கள்!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//நல்ல வேளை அந்தப் பெண் காணாமல் போகாமல் 'இருக்கிறார்களே' என மகிழ்ந்துகொள்ளுங்கள்!//

அந்த கலாச்சாரம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இல்லை, பார்க்கலாம் எதிர்காலத்தை

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)