Tuesday, January 26, 2010

இடக்கு முடக்கு பதில்கள்
விஜய்க்கு மட்டும் இன்று பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?
பதிவர்கள்பாடு கொண்டாட்டமாக இருந்திருக்கும் , 'பத்மஸ்ரீ'பாடு   திண்டாட்டமாக இருந்திருக்கும் 

--------[*,*]---------

 இளையராஜாவுக்கு 'பத்மபூஷன்' விருது கிடைத்தது பற்றி?

இளையராஜாவிற்கு 'பாரதரத்னா'வே போதாது, இது யானைப்பசிக்கு சோழப்பொரி போன்றது.

                                                                  --------[*,*]---------


விஜய் சொல்லித்தான் சூர்யா வீட்டில் ரெய்டு நடந்ததாக கூறப்படுவது உண்மையா?
சத்தியமா நம்புங்கப்பா !!! விஜய் அந்தளவுக்கு வொர்த்து இல்லை  , அப்புறம் விஜய் எப்பிடி இங்கிலீசில புகார் கொடுத்திருப்பார் ? 

                                                                --------[*,*]---------


 இலங்கையில நடக்கபோவது மகிந்த ஆட்சியா? அல்லது பொன்சேகர ஆட்சியா ?
உண்மையை சொல்லனுமின்னா 'ரணில்' ஆட்சிதான். 
 

                                                                 --------[*,*]---------

 பொன்சேகராவிற்குதான் ஆதரவு என 'சந்திரிக்காவின்' கடைசிநேர அறிவிப்பு பற்றி ?
லேற்றா சொன்னாலும் லேற்ரஸ்ரா சொல்லியிருக்கிறாங்க

                                                                  --------[*,*]---------


கலைஞர் 'ஜக்குபாய்' திரைப்படம் பார்த்தது பற்றி?
ராதிகாவுக்காகவா இல்லை ஷிரேயாவுக்காகவா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

                                                                      --------[*,*]---------

 சண் டிவியில இன்னமும் டாப் 10 படங்களில் 'வேட்டைக்காரன்' முதலாவது இடத்தில் இருப்பதை பற்றி?
இதாச்சும் பரவாயில்லை கலைஞர் டிவியில் இன்னமும் 'ஆதவன்'தான் முதலிடத்தில் உள்ளது.

                                                                     --------[*,*]---------

 பின்லேடனின் ஒபாமாவை அச்சுறுத்தி வெளியிட்ட ஒலிநாடா பற்றி?
அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு சிறந்த        ஒலியமைப்பிற்கான பிரிவில் 'பின்லேடனையும்' சேர்த்துள்ளார்களாம். 

                                                                    --------[*,*]---------

16 வாசகர் எண்ணங்கள்:

வெற்றி said...

:)))))

ஹாய் அரும்பாவூர் said...

சினிமா ,விளையாட்டு ,அரசியல் ,சமுகம் ,இப்போ நகைச்சுவை பல்சுவை தளம் எப்பூடி
எப்படி இப்படி அசராம எழுதுறிங்க எப்பூடி மீண்டும் அதே கேள்வி

வாழ்துக்கள்

chosenone said...

//விஜய்க்கு மட்டும் இன்று பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...?//

ஏன் கொடுக்க கூடாது ? கட்டாயமா கொடுப்பாங்க.!!!

அமெரிக்க அதிபர் ஒபாமா ,தீவிரவாத நாடுகளுக்கு sattalite மூலமா வேட்டைக்காரன் படத்தை free telecast பண்ண போகிறாராம் .
திவிரவாதிகளை படு கொடூரமா கொலை செய்ய இதை விட சிறந்த வழி கிடையாது என்பதால் அமெரிக்க செனட் சபை கூட இதற்கு அனுமதி வழங்கினர் .
அனால் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் இதை கடுமையாக எதிர்கிறார்கள் … என்னதான் தீவிரவாதியா இருந்தாலும்,யாரு பெத்த பிள்ளையோ ? இப்படி கொடூரமா மொக்கை போட்டு கொள்ள கூடாது என்பது அவர்களின் ஆதங்கம் .
இப்படி பட்டஒரு படத்தை கொடுத்த எங்கள் இளைய தலைவலிக்கு என் பத்மஸ்ரீ வழங்க கூடாது …
உள்ளூர் ரவுடிசத்தை மட்டும் இல்ல ….உலக திவிரவாதத்தை ஒரே படத்தில் அடக்கி காட்டிய எங்கள் இளைய தளபதி நிடோடி வாழ்க …..
இப்படி பட்ட எங்க “விசை” க்கு நோபெல் பரிசே கொடுப்பாங்க ….
ஆஆ வ்வ்வ்வவ்வ்வ்வ் ………..

chosenone said...

سوبر توبيك

Yoganathan.N said...

//விஜய்க்கு மட்டும் இன்று பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

பதிவர்கள்பாடு கொண்டாட்டமாக இருந்திருக்கும் , 'பத்மஸ்ரீ'பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும் //

எனக்கு தெரிந்த விஜய் ரசிகர் ஒருவர், இந்த விருது விஜய்கு 'almost confirmed' ஆகி விட்டது என்றார்.
'பத்மஸ்ரீ'கமல்ஹாசன், 'பத்மஸ்ரீ' மனோராமா, 'பத்மஸ்ரீ' தோட்டாதரணி - இந்த வரிசையில் 'பத்மஸ்ரீ' விஜய் என்று வந்திருந்தால், எப்படி இருந்திருக்கும்??? நினைத்து கூட பார்க்க முடியவில்லை... ஹிஹிஹி

Yoganathan.N said...

//விஜய் சொல்லித்தான் சூர்யா வீட்டில் ரெய்டு நடந்ததாக கூறப்படுவது உண்மையா?

சத்தியமா நம்புங்கப்பா !!! விஜய் அந்தளவுக்கு ஒத்தில்ல , அப்புறம் விஜய் எப்பிடி இங்கிலீசில புகார் கொடுத்திருப்பார் ? //

'ஒத்தில்ல' - என்றால் என்ன???

Yoganathan.N said...

//சண் டிவியில இன்னமும் டாப் 10 படங்களில் 'வேட்டைக்காரன்' முதலாவது இடத்தில் இருப்பதை பற்றி?

இதாச்சும் பரவாயில்லை கலைஞர் டிவியில் இன்னமும் 'ஆதவன்'தான் முதலிடத்தில் உள்ளது.//

இது 'டாப்'பு... இன்னும் சிரித்தபடியே இருக்கிறேன்...

Unknown said...

இதெல்லாம் யாருடைய தப்பு ?

மயூரதன் said...

அது வொர்த்துன்னு வரணும்,தலைநகரம் படத்தில் வடிவேலு சொல்லுவாரே உளவுத்துறையளவுக்கு நான் வொர்த்து கிடையாதுன்னு.அப்படி தாங்க இது

Yoganathan.N said...

ஓ... ஒகெ... :)

பி.கு அசல் டிரைலர் பார்தீங்களா??? எனது ப்ளாக்கில் எழுதியுள்ளேன். பாருங்கள்.

ஞானப்பழம் said...

அதைய 'ஒர்த்து'ன்னு எழுதலாம் இல்லை நீங்க சொன்ன மாதிரி 'வொர்த்'ன்னு எழுதியிருக்கலாம்... 'ஒ'க்கும் 'ஓ'க்கும் பெரிய வித்தியாசம் இல்லையில்ல.. நான் நல்ல காலத்துலேயே தப்புத் தப்பா படிப்பேன்..

// இலங்கையில நடக்கபோவது மகிந்த ஆட்சியா? அல்லது பொன்சேகர ஆட்சியா ?
உண்மையை சொல்லனுமின்னா 'ரணில்' ஆட்சிதான். ///
UNP SLFP JVP TNA.... யப்பா... எனக்கு எல்லாம் மண்டைய கொழப்புதப்பா... ஆகமொத்தம் நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான் போலும் "மோதகமும் கொழுக்கட்டையைப் போலும்"...

பதிவு மிகவும் அருமை.. நல்ல சிரிச்சேன்!!

வால்பையன் said...

செம காமெடி!

sathishsangkavi.blogspot.com said...

//விஜய்க்கு மட்டும் இன்று பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?
பதிவர்கள்பாடு கொண்டாட்டமாக இருந்திருக்கும் , 'பத்மஸ்ரீ'பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும் //

சூப்பர்...

கிரி said...

//இதாச்சும் பரவாயில்லை கலைஞர் டிவியில் இன்னமும் 'ஆதவன்'தான் முதலிடத்தில் உள்ளது.//

:-)))

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி @


arumbavur @


வால்பையன் @


Sangkavi @


கிரி @


எல்லோருக்கும் நன்றி.

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N


//'பத்மஸ்ரீ'கமல்ஹாசன், 'பத்மஸ்ரீ' மனோராமா, 'பத்மஸ்ரீ' தோட்டாதரணி - இந்த வரிசையில் 'பத்மஸ்ரீ' விஜய் என்று வந்திருந்தால், எப்படி இருந்திருக்கும்??? நினைத்து கூட பார்க்க முடியவில்லை... ஹிஹிஹி//

ரஜினி பத்மஸ்ரீ பட்டத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. இன்னொன்று விவேக்கும் பத்மஸ்ரீ தான்


//பி.கு அசல் டிரைலர் பார்தீங்களா??? எனது ப்ளாக்கில் எழுதியுள்ளேன். பாருங்கள்.//

இப்பவே பார்க்கிறேன்.
.....................................


chosenone

//உள்ளூர் ரவுடிசத்தை மட்டும் இல்ல ….உலக திவிரவாதத்தை ஒரே படத்தில் அடக்கி காட்டிய எங்கள் இளைய தளபதி நிடோடி வாழ்க …..
இப்படி பட்ட எங்க “விசை” க்கு நோபெல் பரிசே கொடுப்பாங்க ….//

அப்புறம் உங்ககிட்ட வியை நோபலின்னா என்னன்னு கேப்பாரு.

.......................................

dialog

//இதெல்லாம் யாருடைய தப்பு ?//

எதெல்லாம் ?

..................................

ஞானப்பழம்

//UNP SLFP JVP TNA.... யப்பா... எனக்கு எல்லாம் மண்டைய கொழப்புதப்பா... ஆகமொத்தம் நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான் போலும் "மோதகமும் கொழுக்கட்டையைப் போலும்"...//

வடை போச்சா இல்லையா என்பது நாளைக்கு காலையில தெரிந்துவிடும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)