Monday, January 25, 2010

எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் ( 24/01/2010 )


கிரிக்கெட் [Cricket]டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிடம் முழுமையாக இழந்த பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தாங்கள் உலகத்தின் no 1 சொதப்பல் அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இன்றைய இரண்டாம் போட்டியில் சிறிதளவு போராட்டமும் இல்லாமல் தோற்ற பாகிஸ்தான் முதல் போட்டியில் கிடைக்கவிருந்த வெற்றியை கமரூன் வைற்ரிடம் பறிகொடுத்திருந்தனர். போகிற போக்கை பார்த்தால் ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியா white wash முறையில் வெல்லப்போகிறார்கள் என்றே தோன்றுகிறது.இந்தத் தோல்விகளுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமையும்,முகம்மது யூசபின் மோசமான அணித்தலைமையுமே ஆகும்.T/20 உலககிண்ணத்தை கைப்பற்றியபோது பாகிஸ்தான் Back to form என நினைக்கும்போது இலங்கையிலும், அபுதாபியிலும் தோற்று நம்பிக்கையை குலைத்த பாகிஸ்தான் மீண்டும் நியூசிலாந்தில் வைத்து டெஸ்ட் தொடரை சமப்படுத்தியபோது மீண்டும் கலக்க ஆரம்பித்துவிட்டது போலிருந்தது, ஆனால் இப்போது மீண்டும் பாகிஸ்தான் ஆரம்பித்த இடத்திற்கே வந்துள்ளது. இன்சமாமிற்கு பின்னர் ஸ்திரமான தலைமை இல்லாமையே பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு முக்கியகாரணம், யூனிஸ்கான் பரவாயில்லை ரகமனாலும் அவரது தான்தோன்றித்தனமான முடிவுகளும் , அவருக்கு அணிவீரர்கள் மத்தியிலேயே எதிர்ப்பிருப்பதும் அவரை சிறந்த அணித்தலைவராக உருவாகவிடவில்லை.இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை, சல்மான் பட் எல்லாம் தலைமைக்கு ஒத்துவாராத கேஸ் ,சும்மா காமடி பண்ணுறதை விட்டுவிட்டு ஒருநாள் போட்டிகளில் அப்ரிடிக்கு தலைமை பொறுப்பை வழங்கி வீரர்களை அடிக்கடி மாற்றாது தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கினால் உமர் அக்மல், முஹமட் அமீர், சல்மான் பட் போன்ற இளம் திறமைகளுடன் யூனிஸ், யூசப் , ஆசிப், கமரன் போன்ற அனுபவங்களும் இணைந்து ஒற்றுமையாக ஆடினால் பாகிஸ்தான் உலக ஒருநாள்அணிகள் அனைத்திற்கும் சவாலானதாக இருக்கும்.ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அரசியலில் இது சாத்தியமா?
பானுக ராஜபக்ச, இவர் இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நாயகனாக உருவாகும் அளவிற்கு திறமையுள்ள வீரர். பத்தொன்பது வயதிற்குட்பட்ட வீரர்கள் பங்கு பற்றும் உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அரையிறுதிக்கு போவதற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். இடதுகை முன்வரிசை துடுப்பாடவீரரான இவரது துடுப்பாட்டம் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருந்தாலும் மனிதர் பெரிய சிச்சர்கள் ( Big six )அடிப்பதிலும் கில்லாடி. சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டி ஒன்றில் 154 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று ஆஸ்திரேலியாவின் 253 என்னும் இலக்கை துரத்தி போட்டியை இலங்கைக்கு வென்றுகொடுத்தவர்.அதேபோல் மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் தென்னாபிரிக்காவில் வைத்து தென்னாபிரிக்காவுடன் ஒரு போட்டியில் ஆறு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பார்ப்பதற்கு உயரம் குறைவாக இருந்தாலும் அவரது உடல்மொழி ஆரம்பகால மகேலாவை ஞாபகப்படுத்துகிறது, அதேபோல இவரது பந்துவீச்சும் ஆரம்பகால மகேலாவின் Bowling Action ( Long runup ) உடன் ஓரளவு ஒத்துப்போகிறது, இன்னுமொரு ஒற்றுமை இவரது T shirt இலக்கமான 04 ஆரம்பகாலத்தின் மகேலாவின் இலக்கம் (1999 World cup ) என்பதும் குறிப்பிடத்தக்கது. பல புதுமுகங்கள் இலங்கை அணிக்குள் வந்தாலும் மத்தியுஸ் தவிர வேறுயாரும் நூறுவீதம் திருப்தியாக இல்லை, அந்தக்குறையை பானுக ராஜபக்ச நிவர்த்திசெய்வார் என்றே தோன்றுகிறது. இயன் டானியல்ஸ், ஜீவன் மென்டிஸ் போல் இளவயதில் சந்தர்ப்பம் கொடுக்காமல் அவர்களை போல இவரையும் இலங்கை கிறிக்கற் கட்டுப்பாட்டுசபை வீணடித்தால் நஷ்டம் இலங்கை கிரிக்கெட்டுக்குதான்.

--------------------------------------------------------------------------------------------------------------

டென்னிஸ் [Tennis]2010 ஆஸ்திரேலியன் ஓபெனில் இதுவரை பெரியளவில் அதிர்ச்சிகள் ஏற்படவில்லை என்றாலும் இறுதியாக இடம்பெற்ற கிரான்சிலாம் போட்டியான அமெரிக்கன் ஓபெனில் ஜெயித்த 'டெல்பெர்ரோ'(del Potro) மற்றும் 'கிம் கிளைச்ட்டர்' ஆகியோர் கால் இறுதிக்கு தகுதிபெறாமலே தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.இன்று குரோசியா வீரர் 'கிளிக்குடன்' ( Cilic ) இடம் பெற்ற போட்டியில் 7-5,4-6,5-7.7-5,3-6 என்ற செற் கணக்கில் 'டெல்பெர்ரோ' (del Potro) தோல்வியடைந்தார். அதே போல் இன்று இடம்பெற்ற இன்னுமொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் ஒய்வின்பின்னர் மீண்டும் ஆடவந்த முன்னாள் முதல்தரவீராங்கனையும் 7 கிரான்சிலாம் பட்டங்களை வென்றவருமான பெல்ஜியத்தின் 'ஜஸ்டின் ஹெனின்' சக நாட்டு வீராங்கனையான 'விக் மாயரை' 7-6 , 1-6, 6-3 என போராடி வென்று காலிறுதியில் 'நாடியா பெட்ரோவாவின்' சவாலை எதிநோக்கவுள்ளார்.நாளை இடம்பெறவுள்ள நான்காம் சுற்றில் 'ரோஜர் பெடரர்' முன்னாள் முதல்தரவீரரும் ஆஸ்திரேலிய வீரருமான 'ஹெவிற்ருடன்' மோதவுள்ளார், சொந்த நாட்டில் வைத்து மோதுவதால் 'ஹெவிற்ருக்கு' பலம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 'பெடரரின்' போம் மோசமாக உள்ளது நாளைய போட்டியியின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 'வில்லியம்ஸ்' சகோதரிகள் வழமைபோல முன்னேறி வருகிறார்கள், அதேநேராம் முன்னாள் முதல்தர வீராங்கனை 'சபீனா' உடல் உபாதையால் போட்டியின் இடையினின்று விலகியதால் 'மரியா கிரிலென்கோ' காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்தவாரம் இந்த ஆண்டின் முதல் கிரான்சிலாம் சாம்பியன் யாரென்பது தெரிந்துவிடும், பொறுத்திருந்து பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------


உதைபந்தாட்டம் (Foot ball)

இன்று இடம்பெற்ற F A cup நான்காம் சுற்று போட்டிகளில் Stoke City உடனான ஆட்டத்தில் arsenal தோல்வியடைந்ததன் மூலம் liverpool , Manchester Unaited வரிசையில் வெளியேறியுள்ள முக்கிய மூன்றாவது அணியாகியுள்ளது. ஆரம்பம் முதலே Stoke City ஆதிக்கம் செலுத்திவந்தது , இறுதிவரை போராடிய arsenal போட்டியை 3 -1 ரீதியில் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. அதேபோல் League Cup போட்டிகளில் நேற்றைய போட்டியில் Manchester Unaited அணி Manchester city அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முன்னாள் Manchester Unaited வீரர் Tevez இரண்டு கோல்களை தனது முன்னால் அணிக்கெதிராக அடித்து Manchester city அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அடுத்த போட்டியில்Manchester Unaited 3 -1 என Manchester city யை வெல்லாவிட்டால் League Cup போட்டிகளிலிருந்து வெளியேறவேண்டி இருக்கும்.

8 வாசகர் எண்ணங்கள்:

வெற்றி said...

என்னங்க கிரிக்கெட்ல இந்தியா பத்தி ஒரு மேட்டர் கூட இல்லையே :((((

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//என்னங்க கிரிக்கெட்ல இந்தியா பத்தி ஒரு மேட்டர் கூட இல்லையே :((((//


இந்தியா பங்களாதேஷ் தொடரை முடிக்கட்டும் அப்புறம் தாராளமா எழுதுவம் ((((:

ஞானப்பழம் said...

தேர்தல்களில் உங்கள் வாக்குரிமையை செவ்வனே செய்யுங்கள்.. உங்கள் நாட்டிற்கு நல்ல அரசு/எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்..

பி.கு. : இதுதான் உங்கள் அண்மையான பதிவு என்பதால்...

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//தேர்தல்களில் உங்கள் வாக்குரிமையை செவ்வனே செய்யுங்கள்..//

நீங்க வேற கடுப்பை கிளப்பிறீங்க, இந்தத்தடவையும் ஓட்டு சீட்டில் என் பெயரில்லை, ஒருவேளை என்னை வேற்றுக்கிரகவாசி என்று நினைத்துவிட்டார்களோ?

ஞானப்பழம் said...

//நீங்க வேற கடுப்பை கிளப்பிறீங்க, இந்தத்தடவையும் ஓட்டு சீட்டில் என் பெயரில்லை, ஒருவேளை என்னை வேற்றுக்கிரகவாசி என்று நினைத்துவிட்டார்களோ?//

ஹ ஹ ஹ... காமெடி.. நான் சொன்னதில் முதல் வரி பொய்த்துப் போனதற்கு என்னுடைய சோகப் பாட்டு : 'நினைப்பதெல்லாம்... நடந்துவிட்டால்... தெய்வம் ஏதுமில்லை...' அடுத்த வரியாவது மெய்யாகும் என எண்ணுவோம்! அதுக்கும் இதே சோகப் பாட்டை பாட வைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//அடுத்த வரியாவது மெய்யாகும் என எண்ணுவோம்! அதுக்கும் இதே சோகப் பாட்டை பாட வைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்!//

வடை போச்சே

ஞானப்பழம் said...

தம்பி இன்னும் டீ வரலை...

ஆமாம், சரத் பொன்சேகா என்/யாருக்கு பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்?

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//ஆமாம், சரத் பொன்சேகா என்/யாருக்கு பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்?//

ஒளிந்திருக்கவில்லை , அவர் இருக்கும் நட்சத்திர விடுதி ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது . ஆனால் அவர் நேற்றிரவு வீடு திரும்பிவிட்டார்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)