Saturday, January 23, 2010

இந்த வயசில இது தேவையா?
வரலாற்றில் புகழ்பெற்ற தலைவர்கள் பலர் இருந்தாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பார்த்ததுண்டா? இல்லாவிட்டால் எதிர்வரும் 6 ஆம் திகதி கலைஞர் டிவி பாருங்கள் உங்களுக்கே தெரியும். அட அதுதான் எல்லோருக்குமே தெரியுமே எதுக்கு பில்டப் என்றுதானே நினைக்கிறீர்கள், அவர் மட்டும் தனக்குதானே பில்டப் பண்ணிக்கலாம் நாம சும்மா பண்ணக்கூடாதா?

சென்ற ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா என்று ஒன்றை நடாத்தி அதிலே அண்ணாவை பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு தன்னைப்பற்றி அதிகமாக பேசிய கவிஞர்களையும் , கட்சிக்காரர்களையும் பார்த்து புழகாகிதம் அடைந்த கலைஞரின் செயற்பாடு எப்பிடி தெரியுமா இருந்திச்சு, பசுமாட்டை பற்றி கட்டுரை எழுதிய ஒருவன் "பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிட்டேன் " என்று கூறி பின்னர் தென்னைமரத்தை பற்றி எழுதியதை போல இருந்தது. அந்த விழாவில் தனக்குதானே 'அண்ணா விருதை' கொடுத்து அற்ப சந்தோசம் கண்ட கலைஞர் அன்று கவிஞர்களின் பாராட்டுக்கள் காணாதென்று இன்று நடிகர்களை பாராட்டுவதற்கு அழைத்துள்ளார்.

திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக் கொள்ள, சென்னையை அடுத்த பையனூரில், 116 ஏக்கர் நிலத்தை முதல்வர் வழங்கியுள்ளாராம் , அவர்களும் அந்த இடத்தில் அமைய இருக்கும் குடியிருப்புகளுக்கு, 'கலைஞர் திரைப்பட நகரம்' என்று பெயர் சூட்ட முடிவு செய்ததுடன் பாராட்டு விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.நன்றிமறவாத தமிழனின் பண்பை கலைஞரிடம் வெளிப்படுத்தும் திரையுலகினரே அதை கொஞ்சம் மக்களிடமும் வெளிப்படுத்தினால் நல்லது. என்றைக்காவது எம்மை தாங்கிப்பிடித்திருக்கும் மக்களுக்காக என்று ஏதாவதொரு பாராட்டுவிழா திரைஉலகின் ஏதாவதொரு சங்கம் நடாத்தியிருக்கிறதா? மாறாக தங்கள் சங்க கடனை அடைக்க மக்கள்முன் நடிகர்களை கொண்டுவந்து அங்கும் மக்களது பணத்தை டிக்கெட் போட்டு பிடுங்கித்தானே இவர்களுக்கு பழக்கம்.

ஒருதடவை நடிகர்கள் ஜெயலிதாவை பாராட்டியபோது நடிகர்களை 'காக்கைகள்' என்று கேலி பேசியதை நாம் மறக்காவிட்டாலும் நம்ம நடிகர்கள் மறந்துவிட்டார்கள் போலுள்ளது, இவனுகள் மறக்காட்டியும் மறந்துபோச்செண்டுதானே சொல்லுவாங்க ( 'நாடோடிகள்' பட ஸ்டயிலில). இல்லாவிட்டால் மீண்டும் இப்போது கலைஞரை பாராட்ட கிளம்புவாங்களா? இதில நாடகங்கள் அழிந்து கொண்டு வருகின்றது நாடகங்களை காப்பற்றுங்கள் என்று பாலசந்தர் கேட்டபோது மொவுனமாக இருந்த நம்ம 'உலக நாயகன்' கலைஞருக்காக நாடகம் போடுராராம். எதுக்குதான் கலைஞருக்கு நடிகர்களும் , நடிகர்களுக்கு கலைஞரும் தேவைப்படுகிறார்கள்?

நடிகர்களுக்கு என்ன பிரச்சினை ? எதற்கு கலைஞரை நாடுகிறார்கள் ? ஜெயலாலிதாவின் காலத்தில் இப்படி தொட்டதற்கும் போய் அவரிடத்தில் நின்றதில்லையே, இப்போது மட்டும் அடிக்கடி கலைஞரை நடிகர்களும் , நடிகைகளும் சந்திப்பது எதற்கு ? கிடைக்கும்வரை

மக்கள் பணத்தை சுருட்டும் கலைஞருடன் இவர்கள் கூட்டு களவாணித்தனம் ஏதும் செய்கிறார்களா? ஒண்ணுமே புரியல. அனால் கலைஞரை பொறுத்தவரை அரசியல் பண்ண நடிகர்கள் தேவை, அதற்குதான் இந்த அன்பளிப்பெல்லமே.ஒருவேளை கலைஞருக்கு யாராவது சோதிடக்காரர்கள் "உங்களை பற்றி மற்றவர்கள் புகழ புகழ உங்கள் ஆயுள் அதிகரிக்கும் " என்று கூறி இருப்பார்களோ, அதனால்தான் மூன்று மாதத்திற்கொரு தடவை புகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாரோ, அதனால்தான் அடுத்து உலகளவில் தன்னை புகழ 'உலக தமிழ் மாநாட்டிற்கு' ஆயத்தம் செய்து விட்டார். இவருக்குதான் வயதுபோய் வாக்குமாறி விட்டதென்றால் கூட இருப்பவர்களாவது சொல்லக்கூடாதா?

காடு 'வாவா' என்கிறது வீடு 'போபோ' என்கிறது, இருந்தாலும் புகழுக்கு அலையும் 'முத்தமிழை வித்தவரே' வரலாற்றில் சிறந்த காமடியனாக உருவாக வாழ்த்துக்கள், பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யலாமா?

18 வாசகர் எண்ணங்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

'முத்தமிழை வித்தவரே'
முத்தான வார்த்தைகள். நன்று சொன்னீர்.
அவருக்கோ இவை எருமை மாட்டில் மழை போல்.

அ.ஜீவதர்ஷன் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris)

//அவருக்கோ இவை எருமை மாட்டில் மழை போல்.//


நல்ல உவமை

Unknown said...

நமக்கு புரிகிறது.ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லையே.அவர்களுக்கென்ன.ஒரு colour tv கொடுத்தால் வால் ஆட்டிக்கொண்டு ஒட்டு போடுவார்கள்.அவரும் நாய்க்கு எலும்பு போட்டது போல் போட்டுட்டு வசூலுக்கு தயார் ஆகிடுவார்.

ஒரு விஷயத்தில் இந்தியா வை பாராட்ட தான் வேண்டும்.இவ்வளவு வயசானவனை CM ஆக தேர்ந்தெடுத்தவர் எவரும் இல்லை.சாதனை தான்.!!!

"இவன் எவ்வளவு வயசானாலும் CM ஆகவே இருக்கான்டா..இவன் ரொம்ப நல்லவன் னு ஒரு வார்த்த சொல்லுங்கலேண்டா ."

Unknown said...

மக்களுக்கு புரியவில்லையே.ஒரு colour tv கொடுத்தால் வால் ஆட்டிக்கொண்டு ஒட்டு போடுவார்கள்.அவரும் நாய்க்கு எலும்பை போட்டு கறியை return வாங்குறார்.

"85 வயசில் ஒரு CM."
title நல்ல இருக்கில்ல?

"இவன் எவ்வளவு ஒட்டு போட்டாலும் நிக்குறாண்டா.இவன் ரொம்ப நல்லவன் னு ஒரு வார்த்த சொல்லுங்கலேண்டா."

அ.ஜீவதர்ஷன் said...

Sriram

"85 வயசில் ஒரு CM."
title நல்ல இருக்கில்ல?

நல்லாயிருக்கு.

..................................

//நமக்கு புரிகிறது.ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லையே.//

படித்த மக்களுக்கு புரிந்து விட்டது, கூடிய சீக்கிரம் பாமர மக்களுக்கும் புரியும்.

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ ஹா...அடிரா சக்கை ...அடிரா சக்கை :-)

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

உங்கள் வருகைக்கு நன்றி

chosenone said...

பல ஆயிரம் ஆண்டு கால தமிழர் வரலாற்றில் மிக பெரிய அவமான சின்னம் மட்டும் அல்ல .....கூப்பிடும் தூரத்தில் தன் இனத்தவர் ஆயிர கணக்கில் கொடூரமாக கொள்ளப்படும் வேலையில் ,தன் ஆட்சி கவிழுமோ என்ற ஒரே காரணத்திற்காக அதை வேடிக்கை பார்த்துகொண்டு
அதயும் வைத்து கேவலமாக பல அரசியல் நாடகங்களும் அரங்கேற்றிய
மனித குலத்துக்கே ஒரு சாபக்கேடு .

ஒரு அரக்கனை போல் வாழ்த்த மனிதனை கூட அவன் மரணத்தின் பின் மன்னிக்கா விட்டாலும் மறந்து விடலாம். ஆனால்,வெளி பார்வைக்கு பிறருக்காகவே வாழ்வதுபோல் நடித்து
மனதுக்குள் ,உயிரியல் பரிணாம வளர்ச்சி அழவுகொளில் "துரோகத்தின்"
உச்சத்தை நிகழ்த்தி காட்டிய இந்த முத்தமிழ் அறிஞருக்கு என் வயிறெரிந்து சாபம் கொடுக்கிறேன் நீ இன்னும் 300 வருடம் வாழ்ந்துகொண்டே மரணிப்பாயாக .

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//ஒரு அரக்கனை போல் வாழ்த்த மனிதனை கூட அவன் மரணத்தின் பின் மன்னிக்கா விட்டாலும் மறந்து விடலாம். ஆனால்,வெளி பார்வைக்கு பிறருக்காகவே வாழ்வதுபோல் நடித்து
மனதுக்குள் ,உயிரியல் பரிணாம வளர்ச்சி அழவுகொளில் "துரோகத்தின்"
உச்சத்தை நிகழ்த்தி காட்டிய இந்த முத்தமிழ் அறிஞருக்கு என் வயிறெரிந்து சாபம் கொடுக்கிறேன் நீ இன்னும் 300 வருடம் வாழ்ந்துகொண்டே மரணிப்பாயாக .//

வாழுறதென்றால் எந்த சாபத்தையும் வாங்கி பாக்கேற்ருக்குள்ள போட்டுக்கொள்ளும் தலை நம்மதலை.

ஞானப்பழம் said...

"என்னை" பொறுத்தவரை, இனிமேல் கலைஞர் பப்பு வேகாது என்றுதான் தோன்றுகிறது.... இலங்கைப் போரில் இவர் அடித்த அந்தர பல்ட்டியை கண்டு மக்களிடத்தில் இவர்மேல் ஒரு அவநம்பிக்கைதான் நிலவி வருகிறது... ஆனால் வெளிப்படையாக கூற மாட்டார்கள்! கண்டிப்பாக மக்கள் அடுத்த தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகின்றேன்..

"தமிழ் மாநாட்டை" பற்றி யாரிடமும் பேச்சுவாக்காய் கேட்டால்கூட அதை 'கலைஞர்/கொலைஞர் மாநாடு' என்றே சொல்கின்றனர்.. அதனால் நடக்கும் ஒரே நன்மை, எங்கள் ஊரில் எல்லா ரோடுகளும் சரி செய்யப்படுகின்றன (அதுக்கப்பறம் கண்டுக்காம விட்டுருவாங்க, அது வேற விடயம்!)..

///மக்கள் பணத்தை சுருட்டும் கலைஞருடன் இவர்கள் கூட்டு களவாணித்தனம் ஏதும் செய்கிறார்களா? ஒண்ணுமே புரியல.///
இலங்கையில் ஏதோ ஒரு கூட்டத்தில், கவிஞர் தாமரை இதை பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.. "ஜால்ரா அடிச்சாதான் எங்க பொளப்பு ஓடும்"னு... இது பலகாலமா தெரிஞ்ச விடயம்தான்.. என்ன கலைஞர் விடயத்தில் ஜால்ரா தட்ட தட்ட இன்னும் சலுகைகள் வழங்கப் படும்; அம்மா விடயத்தில் எவ்வளவு ஜால்ரா தட்டினாலும் அவுங்க கொடுக்கற சலுகைகள்தான் கொடுப்பாங்க!!

chosenone said...

//வாழுற தென்றால்
எந்த
சாபத்தையும் வாங்கி பாக்கேற்ருக்
குள்ள போட்டுக்
கொள்ளும்
தலை நம்மதலை//

அடங்கொக்க-மக்கா...सुपर कविताई थाली ......

அ.ஜீவதர்ஷன் said...

//"தமிழ் மாநாட்டை" பற்றி யாரிடமும் பேச்சுவாக்காய் கேட்டால்கூட அதை 'கலைஞர்/கொலைஞர் மாநாடு' //

நல்ல பெயர் , இதை ஒரு பாராட்டு விழா வைத்து கலைஞருக்கு வழங்குவோமா?

.......................................

chosenone

//.सुपर कविताई थाली .//

இது புரியலைங்க

ஞானப்பழம் said...

सुपर कविताई थाली - சூப்பர் கவிதை தாலி....

தமிழ்லகூட அர்த்தம் புரியல!!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

நான் நினைக்கிறேன் தாலி....= தலை....

தவறுதலாக எழுதியிருக்கலாம்.

ஞானப்பழம் said...

அதான்.. அதேதான்!!

chosenone said...

/நான் நினைக்கிறேன் தாலி....= தலை....
தவறுதலாக எழுதியிருக்கலாம்.//

ஆமாங்க அதான் அதேதான் .....
யப்பா ... .... ... கொஞ்சம் வித்தியாசமா comment போடலாம்நு பார்த்தா,நம்மளையும் செல்வராகவன் மாதிரி பஞ்சர் பண்ணிடுவாங்க.
நல்ல வேலை! அதுக்கு வேற எதாவது
விளக்கம் தராம இருந்தாங்களே .....

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//அதான்.. அதேதான்!!//

அப்பாடா?

.......................................

chosenone


//யப்பா ... .... ... கொஞ்சம் வித்தியாசமா comment போடலாம்நு பார்த்தா,நம்மளையும் செல்வராகவன் மாதிரி பஞ்சர் பண்ணிடுவாங்க.
நல்ல வேலை! அதுக்கு வேற எதாவது
விளக்கம் தராம இருந்தாங்களே .....//

ஹி ஹி ஹி , அதாங்க வேற்று மொழி படத்தை டப் பண்ணக் கூடாதெங்கிறது....

Unknown said...

இந்த கருணா(நாய்)நிதிக்கு ஜால்ரா போடுற நடிகர்கள்
அதுக்கு பதிலா நாலு நல்ல படம் எடுத்தாலே பொழைச்சிக்கலாம்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)