Monday, January 18, 2010

அசத்தும் ஆயிரத்தில் ஒருவன் ஆரம்பகட்ட வசூல் ...

எதிர் மறையான விமர்சனங்கள் போட்டுத்தாக்கினாலும் ஆயரத்தில் ஒருவனின் ஆரம்பகட்ட ( opening ) வசூல் பிரம்மிக்க வைத்துள்ளது. முதல் நான்கு நாட்களில் இதனது சராசரி பார்வையாளர்கள் 90 வீதத்திற்கும் அதிகமாகவே உள்ளனர், இந்த நான்கு நாட்களில் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்தது 70 லட்ச ரூபாய். இதற்கு போட்டியாக வந்த ஜவகர் இயக்கிய தனுசின் குட்டியும் சளைக்காமல் 88 % ஆரம்ப காட்சிகளுடன் 35 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது,குறைந்த திரையரங்குகளில் திறையித்டதாலேயே இதனது வசூல் ஆயிரத்தில் ஒருவனைவிட மிகக்குறைவாக உள்ளதற்கான காரணம். இவற்றுடன் போட்டியாக வெளிவந்த 'நாணயம்' மற்றும் 'போர்க்களம் ' போன்றன குறைவான ஆரம்ப கட்ட வசூலையே பெற்றுள்ளன.ஒரு ஹீரோவுக்காக இருக்கட்டும் , அல்லது ஒரு இயக்குநருக்காக இருக்கட்டும் படத்தின் ஆரம்பகட்ட வசூல் ( opening ) எவ்வளவு என்பதிலேயே அவர்களது 'மாஸ்' தங்கியுள்ளது. அப்படிப்பார்த்தால் 'செல்வராகவன்' வித்தியாசமான படங்களை எடுத்தும் ஒரு 'மாஸ்' இயக்குனாராகவே கருதப்படுகிறார் என்பதற்கு இது சாட்சி.அதேபோல் தனுஷும் தன் பங்கிற்கு தனக்குரிய opening ஐ பெற்றுள்ளார். ஒரு படத்தின் opening ஐ மட்டுமே ஒரு நடிகராலோ , அல்லது ஒரு இயக்குணராலோ தீர்மானிக்கமுடியும் , ஆனால் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது கதை, திரைக்கதை போன்றவையே. இந்தவகையில் 'குட்டி' வழமையான பாணியிலான திரைக்கதையாக இருந்தாலும் வரவேற்ப்பை பெறுமென்றே தோன்றுகிறது.ஆனால் ஆயிரத்தில் ஒருவன் செல்வாவின் வித்தியாசமான கதைக்களமாக இருந்தும் விமர்சகர்களின் அடாவடியால் ஏற்பட்டுள்ள mix report இல் இருந்து மீண்டு வந்து வெற்றிபெறுமா என்பதை அடுத்தடுத்த வாரங்களில் தெரிந்து கொள்ளலாம். வருகிற வாரங்களில் 80 % இற்கும் அதிகமான மக்களால் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப்படுமானால் வெற்றியடைவதற்கான சாத்தியம் அதிகம். எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி ஓடிய படங்களும் உண்டு, உதாரணத்திற்கு பேராண்மையை கூறலாம், இதற்கும் mix report விமர்சனங்கள் வந்தாலும் இறுதியில் படம் ஜெயித்ததுபோல் ஆயிரத்தில் ஒருவனும் ஜெயித்தால் தமிழ் சினிமா வளமாகும். முடிந்தவரை ஆயிரத்தில் ஒருவனை வெற்றியடைய செய்வதால் புதிய வித்தியாசமான முயற்சிகள் உருவாகுவதை ஊக்குவிக்கலாம், இல்லை எங்களுக்கு 'வேட்டைக்காரன்' போலத்தான் 'அரைச்ச மாவு' வேண்டுமென்று அடம்பிடித்தால் யார்தான் என்ன செய்யமுடியும்?

25 வாசகர் எண்ணங்கள்:

arumbavur said...

ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் திரைக்கதை மற்றும் நல்ல கதை சார்ந்தே அமையும்
நல்ல கதை மற்றும் திரை கதை அமைந்து விட்டால் நடிகன் என்பவன் இரண்டாம் இடமே அதுதான் இன்றைய திரைஉலகின் நடப்பு வெற்றி மந்திரம்
ரசிகனை விளம்பரம் மூலம் ஏமாற்றி விளம்பரம் செய்து வெற்றி என்னும் மந்திரம் ஆரம்பத்தில் புதுமையாக இருக்கும் அதே தொடரும் போது உண்மையான வெற்றி வரும் போது அதை கூட தடுக்கும்
தமிழ் ரசிகனும் மாறிவிட்டான் திரையுலகமும் மாறிவிட்டது மாற வேண்டியது சில நபர்கள் மட்டுமே
தொடரட்டும் உண்மையான வெற்றிகள்

Imayavaramban said...

நான் தற்போது எழுதி வரும் தொடர்கதை ஒரு உலகத்திரப்படத்தின் தழுவல். முடிந்தால் கண்டுபிடியுங்கள்!

Imayavaramban said...

http://eluthuvathukarthick.wordpress.com/ - My blog address.

தாராபுரத்தான் said...

ஆயிரத்தில் ஒருவனை வெற்றியடைய செய்வதால் புதிய வித்தியாசமான முயற்சிகள் உருவாகுவதை ஊக்குவிக்கலாம்,

Yoganathan.N said...

நண்பரே, உங்களது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனதிற்காக காத்திருக்கிறேன்...

linelogesh said...

Try to welcome new idea's other wise you will be treated like Villu, Vettaikaran for next 20 years

பேநா மூடி said...

படம் நிச்சயம் வெற்றி பெரும்... அது நான் படம் பார்த்த போதே தெரிந்தது...,

கிரி said...

பார்ப்போம் படம் எப்படி போகிறது என்று!

chosenone said...

reviews of "1/1000" are highly diversed.so it seems like the movie is tricky.waiting for your விமர்சணம் .

chosenone said...

whatever the final result may be,..."1/1000" is a mile stone in any given aspect of the tamil cinema.[except the music]
specially, hats-off to selava for bringing the "solan period of tamil".
best of luck to "1/1000" team for this himalayan effort.

யுவகிருஷ்ணா said...

//உதாரணத்திற்கு பேராண்மையை கூறலாம், இதற்கும் mix report விமர்சனங்கள் வந்தாலும் இறுதியில் படம் ஜெயித்ததுபோல்//

பேராண்மை வெற்றிப்படமா? :-)

நகைச்சுவைக்கு நன்றி. அபிராமி காம்ப்ளக்ஸில் நூறு நாள் ஓட்டவேண்டுமே என்ற தலை எழுத்துக்காக காலை 8.30 காட்சியென்று ஸ்பெஷலாக ஒரு காட்சியை உருவாக்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

பேராண்மை வெற்றிப்படம் என்றால் கோபிகிருஷ்ணாவில் வெளியாகிற எல்லாமே வெற்றிப்படங்கள்தான்!

வெற்றி said...

தேவையில்லாத widjetsa எடுத்து விடுங்க..பேஜ் லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுதுங்க..

நிச்சயமா ஆ.ஒ. வெற்றி பெறும்..

//இல்லை எங்களுக்கு 'வேட்டைக்காரன்' போலத்தான் 'அரைச்ச மாவு' வேண்டுமென்று அடம்பிடித்தால் யார்தான் என்ன செய்யமுடியும்? //

தினம் தினம் பல கவலைகளில் உழல்பவன் சினிமாவிற்கு சென்றால் படத்தை பார்த்து 'இது இந்த படத்திலேயே வந்துடுச்சே' என்று யோசித்து கொண்டிருக்க மாட்டான்..அந்த நொடி சந்தோசம் மட்டுமே அவனுக்கு போதுமாக இருக்கிறது..திரையரங்கிற்கு குடும்பமாய் வருபவர்கள் படத்தை எவ்வாறு என்ஜாய் செய்கிறார்கள் என்று கவனியுங்கள்..உண்மை விளங்கும்.. :))

VARO said...

i want ur email ID... plz sent.. vsheron@gmail.com

Sabarinathan Arthanari said...

ஆம் எல்லோரும் படங்களை ஊக்க படுத்தும் விமர்சனங்கள் எழுத வேண்டும்.

http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post_19.html

நன்றி

Ramanan said...

ஆ வெற்றி வெற்றி வெற்றி (கருமத்துக்கு நம்ம வடிவேலு நகைச்சுவைதான் நினைவுக்குவந்து தொலைக்குது)


விரைவிலேயே இதுக்கும் விளம்பரம் அடிச்சிடலாம் (வேட்டைக்காரன் யுனிட்டை கேட்டால் நல்லது அவர்கள்தான் 30 நாளில் 40 நாள் விளம்பரம் அடிச்சவர்களாச்சே)

எப்பூடி said...

arumbavur சொன்னது…
/ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் திரைக்கதை மற்றும் நல்ல கதை சார்ந்தே அமையும்
நல்ல கதை மற்றும் திரை கதை அமைந்து விட்டால் நடிகன் என்பவன் இரண்டாம் இடமே அதுதான் இன்றைய திரைஉலகின் நடப்பு வெற்றி மந்திரம்
ரசிகனை விளம்பரம் மூலம் ஏமாற்றி விளம்பரம் செய்து வெற்றி என்னும் மந்திரம் ஆரம்பத்தில் புதுமையாக இருக்கும் அதே தொடரும் போது உண்மையான வெற்றி வரும் போது அதை கூட தடுக்கும்
தமிழ் ரசிகனும் மாறிவிட்டான் திரையுலகமும் மாறிவிட்டது மாற வேண்டியது சில நபர்கள் மட்டுமே
தொடரட்டும் உண்மையான வெற்றிகள்/
உண்மைதான்.சரியாக சொன்னீர்கள்

தாராபுரத்தான் சொன்னது…
/ஆயிரத்தில் ஒருவனை வெற்றியடைய செய்வதால் புதிய வித்தியாசமான முயற்சிகள் உருவாகுவதை ஊக்குவிக்கலாம்,/

நிச்சயமாக,ஆயிரத்தில் ஒருவனின் வெற்றி தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றலாம்.பார்ப்போம்

எப்பூடி said...

Yoganathan.N சொன்னது…
நண்பரே, உங்களது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனதிற்காக காத்திருக்கிறேன்...

chosenone சொன்னது…
reviews of "1/1000" are highly diversed.so it seems like the movie is tricky.waiting for your விமர்சணம் ./

விரைவில் ....

எப்பூடி said...

/பேநா மூடி சொன்னது…
படம் நிச்சயம் வெற்றி பெரும்... அது நான் படம் பார்த்த போதே தெரிந்தது...,/

எனது எண்ணமும் அதுதான்,இத்தனைக்கும் பின் வெற்றி பெற்றால் நிச்சயம் செல்வா ஆயிரத்தில் ஒருவன்தான்

கிரி சொன்னது…
பார்ப்போம் படம் எப்படி போகிறது என்று!

நல்லதே நினைப்போம்

எப்பூடி said...

யுவகிருஷ்ணா சொன்னது…

பேராண்மை வெற்றிப்படமா? :-)

ஓ அப்பா இல்லிங்களா
நகைச்சுவைக்கு நன்றி. அபிராமி காம்ப்ளக்ஸில் நூறு நாள் ஓட்டவேண்டுமே என்ற தலை எழுத்துக்காக காலை 8.30 காட்சியென்று ஸ்பெஷலாக ஒரு காட்சியை உருவாக்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

பேராண்மை வெற்றிப்படம் என்றால் கோபிகிருஷ்ணாவில் வெளியாகிற எல்லாமே வெற்றிப்படங்கள்தான்!
அப்போ நூறு நாள் ஓடுற எல்லாப் படமும் வெற்றிப் படமா பாஸ்,செம காமடி சார் நீங்க

எப்பூடி said...

வெற்றி சொன்னது…
/தேவையில்லாத widjetsa எடுத்து விடுங்க..பேஜ் லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுதுங்க..

நிச்சயமா ஆ.ஒ. வெற்றி பெறும்../

நன்றி,முடிந்தவரை நீக்குகின்றேன்

/தினம் தினம் பல கவலைகளில் உழல்பவன் சினிமாவிற்கு சென்றால் படத்தை பார்த்து 'இது இந்த படத்திலேயே வந்துடுச்சே' என்று யோசித்து கொண்டிருக்க மாட்டான்..அந்த நொடி சந்தோசம் மட்டுமே அவனுக்கு போதுமாக இருக்கிறது..திரையரங்கிற்கு குடும்பமாய் வருபவர்கள் படத்தை எவ்வாறு என்ஜாய் செய்கிறார்கள் என்று கவனியுங்கள்..உண்மை விளங்கும்.. :))/
உண்மைதான்,போக்கிரி,கில்லி போன்ற படங்கள் நீங்கள் சொல்வதற்குப் பொருந்தும்,ஆனால் வில்லு,வேட்டைக்காரன் எல்லாம் அவர்களை மேலும் சலிப்புக்குள்ளாக்கும் என்பது என் கருத்து.

எப்பூடி said...

/VARO சொன்னது…
i want ur email ID... plz sent.. vsheron@gmail.com/
contact me via mail2eppoodi@gamil.com

எப்பூடி said...

/linelogesh சொன்னது…
Try to welcome new idea's other wise you will be treated like Villu, Vettaikaran for next 20 years/
true.

எப்பூடி said...

/Sabarinathan Arthanari சொன்னது…
ஆம் எல்லோரும் படங்களை ஊக்க படுத்தும் விமர்சனங்கள் எழுத வேண்டும்./


குறைந்தபட்சம் குறைகளை பெரிது படுத்தாமல் எழுதினாலே போதும்

Ramanan சொன்னது…
ஆ வெற்றி வெற்றி வெற்றி (கருமத்துக்கு நம்ம வடிவேலு நகைச்சுவைதான் நினைவுக்குவந்து தொலைக்குது)


விரைவிலேயே இதுக்கும் விளம்பரம் அடிச்சிடலாம் (வேட்டைக்காரன் யுனிட்டை கேட்டால் நல்லது அவர்கள்தான் 30 நாளில் 40 நாள் விளம்பரம் அடிச்சவர்களாச்சே)

"ஆ வெற்றி வெற்றி வெற்றி",எனக்கு எம்ஜிஆர் சொல்வது போலதான் இருக்கு,
எல்லாம் அவரவர பொறுத்தது .

Abiramii Fashions said...

Why all blaming Vijay.He is sucessful hero to earn all who invest in his film.
This blog persons can take a film or just turn you are doing your job right.Just ask your enemy how you are doing your work then you know your strength.Evan many blog owners not doing their own job properly i know i met some blog guys they all only like to drink &smoke Etc.
Blog peoples not know drink spoil their health.Smoke distrub all their health.
I am a distributor include all Vijay film .We never loose our money .So we always vijay is sucess Hero in Tamilnadu

எப்பூடி ... said...

Abiramii Fashions

//Why all blaming Vijay.He is sucessful hero to earn all who invest in his film.
This blog persons can take a film or just turn you are doing your job right.Just ask your enemy how you are doing your work then you know your strength.Evan many blog owners not doing their own job properly i know i met some blog guys they all only like to drink &smoke Etc.
Blog peoples not know drink spoil their health.Smoke distrub all their health.
I am a distributor include all Vijay film .We never loose our money .So we always vijay is sucess Hero in Tamilnadu//


what is your real name?

is it ilaya thalaivali' vijay ?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)