Sunday, January 17, 2010

இன்றைய யாழ்ப்பாணம்... ஒரு பார்வை
ஏதோ என்னால முடிஞ்சத கிறுக்கி 100 ஆவது பதிவுவரை வந்தாச்சு, இதுவரை கிறுக்கியவற்றுக்கும் பாராட்டியவகளுக்கும் திட்டியவர்களுக்கும் குறிப்பாக கெட்டவார்த்தயில திட்டியவர்களுக்கும் நன்றிகள். "நீயெல்லாம் எதுக்கு ப்ளாக் எழுத வந்தாய் பேசாமல் வேற வேலையே போய் பார் "என்று சரியான கூற்றை கூறிய அன்பர்களின் வேண்டுகோளை மட்டும் என்னால் காப்பாற்ற முடியாமல் போனதிற்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களது கருத்தை எதிர்வரும் காலங்களிலும் நிறைவேற்ற முடியுமா என்றுதெரியவில்லை.

தொடர்ச்சியாக பின்னூட்டம் வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கும் ஹரிஸ்(ஞானப்பழம்),  ஜோகனாதன் , dialog போன்றவர்களுக்கும் மற்றும் தற்போது பின்னூட்டம் போடும் அனைவருக்கும் நன்றிகள், நான் எழுதுவது சரியோ தவறோ தொடர்ந்தும் சுட்டிக்காட்டுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் . அதுதவிர தமிழிஷ், தமிழ் 10 போன்ற தளங்களில் ஓட்டுப்போட்டு பதிவுகளை பிரபலமாக்கிய அனைவருக்கும், வருகை தரும் அனைவருக்கும், தொடர்வோர் (Followers) அனைவருக்கும் நன்றிகள்.அதுதவிர சிறப்பு பரிசளித்த சிங்கக்குட்டி அவர்களுக்கும் எப்பூடியை 'இன்றைய சிறந்த தளமாக' தெரிவு செய்த அரும்பாவூருக்கும் நன்றிகள்.


குப்பைமேடாக மாறும் யாழ்ப்பாணம்......
A 9 பாதை முழுவதுமாக திறந்தாகிவிட்டது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது, இரவுநேரப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. பொருட்கள் மலிவு விலைக்கு(கொழும்பிலும் பார்க்க) கிடைக்கின்றன. மூவினமக்களும்(தமிழர், சிங்களவர்,முஸ்லிம்)யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகிறார்கள், இதனால் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வலுக்கலாம். சோதனை சாவடிகள் குறைக்கப்படுகின்றன, எதிர்காலத்தில் இல்லாமல்கூடப் போகலாம். இராணுவத்தினரின் கால்களுக்குள் வெடியை(பட்டாசை)கொளுத்துமளவிற்கு(பொங்கலன்று) இராணுவத்தின் மீதான பயம் குறைவடைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திருபிக்கொண்டிருக்கின்றார்கள். போராட்டம், சுய நிர்ணயம் என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் 30 வருடமாக காய்ந்து கிடந்த எம்மக்களுக்கு இது உண்மையில் பெரியவிடயம்தான்.

ஆனால் சில விடயங்கள் மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது அவற்றில் முக்கியமான மூன்று விடயங்களாக நான் கருதுவது .


1 ) ரௌடிகளின் அடாவடி

2 ) வியாபாரிகளின் சுரண்டல்

3 ) சூழல் மாசடைதல்

[1] ரௌடிகளின் அடாவடி

ஒரு வாரத்திற்கு முன்னர் நானுன் இன்னும் மூன்றுபேரும் கம்பனி வாகனமொன்றில் இருபாலை இராசவீதி வழியாக வடமராட்சி சென்று கொண்டிருந்தோம், அப்போது கோப்பையை தாண்டி சிறிது தூரத்தில் இரண்டு மாணவிகள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். பின்னால் ஒரு முச்சக்கரவண்டி(ஆட்டோ ) சென்று கொண்டிருந்தது, ஆட்டோ அந்த மாணவிகளை கடக்கும்போது அதனுள்ளிருந்த ஒருவன் ஒரு மாணவியின் 'இடுப்பை கிள்ள' அந்த ஆட்டோ வேகமாக சென்றது. பின்னர் அதனுள்ளிருந்த அந்த 'பரதேசி' எட்டிப்பார்த்து எதோ விமானநிலையத்தில் வழியனுப்பும்போது கையசைப்பது போல் கையசைத்தது. ஆனால் சைக்கிளில் வந்த மாணவி தடுமாறி வீதியில் விழும் நிலையில் ஓரளவு சுதாகரித்ததால் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டாராயினும் அவரது கண்கள் நனைந்திருந்தன. ஒருவேளை அவர் வீதியில் விழுந்திருந்தால் அதேநேரம் பின்னால் வந்துகொண்டிருந்த எமது வாகனம் அவர் மீது ஏறியிருந்தால் அவரது நிலை என்ன?
வாகனத்தில் இருந்த நண்பரும் நானும் ஓட்டுனரிடம் "வேகமாக வண்டியை ஓட்டி அவர்களை மடக்கிபிடித்து அந்த மாணவி கையாலே செருப்படி வாங்கிக்கொடுப்போம்" என்று கூறியதற்கு அவர் கூறினார் பாருங்கள் ஒரு பதில்; "அவங்கள் என்ன கற்பையா அழிச்சிட்டாங்க? சும்மா ஆசையில கிள்ளீற்றுப் போறாங்க இதெல்லாம் கண்டுக்ககூடாது" என்பதுதான் அந்த 39 வயது வாலிபரின்(திருமணமாகவில்லை)பதில். இப்போது அந்த ஆட்டோக்கரரிலும் பார்க்க எமக்கு அதிககோபம் வந்தது எமது ஓட்டுனரில்தான். ஆனால் அந்த ஓட்டோவை அடுத்த காவலரணில் எம்மால் சந்திக்க முடிந்தது, அவர்கள் எதோ ஒரு கட்சியை சேர்ந்தவர்கள், கையில் தேர்தல் விஞ்ஞாபனம் வைத்திருந்தார்கள், இராணுவத்தினருடன் நன்கு சிரித்து கதைத்துக்கொண்டிருந்தார்கள், இதற்க்கு பின்னர் எங்களால் அவர்களை என்ன செய்துவிட முடியும்?

இது உதாரணத்திற்கு நான் பார்த்த ஒரு சம்பவம்தான், ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இதேபோல பல சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளது. தட்டிக்கேட்க அவர்களும் இல்லாததால் இனிவரும் காலங்களில் இவர்களின் அட்டகாசம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைத்தடுக்காவிட்டால் பெண்களை காமப்பொருளாக பார்க்கும் நிலைக்கு யாழ் இளைஞர்கள் தள்ளுப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு கிராம மக்களும் திருட்டுக்கு 'விழிப்பு குழு' அமைத்தது போன்று இதற்கும் ஒரு 'குழுவை' அவரவர் கிராமங்களுக்கு உருவாக்கினாலன்றி இதனை கட்டுப்படுத்துவது கடினமாகவே இருக்கும்.

[2] வியாபாரிகளின் சுரண்டல்


பாதை திறக்கப்பட்டதால் கொழும்பிலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அங்கு விற்க முடியாத தரமற்ற பொருட்களையே இவர்கள் அதிகளவில் எடுத்து வருகின்றனர், அவற்றை நடைபாதை கடைகளில் போட்டு குறைந்த விலையில் விற்பதால் 'காணாததை கண்ட' யாழ்ப்பாண மக்கள் வேண்டிவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.

இவர்களும் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள், குறைந்த விலையில் கிடைப்பதால் தரத்தை பார்க்காமல் பொருட்களை அள்ளிச்செல்கிறார்கள். இதில் அதிகமாக துணிகளும், பிளாஸ்டிக் பொருட்களுமே விற்பனையாகின்றன. இதனால் யுத்த காலத்திலும் தொடர்ந்தும் மக்களோடு இருந்த கடைகளும் வியாபாரிகளும் மிகுந்த வாட்டத்தில் காணப்படுகின்றனர். இது நகர்ப்புறமென்றில்லை யாழ்ப்பாணத்தில் எங்கு சிறிது சனநடமாட்டம் உள்ளதோ அங்கெல்லாம் நடை பாதைக்கடைகள்தான். குறிப்பாக புகழ்பெற்ற 'நல்லூர்' ஆலயத்தை சுற்றி ஒரு மினி மாக்கற்ரையே இவர்கள் உருவாக்கி விட்டார்கள்.
இவர்கள்தான் இப்படி என்றால் 'குச்சி முட்டாய்' விற்கும் கம்பனிகள் முதல் மோட்டார் சைக்கிள் விற்கும் பெரிய கம்பனிகள்வரை அனைவரும் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இங்குதான் அதிக வெளிநாட்டு காசு இருக்கிறதல்லவா? விடுவார்களா இவர்கள், பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு விலை குறைப்பு செய்து விற்றுத்தள்ளுகிறார்கள். ஒரு சந்தையில் அல்லது ஒரு டவுனில் கழுத்தில் டையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் sales representative கள்தான் இப்போது அதிகம். முன்பெல்லாம் உடன் காசென்றாலே பொருட்களை வழங்க பந்தா பண்ணும் பேர்வழிகள் எல்லாம் இப்போது 45 நாள் தவணையில்(cheque payment)பணத்தை தாருங்கள் என்றுகூறி பொருட்களை கொடுத்துவிட்டு போகிறார்கள், இவர்களின் ஆசைவார்த்தையில் மயங்கி 'கடனாளியாகும்' சிறிய கடைக்காரர்கள் பின்னர் பொருட்கள் விற்கப்படாமல் குறித்த தவணையில் பணத்தை வங்கியில் வைப்புசெய்ய படாதபாடுபடுகிறார்கள்.
அடுத்து முக்கியமான விடயம் யாழ்ப்பாணத்திலிருக்கும் பழைய இரும்புகளை எல்லாம் கிலோவுக்கு பத்துரூபா( இலங்கை காசு ) வீதம் வாங்கி அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்கிறார்கள். பெரிய பெரிய தலைகள் கொழும்பிலிருந்து இங்கு சிறிய சிறிய ஏஜண்டுகள் மூலம் இரும்புகளை கொள்வனவு செய்கின்றன. எவ்வளவு பெறுமதியான பொருட்களை கொடுக்கிறோம் என்பது தெரியாமலேயே இவர்கள் கொடுப்பதால் இழக்கப்படுவது நமது வளங்கள் என்பதை பத்திரிகைகளும் உணர்த்தாதது ஆச்சரியமே. இதைவிட நமது வளங்களை வியாபாரிகள் கொள்ளையடிப்பதற்கு வேறு சான்று வேண்டுமா ?

[3] சூழல் மாசடைதல்


இதற்கும் முன்னைய வியாபாரிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சுத்தமான காற்றை சுவாசித்த மக்களுக்கு இப்போது ஒரே வாகனப் புகைதான், ஒவ்வொரு நிறுவனமும் தமது பொருட்களை இங்குள்ள பிரபலமான ஒரு முதலாளியிடம்( 5,000,000 ரூபா வங்கியில் வைப்பிருந்தால் போதும்) விற்பனை அனுமதியை(agent ) கொடுத்து விடுகிறார்கள். அவர்களும் இத்துப் போன ஒரு வாகனத்தில் பொருட்களை ஏற்றி அனுப்பி விடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் மோசமான நிலையில் இருப்பவை. அவற்றினால் கிளப்பப்படும் புகை வீதியை மறைக்குமளவிற்க்கும் வருவதுண்டு( உவமை அல்ல). அதிகமான மக்கள் சைக்கிளையே பயன்படுத்தி வருகின்றன காரணத்தால் பிரதான வீதிகளில் பயணிப்பது மிகுந்த கடினமாக உள்ளது, சிறிதாக இருக்கும் யாழ் வீதிகளில் வாகன நெரிசல் பலமடங்கு அதிகரித்துள்ளது.டெங்கு  காய்ச்சலால் தினம் தினம் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் வேலையில் பத்திரிகைகளில் எவ்வளவோ வலியுறுத்தியும் கொழும்பிலிருந்து கொண்டு வரப்படும் நாட்கள் கழிந்த(பழைய) 'பச்சை சோளம்' அதிகளவு அனைத்து இடங்களிலும் நடைபாதைகளில் போட்டு பச்சையாகவும் ,அவித்தும் விற்கப்படுகிறது. ஒரு சோளம் பொத்தி இலங்கை காசுக்கு 10 ரூபாவுக்கு அவித்து விற்கப்படுவதால் மக்கள் அதைவாங்கி சாப்பிடுகிறார்கள். சோளம் மேல்த்தோல் வாடினாலும் உள்ளே பழுதடைந்திருப்பது தெரியாது என்பதை பயன்படுத்தி கொழும்பில் விற்கமுடியாத சோழனை இங்கு வீதிகளில் கொட்டிவிற்கிறார்கள். மக்களும் இது தெரியாமல் வாங்கி உட்கொள்கிறார்கள், சுகாதார பிரிவும் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்கள். அது தவிர சோளம் விற்றபின்னர் வரும் அவற்றின் தோல்கள், மற்றும் நடைபாதை வியாபாரிகளின் கழிவுகள் நகரெங்கும் கொட்டிக்கிடக்கிறது.

இது தவிர வயல்வெளிகளில் விளம்பர பலகைகளை வைத்தல், கடைகளுக்கு விளம்பர பலகை வழங்குதல் என்பவற்றிற்காக வயல்களிலும், உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளிலும் வைத்து 'இரும்பு ஓட்டும்' வேலைகள் இடம் பெறுவதால் உணவுப்பொருட்கள் மாசடையும் அபாயமுள்ளது.இதனால் யாழ் மக்களுக்கு எம்மாலான சிறிய வேண்டுகோள்

1 ) தயவுசெய்து விலை குறைவென்று தரம் குறைந்த 'நடை பாதை' பொருட்களை வாங்காதீர்கள்.

2 ) வீதிகளில் போட்டு விற்கும் உணவுப்பொருட்களை குறிப்பாக சோளத்தை வேண்டி உண்ணாதீர்கள்.

3 ) நகர்ப்புறங்களுக்கு பலதரப்பட்ட மக்களும் வந்து போவதால் முடிந்தவரை கடைகளிலும் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது.

4 ) வீதிகளில் பயணிக்கும் போது கவனமாக பயணியுங்கள், நீங்கள் சரியான வழியில் போனாலும் எதிரில் வருபவனை நம்பமுடியாது.


5 ) முடிந்தவரை உங்களுக்கு சொந்தமான இடங்களில் வியாபாரிகள் தரும் சிறியதொகை பணத்திற்காக அவர்களது மிகப்பெரும் விளம்பர பலகைகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

6 ) முடிந்தவரை சுட்டாறிய நீரை பருகுங்கள்

30 வாசகர் எண்ணங்கள்:

Paarvai said...

This is what I was expecting when things went wrong in May. I didn't care about Jaffna people. I only worried abt the people who were in vanni during the last battle. They are the people who are so devastated hope god will save them.

ஹாய் அரும்பாவூர் said...

ப்ளாக் எழுதுவது ஒரு கலை அதிலும் நாட்டு நடப்பு கலை,விளையாட்டு என்று கலந்து எழுதுவது சிறப்பு .நிச்சயம் உங்கள் ஆக்கங்களில் நாட்டு நடப்பை பற்றி கவலை மற்றும் முன்னேற்றம் பற்றி நம்பிக்கை உள்ளது நீங்கள் நினைப்பது போல் நிச்சயம் ஸ்ரீ லங்கா ஒரு துபாய் போல மலேசிய போல ஒரு முன்னேறிய நாடக மாறும் அதற்குரிய காலம் வெகு தொலைவில் இல்லை

எப்படி இப்படி அசராம எழுதிரிங்க எப்பூடி மீண்டும் அதே கேள்வி

பாலா said...

100 வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பா!

போட்டோ பார்க்கும் போதெல்லாம்... உங்க நாட்டுக்கு வந்து கொஞ்ச நாள் தங்கியிருக்கனுங்கற ஆசை அதிகமாகிட்டே போகுது!!

ஆனா.. இந்த A9 மாதிரியான வாழ்க்கை முறைகள் இன்னும் எனக்குப் புரியலை.

முழு அமைதி திரும்ப... இல்லாத இறைவனை வேண்டுகிறேன்.

KANA VARO said...

Best of luck for ur 100th post...

ஜீவன்பென்னி said...

உங்கள் 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

மிக அருமையான சிந்தனை, ஒவ்வொரு மக்களும் நம் பகுதியை பற்றி கவலை பட்டால் நாடே சுகாதாரம், சுத்தமாகி விடும்.

என்னையும் நினைவில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி நண்பா :-)

kural said...

உலக மயமாகல் எம்மையும் துரத்தும்

sellamma said...

நண்பரே,,
அருமையான ஆக்கம்,,
ஆழமான கருத்துக்கள்,,,
பெரும்பாலான கள் எம் சமுதாயத்தை தாக்கி எழுதிக்கொண்டு இருக்கின்றார்களே தவிர எம் சமுதாயத்தை மேம்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை,,
ஆனால் உங்கள் ஆக்கத்தில் இருக்கும் சமுதாய பற்று என்னை மிகவும் கவர்கிறது,,
வாழ்த்துக்கள்,,,

அ.ஜீவதர்ஷன் said...

velanaiTamilan

//This is what I was expecting when things went wrong in May. I didn't care about Jaffna people. I only worried abt the people who were in vanni during the last battle. They are the people who are so devastated hope god will save them.//

நிச்சயமாக....

.................................

arumbavur

//ஸ்ரீ லங்கா ஒரு துபாய் போல மலேசிய போல ஒரு முன்னேறிய நாடக மாறும் அதற்குரிய காலம் வெகு தொலைவில் இல்லை //

உங்கள் வாக்கு நல்வாக்காகட்டும்

................................

ஹாலிவுட் பாலா

//100 வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பா!//

நன்றி

//போட்டோ பார்க்கும் போதெல்லாம்... உங்க நாட்டுக்கு வந்து கொஞ்ச நாள் தங்கியிருக்கனுங்கற ஆசை அதிகமாகிட்டே போகுது!! //

ஏங்க இந்த விபரீத ஆசையெல்லாம்.

.....................................

VARO @

ஜீவன்பென்னி @

இருவருக்கும் நன்றிகள்

.........................................

சிங்கக்குட்டி

//ஒவ்வொரு மக்களும் நம் பகுதியை பற்றி கவலை பட்டால் நாடே சுகாதாரம், சுத்தமாகி விடும்.//

உண்மைதான்.

...........................................

kural

//உலக மயமாகல் எம்மையும் துரத்தும்//

அதுதான் அரம்பிச்சிடிச்சே

mnalin said...

//செல்லம்மா
பெரும்பாலான கள் எம் சமுதாயத்தை தாக்கி எழுதிக்கொண்டு இருக்கின்றார்களே தவிர எம் சமுதாயத்தை மேம்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை//

எல்லோரும் யோசிக்க வேண்டும்

நன்றி. தொடர்ந்து வாருங்கள்

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள் எப்பூடி. மென்மெலும் சிறக்க வாழ்த்துக்கள்.

கிரி said...

100 பதிவிற்கு வாழ்த்துக்கள்.

உங்கள் பகுதியை பற்றிய தகவல்களுக்கு நன்றி

ஞானப்பழம் said...

முதலில் உங்கள் 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
இப்படிப்பட்ட பதிவுகளையே எதிர்பார்க்கின்றேன்.. குழும ஆர்வலர்கள் நம்முள் நிறைய பேர் வேண்டும். அதுவும் கடைசியாக கொடுத்தீர்களே சில குறிப்புகள்.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. யாழ் மக்கள் இதை படிப்பது அவசியம்.. அரசியல் பேசுவோர் பேசட்டும்.. நாம் பொதுமக்களுக்கு என்ன முக்கியமோ அதை அலசுவோம்...

நீங்கள் சொல்லும் அனைத்து பிரச்சனைகளுமே தமிழ் நாடு ஏற்கனவே சந்தித்து கொண்டும் அதை சமாளித்தும் வருகிறது... என்னைப் பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பதற்கு வேறொரு பொருள் "மேல்நாட்டுக் குப்பைகள் எல்லா இடத்திலும் பரவட்டும்"... அவர்கள் நாட்டு வாழ்க்கை முறைக்கு அது தகும் அனால் நம் நாட்டிற்கு பெரும்பாலும் அவை இடையூருகளாகவே அமையும்!

ஞானப்பழம் said...

பீதியைக் கேளப்பரவங்கள்ள நான் முதல் ஆள்னு பார்த்த வுடனே நான் பீதி ஆயிட்டேன்னா பார்த்துக்கொங்களே!!

hahaha said...

அடவிடுங்க பாஸ் இதெல்லாம் அங்க பரம்பர பரம்பரையா நடந்துகொண்டிருக்கு அங்க இருக்கிறவனுக்கு சூடு சுரணை எதுவுமே கிடையாது அங்க இருக்கிறவன் பூராப் பொட்டப்பயளுகள்

அ.ஜீவதர்ஷன் said...

சுடுதண்ணி @

கிரி @

நன்றி

.....................................

ஞானப்பழம்

நன்றி,

//பீதியைக் கேளப்பரவங்கள்ள நான் முதல் ஆள்னு பார்த்த வுடனே நான் பீதி ஆயிட்டேன்னா பார்த்துக்கொங்களே!!//

அப்டியா???????

..........................

hahaha

//அடவிடுங்க பாஸ் இதெல்லாம் அங்க பரம்பர பரம்பரையா நடந்துகொண்டிருக்கு அங்க இருக்கிறவனுக்கு சூடு சுரணை எதுவுமே கிடையாது அங்க இருக்கிறவன் பூராப் பொட்டப்பயளுகள்//

முழுமையாக எல்லோரையும் குறை கூறாதீங்க பாஸ் .

ஞானப்பழம் said...

அடவிடுங்க பாஸ் இதெல்லாம் அங்க பரம்பர பரம்பரையா நடந்துகொண்டிருக்கு அங்க இருக்கிறவனுக்கு சூடு சுரணை எதுவுமே கிடையாது அங்க இருக்கிறவன் பூராப் பொட்டப்பயளுகள்///

நீங்க உங்க உண்மையான அடையாளத்தில் பின்னூட்டல் கொடுக்க தைரியம் இல்லமால், அடுத்தவங்களை போட்டப்பயளுங்க என்கிறீங்களே!!

sathishsangkavi.blogspot.com said...

100 வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பா!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//நீங்க உங்க உண்மையான அடையாளத்தில் பின்னூட்டல் கொடுக்க தைரியம் இல்லமால், அடுத்தவங்களை போட்டப்பயளுங்க என்கிறீங்களே!!//


உங்க ஆதரவுக்கு நன்றி.


..........................

Sangkavi

//100 வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பா!//

நன்றி.

Anonymous said...

உங்கள் சிந்தனைக்கு நன்றி. இப்பிரச்சனைகளை தீர்க்க கூடிய அதிகாரம் உள்ள அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பொழுது, மற்றவர்கள் என்ன செய்ய முடியும். உதாரணம் அரசாங்க அதிபர்.

அ.ஜீவதர்ஷன் said...

thariniga

//உங்கள் சிந்தனைக்கு நன்றி. இப்பிரச்சனைகளை தீர்க்க கூடிய அதிகாரம் உள்ள அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பொழுது, மற்றவர்கள் என்ன செய்ய முடியும். உதாரணம் அரசாங்க அதிபர்//

பிரதான வீதிகளையே எப்பிடி இருக்கின்றதென்று பாருங்க.

Yoganathan.N said...

இந்த பதிவை மிஸ் பன்னிட்டேன்...
100-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். 200, 300 என மேலும் உழுதிக்கொண்டே இருங்கள்... :)

பி.கு எனக்கு ஸ்பெசியல் நன்றி தெரிவித்தமைக்கு நன்றிகள் பல... :ஆனந்தக் கண்ணீர்:

DARLING EXPORT said...

வணக்கம்
யாழ்ப்பான தமிழ் வர்த்தகர்கள் முகவரி கிடைக்குமா

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//100-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். 200, 300 என மேலும் உழுதிக்கொண்டே இருங்கள்... :)//

நன்றி

//பி.கு எனக்கு ஸ்பெசியல் நன்றி தெரிவித்தமைக்கு நன்றிகள் பல... :ஆனந்தக் கண்ணீர்://

WHY BLOOD? SAME BLOOD

..................................

DARLING EXPORT

//யாழ்ப்பான தமிழ் வர்த்தகர்கள் முகவரி கிடைக்குமா//

ஆஸ்பத்திரிவீதி பூரா தமிழ் வர்த்தகர்கள்தான்

Gopi said...

நன்றி நண்பரே,
தற்போதைய யாழ்ப்பாண நிலவரத்தை எம் கண்முன்னே காட்டிய உங்களுக்கு.
தங்களின் 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

அ.ஜீவதர்ஷன் said...

Gopi


//தற்போதைய யாழ்ப்பாண நிலவரத்தை எம் கண்முன்னே காட்டிய உங்களுக்கு.
தங்களின் 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

santhi said...

யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமை இது....நன்றி நண்பரே

DARLING EXPORT said...

யாழ்ப்பான கல்லூரி
Battle of Hindus 2010 - 30th April at Kokuvil Hindu College

http://www.youtube.com/watch?v=x3M48BNc-QY
just relax visit the வீடியோ யாழ்ப்பான இந்து கல்லுரி மாணவர்கள் நடத்திய கிரிகெட் போட்டி யாழ்ப்பான மாகாணத்தில் உள்ள கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ்ப்பான இந்து கல்லுரி அணிக்கும் நடந்த கிரிகெட் விளையாது போட்டி

Pazhaselvaraaju said...

தட்டிக்கேட்க அவர்களும் இல்லாததால் இனிவரும் காலங்களில் இவர்களின் அட்டகாசம் அதிகரிக்க -

எழுத முடியவில்லை -அழ முடிகிறது Raama

எப்பூடி.. said...

@ santhi

@ DARLING EXPORT

@ Pazhaselvaraaju

வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)