Friday, January 15, 2010

இனிமேல் விடமாட்டார்கள் !

இது சம்பந்தமாக முன்னர் ஒரு பதிவு எழுதியிருந்தாலும் இப்போதுதான் இதைப்பற்றி எழுதுவது சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன். இது அனைத்து பதிவர்களுக்கும் பொருந்தாது , முன்பு சொன்னது போன்றே தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.

இங்கு வரும் 'பதிவர்கள்' என்னும் பிரிவில் நானும் ஒருவன் என்பதை உண்மையில் கவலையுடன் கூறிக்கொள்கிறேன்.

ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது. நிதிப்பிரச்சினை, கால்சீற் பிரச்சினை, காலநிலைப்பிரச்சினை என ஏகப்பட்ட பிரச்சனைகளை தாண்டி ஒரு படத்தை வெளியிட்டால் அதை இருந்த இடத்தில் இருந்தே ஓடவிடாமல் செய்வதில் பதிவர்களையும் இணையதளங்களையும் யாரும் மிஞ்சமுடியாது. இவர்களை தாண்டி ஒரு படம் வெற்றியடைவதென்றால் உண்மையில் பெரிய விடயம்தான். அண்மைக்காலங்களில் இவர்களிடமிருந்து தப்பித்து வெற்றிபெற்ற பெரிய நடிகர்களின் படங்களோ அல்லது பெரிய இயக்குனர்களின் படங்களோ எதுக்கும் இல்லை.


பதிவர்கள் ஒரு ஹீரோவின் படத்தை தோல்வியடைய செய்வதற்கு வேண்டுமானால் பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் முன்னணி இயக்குனர்களின் படங்களை முடிந்தவரை மோசமாக விமர்சிப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும், அதாவது தங்களை இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறந்த விமர்சகர்களாக காட்டிக்கொள்வதே அதுவாகும். இந்த வியாதியால் பாலாவுக்கு பின்னர் பாதிக்கப்பட்டுள்ளது இப்போது செல்வராகவன். குறிப்பாக ஒரு முக்கிய ஆங்கில இணையத்தளம் ஆயிரத்தில் ஒருவனுக்கு 0.5 /5 புள்ளிகளை வழங்கியுள்ளது, இதே தளம் வேட்டைக்காரனுக்கு 2/5 புள்ளிகளைமுன்னர் வழங்கியிருந்தது. அதேபோல் சில பதிவர்களும் ஆயிரத்தில் ஒருவனை மோசமாக விமர்சித்திருப்பது கவலையான விடயமே,அதிலும் குறிப்பாக தூய தமிழில் பேசுவதை குறையாக கூறுவதை என்னவென்று எடுத்துக்கொள்வது ?இப்படியே பாலா, செல்வா போன்றவர்களது வித்தியாசமான படைப்புக்களை வரவேற்காமல் குறைகளை மட்டும் தூக்கிப் பிடித்தால் தமிழ் சினிமா உருப்படுவது ரொம்ப கஸ்ரம். முன்பெல்லாம் தொலைக்காட்சிகளின் தொல்லைகள் இருந்தாலும் அவர்களின் உதவியால் ஓடிய படங்களுமுண்டு. ஆனால் பதிவர்களால் தோல்வியை நோக்கியே அதிகமாக படங்களை கொண்டுசெல்ல முடிகிறது. ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களின் படைப்புக்களை நன்றாகவும் பிடிக்காதவர்களின் படைப்புக்களை மோசமாகவும் எழுதுவதே இதற்கு முக்கிய காரணமாகும் . இதனால் ஒருவர் நன்றாக எழுதும் ஒரு படத்தின் விமர்சனத்தை இன்னொருவர் மோசமாக எழுதுவதால் அந்தப் படத்தைப்பற்றி mix report வாசகர்களை சென்றடைகின்றது,இதனால்தான் இப்போதெல்லாம் அதிகமான படங்கள் average ஆகவே போகின்றன.

பல கோடி ரூபாய் முதல் ,பல்லாயிரக்கணக்கானவர்களின் உழைப்பு என பல மாதங்கள் பாடுபட்டு எடுத்த ஒரு படத்தை விமர்சிக்கும் போது முடிந்தவரை விமர்சனங்களை பாதகமில்லாமல் எழுதினால் நல்லது, அதற்காக பொய்யான விமர்சனம் எழுதவேண்டுமென்று அர்த்தமில்லை, முடிந்தவரை படத்திலுள்ள சிறிய குறைகளை தூக்கிப்பிடிக்காமல் படத்தில் இருக்கும் நல்லவிடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக புதிய விடயங்கள் இல்லை என்று கமெர்சியல் படங்களுக்கு விமர்சனம் எழுதிவிட்டு பின்னர் வித்தியாசமான படங்களுக்கு இது மக்களுக்கு விளங்காது என்று விமர்சனம் எழுதினால் அது நியாயமா?

இப்படியேபோனால் வெற்றிப்படங்களை காண்பதே அரிதாகிவிடும்போல் இருக்கின்றது. எந்த சினிமாவை பார்த்து பதிவு எழுத ஆரம்பித்தோமோ ' , 'எந்த சினிமாவை வைத்து ஹிட்ஸ் வாங்குகிறோமோ' அந்த சினிமாவையே அழிக்க நாம் காரணம் ஆகிவிடக்கூடாது என்பது எனக்கு வந்த ஞானோதயம், பதிவர்களே தயவு செய்து நீங்களும் சிந்தித்து பாருங்கள். நான் இதனை முடியுமானவரை காப்பற்றப்பார்க்கிறேன்( விஜய் படங்களுக்கும் இது பொருந்தும்{படங்களுக்கு மட்டும் } ).

21 வாசகர் எண்ணங்கள்:

வெற்றி said...

சரியாக சொன்னீர்கள்..எனது ஆதங்கமும் இதுதான்..

கிரி said...

நல்ல படம் வந்தால்..இப்படி சொல்வது.. மசாலா படம் வந்தால் நல்ல படம் வருவதில்லை தமிழ் சினிமா உருப்படாது என்று சொல்வது.

நான் கடவுள் படத்தை பலர் கண்டபடி விமர்சித்து ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள்.

இவர்கள் பலர் படம் பார்த்து விமர்சனம் செய்வதில்லை.. விமர்சனம்!! செய்ய படம் பார்க்கிறார்கள்.


புதிய முயற்சிகளையும் அது நொள்ளை இது நொட்டை என்று ஊக்குவிக்க மாட்டார்கள்.. பழைய பாணியாக இருந்தால் பழசையே எத்தனை நாள் தான் ஓட்டுவாங்க! என்று கிண்டல் செய்யறாங்க..

இதை போல மனசாட்சி இல்லாமல் எழுதுபவர்களுக்கு எப்படித்தான் படம் எடுக்கணுமோ தெரியல!

ஜீவன்பென்னி said...

உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். எனக்கும் இதே ஆதங்கம் தான்.

அஹோரி said...

//இப்படியே பாலா, செல்வா போன்றவர்களது வித்தியாசமான படைப்புக்களை வரவேற்காமல் குறைகளை மட்டும் தூக்கிப் பிடித்தால் தமிழ் சினிமா உருப்படுவது ரொம்ப கஸ்ரம்.//
மனசுல நினைச்சத அப்பிடியே சொல்லீடீங்க.

நல்ல பதிவு .

தம்பி.... said...

நல்லா சொன்னீங்க நண்பா, வழக்கமான படமா எடுத்த...உலக சினிமா எங்கேயோ போகுது, நம்ம இன்னும் குண்டு சட்டில குதிர ஒட்டுரோம்னு சொல்றது, கொஞ்சம் அட்வான்சா எடுத்தா, இது அந்த ஹோலிவுட் படத்த காப்பி அடிச்சி எடுத்ததுன்னு எழுதுறது....இவங்களுக்கு தேவ ஒட்டும்,ஹிட்டும் இதுக்காக என்ன வேணும்னாலும் எழுதுவாங்க...இவங்களும் கேவலமான அரசியல்வாதிங்க தான்..

சிங்கக்குட்டி said...

இதை இரண்டு வகையாகவும் பார்க்க வேண்டும்.
ஒரு நடிகரை அல்லது இயக்குனரை பிடிக்கவில்லை என்று படத்தை தவறாக குறை கூறினால் அது எழுதியவரின் தவறு.

அதே நேரத்தில் சப்பை கதையை கொண்டு வரும் படம் பெரிய இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்பதால் நல்ல படம் என்றும் சொல்லக்கூடாது இல்லையா?

அப்படி செய்தால் அதிக பணம் இருக்கும் அனைவரும் பிரமாண்டமாக குப்பை படங்களை கொண்டு வந்து விடுவார்கள் :-)

உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் வேண்டும் என்றால், இரு தலைமுறை காதல் வித்தியாசத்தை கதையாக கொண்ட "பொக்கிஷம் மற்றும் லவ் ஆஜ் கல்(Love Aaj Kal)" படம் பாருங்கள்.

ஓவ்வொரு கட்சியமைப்பிலும், வசனத்திலும், பின்னணி இசையிலும், ஏன் பின்னால் இருக்கும் செடி கொடி செட்டிங் வரை எவ்வளவு வித்தியாசம் என்று?

பாலா said...

இப்படியேபோனால் வெற்றிப்படங்களை காண்பதே அரிதாகிவிடும்போல் இருக்கின்றது

ஹாய் அரும்பாவூர் said...

ரொம்ப சரியான் நேரத்தில் சிறப்பான பதிவு
ஆயரத்தில் ஒருவன் நிச்சயம் வெற்றியில் ஒருவன் ஆகும் குறைகள் வரும் காலத்தில் மாறும்

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//சரியாக சொன்னீர்கள்..எனது ஆதங்கமும் இதுதான்..//

உங்கள் விமர்சனம் பார்த்தேன் அதில் குறிப்பாக இறுதி பஞ்ச் சூப்பர்

..............................

கிரி

//இவர்கள் பலர் படம் பார்த்து விமர்சனம் செய்வதில்லை.. விமர்சனம்!! செய்ய படம் பார்க்கிறார்கள்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்....

................................

Kaipulla

// வழக்கமான படமா எடுத்த...உலக சினிமா எங்கேயோ போகுது, நம்ம இன்னும் குண்டு சட்டில குதிர ஒட்டுரோம்னு சொல்றது, கொஞ்சம் அட்வான்சா எடுத்தா, இது அந்த ஹோலிவுட் படத்த காப்பி அடிச்சி எடுத்ததுன்னு எழுதுறது//

உலக சினிமா இவங்க பாக்கிறாங்கின்னா அதுக்கு மூலகாரணம் ஆரம்பகால தமிழ்ப்படங்களை பார்த்ததுதான் என்பதை மறந்து விடுகிறார்கள்

................................

சிங்கக்குட்டி

//அதே நேரத்தில் சப்பை கதையை கொண்டு வரும் படம் பெரிய இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்பதால் நல்ல படம் என்றும் சொல்லக்கூடாது இல்லையா?//

நீங்கள் சொல்வது சரி, ஆனால் 'நான் கடவுள்', 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டுமே என்னைப்பொறுத்தவரை நல்ல படங்களே , இவற்றை மோசமாக விமர்சித்தால் நிச்சயமாக யாரும் வித்தியாசமான படமெடுக்க வரமாட்டார்கள். பொக்கிஷம் நீங்கள் சொல்வது போல் இருந்தால் கண்டிக்கப்படவேண்டியதே.

.....................................

negamam

//இப்படியேபோனால் வெற்றிப்படங்களை காண்பதே அரிதாகிவிடும்போல் இருக்கின்றது//

2009 இல் அயன், நாடோடிகள் தவிர முழுமையான வெற்றிப்படம் ஒன்றும் இல்லை என்பது வருத்தமான விடயமே.

................................

arumbavur

//ரொம்ப சரியான் நேரத்தில் சிறப்பான பதிவு
ஆயரத்தில் ஒருவன் நிச்சயம் வெற்றியில் ஒருவன் ஆகும் குறைகள் வரும் காலத்தில் மாறும்//

நன்றி , அந்த மாற்றத்தைத்தான் நான் விரும்புகிறேன்

chosenone said...

இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

...ஒரு சிறிய உதாரணம் : "3idiots" படம். இந்த படத்தை வசை பாடின ஒரு இனைய பதிவாளர் விமரசனத்தை உங்கள்ளல் தரமுடியுமா ? அல்லது உங்களால் தான் அதை harsh ஆக விமர்சனம் பண்ண முடியுமா ?
நீங்கள் {அல்லது நீங்கள் சொல்லும் எந்த prejudice ஆளையோ } நினைத்தாள் கூட ஒரு அளவுக்கு மீறி அதை வசைபாடவும் முடியாது ,,அதில் செய்து காட்ட பட்டுருக்கும் திரைகதை அற்புதங்களை ignore செய்யவும் முடியாது .
இது ஒரு உதாரணம் .இதனால் அடியேன் சொல்லவிரும்புவது:::::::::::::::::
தெளிவான சிந்தனையும் , துய திறமையும் எந்த கொம்பாதி கொம்பனாலும் பிழையாக விமர்சனம் செய்து படைப்பின் கடைசி வடிவத்தை/மக்கள் வரவேற்பை தடுக்க முடியாது .

இப்படி சொல்வதனால் நானும் ஒரு "anti-மசாலா-syndrom" என்று மனதுக்குள் லேபல் குத்தாதிங்க .
நான் மசாலா திரைபடங்களுக்கு எதிரானவன் அல்ல.
ஆனானபட்ட ஹாலிவுட் ல இல்லாத மசாலாவா......
என் வருத்தம் ஒன்றுதான் .
மசாலா படம் எடுத்து தொலைக்கிறோம் என்று ஒரே கதையை திரும்ப திரும்ப///
தந் வாழ் நாள் முழுதும் படமாக்கி வயிற்று பில்லப்பை நடத்தும் பேரரசு போன்ற திரயுலக மனநோயாளிகளை என்னால் சபிக்காமல் இருக்க முடியாது.
கில்லி என்று ஒரு படம் ஹிட்டானதுடன் அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமா மசாலா range க்குள் இருந்து வெளிவர் பயந்து risk-free ரூட்டில் பயணிக்கும் விஜய் போன்று தலைவலிகள் குணமடைய
ஒரே மருந்து : அவர் ஒரு தலை வலி என்று அவருக்கே உணர்த்துவது தான் .
அதுக்கு நல்ல விமர்சன்னங்கள் தேவை.
{நல்ல விமர்சன்னங்கள்=உள்ளதை உள்ள படி சொல்வது. }
நீங்கள் சொல்வது மாதிரி செய்தால் ஹிட் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் ,ஆனால் அதை கொண்டாட தமிழ் சினிமா
என்றொரு குப்பை மேடு தன் மிச்சம் இருக்கும் .

முகம் பார்பதற்கு ஒரு கண்ணாடி எப்படியோ , .அதேபோல் நல்ல படைப்புக்கள் உருவாவதற்கு ....சிறந்த விமர்சனங்களின் பங்கு தவிற்கமுடியாதது.....

மன்னிப்பு:::: தமிழில் டைப் செய்ய தெரியாமல் செய்து,, விட்டிருக்கும் எக்கச்சக்கமான எழுத்து பிழைகளுக்கு .

அ.ஜீவதர்ஷன் said...

psp

//3idiots" படம். இந்த படத்தை வசை பாடின ஒரு இனைய பதிவாளர் விமரசனத்தை உங்கள்ளல் தரமுடியுமா ? அல்லது உங்களால் தான் அதை harsh ஆக விமர்சனம் பண்ண முடியுமா ?//

ஹிந்திப்படம் , ஹோலிவூட் படமெல்லாம் நல்லதத்தான் விமர்சிக்கிறாங்க, அப்பதானே இவங்க உலக தரமான விமர்சகர்களாக முடியும்.

//நீங்கள் சொல்வது மாதிரி செய்தால் ஹிட் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் ,ஆனால் அதை கொண்டாட தமிழ் சினிமா
என்றொரு குப்பை மேடு தன் மிச்சம் இருக்கும் .//

குப்பைப்படன்களை யாரும் தூக்கிப்பிடிக்க சொல்லவில்லை மாறாக அவ்வப்போது வரும் வித்தியாசமான படங்களை ( நான் கடவுள், ஆயிரத்தில் ஒருவன்) போன்ற படங்களையும் மோசமாக விமர்சித்தால் எப்படி தமிழ் சினிமா குப்பை மேடாக மாறாதிருக்கும்?

//முகம் பார்பதற்கு ஒரு கண்ணாடி எப்படியோ , .அதேபோல் நல்ல படைப்புக்கள் உருவாவதற்கு ....சிறந்த விமர்சனங்களின் பங்கு தவிற்கமுடியாதது.....//

நீங்கள் சொல்லும் நல்ல விமர்சனம் நூற்றுக்கு 10 வீதம் வந்தாலே சந்தோசம்.

chosenone said...

நான் உங்கள் மனன நிலை உணர்கிறேன்.
naankadavul,yogi,etc போன்ற படங்களிள் குறைகள் இருந்தாலும் அந்த படங்கள் ஒரு நல்ல படைப்புக்காக எவளவு முடியுமோ அந்தளவுக்கு உழைத்து இருகிறார்கள்.எந்த சந்தேகமும் இன்றி இத்திரை படங்கள் சமகால படங்களை விடை சிறநதபடங்கள் தான். இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை .
அனால் நீங்கள் சொல்ல வருவது அது இல்லியே பாஸ்.
கடுமையாக விமர்சிக்கா விட்டால் விஜய் குருவி ,வில்லு ,வேட்டைக்காரன்,சுறா,சிறுத்தை,அம்பு,மண்வெட்டி,கஜா,கபாலி,பொறிக்கி,புண்ணாக்கு...என்று சொந்த செலவில் தனக்கும் தமிழருக்கும் சூனியம் மேல் சூனியமாய் வைத்து கொண்டே போக .......பேரரசு,ஹரி,ரித்திஷ்,... போன்றோர் தமிழனை early 90's களுக்கே மீண்டும் இழுத்துசெல்ல நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல் பிழைகள் "குத்தம்-கோர" கண்டுக்காம விட்டுடனும்.....
மசாலா படம் பண்ணுறது பிரச்சனை இல்ல..... மசாலா படம் என்று "oru format"ஐ வைத்து கொண்டு அந்த அச்சுக்கு நடிகர்கள் மட்டும் மாற்றி மாற்றி படம் எடுத்தால் அதை விமர்சனம் செய்ய கூடாதா?
இப்படி சொன்னால் எப்பூடி .........
என் கேள்வி இது தான்
"ஒரு குப்பையை பார்த்து அது ஒரு குப்பை மேடு தான் என்று சொல்வதில் உன்கேளுக்கென்ன அவளவு கஷ்டம் நண்பா ?

அ.ஜீவதர்ஷன் said...

psp

//அனால் நீங்கள் சொல்ல வருவது அது இல்லியே பாஸ்.//

நான் இந்தப் பதிவை எழுதியது 'ஆயிரத்தில் ஒருவன் ' படத்தை பற்றிய மோசமான விமர்சனங்களுக்காகத்தான், அதுதவிர மோசமான படங்களை நன்றாக எலுதச்சொல்லவில்லை.
உங்களுக்காக பதிவில் நான் எழுதியது இதோ.

(பல கோடி ரூபாய் முதல் ,பல்லாயிரக்கணக்கானவர்களின் உழைப்பு என பல மாதங்கள் பாடுபட்டு எடுத்த ஒரு படத்தை விமர்சிக்கும் போது முடிந்தவரை விமர்சனங்களை பாதகமில்லாமல் எழுதினால் நல்லது, அதற்காக பொய்யான விமர்சனம் எழுதவேண்டுமென்று அர்த்தமில்லை)

//ஒரு குப்பையை பார்த்து அது ஒரு குப்பை மேடு தான் என்று சொல்வதில் உன்கேளுக்கென்ன அவளவு கஷ்டம் நண்பா ?//

இந்த குப்பை மேட்டைப்பார்த்துத்தான் சினிமா என்றால் என்ன என்பது எனக்கும் சரி உங்களுக்கும் சரி தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் நான் சொல்லவந்த விடயத்தை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்

பதிவில் உள்ளது

(இப்படியே பாலா, செல்வா போன்றவர்களது வித்தியாசமான படைப்புக்களை வரவேற்காமல் குறைகளை மட்டும் தூக்கிப் பிடித்தால் தமிழ் சினிமா உருப்படுவது ரொம்ப கஸ்ரம்.)

அது தவிர குப்பை படங்களாக இருந்தாலும் அதையும் ரசிக்கும் ஒரு கூட்டம்( பாமர மக்கள் ) இருக்கத்தான் செய்கிறது, அவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் படங்கள் புரியாது. அவர்களும் படம் பார்க்கத்தான் வேண்டும்,அதற்காகவேனும் சில குப்பைகளை நான் வைத்திருக்கத்தான் வேண்டும் (பாமரர்களுக்கு நல்ல சினிமா புரியும் வரை ).


* இது எனது கருத்து , அதற்காக நீங்கள் என் கருத்தோடு ஒத்துப்போக வேண்டுமென்று நான் கூறவில்லை . உங்கள் வருகைக்கும் பின்நூட்டலுக்கும் நன்றி. தொடர்ந்தும் பின்னூட்டுங்க நண்பா....

சிங்கக்குட்டி said...

'ஆயிரத்தில் ஒருவன்' நான் இன்னும் பார்க்கவில்லை எனவே இப்போது கருத்து சொல்ல கூடாது.

'நான் கடவுள்' தமிழ் நாட்டை பொறுத்த வரை (அகோரி என்பது அதிகமாக தெரியாததால்) ஒரு நல்ல புதுமையான பட முயற்சி, கண்டிப்பாக மோசமாக விமர்சிக்க கூடாது என்பதுதான் என் கருத்தும்.

ஆனால் "ரிஷி கேஸ், காசி மற்றும் காஸ்மீர்" அனுப்பவம் உள்ளவர்களுக்கு இது ஒரு "குறும்படம்" மட்டுமே (பூஜா பகுதியை தவிர்த்து விட்டு பார்த்தால்). ஆனாலும் குறை சொல்ல முடியாது.

இன்னும் சொல்லப்போனால், இது பாலாவின் முழுமையான கதையாக இருக்காது, தமிழ் நாட்டு சினிமா "தொழிலுக்கு" தேவையான கடைசி நேர சில,பல மாற்றம் இதில் உண்டு என்பதும் தெரிகிறது.

சினிமா நன்கு தெரிந்தவர்களிடம் அல்லது பாலாவிடமே ஒரு கடிதம் எழுதி கேட்டு பாருங்கள்.

ஆனால், இந்த படங்களுடன் அல்லது இவர்களுடன் "இப்போதுள்ள விஜய் படங்களை" ஒப்பிடுவது காமிடி :-)

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

உங்கள் கருத்திற்கு நன்றி .

ஞானப்பழம் said...

'காஞ்சிவரம்' என்றொரு படம் வந்து எங்கள் நாட்டில் தேசிய விருது பெற்றது.. அந்த படத்தைப் பற்றி யாராச்சு விமர்சனம் செய்தார்களா? ஆனால் 'நான் கடவுளை' மட்டும் கிழி கிழின்னு கிழிச்சாங்க.. காரணம் அது ஒரு பிரபலமான இயக்குனர் என்பதனால்.. என்னை பொறுத்தவரை இரண்டுமே ஒரே வகையை சேர்ந்ததே.. எந்த படத்தை விமர்சிப்பது எந்த படத்தை விமர்சிக்கக் கூடாது என்னும் விழிப்பு பதிவர்களிடம் வேண்டும்..

சுருக்கமாக, வணிகரீதியாக எடுத்தபடத்தை அதற்க்கேற்ப்ப விமர்சிக்க வேண்டும்.. கலைநயமோடு எடுத்த படத்தை கலைநயமோடுதான் விமர்சிக்க வேண்டும்..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்


100 % சரியான வார்த்தைகள்..

அப்பாவி தமிழன் said...

இப்சி எழுதறவங்கள நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு தல ......ச்ச எத்தன வருஷ உழைப்பு , எவ்ளோ இன்வெஸ்ட் பண்றாங்க .....சரி அதெல்லாம் கூட விடுங்க சம கால படத்தில இப்டி ஒரு வித்தியாசமான காட்சி அமைப்போட வந்த ஒரு படத்த இவங்களால சொல்ல முடியுமா ???????? இதில பாதி பேர் படம் பாத்தாங்களா கூட தெரியல .............ஒரு காட்சில குழந்தைக்கு பால் குடுக்க கூட அவ உடம்பில தெம்பு இல்லாம இரத்தம் வரவழைக்கும் காட்சி ஒண்ணே போதும் செல்வாவோட திறமைக்கு ....பதிவர்களா கொஞ்சம் புரிஞ்சுகோங்க

அ.ஜீவதர்ஷன் said...

அப்பாவி தமிழன்

//இதில பாதி பேர் படம் பாத்தாங்களா கூட தெரியல//

எனக்கும் அதே டவுட்டுத்தான்....

Yoganathan.N said...

//ஒரு காட்சில குழந்தைக்கு பால் குடுக்க கூட அவ உடம்பில தெம்பு இல்லாம இரத்தம் வரவழைக்கும் காட்சி ஒண்ணே போதும் செல்வாவோட திறமைக்கு//

என் ஊரில் இந்த காட்சி சென்சார் செய்யப்பட்டுவிட்டது. இந்திய நண்பரகள் சொல்லியே நான் அறிந்தேன்.

சோழ பெண்களை ஆட வைப்பது, கற்பழிப்பு போன்றவை இருந்ததாமே... அதையும் கட் செய்து விட்டார்கள்...

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.न


// என் ஊரில் இந்த காட்சி சென்சார் செய்யப்பட்டுவிட்டது. இந்திய நண்பரகள் சொல்லியே நான் அறிந்தேன்.

சோழ பெண்களை ஆட வைப்பது, கற்பழிப்பு போன்றவை இருந்ததாமே... அதையும் கட் செய்து விட்டார்கள்...//

எங்களுக்கெல்லாம் அப்படியே இருந்தது, ஆனால் ஆபாசமாக எதுவும் இல்லை. சிலர் இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததை கற்பழிப்பு காட்சிகள் நினைவூட்டுவதாக சொல்கிறார்கள், அதுபற்றி உண்மையை பேசினால் பின்னர் துரோகி என்பார்கள், விட்டுவிடுவோம்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)