Thursday, January 14, 2010

பொங்கலும் தொலைக்காட்சிகளும் நானும்...

அனைவருக்கும் பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள்.....

இன்று மதியம் 12 முதல் இரவு 11 வரை முழுக்க முழுக்க தொலைக்காட்சியுடனேயே இன்றைய எனது பொழுது கழிந்தது.பொங்கல் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பினாலும் இன்றைய பொங்கலின் நாயகன் விஜய்தான்.ஜெயா டிவியில் சிவகாசி, சண்டிவியில் போக்கிரி , கலைஞரில் குருவி என மூன்று விஜய் படங்கள் ஒளிபரப்பாகின. இதில் குருவியும் சிவகாசியும் மதியம் ஒரேநேரத்தில் ஒளிபரப்பாகியதால் தப்பித்துக்கொள்ளலாமென்று சண்டிவி பக்கம் திரும்பினால் அப்பாடா ! அங்கு தனுசின் பொல்லாதவன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, முன்னர் பார்த்திருந்தாலும் மீண்டும் புதிதாகப் பார்ப்பதுபோல் இருந்தது.ஆங்கிலப்படத்தின் தழுவல் என விமர்சகர்கள் கூறினாலும் வெற்றிமாறனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, உண்மையில் வெற்றிமாறனுக்கு கிடைத்த வரவேற்ப்பு போதாதென்றே தோன்றுகின்றது. இக்கால சராசரி வருமான குடும்பத்து தந்தை மகனினின் உறவை மலையாள முரளி , தனுஸ் அப்படியே பிரதிபலித்தது போலிருந்தது. கருணாசின் "நீ கேளன் " காமடி இப்போது பார்க்கும்போதும் உயிரோட்டமாக இருந்தது, சந்தானத்தின் டைமிங் சூப்பர், ஆனால் ஹீரோயினது கேரக்டர் படத்துடன் ஒட்டாததுபோல் இருந்தது.பொல்லாதவன் வெற்றிமாறனின் அடுத்த படமான ஆடுகளம் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது...பொங்கல் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சம் சண் டிவியில் ஆனந்தக்கண்ணனுடன் விஜய் பங்குபற்றிய நேரடி ஒளிபரப்புத்தான். அவ்வப்போது தென்னாபிரிக்கா இங்கிலாந்து மேட்ச்ஐ பார்க்க சென்றுவிடுவதால் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை. நான் பார்க்கும்போது இடம்பெற்ற சில உரையாடல்கள் உங்களுக்காக இதோ....

சீதாலக்ஷ்மி என்பவர் பேசும்போது தனது தம்பி , அண்ணன் ... என தனது குடும்ப உறுப்பினர்களை விஜயின் தீவிர ரசிகர்களாக அறிமுகப்படுத்தினார் (ஆனால் ஏனோதெரியவில்லை தான் விஜயின் ரசிகர் என அவர் கூறவில்லை) , அவரிடம் கேள்விகேட்ட ஆனந்தக்கண்ணன் "எத்தனை தடவை படத்தை பார்த்தீர்கள்? " என்றொரு கேள்வியை கேட்டார் அதற்கு அவர் "ஒரு தடவை " என்று பதில்கூறினார், தொடர்ந்த ஆனந்தக்கண்ணன் "படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது " என்று கேட்டார், அதற்கு சீதாலக்ஷ்மி " பாடல்கள்தான் எனக்கு பிடித்தன " என்றொரு பதிலை கூறினார். மறுகணம் விஜயை பார்க்க எனக்கே பாவமாக இருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்க.

அப்புறமா ஒரு நேயர் "உங்கள் படங்களில் வரும் பஞ்ச் வசனங்களில் உங்களுக்குபிடித்த பஞ்ச் வசனம் எது? " என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது விஜய் பஞ்ச்டயலாக் என்றால் என்ன? என்று ஆனந்தக்கண்ணனிடம் சீடியசாக கேட்க அவரும்விஜய்க்கு சீடியசாக பதில் சொன்னகாட்சி இந்த ஆண்டு பொங்கலின் சிறந்தநகைச்சுவையாக அமைந்தது.

அடுத்து விஜயிடம் "நீங்களா அல்லது சஞ்சயா ஆடும்போது அதிக டேக் எடுத்தீர்கள் " என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் "நான்தான் அதிக தடவைஎடுத்தேன் ஆனால் அவர் ஒரே டேக்கில் ஆடிவிட்டு சென்றுவிட்டார்" என்றார். சென்ற தடவை கலைஞர் தொலைக்காட்சியில் போன்றே இந்தத்தடவை சண்தொலைக்காட்சியிலும் விஜய் தனது மகளுடன் தொலைபேசியில் பேசினார்.

விஜய் தனது சினிமா அரசியலுக்கு பிள்ளைகளை அதுவும் சிறிய பிள்ளைகளை பயன்படுத்துவது சரியாகப்படவில்லை,இதற்க்கு முன்னர் யாரும் இப்படிசெய்ததாக எனக்கு ஞாபகமில்லை.நல்ல படமாக நடித்ததால் அதுவாக ஓடப்போகிறது, அதற்காக வித்தியாசமாக ஒன்றும் நடிக்கத்தேவயில்லை, கமெர்சியல் படங்களிலேயே வித்தியாசமான திரைக்கதயுள்ள படங்களில்நடித்தாலே போதும். அதை விட்டுவிட்டு இப்பிடிசெய்துதான் படம் ஓடவேண்டுமென்றால் அப்பிடி ஒரு வெற்றி தேவைதானா?பின்னர் சண் டிவியின் சிறப்பு திரைப்படமாக போக்கிரி ஒளிபரப்பாகியது,விஜயின் கடைசி 6 படங்களில் வெற்றிபெற்ற ஒரே படம் இதுதான் என்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்கவில்லை. நிச்சயம் மிகுதி 5 படங்களிலும் பார்க்க (ஆதி, குருவி, அழகிய தமிழ் மகன், வில்லு, வேட்டைக்காரன் ) இந்தப்படத்தில் சில பிளஸ் பாயின்ற்கள் (point) இருந்ததே இதன் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். போலிஸ் டிரெஸ்சில் விஜய்கிச்சுகிச்சு மூட்டினாலும் , பிரகாஸ்ராஜ் கோமாளித்தனமான வில்லனாக இருந்தாலும் எனக்கு இந்தப்படத்தின் வெற்றிக்கு காரணமாகத் தெரிந்த பிளஸ் பாயின்ற்கள்.....

1 ) படத்தில் இறுதிவரை வேகம் குறையவில்லை

2 ) விஜயின் வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி வேறுபாடு (நன்றி மகேஷ் பாபு )

3 ) விஜய்க்கும் அசினுக்குமிடயிலான இரசாயணம் (அதாங்க கெமிஸ்ற்றி )

4 ) வடிவேலு + வடிவேலு + வடிவேலு

5 ) பாடல்களும் நடன இயக்கமும் குறிப்பாக 'வசந்த முல்லை', 'முத்தமொன்றுகொடுத்தால் '

6 ) நேர்த்தியான ஒளிப்பதிவு ( நன்றி நீரவ்ஷா )

7 ) 'ஜெயம்' குடும்பத்துக்கு முன்னர் தெலுங்கு உரிமையை வாங்கிய கெட்டித்தனம்.அடுத்து இறுதியாக கலைஞர் தொலைக்காட்சியில் 'தமிழ் படம் ' குழுவினரின் அரட்டை இடம்பெற்றது. அழகிரியின் வாரிசு தயாநிதி தயாரிக்க அமுதன் என்னும் புதுமுகம் இயக்கும் இந்தப்படத்திற்கு புதிய இசையமைப்பாளர் கண்ணன் இசையமைக்கிறார்,இவர் இளையராஜாவின் தீவிர ரசிகராம். இந்தப்படத்தில் எமக்கு பரிச்சியமான முகங்கள் என்று சொன்னால் சென்னை 600028 இல் நடித்த 'சிவா' வும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும்தான், மற்றும் M.S பாஸ்கர், மனோபாலா போன்றோரும் முக்கியமான துணைநடிகர்களாக வருகின்றனர். முன்னர் வந்த பிரபல்யமான படங்களின் தொகுப்பாக இதன் திரைக்கதை இருக்குமென இயக்குனர் கூறினார்,Trailer ல் பார்க்கும்போது அந்த முக்கியமான படங்களில் சிவாஜி , தேவர்மகன் , தசாவதாரம் , தில்லான மோகனாம்பாள், நம்ம ஊரு பாட்டுக்காரன், ரன், பாய்ஸ் , பில்லா, அந்நியன், போக்கிரி, காக்க காக்க போன்ற படங்கள் இடம்பெறுமென்று தோன்றுகிறது . எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பவர்களில் நானும் ஒருவன்....எல்லோருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ...........

உங்களுக்கும் , same to you போன்ற வாசகங்களை தவிர்த்து வேறு விதமான பதில் வாழ்த்துக்களை கூறலாம்.(அதுக்காக கெட்டவார்த்தையில திட்டக்கூடாது... )

10 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

நானும்ம் தமிழ் படத்துக்குத் தாங்க வெய்ட்டிங். படம் வந்தாலும்.. நாங்க பார்க்க இன்னும் ஒரு 3-4 மாசம் ஆய்டும்.

gulf-tamilan said...

சேம் டூ யூ!!! :))))))))))))

ஹாய் அரும்பாவூர் said...

enjoy the pongal

அண்ணாமலையான் said...

ரொம்ப எதிர்பாக்காதீங்க.. அவசரம்னா சன் டிவில சூப்பர்10, கலைஞர்ல சண்டே நைட்7 மனி ப்ரோக்ராம் பாருங்க.. ரெண்டும் 1 தான்...ஆளுங்கதான் வேற...(விஜய் டிவில லொள்லு சபா?)

ஞானப்பழம் said...

விஜய் தனது சினிமா அரசியலுக்கு பிள்ளைகளை அதுவும் சிறிய பிள்ளைகளை பயன்படுத்துவது சரியாகப்படவில்லை,இதற்க்கு முன்னர் யாரும் இப்படிசெய்ததாக எனக்கு ஞாபகமில்லை.////
அண்ணன் டி.ஆர்.ரை மறந்துவிட்டீரா? விஜயின் நிலைமை கடைசியில் டி.ஆர்.ரோடு ஒப்பிடும் அளவு சென்றுவிட்டது பார்த்தீரா?

இரசாயணம் (அதாங்க கெமிஸ்ற்றி ) = வேதியல்...

'தமிழ் படத்துக்கு' என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அந்த தலைப்புக்காகவே அவர்களை பாராட்ட வேண்டும்.. கதை மொக்கையாய் இருந்தால்கூட கவலை இல்லை..

ஞானப்பழம் said...

அப்பறம் சொல்ல மறந்துட்டேன்.. "மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்"..
(செந்தில் பாணியில்) "எப்பி பர்த்த்டே டூ யூ.. எப்பி பர்த்த்டே டே டே... டூ யூ..."

அ.ஜீவதர்ஷன் said...

ஹாலிவுட் பாலா

//நானும்ம் தமிழ் படத்துக்குத் தாங்க வெய்ட்டிங். படம் வந்தாலும்.. நாங்க பார்க்க இன்னும் ஒரு 3-4 மாசம் ஆய்டும்.//

இங்கு மட்டும் என்னவாம், பெரிய படங்களென்றால் திரையரங்கிற்கு வரும், மற்றப் படங்களுக்கு இங்கும் ஒரிஜினல் dvd வர இரண்டு மாதமாவது ஆகும். அதுவரை டிவி களில் போடும் காட்சிகள்தான்.

............................

arumbavur

//enjoy the pongal//

thanks

.............................

gulf-tamilan


//சேம் டூ யூ!!! :))))))))))))//

அவரா நீங்க ? hi hi hi .....

.............................

அண்ணாமலையான்

//ரொம்ப எதிர்பாக்காதீங்க.. அவசரம்னா சன் டிவில சூப்பர்10, கலைஞர்ல சண்டே நைட்7 மனி ப்ரோக்ராம் பாருங்க.. ரெண்டும் 1 தான்...ஆளுங்கதான் வேற...(விஜய் டிவில லொள்லு சபா?)//

இது வேற அது வேற ....


.............................


ஞானப்பழம்

//அண்ணன் டி.ஆர்.ரை மறந்துவிட்டீரா? விஜயின் நிலைமை கடைசியில் டி.ஆர்.ரோடு ஒப்பிடும் அளவு சென்றுவிட்டது பார்த்தீரா?//

ஆகா உசாராயிட்டீங்க....

//அப்பறம் சொல்ல மறந்துட்டேன்.. "மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்"..(செந்தில் பாணியில்) "எப்பி பர்த்த்டே டூ யூ.. எப்பி பர்த்த்டே டே டே... டூ யூ..." //

ஆ..ஆ.. இப்பெல்லாம் எருமை மாடெல்லாம் வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிடிச்சு, நாடு உருப்பட்ட மாதிரித்தான். (இது உங்களுக்கில்லை , கவுண்டர் ஸ்டைலில் செந்திலுக்கு .......) ஹி ஹி ஹி

niruban said...

same to you என்றால், அப்புறம் மாடுகள் எல்லாம் என்னை கோவிக்க போகுது. எங்களை ஏன் அவனோட சேர்த்து பார்க்கிறாய் என்று

ஞானப்பழம் said...

ஆ..ஆ.. இப்பெல்லாம் எருமை மாடெல்லாம் வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிடிச்சு, நாடு உருப்பட்ட மாதிரித்தான். (இது உங்களுக்கில்லை , கவுண்டர் ஸ்டைலில் செந்திலுக்கு .......) ஹி ஹி ஹி //////

சும்மா சொல்லக்கூடாது.... ஞானப்பழம் சாப்பிட்ட எபக்டு!!

அ.ஜீவதர்ஷன் said...

niruban

//same to you என்றால், அப்புறம் மாடுகள் எல்லாம் என்னை கோவிக்க போகுது. எங்களை ஏன் அவனோட சேர்த்து பார்க்கிறாய் என்று//

மாடு பேசிறது உங்களுக்கு புரியுமா ? அப்பிடீன்னா.......

...............................

ஞானப்பழம்

//சும்மா சொல்லக்கூடாது.... ஞானப்பழம் சாப்பிட்ட எபக்டு!!//

சரிண்ணே... இது செந்திலுங்க...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)