Monday, January 11, 2010

எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல்





 டெனிஸ்



இந்த ஆண்டு ஆரம்பமும் பெடரருக்கும் நடாலுக்கும் மோசமாகவே ஆரம்பித்துள்ளது , துபாயில் இடம்பெற்ற மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டிகளில் நிக்கோலஸ் டேவிடன்கோவிடம் பெடரரும் நடாலும் முறையே அறையிருதி, இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். இறுதியாக நடைபெற்ற ஆண்டிருதிப்போட்டிகளிலும் இருவரும் டேவிடன்கோவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் ஆஸ்திரேலியன் ஓபின் கிரான்ட்ஸிலாம் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவர்களது போம் (form) ரசிகர்களை கவலைக்கிடமாக்கியுள்ளது. அதேநேரம் பிரிஸ்பனில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் முதல்தரவீரர் அண்டி ரோடிக் ஸ்டேபனக்கை 7-6,7-6 என்ற நேர் செட்டில் வென்றுள்ளார்.



பெண்கள் பிரிவில் ஒய்வு பெற்றபின்னர் சென்ற ஆண்டு மீண்டும் ஆடவந்து அமெரிக்கன் ஓபன் கிரான்ட்ஸிலாம் பட்டத்தை வென்ற கிம் க்ளைஸ்டரிடம் பிரிஸ்பனில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சக நாட்டைசேர்ந்த (பெல்ஜியம் ) ஒய்வு பெற்று மீண்டும் ஆடவந்துள்ள முன்னாள் முதல்த்தர வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் 3-6,6-4,6-7 என்ற செட்களில் தோல்வியடைந்துள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------------------




கிரிக்கெட்



சிட்னியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கையில் கிடைத்த வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டிருந்தது. முதல் இனிங்க்சில் 206 ஓட்டங்களை அதிகமாக பெற்ற பாகிஸ்தான் 51 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்றிருக்கும் போதே ஆஸ்திரேலியாவின் 8 விக்கட்டுகளை வீழ்த்தினாலும் பின்னர் ஜோடி சேர்ந்த ஹசியும் சிட்டிலும் இணைந்து பெற்ற 123 ஓட்டங்கள் இணைப்பாட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு 175 ஓட்டங்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது .முதல் 34 ஓட்டங்களை விக்கட் இழப்பில்லாமல் பெற்ற பாகிஸ்தான் பின்னர் மளமளவென்று அனைத்து விக்கட்டுகளையும் 139 ஓட்டங்களுக்குள் இழந்தது,இறுதியில் 36 ஓட்டங்களால் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது .ஆட்டநாயகனாக சதமடித்த ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசி தெரிவு செய்யப்பட்டார்.இது போன்று இடம்பெறுவது இரு அணிகளுக்குமே புதிதல்ல.போட்டியில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் 'உமர் அக்மல்', 19 வயதேயான உமர் தொடர்ந்தும் கலக்கி வருகிறார், முதல்போட்டியில் அரைச்சதமடித்த உமர் இந்தப்போட்டியின் இரண்டு இனிங்க்சிலும் 49 ஓட்டங்களை பெற்றார். மூன்றாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி கோபாட்டில் ஆரம்பமாகின்றது.



கேப்டவுனில் தென்னாபிரிக்காவிற்கும் இங்கிலாந்திற்குமான மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து முதல்ப்போட்டியை போன்று இறுதி நேரப்பரபரப்பின் பின்னர் ஒரு விக்கட் மீதமிருக்க போட்டியை சமநிலையாக்கியது . தென்னாபிரிக்காவின் பக்கம் அதிஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து பக்கம் அது அதிகமாக இருந்ததென்றே கூறலாம். ஒரு விக்கட்டை வைத்துக்கொண்டு போட்டியை சமநிலையில் முடிப்பது இந்தத்தொடரில் இரண்டாம் தடவையாக இருந்தாலும் இதற்கு முன்னைய தொடரான ஆசஸிலும் ஒரு போட்டியை இரண்டாம் இனிங்க்சில் 9 விக்கட்டுகள் இழந்திருந்த நிலையல் சமநிலைப்படுத்தியதால் ஆசஸ் தொடரையே இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியில் இரண்டாம் இன்னிங்க்சில் சிறப்பாக ஆடிய கிராம் ஸ்மித்(183) ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



பங்களாதேஷ், இந்தியா, இலங்கை அணிகள் பங்குபெறும் முக்கோணத் தொடரில் இந்தியா இலங்கையையும் , இலங்கை இந்தியாவையும் மாறி மாறி தோற்கடித்தன , இரண்டு அணிகளும் பங்களாதேசுடன் வெற்றிபெற்றன.பங்களாதேஷ் விளையாடிய மூன்று பட்டிகளிலும் 250 க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றது முதல் சமரவீரா, ஜெயவர்த்தன, தரங்க,டோனி சதமடித்தது வரை பல சிறப்பம்சங்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருந்தாலும் ஆடுகளங்கள் இவற்றுக்கு சாதகமானவையாக இருந்தமையால் இவற்றை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தியா, இலங்கை அணிகளின் போட்டிகளின் விபரங்களை இனிவரும் காலங்களில் நல்ல ஆடுகளங்களில் போட்டிகள் இடம்பெறும்போது விரிவாகப்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

------------------------------------------------------------------------------------------------------------------



உதைபந்தாட்டம் (Foot ball)



இரண்டாமிடத்திட்கான போட்டியில் இந்தவாரமும் Manchester Utd தொடர்ந்தும் இரண்டாமிடத்தை தக்கவைத்துக்கொண்டது. Everton உடனான போட்டியை Arsenal இறுதிநேர Rosicky யின் கோல் மூலம் சமநிலைப்படுத்தியபோதும் போட்டியை வெல்லமுடியவில்லை. அதேபோல் Birmingham உடனான போட்டியில் Birmingham வீரர் Dann அடித்த own goal மூலம் போட்டியை சமநிலைப்படுத்தியதால் ஒரு போட்டி அதிகமாக விளையாடினாலும் 2 புள்ளிகளால் Manchester Utd இரண்டாமிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது .Chelsea அணி ஒரு புள்ளி அதிகம் பெற்றுதொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு முதலிடத்திற்கு Chelsea , Arsenal , Manchester Utd ஆகிய மூன்று அணிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இன்னும் ஒரு போட்டியில் இந்த மூன்று அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதவேண்டி உள்ளதால் போட்டிகள் இன்னமும் விறுவிறுப்படையலாம் .

4 வாசகர் எண்ணங்கள்:

Yoganathan.N said...

@காற்பந்து - Liverpool, என்ன ஆயிற்று??? :(

ஞானப்பழம் said...

அதை "கால்பந்தாட்டம்" என்றுதானே கூறுவார்கள்?

அண்ணாமலையான் said...

நமக்கு தெரியாத விஷயம்...

எப்பூடி ... said...

Yoganathan.N

//@காற்பந்து - Liverpool, என்ன ஆயிற்று??? :(//

ஏழாவது இடத்தில் இருக்கிறது, அனால் முதல் நன்கிற்குள் வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஜெரால்டையும் , ரௌரிசையும் தவிர வேறு யாரும் சிறப்பான போமில் இல்லாததே இந்த ஆண்டு லிவர்பூலின் வீழ்ச்சிக்கு காரணம்

.....................................

ஞானப்பழம்

//அதை "கால்பந்தாட்டம்" என்றுதானே கூறுவார்கள்?//

இரண்டு விதமாகவும் சொல்வார்கள், நேரடி மொழி மாற்றமென்றால் கால்ப்பந்தே சரியானது .

..............................

அண்ணாமலையான் சொன்னது…

//நமக்கு தெரியாத விஷயம்...//

அதனால என்ன இனிமேல் தெரிஞ்சுகிட்டா போச்சு .

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)