Wednesday, January 6, 2010

பஞ்ச்(சரான) டயலாக்ஸ்

எதற்குமே ஒரு பாரம்பரியம் உண்டு.அந்த பாரம்பரியம் என்னதான் புதுமைகள் வந்தாலும் பின்பற்றப்படும்.சக்தி சிதம்பரம் படத்தில் சொல்வது போல "பல்லு விளக்கிறது கூடத்தான் பழைய ஸ்டைல்,அதுக்காக விளக்காம இருக்க முடியுமா?".அதே போலத்தான் தமிழ்சினிமா எவ்வளவ்வோ விடயங்களில் முன்னேறினாலும் சில பாரம்பரிய டயலாக்ஸ் உண்டு,அவற்றுள் சிலஇதோ....

1 )  சொல்ல வந்த விடயத்தைக் கூற எவ்வளவோ அவகாசம் இருந்தும் அந்த விடயத்தை கூறாமல் இந்த டயலாக்கை சம்பந்தப்பட்டவர் கூறுவார்,

''நான் என்ன சொல்ல வர்றேன்னா...''

அதற்கு எதிராக கூறப்படும் டயலாக்,

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்."

அவர் சொல்ல வந்த விடயம் க்ளைமாக்சில் கூறப்படும்போது,

இரண்டாமவர் கேட்பார் :

"இதை ஏன் முதல்லையே சொல்லல ...."

அதுக்கு முதலாமவர் சொல்வார்:

"எங்க நீ சொல்லவிட்டாய்."

குறிப்பிட விடயம் முதலிலே கூறப்பட்டிருந்தால் க்ளைமாக்ஸ் வரை கதையை நகர்த்த முடியாதென்பதட்காக இந்த டயலாக்சை காலம்காலமாக தமிழ்சினிமாவால் கைவிட முடியவில்லை.

2 )  இந்த வசனம் ஹீரோவையோ ஹீரோயினயோ நம்பவைத்து ஏமாற்றும் காரக்டரிடம் கூறப்படும் டயலாக்,

"நீ இப்படிப் பண்ணுவாய் என்று நான் நெனச்சுக்கூடப் பார்க்கல "

3 ) இது பெரும்பாலும் ஹீரோவைக் காதலிக்க ஆரம்பிக்காத அல்லது ஹீரோவை வெறுக்கும் கதாநாயகிக்கு கேட்கும்படி யாராவது ஒரு கேரக்டர் கூறும் டயலாக்,

"பெத்தவங்களையே பிள்ளைங்க மதிக்காத இந்தக் காலத்தில இப்படி ஒரு பிள்ளையா? "(இவன கட்டிக்கப் போறவ குடுத்து வச்சவ " என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்கும் ).

அல்லது ஹீரோவை வெறுக்கும் அவனது பெற்றோருக்கு கேட்கும்படி கூறப்படும் டயலாக்,

("இவனப் பெத்தவங்க புண்ணியம் பண்ணினவங்க" அப்படின்னு வரும்

4 ) இது ஹீரோயின் காரக்டரால் ஹீரோவுக்கு கோபமாக கூறப்படும் புகழ் பெற்ற வசனம்,

"நீயுமொரு சராசரி ஆம்பிளை என்றதை நிரூபிச்சிட்டாய்"

5 ) காதலுக்கு எதிர்ப்பு சொல்லும் ஹீரோயினின் பெற்றோருக்கு ஹீரோயின் கூறும் பழம் பெரும் வசனம்,

"கல்யாணம் என்றொன்று எனக்கு நடந்தா அது அவனோடதான்"

ஹீரோயினின் தாயோ தந்தையோ மருமகளைப் பார்த்து இப்படிக் கூறுவார் (ரெடிமேட் பதில்),

"பார்த்திங்களா இவளோட நெஞ்சழுத்தத்தை"

6 ) இது எந்த கட்டத்தில வரும்னு சொல்ல வேண்டியதில்லை,

"ப்ளீஸ் என்னைத் தப்பா நெனைக்காதீங்க,நான் அப்படியொரு எண்ணத்தோட உங்ககூட பழகல."

7 ) நம்ம ஹீரோ ஏதாவது செயற்கரிய செயலை செய்திருப்பார்,அதுக்கு நன்றி கூறுபவர்களிடம் நம்ம ஹீரோ அசால்டா சொல்லுவாரு பாருங்க,

"அட இதெல்லாம் போயி பெருசாப் பேசிக்கிட்டு."

8 ) வில்லன் தனது சகாக்களிடம் கூடும் முக்கிய டயலாக்,

"ஒண்ணு நான் இருக்கணும் , இல்லை அவன் இருக்கணும்."

9 ) வில்லன் கிட்டயிருந்து ஹீரோ யாரையாவது இக்காட்டான நேரத்தில காப்பாற்றி இருந்தால் ஹீரோவிடம் கூறுவது,

"நீ மட்டும் சரியான நேரத்துக்கு வரலயின்னா என் நிலைமை என்னவாகியிருக்கும்?"

அல்லது வேறொருவருக்கு கூறுவதென்றால்,

"இவர் மட்டும் இல்லையென்றால் என்னை உயிரோடயே பார்த்திருக்க முடியாது."

10 )  இது எல்லோருக்கும் நன்கு பரிச்சியமான வசனம், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு கேரக்டரைமருத்துவமனைக்கு கொண்டு சென்றபின்னர் அங்கு அவர் இறந்தால் கூறப்படும் டயலாக்,

"ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாம்."

அதே அவர் பிழைத்துவிட்டால் கூறப்படும் டயலாக்,

"சரியான நேரத்துக்கு கொண்டுவந்ததாலதான் எங்களால காப்பாத்த முடிஞ்சுது."

ஏதோ எனக்கு சட்டுன்னு தோணின சிலத சொல்லி இருக்கிறேன்,உங்களுக்கும் ஏதாவது தோணிச்சுன்னா பின்னூட்டத்துல சொல்லுங்க.

16 வாசகர் எண்ணங்கள்:

arumbavur said...

தமிழ் சினிமா என்றாலே பஞ்ச் டயலாக் இருக்கும் ஆனால் பஞ்சரான டயலாக் நல்ல நகைச்சுவை சேர்ப்பு ஆனால் இதுதான் தமிழ் சினிமா தலை எழுத்து
நல்ல பதிவு உங்கள் ஐம்பதாவது பதிவிற்கு காத்து கொண்டு இருக்கிறேன்

Yoganathan.N said...

நண்பரே, என்னைப் பொருத்தவரை, உங்கள் பதுவுகளிலே, இது தான் 'Best'... 1-ஆவது விடயமும், 10-ஆவது விடயமும், 'Icing on the cake'... ஆண்டாண்டு காலமாக இதைத் தான் சொல்லி வருகிறார்கள்... Hehe

//சொல்ல வந்த விடயத்தைக் கூற எவ்வளவோ அவகாசம் இருந்தும்//

lol

இன்னும் நிறைய உள்ளது. சட்டென்று, ஞாபகதிற்கு வரவில்லை.

பி.கு. தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

எப்பூடி ... said...

arumbavur

//இதுதான் தமிழ் சினிமா தலை எழுத்து //

உண்மைதான்

//நல்ல பதிவு உங்கள் ஐம்பதாவது பதிவிற்கு காத்து கொண்டு இருக்கிறேன்//

நூறாவது பதிவு என்று நினைக்கின்றேன்(:

.........................................

Yoganathan.N

//நண்பரே, என்னைப் பொருத்தவரை, உங்கள் பதுவுகளிலே, இது தான் 'Best'... 1-ஆவது விடயமும், 10-ஆவது விடயமும், 'Icing on the cake'... ஆண்டாண்டு காலமாக இதைத் தான் சொல்லி வருகிறார்கள்... Hehe//

நன்றி

//தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.//

முயற்சி செய்கிறேன்

...........................................

முனைவர்.இரா.குணசீலன்

//நன்றாகவுள்ளது நண்பரே..//

நன்றி

பிரசன்னா said...

முக்கியமான வசனத்த விட்டுடீங்களே.. ஹீரோ, வில்லன்கள் கிட்ட இருந்து ஹீரோயின காப்பதினதுக்கு அப்புறம் சொல்வாரே "நான் என் கடமைய தான் செஞ்சேன்"..

எப்பூடி ... said...

பிரசன்னா
//முக்கியமான வசனத்த விட்டுடீங்களே.. ஹீரோ, வில்லன்கள் கிட்ட இருந்து ஹீரோயின காப்பதினதுக்கு அப்புறம் சொல்வாரே "நான் என் கடமைய தான் செஞ்சேன்"..//

சரியாகச் சொன்னீர்கள்....

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளியைப்பற்றி விசாரித்தால் டாக்டர் சொல்வது, “எதுவும் 24 மணி நேரம் கழிச்சித்தான் உறுதியா சொல்லமுடியும்”.

தமிழில் வரும் கிளிஷே வசனங்களை பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்....அருமை....

எப்பூடி ... said...

செந்தாரப்பட்டி பெத்துசாமி

//மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளியைப்பற்றி விசாரித்தால் டாக்டர் சொல்வது, “எதுவும் 24 மணி நேரம் கழிச்சித்தான் உறுதியா சொல்லமுடியும்”.//

ஆமாம், இதுவும் ஒரு முக்கியமான வசனம்

Yoganathan.N said...

எல்லாம் முடிந்து போலீஸ் வருவார்களே - இதையும் சொல்லலாம்... ஹி ஹி ஹி

ஞானப்பழம் said...

நீங்கள் சொன்ன பெரும்பாலான வசனங்கள் காதல் சம்பந்தப்பட்டவையே... தமிழ் படங்களும் பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டவையே... இதுவே எனக்கு ஒரு cliche-வாக உள்ளது!!

எப்பூடி ... said...

Yoganathan.N

//எல்லாம் முடிந்து போலீஸ் வருவார்களே - இதையும் சொல்லலாம்... ஹி ஹி ஹி//

சொல்லலாம் சொல்லலாம்....

....................................

ஞானப்பழம்

//நீங்கள் சொன்ன பெரும்பாலான வசனங்கள் காதல் சம்பந்தப்பட்டவையே... தமிழ் படங்களும் பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டவையே... இதுவே எனக்கு ஒரு cliche-வாக உள்ளது!!//

உண்மைதான் ...என்ன செய்வது ...

thenammailakshmanan said...

nallaa irukkukee eppudiiiiiiiiiiii????

hahaha
fine :-))

thenammailakshmanan said...

nala irukku eppudddiii??

hahaha fine

எப்பூடி ... said...

thenammailakshmanan

//nala irukku eppudddiii??

hahaha fine //

thanks

Thinks Why Not - Wonders How said...

இத மிஸ் பண்ணீட்டீங்களே...

வாழ்க்கை பிரச்சனை இருந்தா பரவாயில்ல, என் வாழ்க்கையே பிரச்சனையா இருக்கு...

misty said...

வித்தியாசமான கான்சப்ட்......
ரொம்ப நல்லா இருந்துங்க....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)