Tuesday, January 5, 2010

எப்பூடி....கோலிவூட் ரவுண்டப்அசல் மற்றும் கோவா படப்பாடல்கள் வெளியீடுஅசல், கோவா படப்பாடல்கள் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டன.அசல்படப்பாடல்கள் சிவாஜிகணேசனின் அன்னையில்லத்தில் வைத்து வெளியிடப்ப்பட்டது.சூப்பர்ஸ்டார் அவர்களால் வெளியிடப்படுமென முன்னர் கூறப்பட்டாலும் இறுதிநேரத்தில் அவர் வரமுடியாமல் போனதாககூறிய பிரபு ஆடியோவை அவரே வெளியிட அஜித் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய சரண் "அஜித் அசலில் தந்தை ,மகன் என இரட்டைவேடத்தில் நடித்திருப்பதாக கூறினார்.அடுத்து பேசிய அஜித் 'நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் தேவையில்லையெனவும்,இப்படத்திலிடம்பெறும் "எங்கே எங்கே மனிதன் எங்கே"என்ற பாடல் தனது மனதுக்கு நெருங்கிய பாடல் எனவும் தனது சினிமா ,நிஜ வாழ்வில் தனது முதுகில்குத்திய பலபேருக்கு இந்தப்பாடல் பொருந்தும் என்றும் கூறினார்.

அசல் படப்பாடல்கள் மட்டும் கேட்டேன்,ஒரு கமர்சியல் படத்துக்கு தேவையான பாடல்களாக இப்பாடல்கள் ஜெயிக்கும்.வைரமுத்துவின் வரிகள் வழமைபோல பாடல்களின் ஹைலைட். எம்தந்தை,ஹே துஷியந்தா,எங்கே எங்கே பாடல்கள் ஓரிரு தடவைகளில் பிடித்திருக்கிறது.அட்டகாசகூட்டணி அமர்க்களமாக அசத்தும் என நம்பலாம்.

கோவாபடப்பாடல்கள் பெரியளவில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டிருந்தாலும் பல சர்ச்சைகள் காரணாமாக படக்குழுவினர்மட்டும் பங்குபெற சூப்பர்ஸ்டார் வீட்டில்வைத்து வெளியிடப்பட்டது.பாடல்களை வெளியிட்ட ரஜினிகாந்த் யுவன்சங்கர்ராஜாவை கட்டித்தழுவிப் பாராட்டினார். .

எந்திரனுக்குப் போட்டியாக வசீகரன்சென்றவாரம் அநேகமான இணையத்தளங்களை எந்திரன் ஸ்டில்கள் அலங்கரித்திருந்தது , இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்த உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஸ்டில்கள்தான் அவை.முதன்முதலாக வெளியான உயர்தர புகைப்படங்கள் இவைதான்.கொலைப்பட்டினி இருந்த ரசிகர்களுக்கு பழையசோறு கிடைப்பதே பெரியவிடயம்,கிடைத்ததோ அறுசுவைவிருந்து, சும்மா சொல்லக்கூடாது எந்திரன் ஸ்டில்ஸ் பார்த்ததுமே சும்மா நரம்பெல்லாம் அதிருது. ஷங்கர் 'எந்திரன்' ரஜினிக்கு ஒப்பனை செய்வது போலவும்,எந்திரன் ரஜினி இறந்தது போலவும், அதன் கை முறிந்து கீழேகிடப்பது போலவும் என்று ஒவ்வொரு படமும் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பினை எகிற வைத்திருக்கின்றது.ஆனாலும் ரஜினியும் ஐஸும் சிரித்துக்கொண்டிருக்கும் போட்டோதான் Best of all .ரஜினி ஜானி படத்தில் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறார் இதற்கு ரசிகர்கள் சார்பில் ஒப்பனைக் கலைஞருக்கு நன்றிகள்.என்னதான் மேக்கப் போட்டாலும் திரையில் அந்த வேகத்தை கொடுக்கப்போகிறவர் ரஜினிதான்.மனோரமாவுக்கு பாராட்டுவிழா எடுக்கும்போது மேடையில் ரஜினிகூறியது "நம்ம உடம்புக்கு வயசாகிரத நாம ஒண்ணும் பண்ணமுடியாது,அது இயற்கை ஆனா நாம நம்ம மனசுக்கு வயசாகாம பார்த்துக்கலாம்". ரஜினி அறுபதைத்தாண்டியும் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கும் வெற்றிமந்திரம் இதுதான்.

வழக்கமாக வில்லனிடம் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்ஸ்தான் பிரபலம், ஆனால் 'எந்திரனில்' எந்திரன்( ரோபோ ரஜினி ) பண்ணும் குறும்பை அடக்குவதுதான் வசீகரனின்( ஹீரோ ரஜினி ) வேலை.ரசிகர்கள் ஆதரவு வசீகரனை விட எந்திரனுக்கே இருக்கும் என்பது என்கணிப்பு. நெற்றிக்கண்ணுக்குப்பின் ரஜினி படத்தில் நெகடிவ் கேரக்டருக்கு விசில் பறக்கப்போவது எந்திரனுக்குத்தான்.எது என்னமோ 'எந்திரன்' ரஜினி ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட்.

கெளதம் மேனன் என்னும் கெட்டிக்காரர்"சசிகுமார் ஏன் பெரிய டைரக்டராக பேசப்படுகிறார் என்று எனக்கு விளங்கவில்லை,சுப்ரமணியபுரம் நன்றாகத்தான் இருந்தது,ஆனாலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது.என்னைப்பொறுத்தவரை சுப்ரமணியபுரம் சசிகுமாரின் தகுதிக்கு குறைவான படமே" இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர் வேறுயாருமல்ல, நம்ம கெளதம்வாசுதேவமேனன்.இது மட்டுமன்றி "அமீர் போன்ற படைப்பாளி வேறுமொழி படமொன்றை தழுவி யோகி எடுத்திருக்ககூடாது,அதை செய்ய வேறு பலர் இருக்கிறார்கள்" என்றும் கூறினார். இதை சொல்வதற்கு இந்த அதிகப்பிரசங்கிக்கு என்னதகுதி இருக்கிறது? ஏதாவதொரு மொழிப்படத்தை தழுவி அதை அப்படியே மணிரத்தினம் ஸ்டைலை காப்பி அடித்து படம் எடுக்கும் இந்தச்சிறந்த இயக்குனர் இதுபற்றி பேசவே அருகதையற்றவர்."அதை செய்ய வேறு பலர் இருக்கிறார்கள்" என்று கூறியதன் அர்த்தம் தன்னைப் பற்றியதாயிருக்குமோ? இதுபோலத்தான் 'பீமா' படம் ரிலீஸ் ஆனபோதும் லிங்குசாமி ஏதோவொரு ஆங்கிலப்படத்தை காப்பி அடித்து விட்டதாகவும் தனக்கு பிடித்த 'தளபதி' படத்தை அசிங்கப்படுத்தி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். இவரின் வேட்டையாடுவிளையாடில் இல்லாத வன்முறையும் வக்கிரமுமா சுப்பிரமணியபுரத்தில் இருக்கின்றது. ஒரு இயக்குனரின் பெயர் பிரபலமாகும் போது அவரை விமர்சிப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.

ஜக்குபாயில் ரஜினிரவிக்குமார் இயக்கத்தில் சரத் நடித்து நீண்டநாட்களாக பெட்டியில் முடங்கிக்கிடக்கும் படம்தான் 'ஜக்குபாய்'. ரஜினி நடிப்பதாக இருந்த இந்தப் படம் பின்னர் சில காரணங்களுக்காக கைவிடப்பட்டது.இந்தப்படம் திரைக்கு வரும்முன்பாக யாரோஒருவரால் இன்டர்நெட்டில் லீக்காகிவிட்டது.இது பின்னர் விசிடி, டிவிடி வடிவங்களில் இலகுவாக கிடைத்துவந்தது.இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் முதல்வரிடம் புகார் அளித்ததன் விளைவு பலர் கைது செயப்பட்டதுடன் இன்டர்நெட்டிலிருந்தும் அகற்றப்பட்டது.இதுசம்பந்தமாக தயாரிப்பாளர் ராதிகா சரத்தினால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இன்றுகாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முக்கியதலைகளான ரஜினி ,கமல் ஆஜர் ஆகியிருந்ததுதான் பரபரப்பு.

ராதிகா, சரத்குமார், ரவிக்குமார் ஆகியோர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்வடிக்க கமல், சேரன் போன்றோர் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்களை ஏவி அவர்களை வெட்டவேண்டும், குத்தவேனடுமென ஆர்ப்பரிக்க சோகமும், கோபமும், நிசப்தமுமாய் இருந்த சந்திப்பை கலகலப்பாக்கியது ரஜினியே.அவரது பேச்சில் கோபமும், கலகலப்பும் இருந்த அதேநேரம் லாஜிக் இருந்தது.

ரஜினியின் பேச்சு உங்களுக்காகஇந்த பிரஸ்மீட்டுக்கு வரணும்னு சரத்தும், ராதிகாவும் நேத்திலிருந்து என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. இது ஜக்குபாய் சந்பந்தப்பட்ட பிரஸ்மீட். அங்க நாம எதுக்கு? என்றுதான் முதலில் யோசித்தேன். திரையுலக ஒற்றுமையைக்கு உங்க சப்போர்ட் வேணும் என்றார்கள். வந்துவிட்டேன். இங்க ஜக்குபாய் திருட்டு விசிடி பத்தி நிறைய பேசினாங்க, அதையெல்லாம் அப்புறமா பார்ப்போம்.அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க!. இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண உங்களுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு இல்லை. நீங்க பத்துகோடி கொடுத்து விளம்பரம் பண்ணியிருந்தா கூட கிடைக்காத அளவு பப்ளிசிட்டி இப்போ மீடியா உங்களுக்கு குடுத்திருக்கு. இதை யூஸ் பண்ணிக்கங்க.

இன்னொன்னு, இந்தக் கதையப்பத்தி எனக்கு நல்லா தெரியும், ஒரு பிரெஞ்சுப் படத்தழுவல்தான் இந்த ஜக்குபாய். இது நான் நடிக்கிறதா இருந்த படம், ஆனா, ஜக்குபாய்னு இந்த டைட்டில் வச்சது சரியில்ல போல... அதனால இந்தப் படத்தை நான் அறிவிச்ச பிறகு மூணு மாசமா ஒரு இன்ச் கூட மூவ் ஆகல. சரி வேண்டாம்னு விட்டுட்டேன்.ஆனா கதை நல்லா இருக்கும், இதுலவர்ற கேரக்டர் அலெக்ஸ் பாண்டியனை விட பத்துமடங்கு பவர்புல்லானது. அந்தக் கேரக்டருக்கு வயசான பிறகுதான், தனக்கொரு மகள் வெளிநாட்ல கோடீஸ்வரியா இருக்கிறது தெரியவருது. கூடவே, அந்தப் பெண்ணை கொலைபண்ண சிலர் துரத்துவதும் தெரியவருது.

ஏன் இப்படி துரத்துறாங்க, எப்படி அதிலிருந்து தப்பிச்சு பெண்ணை இந்தியாவுக்கு கூட்டிட்டு வர்றார் ஹீரோங்கிறதுதான் கதை. இன்னொன்னு இந்தப் படத்துல நான் வயசான கெட்டப்ல வர்றமாதிரி இருக்கும். நமக்கு ஏற்கெனவே வயசாகிப் போச்சி. படத்திலயும் வயசான கெட்டப்பா... இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு சின்னப்பையனா நடிச்சிட்டு அப்புறமா வயசான ரோல்ல நடிக்கலாம்னு நினைச்சேன். கொஞ்சநாள் கழிச்சி, நான் சரத்தை வச்சி ஜக்குபாய் ஆரம்பிக்கிறேன்னு ரவிக்குமார் சொன்னார், நானும் சரின்னுட்டேன். இப்போ வந்து இந்தப்படம் திருட்டு விசிடில, இன்டர்நெட்ல வந்துடுச்சின்னு சொன்னாங்க. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ராதிகாவும் சரத்தும் வருத்தப்பட்டாங்க.

நியாயம்தான், ஆனா பாருங்க... இதைவிட ஒரு நல்ல பப்ளிசிட்டி உங்களுக்குக் கிடைக்காது. அஞ்சு கோடி, பத்துகோடி செலவு பண்ணாலும் கூட கிடைக்காத பப்ளிசிட்டி இது.இதையும் நீங்க யோசிக்கணும். அதனால இப்பவே படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க. சக்ஸஸ் ஆகிடும். இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?. சினிமாவுக்குள்ளிருந்ததான், யரோ பண்ணலை... இங்க இருக்கிற யாரோதான் இந்த வேலைய செய்றாங்க. அதுக்கு மக்களை ஏன் பிளேம் பண்ணனும்?

தியேட்டர்லருந்து பிரிண்ட் வெளியில போகுதுன்னு தெரிஞ்சா அந்த தியேட்டரை தடை பண்ணுங்க,ஒரு லேப்லருந்து வெளியில போதுன்னு தெரியுதா... அந்த லேப்பை நிப்பாட்டுங்க, எபெக்ட்ஸிலிருந்து போகுதா... அதையும் கட் பண்ணுங்க, அதுக்காக சும்மா யாராவது ஒருத்தர் மேல பழிபோடக்கூடாது. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்... படம் நல்லாருந்தாதான் யாரும் பார்ப்பாங்க, நல்லால்லேன்னா எப்பேர்ப்பட்ட படத்தையும் தூக்கிப்போட்டிருவாங்க, யார் சொன்னாலும் பார்க்கமாட்டாங்க.

அடுத்து திருட்டு விசிடியை தடுப்பது எப்படின்னு நமக்குள்ள கூடிப் பேசணும், அதுக்கு பிரஸ்ஸை கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்க?. எல்லாவற்றையும் ஆலோசனை செய்து தெளிவா முடிச்சிட்டு பிரஸ்ஸுக்கு சொல்லணும். அப்புறம் இங்க சேரனும் கமலும் "எங்களுக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது, இதைவிட்டுட்டு நாங்க எங்க போவோம்" என்றெல்லாம் சொன்னாங்க. ஒருவேளை நான் முன்ன கண்டக்டரா இருந்ததால, திரும்பவும் கண்டக்டர் வேலைக்கே போயிடுவேன்னு நினைச்சிட்டாங்க போல. இல்லை ... எனக்கும் சினிமாதான் எல்லாம்!" என்றார்.

அவர் கூறிய வார்த்தைகள்தான் அவர் ரசிகர்கள்மீது வைத்திருக்கும் அக்கறையையும் மரியாதையையும் காட்டியது. இங்க சிலர் பேசும்போது ரசிகர்களுக்கு காசு கொடுத்து திருட்டு விசிடி விக்கிறவங்களை அடிக்கச் சொல்லலாம்னு யோசனை சொன்னாங்க. ஆனால் ரஜினி "நோ நோ... அது தப்பு... லா அண்ட் ஆர்டரை மீறும் செயல், இன்னொன்னு ரசிகர்களை தப்பா பயன்படுத்தக் கூடாது" என்றார். இந்தவிடயந்தான் கோடானகோடி ரசிகர்களை அவர் பின்னால் கட்டிப்போட்டிருக்கின்றது, இந்தநல்ல மனசுதான் தமக்கு ஒரு நல்லாட்சி கிடைக்க இவர் வரமாட்டாரா? என பலரை ஏங்கவைத்திருக்கின்றது. பார்ப்போம் ஆண்டவன் கட்டளை என்னவென்று!!!

14 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

எப்பூடி... கலக்கறீங்க பாருங்க! :) :)

சூப்பர் ரிப்போர்ட்!! :)

அ.ஜீவதர்ஷன் said...

ஹாலிவுட் பாலா

//எப்பூடி... கலக்கறீங்க பாருங்க! :) :)

சூப்பர் ரிப்போர்ட்!! :)//


நன்றி அண்ணே......

சிநேகிதன் அக்பர் said...

நல்ல எழுதுறிங்க பாஸ்.

இதையே தொடருங்கள்.

ஹாய் அரும்பாவூர் said...

இவர்கள் நல்ல கதை உள்ள படம் தந்தாள் யாரும் ரசிப்பார்கள் அதை விட்டு அது சரி இல்லை இது சரி இல்லை என்ற வீண் பேச்சை பேசாமல் ரசிகன் ரசிக்கும் படத்தை தர முயற்சி செய்தாலே வெற்றிதான் 3இடியட்ஸ் வெற்றி ஆதாரம்

எட்வின் said...

அடடா... என்னா டீட்டெயிலு!! கௌதம் மேனன் நான் அப்பிடித்தான்னு பல பேட்டிகள்ல சொல்லிட்டாரு. இனி புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.

Yoganathan.N said...

1. அசல் பற்றிய பதிவுக்கு நன்றி. :)
ரஜினி சார் வர முடியாதது ஒரு சின்ன வருத்தம். :(

2. ரஜினி சார் பேச்சு, சூப்பர், வழக்கம் போல... :)

கிரி said...

நல்லா இருக்கு ரவுண்டப் :-)

தலைவர் பேச்சை கேட்க என் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதை பார்த்தாலே போதும்..

எபோதும் நடைமுறையையே பிரதிபலிப்பார்

சிங்கக்குட்டி said...

தலைவர் ஸ்டைலே தனி சூப்பர் :-)

அ.ஜீவதர்ஷன் said...

அக்பர்

//நல்ல எழுதுறிங்க பாஸ்.

இதையே தொடருங்கள்.//

நன்றி.

.......................................

arumbavur

//இவர்கள் நல்ல கதை உள்ள படம் தந்தாள் யாரும் ரசிப்பார்கள் அதை விட்டு அது சரி இல்லை இது சரி இல்லை என்ற வீண் பேச்சை பேசாமல் ரசிகன் ரசிக்கும் படத்தை தர முயற்சி செய்தாலே வெற்றிதான் 3இடியட்ஸ் வெற்றி ஆதாரம்//

மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். சேரன், தங்கப்பச்சான் போன்றவர்கள் தமது என்னத்துக்கு படமெடுத்துவிட்டு படம் ஒட்டாவிட்டால் மக்களை குறை சொல்வதில் கில்லாடிகள்.

.......................................

Yoganathan.N

//1. அசல் பற்றிய பதிவுக்கு நன்றி. :)
ரஜினி சார் வர முடியாதது ஒரு சின்ன வருத்தம். :(//

கோவா ஓடியோ ரிலீஸ் ரஜினி வீட்டில் இடம்பெர்ரதால்தான் வரவில்லை என்று நினைக்கிறேன்.
..................................

கிரி

//நல்லா இருக்கு ரவுண்டப் :-)

தலைவர் பேச்சை கேட்க என் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதை பார்த்தாலே போதும்..

எபோதும் நடைமுறையையே பிரதிபலிப்பார்//

வெட்டி வீரம் பேசுபவர்களுக்கு மத்தியில் தலைவர் எப்போதும் யதார்த்தத்தை பேசுபவர் , ஆனால் இதற்கும் ஒரு குற்றம் கண்டுபிடிக்க ஒரு குரூப்பே அலைகிறது

..................................

சிங்கக்குட்டி

//தலைவர் ஸ்டைலே தனி சூப்பர் :-)//

எப்படித்தான் இந்த மனிதரால் மட்டும் இப்படி பேச முடிகிறதோ....

அ.ஜீவதர்ஷன் said...

எட்வின்

//அடடா... என்னா டீட்டெயிலு!! கௌதம் மேனன் நான் அப்பிடித்தான்னு பல பேட்டிகள்ல சொல்லிட்டாரு. இனி புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.//

இவர் தான்னைப்ப்றி சொல்வது ஓகே, ஆனால் இவரோடு போட்டியாளராக இருக்கும் மற்றவர்களை விமர்சிக்க இவர்யார் ?

Paarvai said...

I was watching the Ajith interview, He clearly said " Good films don't need publicity" . But in tamilcinema.com they have mentioned it like His movies don't need publicity. This is why I hate these news sites from india. They would twist the news for money . (by the way I have a soft corner for ajith).

அ.ஜீவதர்ஷன் said...

velanaiTamilan

//I was watching the Ajith interview, He clearly said " Good films don't need publicity" . But in tamilcinema.com they have mentioned it like His movies don't need publicity. This is why I hate these news sites from india. They would twist the news for money . (by the way I have a soft corner for ajith).//

அஜித்தென்றால் சில இணையதளங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் , தொலைக்காட்சிகளுக்கும் ஆகாது, குறிப்பாக சண் நெட்வேர்க். இதற்கு காரணம் அவை விஜயை ஆதரிப்பதே, இதனாலேயே அஜீத் கூறுவதை திரித்துக்கூறி அவருக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்தப்பாக்கின்றன, 'தமிழ் சினிமா' இணையத்தளம் ஒரு விஜய் ஆதரவு இணையத்தளம். ஆனால் இந்த நிலைமை ஒருநாள் மாறும் , 'தட்ஸ் தமிழ்' இணையத்தளம் மாறியதுபோல....

Yoganathan.N said...

////I was watching the Ajith interview, He clearly said " Good films don't need publicity" . But in tamilcinema.com they have mentioned it like His movies don't need publicity. This is why I hate these news sites from india. They would twist the news for money . (by the way I have a soft corner for ajith).//

அஜித்தென்றால் சில இணையதளங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் , தொலைக்காட்சிகளுக்கும் ஆகாது, குறிப்பாக சண் நெட்வேர்க். இதற்கு காரணம் அவை விஜயை ஆதரிப்பதே, இதனாலேயே அஜீத் கூறுவதை திரித்துக்கூறி அவருக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்தப்பாக்கின்றன, 'தமிழ் சினிமா' இணையத்தளம் ஒரு விஜய் ஆதரவு இணையத்தளம். ஆனால் இந்த நிலைமை ஒருநாள் மாறும் , 'தட்ஸ் தமிழ்' இணையத்தளம் மாறியதுபோல....//

முற்றிலும் உண்மை... இதைச் சொன்னால், ரசிகர்களாகிய எங்களை பைத்தியம் என்பார்கள்... :(

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//முற்றிலும் உண்மை... இதைச் சொன்னால், ரசிகர்களாகிய எங்களை பைத்தியம் என்பார்கள்... :(//

அதற்காக நீங்கள் உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா ?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)