Monday, January 4, 2010

எப்பூடி.. ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல். 
கிரிக்கெட் (CRICKET)ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மெல்போனில் இடம்பெற்ற முதல்ப்போட்டியில் ஆஸ்திரேலியா 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் ஆட்டநாயகனாக வொட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமாதிரியாக 99 ஓட்டங்களில் வைத்து வொட்சன் வழங்கிய பிடியை பாகிஸ்தானியர்கள் தவறவிட்டதன் மூலம் 20 அரைச்சதங்களுக்கு பின்னர் முதல் சதத்தை ஒரு ஆஸ்திரேலிய வீரர் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம் இன்று சிட்னியில் ஆரம்பமாகிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது,காயம் காரணமாக விளையாட முடியாமல் போன அமீருக்கு பதில் அணியில் இணைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமட் சாமி முதல் மூன்று விக்கட்டுகளையும் பத்து ஓட்டங்களுக்குள் சரித்தார் , பின்னர் மீண்டுவர எத்தணித்த ஆஸ்திரேலியாவை ஆசிப் தனது வேகத்தால் முழுமையாக கட்டுப்படுத்தினார் , 41 ஓட்டங்களை விட்டுக்க்டுத்து ஆசிப் 6 விக்கட்டுகளை அள்ளினார். இது 96 இக்கு பின்னர் ஆஸ்திரேலியா சொந்தநாட்டில் பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்டமாகும். பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா? அல்லது நம்பவைத்து கழுத்தறுக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.டேபனில் இடம்பெற்ற தென்னாபிரிக்க இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து தென்னாபிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இரண்டாவது இனிங்க்சில் தென்னாபிரிக்காவை 133 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இங்கிலாந்து இனிங்சாலும் 98 ஓட்டாங்களாலும் வெற்றிபெற்றது. நீண்டநாட்களாக சரியாக ஆடாத 'இயன் பெல்' சதமடித்து தன்னை நிரூபித்தார். ஆட்டநாயகனாக 9 விக்காட்டுகளை அள்ளிய ஸுவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேநேரம் இன்று கேப்டவுனில் ஆரம்பமான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்தில் 127 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து திணறிய தென்னாபிரிக்காவை 'இரும்புத்தூண்' கலிஸும் பவுச்சருமாக சரிவிலிருந்து மீட்டனர், 51 ஓட்டங்களுடன் பவுச்சர் ஆட்டமிழக்க தற்போது கலிஸும் ஸ்டேயினும் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று தொடர்ந்தும் ஆடி வருகின்றனர். ஆட்ட முடிவின் பொது தென்னாபிரிக்கா 279 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்தது. அண்மைக்காலமாக தென்னாபிரிக்காவின் இளம் வீரர் டுமினியின் மோசமான போம் (form) தென்னபிரிக்கவிற்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்தப்போட்டியில் வென்று தென்னாபிரிக்கா தொடரை சமன்செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.பங்களாதேசுக்கு முக்கோணத்தொடருக்காக சென்ற இலங்கை அணியிலிருந்து சனத், மென்டிஸ், மலிங்க, மத்தியூஸ் நீக்கப்பட்டும் மகேல, முரளி, டில்காரா காயம் என்ற பெயரில் நீக்கப்பட்டும் உள்ளதால் அப்தாப், ரசல், கபாலி, நபீஸ் என முன்னணி வீரர்களுடன் மீண்டும் களமிறங்கும் பங்களாதேசுடன் கடுமையாக போராடவேண்டி இருக்கும், இதனால் இந்தத்தடவை இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் பங்களாதேசுக்கு வாய்த்தாலும் வாய்க்கலாம். அதேநேரம் தென்னாபிரிக்காவின் இரண்டாவது டெஸ்ட் தோல்வி மூலம் இந்தியாவின் டெஸ்ட் தரவரிசையின் முதலிடத்திற்கு இப்போதைக்கு ஆபத்தில்லாமல் போய்விட்டது. அதேநேரம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை ஓரிரு ஒருநாள் போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் இந்தியா இந்தத்தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காவிட்டால் ஒருநாள் போட்டிகளிலும் முதலிடத்தை பெறுவதற்கான சந்தப்பங்கள் உண்டு.

--------------------------------------------------------------------------------------------------------------
 
 உதைபந்தாட்டம் (FOOTBALL)இந்தவார மிகப் பெரும் அதிர்ச்சி FA CUP போட்டிகளிலிருந்து நான்காம் சுற்றுடன் Manchester United அணிவெளியேறியதுதான், Leeds United உடன் இடம்பெற்ற போட்டியில் 19 ஆவது நிமிடத்தில் Leeds United வீரர் J. Beckford அடித்த கோல் மூலம் 1 -0 என Leeds United வெற்றிபெற்றது. இறுதிவரை போராடினாலும் Manchester United ஆல் ஒரு கோலையேனும் அடிக்க முடியவில்லை.

Liverpool அணிக்கும் Reading அணிக்குமிடயிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது, Liverpool இன் S. Gerrard 34 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் Liverpool அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது.

Arsenal அணிக்கும் West Ham United அணிக்கும் இடையிலான போட்டியும் 78ஆம் நிமிடம் வரை ஒரு கோலுடன் முன்னிலையில் இருந்த West Ham United 78 ஆவது நிமிடத்தில் A. Ramsey யும் 83 ஆவது நிமிடத்தில் Eduardo வும் அடித்த கோல்கள் மூலம் வெற்றிபெற்று காலிறுதிக்கு தெரிவானது.

அதேநேரம் Chelsea , Watford அணிகளுக்கிடயிலான் போட்டியில் 5 - 0 என Chelsea வெற்றிபெற்று காலிறுதிக்கு தெரிவானது.அதே நேரம் ஸ்பெயினில் இடம்பெற்ற Barcelona , Villarreal அணிகளுக்கிடயிலான் போட்டி 1 - 1 என சமநிலையில் முடிவடைந்ததால் Real Madrid , Osasuna அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் போட்டியில் Real Madrid வெல்லுமிடத்தில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்திற்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஸ்பானிஸ் லீக்கில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் Valencia வின் David Villa (12) தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------
 
மோடோ ஜிபி (MOTO GP )2000 முதல் 2010 வரையான 10 வருட காலப்பகுதியி சிறந்தவீரர் யார் ? என்று இத்தாலி , ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளின் முக்கிய சஞ்சிகைகள் நடத்திய வாக்கெடுப்பில் 7 தடவை உலக சாம்பியனான moto gp வீரர் வாலன்சீனோ ரோசி (Valentino Rossi ) இத்தாலியில் 40 % இற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்திற்கு வந்தார். அதேநேரம் டெனிஸ்வீரர் ரோஜர் பெடரர் (Roger Federer ) 13.8 % வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்கும், ஜமேக்காவின் தடகளவீரர் உசையின் போல்ட் (Usain Bolt ) 8.4 % வாக்குக்களுடன் மூன்றாமிடத்திற்கும் வந்தனர்.

அதேபோல் ஸ்பெயினில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் ரோஜர் பெடரர் (Roger Federer ) 27.1%வாக்குகளுடன் முதலிடத்தையும், வாலன்சீனோ ரோசி (Valentino Rossi ) 17 % வாக்குக்களுடன் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நீச்சல்வீரர் மைக்கல் பிலிப்ஸ் (Michael Phelps ) 12 .2 % வாக்குக்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

பிரான்சில் El Pais 2009 ஆம் ஆண்டின் சிறந்தவீறரை தெரிவுசெய்ததில் உசையின் போல்ட் (Usain Bolt ) 47 வாக்குகளுடன் முதலிடத்தையும், வாலன்சீனோ ரோசி (Valentino Rossi ) 16 வாக்குக்களுடன் இரண்டாம் இடத்தையும் , Barcelona வின் லியனல் மெசி (Lionel Messi ) ஏழு வாக்குக்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
 
டெனிஸ் (TENNIS)இந்த ஆண்டின் முதல் ATP டெனிஸ் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன , டோகாவில் ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் முன்னணி வீரர்கள் பெடரர், நடால் ஆகியோர் விளையாடுகின்றார்கள். சென்ற ஆண்டின் பின்னரைவாசி இந்த இருவருக்கும் கை கொடுக்காத நிலையில் 2010 இவர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்பதைப்பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கும் நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளுக்கு இந்தப்போட்டிகள் பயிற்சியாக இருக்கும் . இந்தப்போட்டித்தொடர் மூலம் இருபெரும் தலைகளின் போம் (form) வரும் ஞாயிறுக்குள் தெரிந்தவிடும்.

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)