Sunday, January 3, 2010

ஜனாதிபதி தேர்தலும் யாழ்ப்பாணமும்

நேற்றயதினம் நானும் எனது நண்பனும் ஒரு வேலையாக அச்சுவேலி ஊடாக பருத்தித்துறை சென்றுகொண்டிருந்தோம், அப்போது ஐரோப்பிய ஸ்டைலில் அச்சுவேலி சந்தியில் ஒரு நடமாடும் பிரச்சாரகூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது . அந்தக்கூட்டத்தில் இலங்கையின் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் விக்கிரமபாகு கருணாரட்ணவும், முன்னாள் டெலோ உறுப்பினர் சிவாஜிலிங்கமும் பேசினார்கள், மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் அவர்களது பேச்சை கேட்டபின்னர் அங்கிருந்து சென்ற நாம் மீண்டும் திரும்பி வரும்போது நெல்லியடிச்சந்தியிலும் அதே பேச்சாளர்கள், அதே பேச்சு. முதல்த்தடவை முழுமையாக கேட்காததால் இந்தத்தடவை நின்று அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்டோம்.முன்னதாக பேசிய கருணாரட்ன கூறினார் "என்னை தமிழர்களுக்காக குரல் கொடுத்ததற்காக இலங்கையிலுள்ள அனைத்து சிறைகளிலும் அடைத்து வைத்து துன்புறுத்தினார்கள் , பிரபாகரனுக்கு இங்கிலாந்தில் இருந்து தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டுகிறார்கள். நான் கடந்த 32 ஆண்டுகளாக உங்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன், நீங்கள் உங்கள் இனத்தை அளித்த அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு வாக்களிக்க போகிறீர்களா ? கூடாது அவர்களில் ஒருவர்தான் வெல்வார்கள் என்பது எமக்கு தெரியும், ஆனால் அவர்களின் வெற்றியின் வீச்சை குறைத்து வென்றவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் போது தான் முழுமையான ஆதரவை பெறாத ஜனாதிபதி என்பதை அவர் உணரும்படி செய்யவேண்டும். அதற்காகத்தான் உங்களது ஓட்டை எனக்கோ அல்லது தோழர் சிவாஜிலிங்கத்திற்கோ போடுமாறு கேட்கிறேன்" என்றார்.பின்னர் பேசிய சிவாஜிலிங்கம் " அந்த இரண்டு சனியன்களும் எமது இனத்தின் 50 ,000 மக்களை கொண்றொழித்துவிட்டு இன்று அந்த 50 ,000 மண்டை ஒடுகளுககும் உரிமை கோரவே இந்த ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார்கள். இந்தக்கொலைகாரருக்கு நீங்கள் வாக்களிக்க போகிறீர்களா? எனக்கு தெரியும் இவர்கள் இருவரில் ஒருவர்தான் வெல்லப்போகிறாறென்று , ஆனால் நாம் எமது வாக்கை அவர்களுக்கு அளிக்காமல் இருப்பதன் மூலம் அவர்களில் வெல்லப்போகும் ஒருவருக்கு 50 சதவிகிதத்தை விட குறைவான வாக்கை பெறசெய்து அவர்களுக்கு எமது ஆதரவு இல்லை என்பதை வெளிஉலகிற்கு எடுத்து காட்டுவோம், இதனால் ஒன்றில் எனக்கோ அல்லது தோழர் கருனாரட்னவுக்கோ வாக்களித்து உங்களது உரிமைகளை காப்பற்றி கொள்ளுங்கள். நான் உயிருக்கு பயப்படாதவன், இந்த இருவரில் ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் எம்மை பழிவாங்குவார்கள் என்று தெரிந்தும் அவகளுக்கு எதிராக பேசுகிறேன். கூட்டமைப்பினர் சரியான முடிவுகள் எதனையும் எடுக்காததால்தான் இந்த மாதிரி தனித்து போட்டியிடும் முடிவுற்கு நான் தள்ளப்பட்டேன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் " என்று கூறினார்.

இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க மறுபுறத்தில் சில பெரிசுகள் கமன்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள், இவர்ளது பேச்சுக்கு அவர்கள் அடித்த சில கமெண்டுகள்

1 ) உலகத்திலேயே இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் "ஒன்றில் எனக்கு ஒட்டுப்போடு இல்லை இவனுக்குஒட்டுப்போடு" என்று சொல்வது இதுதான் முதல்த்தரம்.

2 ) இவர் ( கருணாரட்ன ) யாரென்றே இப்பதான் எங்களுக்கு தெரியுது, இவர் 32 வருசமா எங்களுக்காக பொராடினவராம்.

3 ) சிவாஜிலிங்கம் மஹிந்தாட்ட காசு வாங்கீட்டு தமிழரின் வோட்டை பிரிக்கத்தான் இந்தவேலை செய்யிறார்.

4 ) உலகத்திலேயே பெருந்தொகை பணமும் கொடுத்து தன்னை மோசமாக திட்டச்சொன்ன முதல்தலைவர் நம்ம மஹிந்ததான்.

5 ) உயிருக்கு பயப்பிடாத சிவாஜிலிங்கம் சனம் இங்க சாகேக்க இரண்டு வருஷமா இந்தியாவில என்ன செய்தவராம்.

6) நாங்கள் கூட்டமைப்பின் பதிலுக்கு கத்திருக்கொண்டிருக்கிரம்.

7 ) ஒருத்தனுக்கும் போடக்கூடாது.

8 ) யாருக்கும் ஓட்டுப்போடாமல் விட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?

9 ) கூட்டணி சொன்னாலும் சொல்லாட்டியும் போன்செகாவுக்குதான் என்ர வோட்டு, இப்ப எங்களுக்கு தேவை ஆட்சி மாற்றம்தான்.

10 ) உண்மைதான் இல்லாவிட்டால் தமிழகம் மாதிரி இலங்கையிலும் குடும்ப ஆட்சி வந்திரும்.அடுத்து வீரசிங்கம் மண்டபத்தில் பொன்சேகாவின் கூட்டம் இடம்பெற்றது, அங்கு பேசிய பொன்சேகா"யுத்தகாலத்தில் இறந்த மக்களுக்காக நான் வருந்துகிறேன்.உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும், பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட்ம், காணாமல் போனவர்களை மீட்டுக்கொடுப்போம் " என பல உறுதி மொழிகளை வழங்கினார். பின்னர் நல்லூர் சென்ற பொன்சேகா குழுவினர் அங்கும் மக்களை சந்தித்தனர் . பொன்சேகாவுடன் ரணில் விக்கிரமசிங்க,ஜெயலத் ஜெயவர்த்தன, ரஹூக் கஹ்கீம், மனோ கணேஷன் ஆகியோரும் உடனிருந்தனர். காணாமல் போன உறவினர்களை மீட்டுத்தரும்படி மனோகணேசனிடம் மக்கள் கதறிய காட்சி உண்மையில் எல்லோர் மனதையும் உருக்கிவிட்டது.

இங்கும் ஒரு பெரியவரின் கருத்து காதில் விழுந்தது.

"ரணில் முதலில் பிரபாகரனையும் கருணாவையும் பிரித்தார்; அது சிங்களவர்களுக்கு சாதகமாக மாறியது, இப்போது மகிந்தவையும் போன்செகவையும் பிரித்துள்ளார், யாருக்கு லாபம் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்றார்.

வரும் ஒன்பதாம் திகதி மஹிந்த யாழில் காலடி பதிக்கிறார், அப்போது நடப்பவற்றை பத்தாம் திகதி அலசுவோம்.

நன்றி.

8 வாசகர் எண்ணங்கள்:

ஸ்ரீநி said...

tharpodhaya soolalil yaar mun nilai yendru kanakida mudiyumaa ?
Idhu kandippa kolagaarana illa verum kollakkaaranannu therinjikathaan

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீநி
//tharpodhaya soolalil yaar mun nilai yendru kanakida mudiyumaa ?
Idhu kandippa kolagaarana illa verum kollakkaaranannu therinjikathaan //

தமிழர் பகுதிகள் போன்சேகராவக்கே சாதகமாக இருப்பினும் காலி,மாத்தற,அம்பாந்தோட்ட, அனுராதபுரம், பொலநறுவை, மற்றும் தொண்டமானால் மலையகமும் மகிந்தவுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் மகிந்தவின் முக்கிய ஒட்டு வங்கியான கம்பகா சந்திரிக்காவால் போன்செகராவுக்கு சாத்தியமாக மாறலாம். கொழும்பு u.n.p ஆல் பொன்சேகரா பக்கம் இருக்கும்.ஆக மொத்தத்தில் தமிழர்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் அவளவு சுலபமில்லை.

Think Why Not said...

எமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன்....


same குட்டை different மட்டை...!

அ.ஜீவதர்ஷன் said...

Thinks Why Not - Wonders How

//எமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன்....

same குட்டை different மட்டை...!//

(:

ஞானப்பழம் said...

உங்க ஊர்ல 49-o இல்லியா? :P

இந்த பதிவை படித்த பிறகு ஏதோ இலங்கை ஊடகத்தை படித்தது போலும் தோன்றுகிறது... தொடருங்கள் நண்பரே...

அங்கே நடக்கும் அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//அங்கே நடக்கும் அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்..//

முடிந்தவற்றை எழுதுகின்றேன்.

Think Why Not said...

/*... 6) நாங்கள் கூட்டமைப்பின் பதிலுக்கு கத்திருக்கொண்டிருக்கிரம். ..*/

இப்ப அவங்க பதில் கொடுத்திட்டாங்க... இனி...

Hai said...

நல்லது நடக்கணும்

யாருக்கும் ஓட்டுப்போடாமல் விட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

இந்த வரிகள் சிந்திக்கத் தோன்றுகிறது. எல்லோரு ஐக்கியப்பட vendum. அப்போதுதான் கொஞ்சமேனும் நமக்கேனும் நம்பிக்கை வரும். ஏதாவது செய்யலாம் என்றாவது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)