Thursday, January 21, 2010

ஜனாதிபதி தேர்தல் 2010....

தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் உள்ளது, இந்த நிலையில் சில தகவல்களும், அவற்றுக்கு எப்பூடியின் பதில்களும் சந்தேகங்களும்.

* முன்னெப்போதுமில்லாதவாறு இந்தத்தடவை 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் , இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டுக்களை ஒரு பிரிவினருக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்காகவே போட்டியிடுவதாகவும் அதற்க்குஇவர்கள் பெரும்தொகை பணத்தை பெற்றுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச்சுள்ளது.

வன்னியில கத்தை கத்தையாக 'பணம்' மீட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தனவே அது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

* ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் (தமது விருப்பத்தின் பெயரில்) அலுவலக நேரத்தில் கழுத்துப்பட்டி சகிதம் ஜனாதிபதியின் துண்டுப்பிரசுரங்களை இலங்கையின் பிரதான வீதியான 'காலிவீதியில்' பொதுமக்களுக்கு விநோயோகித்தனர்.

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான 'தபால்மூல வாக்களிப்பு' முடிந்த பின்னரே இவர்கள் தமது விருப்பத்தின் பெயரில் (?) துண்டுப்பிரசுரங்களை விநோயோகித்துள்ளனர். அரசியல் சாணக்கியம் என்பதுஇதுதானோ ?

* யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநோயோகிப்பதற்கு ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டுளதாக ஒரு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

"தமிழக முதல்வர் கலைஞருக்கு நன்றிகள்"

* இதுவரை இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்வுத்திட்டம் என்ன என்பதை முன்வைக்கவில்லை.

தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் ஏதாவது ஒரு இனத்தின் வாக்கு இல்லாமல் போகுமென்பது அவர்களுக்கு தெரியாதா என்ன ?

* யாழ்ப்பாணத்தின் பிரதான பாதையான 'பலாலி வீதி ' புன்னாலைக்கட்டுவனில் இருந்து கோண்டாவில் மட்டும் 3 கிலோமீற்றர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இந்த வீதியை பயன்படுத்தியே சென்ற வாரங்களில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் யாழ்ப்பாணம் வந்தனர்.

அவர்களுக்கும் பயணம் செய்யும்போதுது தெரிந்திருக்கும், அவர்களும் வாகனத்திற்குள் வீதியை புதுப்பிப்பதை பற்றி பேசியிருப்பார்கள், பாவம் பின்னர் மறந்திருப்பார்கள்.

* தற்போது வழங்கப்படும் சேவைகளும், சலுகைகளும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறுத்தப்பட்டு விடுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

பயப்பாடாதீங்க அடுத்து பாராளுமன்ற தேர்தலும் வருவதால் இன்னும் சிலகாலம் இவை கிடைக்கும்.

* இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படமாட்டதாம், பின்னர் அவை ரெக்கோட் செய்து ஒலிபரபாப் படுமாம், பாதகாப்பு காரணங்களுக்காகவே இந்தஏற்பாடாம்.

அப்டியா?

* பிரதான வேட்பாளர்கள் இருவருமே 'மோதகமும்' , 'கொழுக்கட்டையும்' போன்றவர்கள், வெளியில் வடிவம் வேறானாலும் உள்ளே சரக்கு ஒன்றுதானே என்பது ஒரு பிரிவினரின் கேள்வி.

இப்போதைக்கு பழைய 'கொளுக்கட்டையிலும்' பார்க்க புதிய 'மோதகம்' பரவாயில்லை என்பதுதான் 'தமிழ் கூட்டமைப்பினரினதும்' , அதிகமான தமிழ் மக்களினதும் கருத்து.

* பொன்சேகரா பங்குபெறும் கூட்டங்களில் தாங்களே தமக்கு குண்டுவைத்துவிட்டு மக்களிடம் 'அனுதாப ஓட்டுக்கள்' வாங்க முயற்சிக்கிறார்கள் என்று விமல் வீரவன்சா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருவேளை முந்தயவாரம் சன் டிவியில ஒளிபரப்பான நம்ம கேப்டனின் 'தென்னவன்' படம் பார்த்திருப்பாரோ .

இறுதியாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு,

இருவரில் யார் வெல்கிறீர்களோஅவரிடமிருந்து நல்லதொரு தீர்வு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இல்லாவிட்டால் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்று வெட்டிவீரம் பேசவரவில்லை, ஆனால் இன்னுமொரு இடம்பெயர்வையோ, யுத்தத்தையோ தாங்கும் சக்தி எம் மக்களுக்கு இல்லை என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், இந்த முப்பது வருடத்தில் இழந்தவை சொல்லில் அடங்காதவை, அதனால் இனப்பிரச்சினைக்கு முடிந்தவரை அனைத்துத்தரப்பையும் திருப்திப்படுத்தும் தீர்வை முன்வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இனம் , மதம் என்பவற்றையும் தாண்டி இங்குள்ள அனைத்து இனத்து மக்களும் சுதந்திரமான, அழிவற்ற, அமைதியான வாழ்க்கையை வாழ வழி செய்யுமாறு ஆதங்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

18 வாசகர் எண்ணங்கள்:

balavasakan said...

நண்பரே நன்றாக உள்ளது... எல்லாருக்கும் உங்கள் ஆதங்கம்தான் இது நிறைவேறுமா எனபதுதான் தெரியவில்லை

ஞானப்பழம் said...

இருவரில் யார் வெல்கிறீர்களோஅவரிடமிருந்து நல்லதொரு தீர்வு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இல்லாவிட்டால் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்று வெட்டிவீரம் பேசவரவில்லை, ஆனால் இன்னுமொரு இடம்பெயர்வையோ, யுத்தத்தையோ தாங்கும் சக்தி எம் மக்களுக்கு இல்லை என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், இந்த முப்பது வருடத்தில் இழந்தவை சொல்லில் அடங்காதவை, அதனால் இனப்பிரச்சினைக்கு முடிந்தவரை அனைத்துத்தரப்பையும் திருப்திப்படுத்தும் தீர்வை முன்வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ////

அரசியலில் சில வினோதங்கள் உள்ளது.. அரசியலில், வருங்காலத்தில் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது என்பர்... அனால் வருங்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அரசியல் சக்திகளையே நம்பவேண்டியுள்ளது!! எந்த நாட்டு அரசியல் தலைவர்களும், எப்பேர்ப்பட்ட கேப்புமாரி, மொள்ளமாரி, முடிச்சவுக்கி, சவுகிறாக்கியாக இருந்தாலும் நம் குழும பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவனுங்களையே நம்பவேண்டி உள்ளது.. இது அமெரிக்க சனாதிபதி புஷ்ஷிலிருந்து, முத்தமிழ் அறிஞர்(கருமம்) கருணாநிதி, உங்கள் பொன்சேகா/ராஜபக்சே(கூட்டணி?) வரை பொருந்தும்!///இப்போதைக்கு பழைய 'கொளுக்கட்டையிலும்' பார்க்க புதிய 'மோதகம்' பரவாயில்லை என்பதுதான் 'தமிழ் கூட்டமைப்பினரினதும்' , அதிகமான தமிழ் மக்களினதும் கருத்து.
/////
அருமையான உவமை.. ஆனால் மோதகம் என்றால்?

ஸ்ரீநி said...

Gnanam

MODHAGAMNAALUM ADHAEDHAAN perum shapeum verum seimurai taste yellamae adhaeydhaan.

annathey telling same

ஞானப்பழம் said...

ஓ.. எனக்கு "ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்"தான் நினைவுக்கு வந்தது.. இருந்தாலும் அது cliche-வான வசனம், என்பதால் இது கொஞ்சம் நல்லாயிருக்கு..

அண்ணாமலையான் said...

நல்லதே நடக்கும் என எதிர்பாப்போம்.

அ.ஜீவதர்ஷன் said...

Balavasakan

//நண்பரே நன்றாக உள்ளது... எல்லாருக்கும் உங்கள் ஆதங்கம்தான் இது நிறைவேறுமா எனபதுதான் தெரியவில்லை//

எல்லாம் வெறும் பகல் கனவுதான்.

........................

ஞானப்பழம்

//எந்த நாட்டு அரசியல் தலைவர்களும், எப்பேர்ப்பட்ட கேப்புமாரி, மொள்ளமாரி, முடிச்சவுக்கி, சவுகிறாக்கியாக இருந்தாலும் நம் குழும பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவனுங்களையே நம்பவேண்டி உள்ளது..//

தலைவிதி


//அருமையான உவமை.. ஆனால் மோதகம் என்றால்?//

//ஞானப்பழம் சொன்னது…

ஓ.. எனக்கு "ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்"தான் நினைவுக்கு வந்தது.. இருந்தாலும் அது cliche-வான வசனம், என்பதால் இது கொஞ்சம் நல்லாயிருக்கு..//


ஸ்ரீநி சொன்னது தான் மேட்டரு. இப்ப ஓகேதானே.


..............................

ஸ்ரீநி சொன்னது…


//MODHAGAMNAALUM ADHAEDHAAN perum shapeum verum seimurai taste yellamae adhaeydhaan.

annathey telling same//


நன்றி


................................

அண்ணாமலையான்

//நல்லதே நடக்கும் என எதிர்பாப்போம்.//

நம்மளால எதிர்பார்க்க மட்டும்தானே முடியும்

ஞானப்பழம் said...

ok ok...

கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்களாவது இனி நடக்காமல் இருக்கணும் என எதிர்பார்ப்போம்...

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்களாவது இனி நடக்காமல் இருக்கணும் என எதிர்பார்ப்போம்...//

இனி ஒரு இனப் படுகொலை என்று வந்தால் அது இரண்டு பெரும்பான்மை இனத்தவர்களுக்குல்லேயே( சிங்களவர் ) வருமென்று நினைக்கிறேன், ஆனால் இது என் விருப்பமில்லை.

ஞானப்பழம் said...

சிங்களவர்களுக்குலையே இனப் படுகொலையா? அது எப்படி சாத்தியமாகும்? விளங்கவில்லையே....

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//சிங்களவர்களுக்குலையே இனப் படுகொலையா? அது எப்படி சாத்தியமாகும்? விளங்கவில்லையே....//

1988 ஆம் ஆண்டு அன்றைய u n p ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஆயிரக்கணக்கான j v p சிங்கள இளைஞர்களை இரக்கமில்லாமல் கடுமையான முறையில் படுகொலை செய்தது அன்றைய பிரேமதாசாவின் சிங்களஅரசு. இன்றும் கிட்டத்தட்ட அதே நிலைதான் , இரண்டு பிரிவினரும் முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் , பிரச்சார கூட்டங்களில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

ஞானப்பழம் said...

எனப்பா இது.. புது கதைய இருக்கு.... உங்க நாட்ல எல்லாம் தூங்கும்போது போர்வைக்கு பதில பிரச்னையை பொத்திட்டு படுப்பீங்க போல!!

ஞானப்பழம் said...

ஒரு சந்தேகம்.. ரணில் விக்கரமசிங்கே புலிகளுடன் சுமூகமாகத்தான இருந்தார்.. அப்படி இருக்கும்போது புலிகள் என் வடக்கில் உள்ள தமிழர்களை 2004 தேர்தல்களை புறக்கணிக்க சொன்னார்கள்? வடக்கில் உள்ள தமிழர்கள் வாக்களித்திருந்தால், இந்நேரம் ரணில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார் அல்லவா?

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//எனப்பா இது.. புது கதைய இருக்கு.... உங்க நாட்ல எல்லாம் தூங்கும்போது போர்வைக்கு பதில பிரச்னையை பொத்திட்டு படுப்பீங்க போல!!//

இங்க தமிழனை தமிழன் கொள்ளுவான், சிங்களவனை தமிழன் கொள்ளுவான், சிங்களவனை தமிழன் கொல்லுவான், சிங்களவனை சிங்களவன் கொள்ளுவான். இப்பிடி கொண்டு கொண்டு விலாடிறதே இவங்களுக்கு வேலையாபோச்சு. விளையாட்டு தொடரக்கூடாது என்பதுதான் எனது ஆசை, பார்க்கலாம் அடுத்தது யாரு யாரை விளையாடப்போறதென்று !//ஒரு சந்தேகம்.. ரணில் விக்கரமசிங்கே புலிகளுடன் சுமூகமாகத்தான இருந்தார்.. அப்படி இருக்கும்போது புலிகள் என் வடக்கில் உள்ள தமிழர்களை 2004 தேர்தல்களை புறக்கணிக்க சொன்னார்கள்? வடக்கில் உள்ள தமிழர்கள் வாக்களித்திருந்தால், இந்நேரம் ரணில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார் அல்லவா?//

இது பற்றி உண்மையை சொன்னால் நமக்கு 'துரோகி' பெயர்தான் கிடைக்கும் இதை விட்டு விடுவோம்.

அ.ஜீவதர்ஷன் said...

எழுத்துப்பிழை கவனிக்கவில்லை . 'கொள்ளுவான்' அல்ல அது கொல்லுவான். அதேபோல் 'விலாடிறதே' அல்ல விளயாடிறதே

ஞானப்பழம் said...

/// பார்க்கலாம் அடுத்தது யாரு யாரை விளையாடப்போறதென்று ! ///
ஐயோ.. யாரும் யாரையுமே விளையாட வேண்டாம்!

/// இது பற்றி உண்மையை சொன்னால் நமக்கு 'துரோகி' பெயர்தான் கிடைக்கும் இதை விட்டு விடுவோம். ///
எங்கள் பேராசிரியர் அடிக்கடி ஒன்று சொல்லுவார்.. :"If there is one way to live life, it is to live it riskily." ஒருவனால் ரிஸ்க் எடுக்காமல் வாழவே முடியாது என்பது.. கருத்து சொல்வதற்கு பயமா இல்லை துரோகி பட்டத்துக்கு பயமா? :P

இருந்தாலும் உங்கள் நிலைமை புரிகிறது.. உங்களை சொல்லச் சொல்லி கட்டாயப் படுத்த மாட்டேன்.. எனக்கும் புலிகளின் போக்குகள் பல விளங்குவது இல்லை..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

// ஒருவனால் ரிஸ்க் எடுக்காமல் வாழவே முடியாது என்பது.. கருத்து சொல்வதற்கு பயமா இல்லை துரோகி பட்டத்துக்கு பயமா? :P//

இப்போது உயிராபத்து இல்லை என்பதால் பயமெல்லாம் இல்லை. நான் கருத்து சொல்லி எதுவும் ஆகப்போறதில்லை. அது தவிர வெளி உலகிற்கு எமது தமிழ் இணையத்தளங்கள் பலவிதமான மாயையை உருவாக்கி வைத்துள்ளன , அவற்றை நாங்கள் கெடுக்கக்கூடாதென்று நினைக்கிறேன். இருதரப்பும் மாறி மாறி மாயைகளை உருவாக்கும்போது நமது தரப்பு மாயைகளை நாமே கலைக்க கூடாதல்லவா?

ஞானப்பழம் said...

நல்ல சூட்சமம் தான்..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//நல்ல சூட்சமம் தான்..//

நன்றி , நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)