Friday, January 1, 2010

கொலிவூட் 2009 [பகுதி 3]

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய ஆங்கில புதுவுட நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.இந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு இனிய ஆண்டாக மலர கடவுளை நம்புவர்களுக்கு கடவுளிடமும், இயற்கையை நம்புபவர்களுக்கு இயற்கையிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

கொலிவூட் 2009 என்பதை விட இந்தப்பதிவு கொலிவூட் 2010 என்ற தலைப்பிற்கே சரியாக இருக்கும். இருந்தாலும் 2009 இல் படப்பிடிப்பு இடம்பெற்று 2010 இல் வெளிவர இருக்கும் 10 படங்களைபற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

10 ) விண்ணைத்தாண்டி வருவாயாகெளதம் மேனன் இயக்கம் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக திரிசா நடிக்கிறார், சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல்முறையாக கெளதம் மேனன் ஹரிஸ் ஜெயராஜ் இல்லாமல் களமிறங்குகிறார், இசை A.R.ரகுமான், முதல் முறையாக மனோச் பரமஹம்சா கௌதமுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சிம்புவின் தொடர் சறுக்கல்களுக்கு பின்னர் ஒரு பெரிய வெற்றியை இந்தப்படத்தின் மூலம் அவர் எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறேன்,அதனால்த்தான் என்னவோ எந்த சர்ச்சையிலும் இன்னமும் அவர் மாட்டிக்கொள்ளவில்லை, மற்றும் படப்பிடிப்பு தளத்தில் தனது அதிகபிரசங்கி வேலைகளிலும் ஈடுபடவில்லை. திறமையான நடிகர் , தனது செயற்பாடுகளை மாற்றினாலே இவர் பாதி வெற்றியடையலாம், 'விண்ணைத்தாண்டி வருவாயா' இவரை கரைசேர்க்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

9 ) கோவாவெங்கட் பிரபு இயக்கும் மூன்றாவது திரைப்படம், சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் பல தடைகளையும் தாண்டி 2010 தை அல்லது மாசி மாதமளவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது வழமையான பரிவாரங்களையே நடிக்க வைத்துள்ள வெங்கட் தொழில்நுட்ப குழுவையும் மாற்றியமைக்கவில்லை, யுவன் இசை, சக்தி சரவணன் ஒளிப்பதிவு என்று தனது வழமையான டீமுடனேயே களத்தில் இறங்கியுள்ளார். 600028 வெற்றிக்குப்பின்னர் சரோஜாவின் வசூல் பெரிதாக பேசப்படாததால் வெங்கட் பிரபு தன்னை கோவா மூலம் நிரூபிக்கவேண்டிய தேவை உள்ளது. கலக்கல் கூட்டணி மறுபடியும் ஜெயிக்கிறதா என்று பார்க்கலாம்.


8 ) குட்டி:


 

தொடர் வெற்றிகள் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள தனுஸ் தன்னை தொடர்ந்தும் தக்கவைக்க குட்டியை எதிர் பார்த்துள்ளார். யாரடி மோகினி வெற்றிக்குப்பின்னர் ஜவகர் இயக்கம் இந்தப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 'ஆரியா' என்ற தெலுகுப்படத்தின் ரீமேகேகான குட்டியில் ஷிரேயா தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். திருவிளையாடல் வெற்றி கூட்டணியும், யாரடி நீ மோகினி வெற்றி கூட்டணியும் இணைந்து கலக்கும் 'குட்டி' வெற்றியடையுமா என்பதை பொங்கலன்று தெரிந்து கொள்ளலாம்.

7 ) சிங்கம்ஹரியின் இயக்கத்தில் சூரியாவின் மூன்றாவது திரைப்படம், 'ஆறு' காலை வாரினாலும் 'வேல்' கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் ஹரியுடன் கைகோர்த்துள்ளார் சூர்யா. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப்படத்துக்கு ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அனுஷ்கா சூரியாவிற்கு அக்காவாக ..அய்யய்யோ சாரி ஜோடியாக நடிக்கிறார். ஹரி குடும்ப ஜனங்களை திரையரங்கிற்கு வரவைப்பதில் கில்லாடி, அந்த வித்தையை சிங்கத்திலும் காட்டுவாரா? அல்லது சூர்யா போஸ்டரில் வைத்திருக்கும் அரிவாளால் எங்களை போட்டுத்தள்ளுவாரா? என்பதை அடுத்த ஆண்டு தெரிந்து கொள்ளலாம்.

6 ) தில்லாலங்கடிஜெயம் ரவி, ஜெயம் ராஜா, ரீமக் கூட்டணி. முதல் நான்கு படங்களில் பெற்ற தொடர் வெற்றியை தொடர்ந்தும் தக்கவைப்பார்களா என்பதை தில்லாலங்கடி மூலம் தெரிந்து கொள்ளலாம், வழமையாக காதல் கதைகளை கையில் எடுக்கும் ராஜா இந்தமுறை கை வைத்திருப்பது ஒரு அக்ஷன் படத்தில். இந்தப்படத்தில் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் , ஹீரோயினாக தமன்னா, முதல் முறையாக ஜெயம் ராஜாவின் படத்திற்கு யுவன் இசை என என்று இந்தத்தடவை புதியதொரு பரிமாணத்தில் ராஜாவின் ரீமக்கான தில்லாலங்கடி வெளிவரவுள்ளது. அக்ஷன் படங்களான மழை, தாஸ் மூலம் தனக்கு தானே சூடு போட்டுக்கொண்ட ரவி தற்போது ஒருமாதிரியாக நல்லதொரு நிலையிலுள்ளார் , பேராண்மையில் இவரது ஆக்ஷன் எடுபட்டதால் பண்ணுவதால் ராஜா தில்லாலங்கடியை சிறப்பாக பண்ணுவார் என்றே தோன்றுகிறது.


5 ) ஆயிரத்தில் ஒருவன்பருத்திவீரனுக்கு பின் நீண்டஇடைவெளிக்கு பின்னர் கார்த்தி நடிக்கும் படம், மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் செல்வராகவன் படம் என எதிர்பார்ப்பை உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவன் trailer பார்த்தபின் எதிர்பார்ப்பு மேலும் எகிறுகிறது. இந்தப்படத்தின் பலவீனம் என்றால் G.V. பிரகாஷின் பாடல்கள்தான், யுவன் இல்லாத குறை நன்றாக தெரிகிறது, அரவிந்த் கிறிஸ்னா இல்லாததால் வெளிச்சத்தில் படத்தை பார்க்கலாம் என்பது சந்தோசமான விடயம். ஆண்ரியா, ரீமாசென் என கார்த்திக்கு இரண்டு சிட்டுக்கள் படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர், பொங்கல் வெளியீடாக வரும் இந்தப்படத்திற்கும் இயக்குனரின் தம்பியான தனுசின் 'குட்டி' படத்திற்குமான மோதல் விறுவிறுப்பாக இருக்கும், வெல்லப்போவது அண்ணனா? தம்பியா?

4 ) சுறாதொடர் தோல்விகளுக்கு இந்தப்படம் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை 2010 இல் தெரிந்து கொள்ளலாம். சுறா என்ற பெயரை பார்த்தால் முன்னைய படங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை , ஆனால் திரைக்கதை அமைந்து விட்டாலே விஜய் படங்களுக்கு போதும் என்பதால் படம் வெளிவரும்வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் இந்தப்படம் தோல்வியடையும் பட்சத்தில் விஜய் தனது பாதையை மாற்ற முயற்சிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. S.P. ராஜ்குமார் என்னும் புதிய இயக்குனர் இயக்க தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு மணிசர்மா இசை அமைக்கிறார், M..S. பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ரசிகர்களின் நீண்டநாள் தாகத்தை சுறாமூலம் விஜய் தீர்ப்பாரா? அல்லது மீண்டும் பதிவர்களுக்கு அதிக கிட்ஸ் கொடுப்பாரா ? என்பதை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

3 ) அசல்நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகும் அஜித் படம் , கூடவே அஜித்தின் ஆசதான் இயக்குனர் சரண்,எதிர்பார்ப்பு சொல்லவும் வேண்டுமா? ஹட் ரிக் வெற்றி கொடுத்த அஜித், சரண் கூட்டணி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. சரன் அன்மைக்காலமாக் பெரிய வெற்றிகள் எதனையும் கொடுக்காவிட்டாலும் மிகுந்த மூளைசாலி என்பது எனது தனிப்பட்ட கருத்து, வட்டாரம் என்னும் சிறந்த படம் வெற்றி அடையாமை துரதிஸ்டமே. ஆனால் அஜித் படமென்றால் அது சரணுக்கு அல்வா சப்பிடிரமாதிரி , கூடவே பரத்வாஜ் வேறு மீண்டும் சரணுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய பலமே. மற்றும் சந்திரமுகி வெற்றிக்கு பின்னர் சிவாஜி பில்ம்ஸ் தயாரிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தப்படத்தில் தலைக்கு நாயகிகளாக சமீரா ரெட்டியும் பாவனாவும் நடிக்கிறார்கள். பிரசாந்த் D மிசாலி ஒளிப்பதிவு செய்யும் அசலுக்கு திரைக்கதை எழுதுவது யூகிசேது. தலை மீண்டும் ஒருதடவை ' I am back " சொல்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


2 ) ராவணா

ஆயுத எழுத்திற்கு பின்னர் மணிரத்தினம் நேரடியாக தமிழில் இயக்கம் பெயர் வைக்காத படத்திற்கு ராவணா என ஊடகங்கள் ஒரு பெயரை வைத்துள்ளது. அந்நியனுக்கு பின்னர் வெற்றியை தேடும் விக்ரமிற்கு ராவண வெற்றியடைந்தால் 5 அண்டுகளுக்கு பின்னர் கிடைக்கும் வெற்றியாக அது அமையும். ரஜினி , கமல் எத்தனை படம் நடித்திருந்தாலும் தளபதி , நாயகன் போல அவர்கள் வேறுபடங்களில் படம்முழுவதும் எம்மை கட்டிப்போட்டதில்லை. அதற்க்கு காரணம் மணிதான் என்பதை நிச்சயமாக ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். விக்ரம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் ஒரு புது விக்ரமை மணி காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரியாமனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கூடவே பிருத்திவிராஜ்சும் 'அலைகள் ய்வதில்லை" கார்த்திக்கும் நடிக்கிறார். A.R. ரகுமான் இசை அமைக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஸ் சிவன் ஒளிப்பதிவு செய்ய மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது. சீயான் தனது மூன்றாவது இன்னிங்க்சை ஆரம்பிக்கிறாரா? மணி தொடர்ந்தும் தமிழ்ப்படங்கள் இயக்குவாரா? என்பது இந்தப்படத்தின் வெற்றியில் தங்கியுள்ளது, பார்க்கலாம் !


1 ) எந்திரன்

எந்திரன் எதற்கு முதலிடத்தில் இருக்கின்றது என்பதற்கு காரணங்களை சொல்லப்போனால் இயற்கை அழகாக உள்ளதற்கான காரணத்தை சொல்வதுபோல் இருக்கும். இருந்தாலும் இது ஒரு ரஜினி படம் (கடைசிப்பாடமாக கூட இருக்கலாம் ), ரஜினி தவிர ஷங்கர், ஐஸ்வர்யாராய், ரஹுமான் என்னும் மூன்று பெரும் தலைகள் சம்பத்தப்பட்ட படம் , மிகப் பெரிய பட்ஜெட், கொள்ளைக்கூட்டதலைவன் கலாநிதிமாறன் தயாரிக்கும் படம் என எதிபார்ப்பின் உச்சத்தில் உள்ள திரைப்படம். தனது படங்களினை ஒரு கரு வேறுபட்ட திரைக்கதை மூலம் வழங்கிய ஷங்கர் எந்திரனிலாவது புதிய கருவை உட்கொண்டு வருகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.....

2010 இல் தமிழ் சினிமா கலக்கலாக இருக்க வாழ்த்துக்கள்........

16 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

கொள்ளைக்கூட்டதலைவன் கலாநிதிமாறன்////

அவன நம்பி யாரும் படம் எடுக்கல.. "sun pictures" banner இல்லனாலும் அது hit-டு தான்... கலாநிதிமாறன், ரஜினி கால்லயும் ஷங்கர் கால்லயும் விழுந்து கெஞ்சியிருப்பான்!!

ஞானப்பழம் said...

உங்களுக்கும் ஆங்கிலப் புது வருட நல்வாழ்த்துக்கள்!!

ஞானப்பழம் said...

அப்பறம் உங்கள் பதிவீட்டின் புதிய தோற்றம் மிகவும் அருமை!! பாராட்டுக்கள்!!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்//அவன நம்பி யாரும் படம் எடுக்கல.. "sun pictures" banner இல்லனாலும் அது hit-டு தான்... கலாநிதிமாறன், ரஜினி கால்லயும் ஷங்கர் கால்லயும் விழுந்து கெஞ்சியிருப்பான்!!//

(:
காரியம் ஆகணுமென்றால் யார் காலிலையும் மொத்த குடும்பமுமே விழும்.
...................................

//உங்களுக்கும் ஆங்கிலப் புது வருட நல்வாழ்த்துக்கள்!!//

நன்றி

..............................


//அப்பறம் உங்கள் பதிவீட்டின் புதிய தோற்றம் மிகவும் அருமை!! பாராட்டுக்கள்!!


மீண்டும் நன்றி.

Unknown said...

//(:
காரியம் ஆகணுமென்றால் யார் காலிலையும் மொத்த குடும்பமுமே விழும். ///
ஹா.., ஹா..,

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//ஹா.., ஹா..,//

(:

Yoganathan.N said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே... அனைத்து படங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்... பார்ப்போம்... :)

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே... அனைத்து படங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்... பார்ப்போம்... :)//


நன்றி நன்றி .....

கிரி said...

தேர்வு நன்றாக உள்ளது..இது தவிர நான் ஒரு சில படங்களை எதிர்பார்க்கிறேன்

ஞானப்பழம் said...

ஆமா... "தமிழ் படம்" விட்டு விட்டீரே!!

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//தேர்வு நன்றாக உள்ளது..இது தவிர நான் ஒரு சில படங்களை எதிர்பார்க்கிறேன்//

நன்றி, நான் இவற்றை தவிர எதிர்பார்ப்பது லிங்குசாமியின் பையாவை

.....................................
ஞானப்பழம்

//ஆமா... "தமிழ் படம்" விட்டு விட்டீரே!! //

விளங்கவில்லை, தயவு செய்து இன்னொருதடவை புரியும்படி கூறுங்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//ஆமா... "தமிழ் படம்" விட்டு விட்டீரே!!//


ஓகே, ஓகே ,இப்போது விளங்கிவிட்டுது பாஸ் , முதல் முயற்சி எப்படி வருகிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஞானப்பழம் said...

நான் அதை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. ஆனா நெறைய பேர் மூஞ்சில ஈ ஓடாது!!

ஒருத்தன விட்டிருக்க மாட்டாங்க!! :P

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//நான் அதை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. ஆனா நெறைய பேர் மூஞ்சில ஈ ஓடாது!!

ஒருத்தன விட்டிருக்க மாட்டாங்க!! :P//

நம்ம தலைவலி சாரி தளபதிதானே ?

ஞானப்பழம் said...

ஹி.. ஹி.. குறிப்பாக அவன்தான்!! ரஜினி, கமல்கூட மூடீட்டு இருப்பாங்க..

Yoganathan.N said...

தமிழ் படம் - இது நம்ம ஊரு 'Scary Movie' தானே... அபூர்வ சகோதரர்கள், ரன், நாயகன், பில்லா, சிவாஜி போன்றவை அடங்கிருப்பது டிரைலரில் நன்றாக தெரிகிறது... என்க்கும் ஆவலாக இருக்கிறது. :)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)