Friday, January 1, 2010

யாழ்ப்பாணத்தில் 2009 , 2010 புத்தாண்டுகள்.

2009 இல் புதுவருடம் கொண்டாடும் மனநிலையில் யாரும் இருக்கவில்லை , ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது ஒரு நெருங்கிய உறவினராவது வன்னி யுத்தத்தில் சிக்கியிருந்தார்கள். இதனால் அதிகமான மக்கள் புத்தாண்டை கொண்டாடவில்லை. அது தவிர வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதென்றால் (யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் போக்குவரத்து விமானம்மூலம் மட்டுமே) 20 ,000 ரூபாய் செலவுசெய்து சொந்த ஊருக்கு வந்து போகமுடியவில்லை . அது தவிர பொருட்களின் விலைகள் உச்சத்தில் இருந்தன, இராணுவத்தினரின் சோதனைகள், இரவுநேர ஊரடங்கு சட்டம், இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிசூடு என பதற்றமானதொரு சூழ்நிலையிலேயே யாழ்ப்பாணம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் யாழ்ப்பாணம் வெறிச்சோடியே காணப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு ஓரளவு களைகட்டியதென்றே சொல்லலாம், துப்பாக்கி வெடிகள் இல்லாமல் பட்டாசுச் சத்தங்கள் வானைப்பிளந்தன.கொழும்பு , யாழ்ப்பாணம் A 9திறக்கப்பட்டு போக்குவரத்து 20,000 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கு குறைந்ததால் அதிகமானவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புத்தாண்டை கொண்டாட வந்திருந்தனர்.தமிழ் மக்களைதவிர சிங்கள , முஸ்லிம் மக்களும் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவில் வந்திருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் நேரடியாக யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, மட்டக்களப்பு, திரிகோணமலை, வவுனியாவிற்கு நேரடிப்போக்குவரத்து ஆரம்பித்திருப்பதால் பஸ்நிலையம் நிரம்பி வழிந்தது. அது தவிர முகாம்களில் இருந்து வேறுமாவட்ட மக்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதால் மக்கள் அதிகளவில் வீதிகளில் காணப்பட்டனர்.

பொருட்களின் விலைகள் கொழும்பு விலைக்கே கிடைப்பதால் மக்கள் அதிகளவில் பொருட்களை கொள்முதல் செய்தனர், இதனால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் நடைபெற்றது.மற்றும் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இரவிலும் காணப்பட்டது. இராணுவத்தினரின் சோதனைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளதால் மக்கள் ராணுவத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.கிறிஸ்தவ கோவில்களில் இரவுநேர பூஜை இடம்பெற்றது.இறுதி யுத்தத்திலும் , முகாம்களிலும் கஷ்டப்பட்டு தமது குடும்பங்களில் உயிரிழப்புக்கள் இன்றி மீண்டுவந்தவர்கள் ஓரளவு மகிழ்ச்சியில் காணப்பட்டனர். ஆக மொத்தத்தில் மக்கள் 2009 புதுவருடத்தை விட இந்த ஆண்டு பலமடங்கு உற்சாகமாக காணப்பட்டனர்.

தொடர் இடம்பெயர்வுகள், யுத்தங்களுக்கு இடையிலான வாழ்க்கை. உணவுப்பொருட்கள் ,அத்தியாவசிய பொருட்கள்,மருந்து பொருட்கள் தட்டுப்பாடு.போக்குவரத்து சீரின்மை போன்றவை இந்தாண்டு இல்லாமையால் மக்கள் உற்சாகமாக காணப்பட்டதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பினும் உள்மனதில் மூன்று கேள்விகள் எழத்தான் செய்கின்றது.

1 ) 50,000 இற்கும் அதிகமான உறவுகளை இழந்துதானா இப்படி ஒரு புத்தாண்டை வரவேற்கவேண்டும் ?

2 ) ஜனாதிபதி தேர்தல் மட்டும் வராவிட்டால் இந்தமாதிரியான சூழ்நிலை உருவாகியிருக்குமா ?

3 ) இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போகிறது?

குறிப்பு

நான் அரசியல் பேசவரவில்லை, அதுதவிர இந்தச்சூழல் நிரந்தர தீரவில்லை என்பது எனக்கும் தெரியும், ஆனால் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்தவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் அமைதியான வாழ்க்கை பெரும் காயத்துக்கு கிடைத்த முதலுதவிபோலாவது இருக்குமென்பது எனது கருத்து.இதனை உரிமை சம்பந்தமாக பார்க்கமால் உணர்வு சம்பந்தமாக பார்த்தால் சரி.

இனிவரும் ஆண்டுகளில் எழுத்திலும், செயலிலும் சம உரிமையுடன் கூடிய நிரந்தர அமைதி எமது மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.இது எனது சிறிய நப்பாசை......

6 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

நிச்சயம் லங்கா ஒரு நாள் மலேசிய சிங்கப்பூர் போல் மாறும் தமிழ் மக்கள் உள்ள நாடு நிச்சயம் உயருமே தவிர இறங்காது
இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்க வாழ்துக்கள்

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

//நிச்சயம் லங்கா ஒரு நாள் மலேசிய சிங்கப்பூர் போல் மாறும் தமிழ் மக்கள் உள்ள நாடு நிச்சயம் உயருமே தவிர இறங்காது
இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்க வாழ்துக்கள்//

உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றிகள்

அண்ணாமலையான் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நம்ம பக்கம் உங்க ஓட்டும் கருத்தும் கானோமே? வர்ரீங்களா?

அ.ஜீவதர்ஷன் said...

அண்ணாமலையான்

//புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நம்ம பக்கம் உங்க ஓட்டும் கருத்தும் கானோமே? வர்ரீங்களா?//

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், ஓட்டும் போட்டாச்சு , கமெண்டும் போட்டாச்சு

Unknown said...

கருத்து சொல்லுற நிலைமைல நன் இல்லை,
என்னதான் லங்கா ஒரு நாள் மலேசிய சிங்கப்பூர் போல் மாறிநாலும் 50,000 இற்கும் அதிகமான உறவுகளை இழந்ததை மறக்க முடியாது,

ஞானப்பழம் said...

சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு, பெரும்பாலாக மகிழ்ச்சியாகவே கொண்டாடப் பட்டது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி....

/// 50,000 இற்கும் அதிகமான உறவுகளை இழந்துதானா இப்படி ஒரு புத்தாண்டை வரவேற்கவேண்டும் ?///
அமைதியான "உறவுகளுக்கு" நாம் செலுத்தும் துயரம் விரைவிலேயே மீதமுள்ள "உறவுகளுக்கு" நாம் செலுத்தும் நேசமும் பாசமுமாக மாறட்டும்... (கண்களில் மல்கியது.. எதோ உளறுகிறேன்.. மன்னியுங்கள்!!)

/// ஜனாதிபதி தேர்தல் மட்டும் வராவிட்டால் இந்தமாதிரியான சூழ்நிலை உருவாகியிருக்குமா ? ///
தேர்தல் வரக் காரணமாய் இருந்தவர் யார்? அவருக்கு ஏதாவது அரசியல் லாபம் உள்ளதா இதில்?

/// இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போகிறது? ///
இதுக்கு என்னாலையும் கருத்து சொல்ல முடியாது!!

பூஜை யை "பூசை" என்று சொல்வதே உண்மைப் பொருள் தரும்!!

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)