Sunday, January 10, 2010

2003 முதல் 2010 வரையான பொங்கல் படங்கள்2002 க்கு முதல் சரியாக ஞாபகமில்லாததால் இந்தப்பதிவில் 2003 முதல் இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் படங்கள்வரை அலசலாமென்று நினைக்கின்றேன்.


 2003 
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களில் முக்கியமான படங்களாக அன்பேசிவம், தூள், வசீகரா போன்ற படங்களை சொல்லலாம். இந்தப்படங்களில் ஆரம்பம் முதல் சக்கைபோடு போட்டபடம் தூள். விக்ரம் ஜோதிகா,ரீமாசென் , விவேக் நடிப்பில் வித்தியாசாகர் இசையில் தாரணி இயக்கிய தூள் சகலவிதமான பொழுது போக்கு அம்சங்களுடன் வெளிவந்த ஒரு முழுநீள கமெர்சியல் படம். விக்ரமின் மிரட்டும் ஹீரோயிசம், ஜோதிகாவின் குறும்பு , ரீமாசென்னின் கவர்ச்சி, விவேக்கின் கலகலப்பு என்று மிரட்டிய இந்தப்படத்தின் இன்னுமொரு ஹீரோ வித்தியாசாகர், இவரது இசையில் அனைத்துப்பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது மட்டுமன்றி பின்னணி இசையிலும் பின்னியிருப்பார்.இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் தரணியின் வேகமான திரைக்கதை தூளின் வெற்றியை பிரம்மாண்டமாக்கியது.

'அன்பேசிவம்' விமர்சககளின் அமோக வரவேற்ப்பை பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றியடைய முடியவில்லை. கமலும் மாதவனும் போட்டி போட்டு நடித்திருக்கும் அன்பேசிவத்தின் பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருப்பார் வித்தியாசாகர். நல்ல கதைக்களம் , திறமையான நடிப்பாற்றல், சிறந்த இசை என்பன இருந்தும் அன்பேசிவத்தை மக்கள் வரவேற்காதது ஆச்சரியமே. அதேபோல 'வசீகரா' விஜய் நடித்த ஒரு வித்தியாசமான படம் , இந்தப்படம் வெற்றியடைந்திருந்தால் சிலநேரங்களில் விஜயின் பாதை கூட மாறியிருக்கலாம் . விஜய், வடிவேலு கூட்டணியின் சிறந்த காமடி, S .A . ராஜ்குமாரின் ஹிட்டான பாடல்கள் , சினேகாவின் அமைதியான நடிப்பு என சிறப்பான விடயங்கள் இருந்தாலும் இந்தப்படத்தின் உச்சக்காட்சி மெகாசீரியல் போல இருந்தது இந்தப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்.

2004விருமாண்டி, எங்கள்அண்ணா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் , ஜெய் , கோவில் என்பன இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த முக்கியமான படங்கள். இவற்றில் எந்தப்படமும் மிகப்பெரும் வெற்றியை அடையாவிட்டாலும் எங்கள் அண்ணா , விருமாண்டி என்பன முறையே வெற்றியடைந்தன. எங்கள் அண்ணாவை பொறுத்தவரை வடிவேலு, பாண்டியராஜன் , M.S. பாஸ்கர் கூட்டணியின் காமடியை தவிர சிறப்பான விடயம் எதுவும் இல்லையென்றாலும் இன்றைய 'மானாட மயிலாட' புகழ் கலைச்செல்வி (?) நமீதாவின் அறிமுகம் இந்தப்படத்திலே என்பது குறிப்பிடத்தக்கது.

விருமாண்டி தயாரிப்பு செலவு குறைவாகவும் கமலின் சொந்தத்தயாரிப்பாகவும் இருந்தகாரணத்தால் பெரிதாக வசூலிக்காவிட்டாலும் வெற்றிப்படமாக அமைந்தது. கமல், பசுபதி, அபிராமியின் அற்புதமான நடிப்பு , இளையராஜாவின் இசை என்பன இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியகாரணிகளாக அமைந்தன. அடுத்து ஹரி இயக்கத்தில் சிம்பு, சோனியா, வடிவேல் நடித்த 'கோவில்' போட்டகாசுக்கு வஞ்சகமில்லாமல் ஓடியது. மூன்று தொடர் வெற்றிக்குப் பின்னர் தனுசிற்கு 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' மிகப்பெரும் சரிவாக அமைந்தது. இந்தப்பொங்கலுக்கு மிகப்பிரமாண்டமான படமாக வெளிவந்த பிரசாந்தின் 'ஜெய்' படுதோல்வியடைந்தது.

2005இந்த ஆண்டு பொங்கல் படங்களில் முக்கியமானவை திருப்பாச்சி , தேவதையை கண்டேன் , ஆயுதம் என்பனவாகும். இந்த ஆண்டு விஜயின் திருப்பாச்சி மிகப்பெரிய வெற்றியடைந்தது. விஜய், த்ரிஷா நடித்திருந்த திருப்பாச்சியை பேரரசு இயக்கினார். மணிசர்மா, தேவி ஸ்ரீ பிரசாத் , தினா என மூவர் இசையமைத்த இந்தப்படத்தின் திரைக்கதையின் வேகமும் வசனங்களும் வெற்றிக்கு முக்கிய காரனங்களாக அமைந்தன, அதுதவிர விஜயின் ஹீரோயிசமும் த்ரிஷாவின் இளமைத்துடிப்பும் மேலும் இப்படத்தின் வெற்றியை பிரமாண்டமாக்கின .

தேவதயைகண்டேன் 2004 ஆம் ஆண்டு தோல்வியால் துவண்டிருந்த தனுசிற்கு போட்டகாசுக்கு வஞ்சகமில்லாமல் ஓடி ஓரளவு ஆறுதலாக அமைந்தது . பூபதி பாண்டியன் இயக்க தனுஸ், ஸ்ரீதேவி, கருணாஸ் நடித்த இந்தப்படத்திற்கு தேவாவின் இசையில் முன்பே கேட்டமாதிரி பாடல்களாக இருந்தாலும் பாடல்கள் சிறப்பாக இருந்தன. 'ஆயுதம்' பிரஷாந்த், சினேகா நடித்து தினாவின் இசையில் வெளிவந்தது, இந்தப்படமும் பிரஷாந்துக்கு கைகொடுக்கவில்லை

2006எந்த வெற்றிப்படங்களுமில்லாத ஒரு ஆண்டாக இது அமைந்தது. ஆதி , பரமசிவன், சரவணா என்பன முக்கியமான படங்களாக வெளிவந்தன. இவற்றில் பரமசிவன் ஓரளவு நன்றாக ஓடினாலும் ஒருசில மீடியாக்கள் படம் ரிலீசாகி அடுத்தடுத்தநாளே தோல்வியென்று கூறி படத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டன.அஜித்தின் தோற்றம் பற்றிய பரவலான கிண்டல்களுக்கு பதிலடியாக பதினெட்டுகிலோ எடையைக் குறைத்திருந்தார்.க்ளைமாக்ஸ் பைக்சேசிங் பரவலாகப் பேசப்பட்டது . அஜித், லைலா நடிப்பில் வித்யாசாகரின் இசையில் பி. வாசு இந்தப்படத்தை இயக்கியிருப்பார்.

ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா நடிக்க ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்த படம் 'சரவணா' , இந்தப்படம் நன்றாக ஓடியிருந்தால்தான் காரணம் தேவை, ஓடாததால் அடுத்து 'ஆதி' யை பார்த்தோமானால் விஜய், த்ரிஷா நடிப்பில் வித்தியாசாகர் இசையில் ரமணா இயக்க S.A. சந்திரசேகர் தனது பெயரை நியூமொலாரஜிப்படி சந்திரசேகரன் என மாறியபின்னர் தயாரித்த முதல்ப்படம் , இது விஜயின் படங்களில் மோசமான தோல்வியாக இன்றளவும் கணிக்கப்படும் ஒருபடமாக அமைந்தது.


2007


மீண்டும் விஜய்க்கு சிறப்பான பொங்கல் ஆண்டாக இந்த ஆண்டு அமைந்தது, இந்த ஆண்டு போக்கிரி,ஆழ்வார், தாமிரபரணி என்பன முக்கிய படங்களாக வெளிவந்தன, இவற்றில் போக்கிரி மிகப்பெரும் வெற்றியடைந்தது. விஜய், வடிவேலு, அசின் நடித்த இந்தப்படத்திற்கு மணிசர்மா இசை அமைக்க பிரபுதேவா இயக்கியிருந்தார். விஜயின் அசால்டான உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் வடிவேலுவின் {சொங்கி மங்கி} காமடி, அசினின் இளமையென இந்தப்படத்திற்கு நிறைய பிளஸ் இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொருவர் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இவரது ஒளிப்பதிவு போக்கிரிக்கு இன்னமும் பலம் சேர்த்தது என்றால் மிகையில்லை.

ஹரி இயக்கத்தில் விஷால் , பிரபு , பானு , நதியா நடித்த இந்தப்படத்திற்கு யுவன் இசையமைக்க பிரியன் ஒளிப்பதிவு செய்திருப்பார். வழமையான ஹரியின் குடும்ப , சென்ரிமென்ட் , ஆக்சன் கதையே என்றாலும் சிறப்பான திரைக்கதையால் தாமிரபரணி வெற்றிபெற்றது . 2006 விஜய்க்கு எப்படி 'ஆதி' அமைந்ததோ அதேபோல் 2007 அஜித்திற்கு 'ஆழ்வார்' அமைந்தது , ஆழ்வார் பார்ப்பதற்கு முழுக்க முழுக்க இயக்குனர் பாலாவிற்கு பதிலடி கொடுப்பதற்காகவே எடுத்தது போன்றிருந்தது. அஜித் எந்தப்படத்திலுமில்லாதது போல் அழகாக இருந்தும் இயக்குனர் வீணடித்துவிட்டார் என்றே சொல்லலாம். அசின் நாயகியாக நடித்த இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருந்தார்

2008


இந்த ஆண்டு பீமா , காளை, பிரிவோம் சந்திப்போம் , பழனி ஆகியன முக்கிய படங்களாக வெளிவந்தன. 2006 ஆம் ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் எந்தப்படமும் வெற்றியடையவில்லை. 'பீமா' விக்ரம் , த்ரிஷாவின் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஹாரிஸின் இசையில் R.D . ராஜசேகர் ஒளிப்பதிவில் இரண்டாண்டுகள் உழைப்பில் வெளிவந்தாலும் படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருந்ததாலும் இதேசாயலில் வேறுபடங்கள் இடைப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் வெளிவந்திருந்ததாலும் 'பீமா' வெற்றியடைய முடியவில்லை.

காளை, பழனி என்பன முறையே தருண்கோபி, பேரரசு இயக்கத்தில் வெளிவந்து மண்ணைக்கவ்விய படங்கள், ஆனால் பிரிவோம் சந்திப்போம் போட்ட காசுக்கு வஞ்சகமில்லாமல் ஓடியது. சேரன் , சினேகா நடிப்பில் கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்திகு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். செட்டிநாட்டு கல்யாணத்தை படத்தில் சிறப்பாக காட்டிய இயக்குனர் தனிக்குடித்தனத்தின் வெறுமையை அழகாக சொல்லியிருப்பார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்த இந்தப்படத்தின் பின்னரைவாசி மிகவும் மெதுவாக நகராமல் சற்று வேகமாக இருந்திருந்தால் நிச்சயம் இதுவொரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

2009இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான இரண்டு படங்களில் ஒன்று 'வில்லு' மற்றையது 'படிக்காதவன்'. இந்த ஆண்டும் எந்தப்படங்களும் வெற்றியடையவில்லை. படிக்காதவன் ஓரளவு நன்றாக ஓடியது. தனுஸ், தமன்னா ,விவேக் நடித்திருந்த படிக்காதவனுக்கு மணிசர்மா இசையமைக்க சுராஜ் இயக்கியிருப்பார். தனுஸ், விவேக்கின் காமடி தவிர சொல்லக்கூடிய விடயங்கள் ஒன்றுமில்லாவிட்டாலும் சண் பிக்சர்சின் உதவியால் இந்தப்படம் ஓரளவேனும் ஓடியது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நாயகனாகவும் நயன்தாரா நாயகியாக நடித்திருந்த 'வில்லு' படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். மோசமான திரைக்கதை, மோசமான காமடி , மோசமான இயக்கம் என பாடல்களைத்தவிர வேறொன்றும் நன்றாக இல்லாத காரணத்தால் வில்லு காலை வாரியது. போக்கிரிக்குப்பின்னர் அதிகளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களை 'வில்லு' திருப்திப்படுத்தாதது அதனது படுதோல்விக்கு இன்னுமொரு முக்கியகாரணம்.2010


இந்த ஆண்டு வெளிவரும் முக்கிய படங்களாக செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி , அன்டிரியா ,ரீமாசென், நடித்து G.V.பிரகாஷ் இசையமைத்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன் ' , ஜவகர் இயக்கத்தில் தனுஸ், ஸ்ரேயா நடிக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் 'குட்டி' , ஷக்தி S . ராஜன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்தின் இசையமைப்பில் S.P.B.சரண் தயாரித்து சிபிராஜ் வில்லனாக நடிக்க பிரசன்னா ஹீரோவாக நடிக்கும் 'நாணயம்' என்பன முக்கிய படங்களாக வெளிவருகின்றன.

இந்தப் பொங்கலில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்......

12 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கிளுகிளுப்பு கொஞ்சம் மிகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது!! :P

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கிளுகிளுப்பு கொஞ்சம் மிகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது!! :p//
செல்வா படத்தில் கிளுகிளுப்பு இல்லாமலா?

கிரி said...

ஆயிரத்தில் ஒருவனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. ஆனா பொங்கலுக்கு சந்தேகம் தான் போல!

வெற்றி said...

இந்த பொங்கலுக்குத்தான் விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா படங்கள் இல்லாமலே எதிர்பார்ப்பு களைகட்டியுள்ளது..

வெற்றி said...

:))

haran said...

ஆயிரத்தில் ஒருவன் 20 திகதி வரைக்கும் வெளியிட முடியாது - நீதிமன்ற உத்தரவு

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//ஆயிரத்தில் ஒருவனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. ஆனா பொங்கலுக்கு சந்தேகம் தான் போல!//

பொறுத்திருந்து பார்ப்போம்.....

..................................

வெற்றி

//இந்த பொங்கலுக்குத்தான் விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா படங்கள் இல்லாமலே எதிர்பார்ப்பு களைகட்டியுள்ளது..//

இது அடுத்த தலை முறையினறது வளர்ச்சியை காட்டுகிறது
................................

haran

//ஆயிரத்தில் ஒருவன் 20 திகதி வரைக்கும் வெளியிட முடியாது - நீதிமன்ற உத்தரவு//

இப்படி பல உத்தரவுகள் முன்னரும் வந்திருக்கின்றன, ஆனால் அந்தக் காரணங்களுக்காக படங்கள் வராமல் இருந்ததில்லை. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Yoganathan.N said...

வழக்கம் போல தனுஷ் படம் ஹிட் ஆகிவிடும்...

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//வழக்கம் போல தனுஷ் படம் ஹிட் ஆகிவிடும்...//

நல்ல படமாக இருந்தால்(கதை) யார் படமென்றாலும் ஓடும்......இது எங்கேயோ கேட்ட குரல் இல்ல ?

Yoganathan.N said...

//நல்ல படமாக இருந்தால்(கதை) யார் படமென்றாலும் ஓடும்......இது எங்கேயோ கேட்ட குரல் இல்ல ?//

இல்லையே... லேடஸ்டாக நான் கேட்டது, 'நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை' ஹி ஹி ஹி...

Think Why Not said...

ரொம்ப ஆராய்ந்து இருக்கீங்க...
ஒருவேளை நீங்களும் எப்பூடி ஜோசியம்னு ஒன்று ஆரம்பிக்கலாம்....

r.v.saravanan said...

good

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)