Monday, January 18, 2010

எப்பூடி.. ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல். 17/01/2010

கிரிக்கெட்  [CRICKET]

இங்கிலாந்துக்கு ஆப்பு..இரண்டு போட்டிகளை ஒன்பது விக்கட்டில் சமநிலை செய்ததுடன் ஒரு போட்டியை வெற்றிகொண்டிருந்த இங்கிலாந்து நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை சமநிலை செய்தாலே தொடரை வெல்லும் வாய்ப்புடன் களமிறங்கியது.ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய தென்னாபிரிக்கா இன்னிங்சாலும் 74 ஓட்டங்களாலும் வெற்றிபெற்று தொடரைச்சமன் செய்ததது.வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வொண்டராஸ் மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை ஆரம்பம் முதலே நிலைகுலையச் செய்த மோர்க்கல்,ஸ்டெய்ன் ஆகியோர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்தை இருநூறு ஓட்டங்களுக்குள் சுருட்டியிருந்தனர்.ஸ்கோர் விபரம் இங்கிலாந்து(180&169) தென்னாபிரிக்கா(423/7).ஸ்மித்(105) ஆம்லா(75) பவுச்சர்(95) ஆகியோர் தென்னாபிரிக்கா சார்பில் சிறப்பாக ஆடியிருந்தனர்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகக்குறைவான ஓட்டங்களை பெற்றதாலும் நான்காம் நாளே போட்டி முடிவை எட்டியதாலும் மழையோ அல்லது இறுதி துடுப்பாட்ட வீரர்களோ இங்கிலாந்துக்கு கை கொடுக்கமுடியவில்லை.தென்னாபிரிக்க பிறப்பு இங்கிலாந்து வீரர்களான பிடர்சன்,த்ரோட் போன்றோர் தொடர் முழுதும் சறுக்கியதே இங்கிலாந்து துடுப்பாடத்த்துக்கு பெரும் பின்னடைவை தந்திருந்தது.போட்டியில் தலா 7 விக்கட்டுகளை வீழ்த்திய ஸ்டெய்ன்,மோர்க்கல் ஆகியோர் ஆட்டநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டதுடன் தொடர் முழுதும் சிறப்பாக சோபித்த பவுச்சர்,ஸ்வான் ஆகியோர் தொடரின் நாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொதப்பும் பாகிஸ்தான்...முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று white wash நோக்கி மூன்றாவது போட்டியில் ஆடிய ஆஸ்திரேலியா பெரும்பாலும் அதில் வெற்றி காணும் நிலையிலுள்ளனர்.பொண்டிங்,கிளார்க்,கட்டிச் ஆகியோரின் அபாரமான சதத்தினால் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலியா.ஸ்கோர் விபரம்:ஆஸ்திரேலியா519/8 (பொண்டிங்209 கிளார்க்166)&219/5 (கட்டிச்100, பொண்டிங்89) பாகிஸ்தான் 301(சல்மான் பட்102, மாலிக்58)&108/4. இறுதி ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் வெற்றிபெற மேலும் 335ஓட்டங்கள் தேவையான நிலையில் மீதமுள்ள 6 விக்கட்டுகளுடன் ஒருநாள் முழுதும் போராடினாலே போட்டியை சமநிலைப்படுத்தவாவது முடியும்.மழை காப்பற்றினாலோ அல்லது ஏதாவது சாதனை இணைப்பாட்டம் நிகழ்ந்தாலோவன்றி பாகிஸ்தான் white wash ஐ தவிர்ப்பது கடினமே.

இலங்கையின் கிண்ணமும் , மகேலாவும்..இந்தியாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மோசமான முறையில் தோல்வியை சந்தித்திருந்த இலங்கையணிக்கு இந்தியாவைப் பழிவாங்க கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று இந்தியாவைத் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தார் சங்கா. துடுப்பாட களமிறங்கிய இந்தியஅணி ஆரம்பம் முதல் விக்கட்டுகளை மளமளவென இழந்து.60/5 என்று ஒருகட்டத்தில் தடுமாறிய இந்தியஅணியை அபாரமான இணைப்பாட்டம் மூலம் 246 என்ற நெருக்கடி கொடுக்கக் கூடிய இலக்குக்கு இட்டுச் சென்றது ரைனா, ஜடேஜா ஜோடி. ரைனா அபாரமாக ஆடி 106 ஓட்டங்களைப் பெற்றார்.

246 என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை ஓட்டம் ஏதும் பெறாமல் தரங்கவை இழந்தாலும் டில்ஷான், சங்கா ஆகியோரின் அதிரடியான இணைப்பாட்டம் மூலம் இலக்கை இலகுவாக எட்டுமென்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் தமக்கு சாதகமாகவிருக்குமென இலங்கை நம்பிய பனி பெரிதாக பொழியாததால் ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகத்தன்மை வாய்ந்ததாகமாற சராசரி இடைவெளியில் விக்கட்டுகளை இழந்தாலும் 49 வது ஓவரில் 6 விக்கட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.காயம் காரணமாக தொடரின் இடையிலேயே குழாமிலினைந்த மகேல இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடி இலங்கைக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.மகேல கதை அவ்வளவுதான், சங்கா அவரை கழட்டிவிட்டார் என கமண்டுகளை அள்ளி வீசியவர்களுக்கு துடுப்பின் மூலம் விடை கொடுத்திருந்தார் மகேல.ஆக அனுபவமும் இளமையும்கலந்த இலங்கை இறுதிப்போட்டி என்றாலே தடுமாறும் இந்தியாவை வீழ்த்தியது. .ஸ்கோர் விபரம்:இந்தியா 245.(ரைனா106) இலங்கை249/6 (மகேல71* சங்கா55,டில்ஷான்49) ஆட்டநாயகனாக 4விக்கட்டுகளை வீழ்த்திய குலசெகரவும் தொடரின் நாயகனாக சங்காவும் தேர்வுசெயப்பட்டனர்.


கால்ப்பந்தாட்டம் [FOOTBALL]English Premier League போட்டிகளில் சனிக்கிழமை Chelsea , Sunderland அணிகளுக்கிடையிலான போட்டியில் கோல் மழை பொழிந்ததென்றே சொல்லலாம், போட்டியை 7-2 என Chelsea வென்றது. Chelsea சார்பாக Frank Lampard(2),Nicolas Anelka(2), Florent Malouda, Ashley Cole, Michael Ballack ஆகியோரும் Sunderland சார்பாக Zenden ,bardsles ஆகியோரும் கோல்களை அடித்தனர். Chelsea தவிர Manchester United , Arsenal அணிகளும் வெற்றிபெற்றன, Stoke City , Liverpool அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் Stoke City யின் R.Huth அடித்த இறுதிநேர கோல் மூலம் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.ஸ்பெயினின் la liga போட்டிகளில் தொடர்ந்தும் Barcelona முதலிடத்திலிருக்கிறது , நேற்றைய போட்டியில் messi அடித்த இரண்டு கோள்களுடன் 4-0 என Sevilla அணியை வென்றதன் மூலமும் நேற்றைய போட்டியில் Real Madrid , Athletic Bilbao அணியிடம் 1 -0 என தோல்வியடைந்ததாலும் Real Madrid ஐ விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று Barcelona தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. Barcelona வின் L.Messi 14 கோள்களுடன் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்திலும் D .Villa 12 கோல்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர், அனேகமாக இந்த ஆண்டும் Barcelona தொடர்ந்து இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்புள்ளது.


  போர்முலா 1[FORMULA ONE]சென்ற ஆண்டு பரிக்கலோவின் காரிலிருந்து கழன்ற ஒரு காரின் பாகத்தால் நெற்றியில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படவிருந்த உயிராபத்திலிருந்து பிழைத்து தற்போது மீண்டும் பந்தயங்களில் கலந்துகொள்ள வந்திருக்கும் மாஸாவிற்கு சகவீரராக இந்த ஆண்டு பந்தயங்களில் கலந்துகொள்ள இருப்பவர் முன்னாள் 'ரெனால்டின் ' இரண்டுதடவை உலக சாம்பியன் பெர்னாண்டோ அலோன்சோ. இவர் கொஞ்சம் இசகு பிசகான ஆள் என்பதாலோ என்னமோ மாஸா இவரை பற்றி அண்மைக்காலங்களில் புகழ்பாடி வருகிறார், இறுதியாக அவர் "நான் கடந்த மூண்டு ஆண்டுகளில் 'கிம்மி ரைக்கனனுடன்' பேசியதை விட இந்த ஒரு வாரத்தில் அலோன்சோவுடன் நிறைய பேசியுள்ளேன், பல விடயங்களை பற்றி இருவரும் கலந்துரயாடியுள்ளோம் " என்று கூறியுள்ளார்.

மாஸாவிற்கு பெராரியுடன் 5 ஆண்டுகளுக்குமேலாக தொடர்பிருந்தாலும் அலோன்சோவின் நரித்தனத்திற்கு முனனால் அவை செல்லாது என்பது மாஸாவிற்கு தெரிந்திருக்கும் போல...

டென்னிஸ் [TENNIS]இந்த ஆண்டிற்கான முதலாவது கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகள் நாளை ஆரம்பமாகிறது. Rafael Nadal தனது முதலாவது போட்டியில் P . Luczak ஐ சந்திக்கிறார், அதே போல நாளை மறுதினம் முதல்த்தர வீரர் roger federar மோதவிருப்பது Lgor Andreev உடன். மூன்றாம் சுற்றுவரை பெரிதாக சவால்கள் இல்லாவிட்டாலும் நான்காம் சுற்றில் federer கடந்த இரண்டு தொடர்களிலும் தன்னை வீழ்த்திய Nikolay Davydenko வையும் , நடால் ஸ்காட்லாந்தின் Andy Murray யையும் சந்திக்கவேண்டியிருக்கும், நான்காம் சுற்றில் வரும் கண்டங்களை தாண்டினால்தான் கிண்ணத்தை பற்றி சிந்திக்கவே முடியும். இந்த ஆண்டு கிண்ணத்தை இந்த இருவரில் ஒருவரா அல்லது வேறொருவரா கைப்பற்றபோவதென்று பார்க்க இன்னமும் 13 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
கோல்ப் [Golf]உலகின் முதல்தர Golf வீரரும் வரலாற்றின் தலைசிறந்த வீரருமான Tiger Woods அண்மைகாலங்களில் கசமுசா பிரச்சினைகள் மற்றும் கார் விபத்து போன்றவற்றால் ஊடகங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர், இப்போது அவரதுநிலை என்னவென்று தெரியாததால் அவரது சொந்த இணையத்தளத்திற்கு சென்றால் அங்கு 2010 ஆம் ஆண்டுக்கான அட்டவணையே இல்லை. சிறிதுகாலம் போட்டிகளில் பங்கேற்கமாட்டேன் என்று Woods கூறியிருந்ததனால் எதிர்வரும் சித்திரை மாதம் ஆரம்பமாகும் வருடத்தின் முதலாவது கிராண்ட்சிலாம் போட்டியான The Masters போட்டிகளில் பங்குபற்றுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இப்போ Woods எங்கிருக்கிறார், அவரது மனநிலை என்னவென்பது போன்ற கேள்விகள் அவருக்கே வெளிச்சம்.

4 வாசகர் எண்ணங்கள்:

ஜீவன்பென்னி said...

நல்ல தொகுப்பு.

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்ல பகிர்வு, தெளிவான படங்கள் இன்னும் அருமை :-)

தாமத பின்னூடத்திற்கு மனிக்கவும், ஓட்டு உடனே போட்டாலும் பின்னூட்டம் போட எனக்கு எப்பவும் கொஞ்சம் நேரம் பிடிக்கும், நம் வேலை அப்படி :-)

Yoganathan.N said...

//அனேகமாக இந்த ஆண்டும் Barcelona தொடர்ந்து இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்புள்ளது. //

இது மட்டும் நடந்தால், உங்களுக்கு திருப்பதியில் மொட்டை போடுவதாக வேண்டிக் கொள்ளப் போகிறேன்... ஹி ஹி ஹி...

பி.கு மெஸ்ஸி இந்த ஆட்டதில் தனது 100-ஆவது கோலை அடித்துள்ளார். பார்சிலோனா அனியில் மிக குறைந்த வயதில் 100 கோல்கள் அடித்து இவர் புதியதோர் சாதனை செய்துள்ளார்... :)

அ.ஜீவதர்ஷன் said...

ஜீவன்பென்னி

//நல்ல தொகுப்பு.//

நன்றி

........................................

சிங்கக்குட்டி

//ரொம்ப நல்ல பகிர்வு, தெளிவான படங்கள் இன்னும் அருமை :-) //

நன்றி

//தாமத பின்னூடத்திற்கு மனிக்கவும், ஓட்டு உடனே போட்டாலும் பின்னூட்டம் போட எனக்கு எப்பவும் கொஞ்சம் நேரம் பிடிக்கும், நம் வேலை அப்படி :-)//

பரவாயில்லை வேலைதானே முக்கியம்.

....................................

Yoganathan.

//இது மட்டும் நடந்தால், உங்களுக்கு திருப்பதியில் மொட்டை போடுவதாக வேண்டிக் கொள்ளப் போகிறேன்... ஹி ஹி ஹி...//

அப்புறம் நான் மொட்ட பாஸ் ஆயிடுவேனே... ஹி ஹி ஹி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)