Wednesday, December 16, 2009

வேட்டைக்காரன் vs மாதவி

இப்பவெல்லாம் சன்டிவியை சிறிது நேரம்கூட பார்க்க முடிவதில்லை .ஐந்து நிமிடத்துக்கொருதடவை வேட்டைக்காரன் ட்ரெயிலரை திரும்பத்திரும்ப போட்டு உயிரை வாங்குறானுங்க. ஒரு நாலு ட்ரெயிலரை மாத்தி மாத்தி ஒருநாளுக்கு 100 தடவைக்குமேல போடுறானுங்க. யாரோ ஒருத்தன் காசு போடா, யாரோ ஒருத்தன் இயக்க, பல நடிகர்களும் பல தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து தயாரித்த ஒரு படத்தை கொஞ்சம்கூட வெக்கமில்லாமல் 'சண் பிக்சர்ஸ் தயாநிதி மாறன் வழங்கும் ' என்று போடுரானுன்களே இவனுகளை என்னென்று சொல்வது? வேட்டைக்காரன் ட்ரெயிலர் கொடுமையை தாங்கமுடியல என்றால் இப்ப 'மாதவி' ட்ரெயிலர் புதுசா போடா ஆரம்பிச்சிருக்கிறாங்க. இது நம்ம 'கோலங்கள்' புகழ் 'சின்னத்திரை பேரரசு' திருச்செல்வம் இயக்கும் புதியதொடர். வேட்டைக்காரனுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் மாதவியோட ட்ரெயிலரும் அப்பப்ப போட்டுக்கிட்டே இருப்பானுங்க. அரை மணி நேரத்தில 15 நிமிடம் இந்த ரெண்டுக்குமே போய்விடும். இந்த வாரம் வேட்டைக்காரனை பெரியதிரையிலும் அடுத்தவாரம் மாதவியை சின்னத்திரையிலும் வெளியிடவிருக்கும் சண் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு இரண்டு ட்ரெயிலர் களையும் மட்டும் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இரண்டு ட்ரெயிலர்களையும் பார்த்தால் தமிழ் ரசிகர்களின் ரசனையை மீண்டும் 80 களின் ஆரம்பங்களுக்கே கொண்டு செல்ல அயராது பாடுபட்டிருக்கிரார்கள் என்று தெளிவாக தெரிகிறது. வேட்டைக்காரன் நல்லதோ கெட்டதோ ஒரு மாசத்தோட எல்லாமே முடிந்துவிடும்,ஆனால் மாதவி இன்னமும் எத்தனை ஆண்டுகள் எம்மை வதைக்கப்போகின்றாளோ ? கிசு கிசு -: வேட்டைக்காரனுக்கு பயந்து வீட்டுக்குள் ஒளிபவர்களை மிரட்டுவதற்காகவே மாதவியை அவசர அவசரமாக ஒளிபரப்ப போவதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. எச்சரிக்கை -: விஜய் ரசிகர்கள் தவிர்ந்தவர்கள் மூன்று வாரங்களுக்கு சண் டிவி பக்கம் போய்விடாதீர்கள், அப்படி போனால் உங்களது பிரஷர் அதிகமாகி கோமாவிற்கு செல்லும் நிலைகூட ஏற்ப்படலாம்.

11 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

தங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தன. ஆனால் இப்போது அதிகம் விஜய் எதிர்ப்புக்கொள்கையை காட்டுகின்றீர்கள். இது ஏனோ? வேண்டாமே எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது. அப்படி பட்ட ஒரு அடுத்த தலைமுறை நாயகனை கீழ்மைப்படுத்தி உங்கள் பதிவுகள் எதற்கு? நீங்கள் எப்படி ரஜினி ரசிகனோ அதேபோல விஜய்க்கும் ரசிகர்கள் உண்டு. நீங்கள் விஜயை தாழ்த்துவதால் விஜய் தளப்போவதும் இல்லை வேறு ஒன்றும் நடக்கப்போவதுமில்லை. உங்களின் அடுத்த அடுத்த தாக்குதல்களை தொடர்ந்து உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகன் என்ற ரீதியில் என் அன்புக்கோரிக்கை இது. இப்படியான வேலைகளால் உங்கள் பதிவின் தரத்தை தால்த்திவிடாதீர்கள்.

KASBABY said...

இதை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும்..

பாலா said...

பாவங்க இந்தியாவுல இருக்கறவங்க. அதிலும் சன் டிவி கனெக்‌ஷன் இருக்கறவங்க. :( :( :(

Yoganathan.N said...

//அரை மணி நேரத்தில 15 நிமிடம் இந்த ரெண்டுக்குமே போய்விடும்.//

lol

P.S நீங்கள் இந்த சின்னத்திரை எல்லாம் பார்ப்பது உண்டா???

ஸ்ரீநி said...

தல ....
அவுங்க trailerருக்கு தனி சேனல் ஆரம்பிக்கிறாங்கலாம் . . . . . . .

அது சன் டிறேச்ட்ல ப்ரீயா வரும் ஹஹா ஹ ஹ எ
எப்பூடி. . . . . . . .

Unknown said...

ha ha..,

அ.ஜீவதர்ஷன் said...

SShathiesh

//தங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தன. ஆனால் இப்போது அதிகம் விஜய் எதிர்ப்புக்கொள்கையை காட்டுகின்றீர்கள். இது ஏனோ?//

சீடியசான பதிவுகளுக்கு இடையில் காமடி பதிவுகளும் தேவைதானே ?

//எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது.//

நீங்கள் விஜ ரசிகர் என்பதால் இப்படி கூறுகிறீர்கள்,இதை விஜய் ரசிகர்கள் மட்டும்தான் ஒத்துக்கொள்வார்கள், வேறு யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

//விஜய்க்கும் ரசிகர்கள் உண்டு. நீங்கள் விஜயை தாழ்த்துவதால் விஜய் தளப்போவதும் இல்லை வேறு ஒன்றும் நடக்கப்போவதுமில்லை. //

எல்லோரும் தமக்கு பிடிக்காதவர்களை ஏதாவதொரு வகையில் சீண்டி அற்ப சந்தோஷமடைகிறவர்கள்.இதில் நீங்கள்,நான் எல்லோரும் உள்ளடங்குவோம். இது ஒவ்வொருவரும் உணரவேண்டியது, அனால் நான் மட்டும் உணர்ந்து என்ன செய்வது? இருந்தாலும் விஜய் சம்பந்தமான பதிவுகளை இனிவரும் காலங்களில் குறைக்கலாமேன்று முடிவெடுத்துள்ளேன் ,இதற்கு விஜயும் இடம்தந்தால் நல்லது

அ.ஜீவதர்ஷன் said...

kasbaby

//இதை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும்..//

நல்லவேளை சர்வதேசத்திற்கு போகாமல் தேசியத்தோடு நின்றுவிட்டது.

..................................

ஹாலிவுட் பாலா

//பாவங்க இந்தியாவுல இருக்கறவங்க. அதிலும் சன் டிவி கனெக்‌ஷன் இருக்கறவங்க. :( :( :(//

i am பாவம், எங்கள் வீட்டிலும் இந்தக்கொடுமை உள்ளது

..................................
ஸ்ரீநி

//தல ....
அவுங்க trailerருக்கு தனி சேனல் ஆரம்பிக்கிறாங்கலாம் . . . . . . . //

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழ்கையை ஓட்டுபவர்கள் தானே செய்தாலும் செய்வார்கள்

................................

பேநா மூடி

//ha ha..,//


எங்கள் வேதனை உங்களுக்கு சிரிப்பாக இருக்கா?


........................

Yoganathan.N

//P.S நீங்கள் இந்த சின்னத்திரை எல்லாம் பார்ப்பது உண்டா???//


ஒரு ஐந்து ஆறு பெரிசுங்க இரவு எழு மணிக்கு ஆரம்பிச்சுதுகள் என்றால் 10 .30 க்குத்தான் முடியும் இந்த சீரியல் கொடுமை. அதில பாதிக்கு காது கேட்காது நல்லா சத்தம் வச்சு பார்ப்பார்கள், வீட்டில் எந்த மூலையில் நின்றாலும் எங்களால் தப்பிக்க முடியாது

அப்பாவி தமிழன் said...

//எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது.//
காமெடின்னா இதான் காமெடி ..........விவேக் , வடிவேல் நீங்க தோத்திங்க போங்க

////தங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தன. ஆனால் இப்போது அதிகம் விஜய் எதிர்ப்புக்கொள்கையை காட்டுகின்றீர்கள். இது ஏனோ? வேண்டாமே////

அட என்ன சார் நீங்க இவர் மட்டுமா எதிர்ப்பு காட்றார் மொத உலகமே விஜய் மேல கொலவெறில இருக்கு

///விஜய் சம்பந்தமான பதிவுகளை இனிவரும் காலங்களில் குறைக்கலாமேன்று முடிவெடுத்துள்ளேன்///
நீங்க விஜய் பத்தி எழுதலைனா நாங்க போராட்டம் பண்ணுவோம் , இது மாதிரி நீங்க இன்னும் நெறைய எழுதணும் அத பாத்து நாங்க சந்தோசப் படனும்

Anonymous said...

SShathiesh
//வேண்டாமே எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது. அப்படி பட்ட ஒரு அடுத்த தலைமுறை நாயகனை கீழ்மைப்படுத்தி உங்கள் பதிவுகள் எதற்கு?//

nna.. ennangnna comedy panringa... :) :) :)

அ.ஜீவதர்ஷன் said...

அப்பாவி தமிழன்

//நீங்க விஜய் பத்தி எழுதலைனா நாங்க போராட்டம் பண்ணுவோம் , இது மாதிரி நீங்க இன்னும் நெறைய எழுதணும் அத பாத்து நாங்க சந்தோசப் படனும்//

விஜய் பாவம், எவளவு அடிச்சாலும் தாங்கிராறு,ஆனா விஜய் ரசிகர்கள் ஓவரா பீல் பண்ணுறாங்க, அதனால அப்பப்போ பதிவு போடலாம், அதற்க்கு விஜயும் ஒத்துக்கொள்ளவண்டும்.
.................................

janani

/nna.. ennangnna comedy panringa... :) :) :)//

இதுக்கு SShathiesh தான் பதில் சொல்லவேண்டும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)