Sunday, December 13, 2009

யுவராஜ் கையில GUN இலங்கை வாயில மண்

டெஸ்ட் தொடரின் படுதோல்வியின் பின்னர் முதலாவது T /20 போட்டியில் இந்தியாவை பழிதீர்த்த இலங்கை அணியை இந்தியா இரண்டாம் போட்டியில் மீண்டும் பழிதீர்த்துள்ளது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய சங்ககாரவே இரண்டாம் போட்டியிலும் இலங்கை சார்பாக சிறப்பாக ஆடினார் இவர் 31 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.207 ஓட்டங்கள் என்பது இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதாரண இலக்கல்ல.எங்கே இலங்கை டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடியாக T/20 தொடரை கைப்பற்றப் போகிறதோ என்று நினைத்திருக்கையில் ஷேவாக் (64 * 36), தோனி (46 * 28), யுவராஜ்(60 * 25) அதிரடியால் ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா ஆறு விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. ஆட்டனாயகனான யுவராஜ் சிங் தனது 28 ஆவது பிறந்தாநாளிலே ரசிகர்களுக்கு கொடுத்த விருந்தாக அவரது அதிரடி ஆட்டம் அமைந்தது. ஐந்து சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் தன்னை மீண்டுமொருதடவை T/20 சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.(சூப்பர் ஸ்டார் பிறந்ததினத்தில் பிறந்ததால்தான் இந்த சூப்பர்பவரோ?) முதலாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் 15 ஆம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான முன்னோட்டத்தை விரைவில் எதிர்பாருங்கள்.....

2 வாசகர் எண்ணங்கள்:

Siva said...

".(சூப்பர் ஸ்டார் பிறந்ததினத்தில் பிறந்ததால்தான் இந்த சூப்பர்பவரோ?) "
எப்படிண்ணே உங்களால இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.

எப்பூடி ... said...

Siva

//எப்படிண்ணே உங்களால இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.//

அதுவா ஒரு புலோவில வருது ):

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)