Saturday, December 19, 2009

ஈ கலைக்கும் எக்ஸ்போ எயார் (Expo Air)

11 - 8 -2006 அன்று A-9 பாதை பூட்டப்பட்ட பின்னர் அதிகமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களில் முதலிடம் எக்ஸ்போ எயார் (Expo Air ) தனியார் விமான நிறுவனத்துக்குத்தான். இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நெஞ்சமில்லை. மக்கள் பணத்தை வெட்ட வெளிச்சமாக கொள்ளையடித்த இந்த விமான நிறுவனத்தினர் இன்று ஈ கலைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் . ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கொழும்பு - பலாலி விமானசேவை இடம்பெற்று வந்தது , ஒரு வழிப்பயணத்திற்கு 10,000 ரூபா அறவிடப்பட்டது. ஒரு தடவை விமானத்தில் குறைந்தது 55 பயணிகள் பயணம் செய்யலாம். ஒரு நாளைக்கு சராசரியாக 165 பேர் ஒருவழியாக பயணிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு குறைந்தது 1000 - 2000 பேர்வரை அவசியமாக பயணம் செய்யவேண்டிய நிலை இருந்தது. கப்பல் போக்குவரத்து வாரம் இருதடவை காங்கேசன்துறை- திருகோணமலைக்கு இடம் பெற்றது. இதன் மூலம் வாரம் ஆயிரம் பயணிகள் பயணிக்க முடிந்தது, இருந்தும் இந்தப் பயணத்திற்கு 2 முழு நாட்கள் தேவைப்பட்டது, கப்பல் பயணம் மிகவும் கடினமான பயணமாக இருந்தது. முடிந்த வரை மக்கள் கப்பலில் சென்றாலும் 20 % ஆனா மக்களே கப்பலில் பயணம் செய்யமுடிந்தது. மிகுதி மக்கள் எக்ஸ்போ எயாரை நாடவேண்டி இருந்தது, இவர்களுக்கு போட்டியாக சிறுது காலம் ஓடிய லயன் எயார் விமானம் எதோ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது(பலதடவை ஓட ஆரம்பிக்கும் லயன் எயார் சிறுது காலங்களிலேயே நிறுத்தப்பட்டு விடும்). இதனால் எக்ஸ்போ எயார்தான் தனிக்காட்டுராஜா. அவசர தேவைகளுக்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணமோ , அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்போ செல்லவேண்டி இருந்த மக்கள் விமான டிக்கற் எடுப்பது முடியாத காரியம். இராணுவத்திடம் படாத பாடுபட்டு போக்குவரத்து அனுமதி பெற்ற ஒருவர் விமான முற்பதிவு செய்தால் அவருக்கு குறைந்தது ஒருமாதத்திற்கு பின்னரே டிக்கட் கிடைக்கும்,இதற்கு மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களையும் இருந்துள்ளது. மரண வீடு ,திருமணம்,வெளிநாட்டு பயணம் என்பவற்றுக்காக அவசரமாக பிரயாணம் செய்ய வேண்டியவர்கள் இவ்வளவு நாட்கள் காத்திருப்பது சாத்தியமில்லை. இதைப்பயன்படுத்திய எக்ஸ்போ நிறுவனம் டிக்கட்டுகளை திரையரங்குகளில் விற்பது போல ப்ளாக்கில் விற்க ஆரம்பித்தது. ஒரு டிக்கட் 50,000 வரைகூடச்சென்றது. வசதியுள்ளவர்கள் அந்தப்பணத்தை கொடுத்து பயணம் செய்தார்கள் . வசதியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியர் முதல் கொண்டு காலில் விழுந்து கூட டிக்கட்டுக்கு கெஞ்சிப்பார்த்தார்கள். பல மரணசடங்குகள் முக்கிய உறவினர்கள் இல்லாமலேயே நடந்துமுடிந்தது. ஆனால் இறுதிவரை அந்த ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கெட் நிறுத்தப்படவே இல்லை. 55 பயணிகள் பயணிக்கும் விமானத்தில் 30 பயணிகளுக்கே பதிந்த ஒழுங்கில் டிக்கெட் வழங்கப்படும் . மிகுதி 25 இடங்களையும் ப்ளாக் டிக்கட்டுகளாகவும் , பொதிகளை அனுப்புவதற்க்குமாக எக்ஸ்போவினர் பயன்படுத்தினர். ஒரு கிலோவிற்கு 300 ரூபா அறவிடப்பட்டது , ஒரு மனிதனின் 70 ௦ கிலோ எடைக்கு கிடைக்கும் 10 ,000 ஐ விட 70 கிலோ பொதிக்கு 11 , 000 ரூபா மேலதிகமாக கிடைக்கும். இதனால் மக்களை விட பொதிகளையே அவர்கள் அதிகம் விரும்பினார்கள் . இந்த விடயங்கள் மேலிடங்கள் வரை சென்றாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சரியான போக்குவரத்தின்றி மக்கள் நாயாக அலைந்தனர். ஆனால் எக்ஸ்போ நிர்வாகிகளோ ஊழியர்களோ மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்ததால் பாதை திறக்கப்படுமென்று அரசாங்கம் அறிவித்த பின்னரும் பாதை திறக்கப்படவில்லை,இதற்கு எக்ஸ்போவும் முக்கியகாரணம் என்று பலராலும் பேசப்பட்டது. பின்னர் A -9 பாதை திறக்கப்படபின்னரும் சில பாதுகாப்பு நடைமுறைகளுக்காக கொழும்பிலிருந்து செல்பவர்கள் விமானத்திலேயே செல்லவேண்டி இருந்தது. மற்றும் தரை வழிப்பாதை இராணுவத்தினரின் கடுமையான சட்டதிட்டங்களால் கடினமாக இருந்ததன் காரணமாக வயோதிபர்கள், நோயாளிகள் பாதையை பயன்படுத்தவில்லை. இதனால் எக்ஸ்போவில் செல்லும் மக்கள்தொகை குறைந்தாலும் தொடர்ந்தும் கணிசமான அளவு மக்கள் தொடர்ந்தும் பயணித்தனர். ஆனால் தற்போது எந்த வாகனங்களும் A- 9 பாதையால் எந்த நேரங்களிலும் ( பகல் நேரங்களில்) செல்லலாம் என்ற அறிவிப்பு வந்தது முதல் (அறிவிப்பு ஏன் வந்ததென்பது எல்லோருக்கும் தெரிந்ததே ) பிரயாணம் சுலபமாக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக மக்களை நாயை விட கேவலமாக நடத்திவந்த எக்ஸ்போவினர் இப்போது யாருமில்லாமல் ஈ கலைக்கின்றார்கள். ஓரிருவர் எக்ஸ்போ அலுவலகத்திற்கு தற்போதும் செல்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் எடுத்த டிக்கற்றை ரத்து செய்வதற்காக. மக்கள் பணத்தை உறிஞ்சிய எக்ஸ்போ எயார் இப்போது ஈ கலைத்தாலும் முன்னர் அவர்கள் உழைத்ததை வைத்து இப்போது ஒரு விமானமே வாங்கலாம். ஆனாலும் தற்போது மக்கள் இவர்களிடம் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கமாட்டார்கள் என்பது நல்ல விடயமே. எக்ஸ்போவில் யாழ்- கொழும்பு இருவழிப் பயணத்திற்கான குறைந்த தொகை 19 ,000 ரூபா A-9 தரைவழியூடான யாழ்- கொழும்பு இருவழிப் பயணத்திற்கான குறைந்த தொகை 1000ரூபா வித்தியாசம் 18 ,000 ரூபா குறிப்பு இந்தப்பதிவு எக்ஸ்போவினரால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எழுதப்பட்டது , இதனை நாட்டுப் பிரச்சனைகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளாதீர்கள்.

5 வாசகர் எண்ணங்கள்:

அசால்ட் ஆறுமுகம் said...

உண்மை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கொழும்பிலிருந்து கோலலம்புருக்கு (மலேசியா) செல்வதற்கு 3 மாதங்களுக்கு முதல் பதிந்தால் ரிக்கட் விலை ரூபா 15000. யாழிலிருந்து கொழும்பு வருவதை விட 2 மணி நேரம் அதிகம் அவ்வளவு தான்

ஸ்ரீநி said...

ப்ரோயோஜனமான பதிவு. . . . தோழர் . . . நன்றிகள்

அ.ஜீவதர்ஷன் said...

அசால்ட் ஆறுமுகம்

//உண்மை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கொழும்பிலிருந்து கோலலம்புருக்கு (மலேசியா) செல்வதற்கு 3 மாதங்களுக்கு முதல் பதிந்தால் ரிக்கட் விலை ரூபா 15000. யாழிலிருந்து கொழும்பு வருவதை விட 2 மணி நேரம் அதிகம் அவ்வளவு தான்//

இங்கு விமான பயணம் ஒரு மணி நேரம் தான். ஆனால் காலை 3.30 மணிக்கு வெளிக்கிட்டால் மதியம் ஒரு மணிக்குதான் வீடு போய் சேரமுடியும்

.................................

ஸ்ரீநி

//ப்ரோயோஜனமான பதிவு. . . . தோழர் . . . நன்றிகள்//

நன்றி

ஞானப்பழம் said...

A-9 பாதை மீண்டும் திறக்கப்படுவதாக இலங்கை அரசின் அறிவிப்பை பத்திரிகையில் படித்தேன்.. ஆனால் அந்த A-9 பாதை மூலமாக இவ்வளவு கோல்மால் நடக்கிறது என்பது இப்பதான் புரியுது... பத்திரிக்கையில் படிக்கும்போது "இதில் என்ன பிரமாதம்"ன்னு நினச்சேன்... இலங்கையில் வாழ்ந்தாத்தான் அங்கே வாழும் மக்கள் நடைமுறையில் அனுபவிக்கும் கட்டங்கள் புரியும் என்பது சரியாகத்தான் உள்ளது...

///மரண வீடு ,திருமணம்,வெளிநாட்டு பயணம் என்பவற்றுக்காக அவசரமாக பிரயாணம் செய்ய வேண்டியவர்கள் இவ்வளவு நாட்கள் காத்திருப்பது சாத்தியமில்லை. இதைப்பயன்படுத்திய எக்ஸ்போ நிறுவனம் டிக்கட்டுகளை திரையரங்குகளில் விற்பது போல ப்ளாக்கில் விற்க ஆரம்பித்தது. ஒரு டிக்கட் 50,000 வரைகூடச்சென்றது. வசதியுள்ளவர்கள் அந்தப்பணத்தை கொடுத்து பயணம் செய்தார்கள் . வசதியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியர் முதல் கொண்டு காலில் விழுந்து கூட டிக்கட்டுக்கு கெஞ்சிப்பார்த்தார்கள். பல மரணசடங்குகள் முக்கிய உறவினர்கள் இல்லாமலேயே நடந்துமுடிந்தது.///

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்


//பத்திரிக்கையில் படிக்கும்போது "இதில் என்ன பிரமாதம்"ன்னு நினச்சேன்... இலங்கையில் வாழ்ந்தாத்தான் அங்கே வாழும் மக்கள் நடைமுறையில் அனுபவிக்கும் கட்டங்கள் புரியும் என்பது சரியாகத்தான் உள்ளது...//

இது மாதிரி இன்னமும் நிறையவே இங்கு கோல்மால்கள் உண்டு .........

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)