Saturday, December 12, 2009

வேட்டைக்காரன் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனங்கள்

விஜயின் வேட்டைக்காரன் வருகிற வாரம் ரிலீசாக உள்ள நிலையில் விஜய் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட காங்கிரசுடன் பேச்சுவார்த்தை வைத்து கொண்டதற்காகவும், விஜய் அன்டனி இலங்கை ராணுவத்துக்கு வன்னிப்போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியார்ரியதர்காகவும் வேட்டைக்காரனை புலம் பெயர்த்த மக்கள் புறக்கணிக்க போவதாக இணையங்களில் அதிகளவில் செய்திகள் வெளியாகிவருகிறது. விஜயை எனக்கு பிடிக்காதென்று எனது முன்னைய பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு புரியும், ஆனால் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை, ஈழத்தின் பெயரை வைத்து தனிமனித எதிர்ப்பை காட்டுவது மகாகேவலம். நிச்சயமாக இது விஜயை பிடிக்காத ஒரு கூட்டம் செய்யும்சதி. விஜய் காங்கிரசுடன் தொடர்பு வைக்க முயற்சித்ததுதான் வேட்டைக்காரன் மீதான எதிர்ப்புக்கு காரணமென்றால் 1 )காங்கிரசுடன் மத்தியிலும்,மாநிலத்திலும் தொடர்பு வைத்திருக்கும் கருணாநிதியின் குடும்ப தயாரிப்பான ஆதவனை ஏன் புறக்கணிக்கவில்லை? 2 )மத்திய அமைச்சரவையில் இருக்கும் மாறனின் சண் தொலைக்காட்சி வாங்கிவெளியிட்ட அனைத்து படங்களையும் ஏன் புறக்கணிக்கவில்லை ? 3 )கலைஞர் தொலைக்காட்சியையும்,சண் தொலைக்காட்சியையும் புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் பார்ப்பதில்லையா ? 4 )விஜய் அண்டனியின் இதற்கு முன்னைய படமான நினைத்தாலே இனிக்கும் படத்தை ஏன் புறக்கணிக்கவில்லை? 5 )பாடல்கள் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின்னர்தானா (படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் ) இவர்களுக்கு விஜய் அன்டனி வேட்டைக்காரனுக்கு இசையமைத்துள்ளது தெரியும்? அண்மைக்காலமாகவே ஈழத்தின்பெயரை வைத்து பிழைப்பவர்களும்,சுயலாபம் தேடுபவர்களும் அதிகமாக உருவாகியிருந்தார்கள், இப்போது அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதற்கும் ஈழத்தின் பெயரை பயன்படுத்துகிறார்கள்.தயவு செய்து ஈழத்தின் பெயரால் சுயலாபம் தேடுபவர்களை ஆதரிக்காதீர்கள். நச் -: யுத்தநிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருப்பதாக கூறி சுயலாபத்திற்கு (வில்லு படத்துக்கு) பப்ளிசிட்டி தேடிய விஜய்க்கு இது தேவைதான். கருத்து -: ஒருத்தனை வீழ்த்தணுமின்னா முகத்தில அடிக்கணும்,முதுகில இல்ல. தமாஸ் -: தானாக தோற்கப்போகிற படத்துக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம் ?

23 வாசகர் எண்ணங்கள்:

kumar said...

I agree with all u said....

அ.ஜீவதர்ஷன் said...

kumudan

//I agree with all u said....//

thanks

Admin said...

/* தமாஸ் -: தானாக தோற்கப்போகிற படத்துக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம் ? */

Super comment

அ.ஜீவதர்ஷன் said...

இரா.சுரேஷ் பாபு

//Super comment//

thanks

ஞானப்பழம் said...

enakku vijay pidikkum pidikkadhu ellam orupakkam irukkattum.. aana enakkennamo, vettaikaaran oru alavukkavadhu oodeedumnu thonuthu... villu maadhiri aruga flop aagaathunnu ninaikkiren!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//enakku vijay pidikkum pidikkadhu ellam orupakkam irukkattum.. aana enakkennamo, vettaikaaran oru alavukkavadhu oodeedumnu thonuthu... villu maadhiri aruga flop aagaathunnu ninaikkiren!!//

வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தே டுபாக்கூர் சிவகாசியை ஓடவைத்த சண் டிவி ஒரே அணியில் இருப்பது வேட்டைக்காரனுக்கு மிகப்பெரிய பலம்.

Keddavan said...

நல்ல கட்டுரை இதையும் படிச்சு பாருங்கள்..
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html

யூர்கன் க்ருகியர் said...

well said dear !

அ.ஜீவதர்ஷன் said...

யூர்கன் க்ருகிய
//well said dear !//

thanks for your visit

Tirupurvalu said...

Your command is good.I don't know all blog peoples why to down Vijay.

அ.ஜீவதர்ஷன் said...

Abiramii Fashions

//Your command is good.I don't know all blog peoples why to down Vijay.//

எனக்கு விஜயை பிடிக்கத்துதான். ஆனால் இது அதை வெளிக்காட்டும் முறையல்ல, விஜய் ரசிகர்கள் சிலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வேடிக்கை, ஒட்டு மொத்தமாக எதற்கு எதிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை.

.................

rajeepan

//நல்ல கட்டுரை இதையும் படிச்சு பாருங்கள்..
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html//

nice one

Unknown said...

"கருத்து -: ஒருத்தனை வீழ்த்தணுமின்னா முகத்தில அடிக்கணும்,முதுகில இல்ல" its true, but as you said it is not Vijay's opposition gang, it is another hero's favorite gang. I do not want to say who is that hero. because one of the blogger received lot of negative vote for giving his objective statement. I started reading the Mockeries made on Vijay as fun but at certain point Everyone will understand it is not objective and its a plot. These poeple should realize blogger and blog readers are not stupid

நா.பூ.பெரியார்முத்து said...

தனிப்பட்ட விஜய் - விஜய் ஆண்டனி மீது எங்களுக்கு தனிப்பட்ட வெருப்பு காரனமல்ல அப்படி சொல்வதனால் எஙகளுக்கு எந்த லாபமும் இல்லை, இதற்க்கு முன் விஜய் படங்கள் எத்தனையோ வந்துஇருக்கிறது அதற்க்கு இல்லாத எதிர்ப்பு ஏன் என்று சிந்தியுங்கள் தோழரே, தன்னை தமிழ் பற்றாளன் போல் காண்பித்துக்கொண்டு உள்ளுக்குள் பணத்திற்க்காக இனத்துரோகம் செய்யும், விஜய் மட்டும் அல்ல, துரோகி கருணாநிதியாய் இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்,விஜய் அண்டனியின் இதற்கு முன்னைய படமான நினைத்தாலே இனிக்கும் படத்தில் ராஜ்வீரரத்னே என்பவருடன் இணைந்துபணியாற்ற வில்லயே,இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர்காலத்தில் பாடல்கள் உருவாக்கியவர்தான் இந்த ராஜ்வீரரத்னே

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்குஆதரவளிப்பதாக நாடாகமாடும் புல்லுருவிகளை இனம்காண்பதற்காக.மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில்பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்துபணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியேவேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தைஅனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.

அ.ஜீவதர்ஷன் said...

நா.பூ.பெரியார்முத்து

//காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்குஆதரவளிப்பதாக நாடாகமாடும் புல்லுருவிகளை இனம்காண்பதற்காக.//

நீங்கள் சொல்லுவது காமடியாக இருக்கிறது, தலைகளை எல்லாம் விட்டுவிட்டு வாலின் முடிக்கு எதிர்ப்புக்காட்டுவது சின்னப்புள்ளைதனமாக இருக்கு

நா.பூ.பெரியார்முத்து said...

//"நீங்கள் சொல்லுவது காமடியாக இருக்கிறது, தலைகளை எல்லாம் விட்டுவிட்டு வாலின் முடிக்கு எதிர்ப்புக்காட்டுவது சின்னப்புள்ளைதனமாக இருக்கு"//

நமக்கு தலை வால் என்பதெல்லாம் இல்லை ஒட்டுமொத்த தமிழின துரோகிகள் ஒலிப்புதான், கோழியாய் இருந்தாளும் சரி குஞ்சாய் இருந்தாளும்
"இன்றய குஞ்சு நாளய கோழி" புரியுதா?

அ.ஜீவதர்ஷன் said...

நா.பூ.பெரியார்முத்து

//நமக்கு தலை வால் என்பதெல்லாம் இல்லை ஒட்டுமொத்த தமிழின துரோகிகள் ஒலிப்புதான், கோழியாய் இருந்தாளும் சரி குஞ்சாய் இருந்தாளும்
"இன்றய குஞ்சு நாளய கோழி" புரியுதா?//

சரி முதலில் இன்றைய கோழிகளான கலைஞரையும் அவரது குஞ்சுகளையும் ஒழியுங்கள், அதுக்குப்பிறகு இந்த பிள்ளைப்பூச்சிகளை ஒழிக்கலாம். ஒருவேளை அந்தக் கோழிகள் உங்களுக்கு நல்ல முட்டை தருவதால்,அந்தக் கோழிகளுக்கு எதிராக வளருமோ என்று அஞ்சி இந்த குஞ்சுகளை அளிக்கப் பார்க்கிறீர்களோ? அளிப்பதானால் முதலில் கோழிகளை அளியுங்கள் குஞ்சுகள் தானாக ஒழிந்துவிடும்.

Paarvai said...

People have created facebook group with this content. Eppadi ?????

Paarvai said...

http://www.facebook.com/home.php?#/group.php?gid=148486636015&ref=nf

கொற்றவன் KOTRAVAN said...

இதுவே உம் அம்மாவையும் தங்கையும் மனைவியையும் ஒருத்தன் கெடுத்தும் உம் தந்தையை அவன் கொன்றும் இருந்து அவரை இன்னொருவர் தூக்கி பிடித்து இருந்தால் அந்த இன்னொருவரை தாம் இப்படி தான் தூக்கி பிடிப்பீரோ

அ.ஜீவதர்ஷன் said...

கொற்றவன் KOTRAVAN

//இதுவே உம் அம்மாவையும் தங்கையும் மனைவியையும் ஒருத்தன் கெடுத்தும் உம் தந்தையை அவன் கொன்றும் இருந்து அவரை இன்னொருவர் தூக்கி பிடித்து இருந்தால் அந்த இன்னொருவரை தாம் இப்படி தான் தூக்கி பிடிப்பீரோ//
உங்களது விளக்கமின்மையை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது,கோமாளி மாதிரி பேசாதீர்கள்.ப்லொக்கில் ஈழத்தின் பெயரால் நடக்கும் சுய லாபங்களில் ஒன்றாகவே என்னால் விஜயை எதிர்க்கும் விடயத்தை பார்க்க முடிகிறது, நீங்கள் உண்மையான எதிர்ப்பாளர்கலானால் முதலில் கருணாநிதி, திருமாவளவன், மீது உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் தொலைக்காட்சிகளான சண்,மற்றும் கலைஞரை புறக்கணியுங்கள், அவர்கள் தயாரிக்கும் வேண்டி விற்கும் படங்களை புறக்கணியுங்கள், அவற்றை முதலில் செய்யுங்கள் பின்னர் விஜயை ஈழத்தின் பெயரால் புறக்கணிக்கலாம், நானும் உங்களுக்கு துணையாக வருகிறேன். அதைவிடுத்து உமக்கு மட்டும் தான் ஈழத்தின் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டாம். நான்
இன்னமும் இருப்பது ஈழத்தில் தான், உங்களை விட நாங்கள் அதிகமாக பட்டுள்ளோம். ஆனால் ஈழத்தை வைத்து சுயலாபம் தேடும் உங்களை மாதிரி புல்லுருவிகளை பார்த்தால் முன்பெல்லாம் கோபம்வரும்,இப்பவெல்லாம் சிரிப்பு வருகிறது, ஏன் என்றால் உங்கள் மூளைவளர்ச்சி அவ்வளவுதான்.

Nishaa said...

ரோடிலே நாய் குரைச்சா விஜய் ரசிகர்கள் பேசாம இருக்கணும். அது குரைக்குது எண்டு நாமலும் சேர்ந்து குறைக்க கூடாது..

More comments plz contact me:
nighthawk.nishaa@gmail.com

அ.ஜீவதர்ஷன் said...

Nishaa

//ரோடிலே நாய் குரைச்சா விஜய் ரசிகர்கள் பேசாம இருக்கணும். அது குரைக்குது எண்டு நாமலும் சேர்ந்து குறைக்க கூடாது.. //

முதல்ல விஜயை குரைக்காமல் இருக்க சொல்லுங்கள்.

r.v.saravanan said...

வித்தியசமான பதிவு
பதிவின் கடைசியில் நீங்கள் கொடுத்துள்ள முன்றும் நச்சென்று இருக்கு

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)