Monday, December 28, 2009

வேட்டைகாரனும் போச்சா?யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கும் இளையதளபதி நடித்து (?) கடந்த வாரம் ரிலீசான வேட்டைக்காரன் விஜயின் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளது. சண் டிவியின் உதவியுடன் 93 % ஒப்பினிங்குடன் முதல் மூன்று நாட்களில் வேட்டைக்காரன் 89லட்சம் ரூபாயை சென்னையில் வசூலித்தது. ஆனால் இந்தவாரம் திரைஅரங்குகளில் மக்கள்வரவு 70% ஆக குறைந்துள்ளது, மற்றும் இந்தவார இறுதி வசூல் 59 லட்சத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

விஜயின் அண்மைய படங்களில் இரண்டாவது வாரத்தில் 70% இற்கு மக்கள்வருகை குறைவடைந்தது வேட்டைக்காரனுக்கேயாகும். வில்லு, குருவி என்பன இரண்டாம் வாரத்தில் 80% மக்கள் வருகையை கொண்டிருந்தன,பின்னரே படிப்படியாக வீழ்ச்சியடைந்தன.ஆனால் வேட்டைக்காரன் ஒரேயடியாக 70% இற்கு வீழ்ச்சியடைந்தது மிகப்பெரும் பின்னடைவே. இந்த இரண்டு வாரங்களில் மொத்தவசூல் 2 கோடி 10 லட்சம், இது கந்தசாமி ,ஆதவன் என்பன இரண்டாம் வாரத்தில் வசூலித்ததிலும் பார்க்க குறைவான தொகை.

சண் நெட்வோர்க்கால் கூட விஜயை காப்பாற்ற முடியவில்லை. வழமையாக ஒரு நடிகனின் படத்தை அவனது வெறிப்படத்துடன்தான் ஒப்பிடுவார்கள்,விஜயின் முன்னைய படங்களையும் அவ்வாறே கில்லியுடன் ஒப்பிட்டார்கள்.ஆனால் இன்று வேட்டைக்காரன் எப்படி என்று ஒருவரிடம் கேட்டால் 'கில்லி' அளவுக்கு இல்லை என்றுகூட யாரும் கூறுவதில்லை , மாறாக குருவியை விட பரவாயில்லை என்றுதான் கூறுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது விஜய் தனது படங்களை எந்தத்தரத்தில் கொடுக்கிறார் என்று.பின்னர் எப்படி படம் வெற்றியடையும்? எங்கே இரண்டு நாள் கேப் கொடுத்தால் ஊடகங்கள் படத்தை தோல்வி என்று கூறிவிடுவார்களோ என்று அஞ்சி அடுத்தநாளே படம் வெற்றி என்று அறிவித்து விட்டார் நம்ம தலைவலி,சாரி தளபதி.முழுப்பூசனிக்காயை எப்படி சோற்றில் மறைக்க முடியும்?

ஆனால் நம்ம தளபதி சற்றும் சலனமிலாமல் அடுத்த படத்தையும் இதேபோல மொக்கை படமாக கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அடுத்தநாளே வெற்றி என்று அறிவிப்பார்.

குறிப்பு

நாளைய தினம் வெளியாகும் sify.com இனது box office இல் வேட்டைக்காரனை வெற்றி அடைந்ததாக குறிப்பிடுவார்கள். இவர்கள் சண் நெட் வேர்க்கின் பிரச்சார பீரங்கிகள், இவர்களது box office இல் அனைத்து சண் நெட் வேர்க்கின் படங்களும் ஹிட் ஆனவையே.

6 வாசகர் எண்ணங்கள்:

Paarvai said...

You have told the truth, but expecting comments from stomach burning people. your Blog is became one of my regular surfing. Thanks keep rocking.

அ.ஜீவதர்ஷன் said...

velanaiTamilan

//You have told the truth, but expecting comments from stomach burning people. your Blog is became one of my regular surfing. Thanks keep rocking.//

thanks, எந்தமாதிரி தாக்குகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

ஞானப்பழம் said...

expecting comments from stomach burning people///// வைத்தேரிச்சல்க்காரர்கள் எல்லாம் எப்பவோ மௌனம் அடைந்துவிட்டனர்.. எனக்குத் தெரிந்து பல முன்னால் விஜய் ரசிகர்கள் இன்று அவர்க்கு அவ்வளவு ஆதரவு அளிப்பதில்லை!! மூளை கொஞ்சமாச்சு செயல்பட்டால் அவன் விஜயை ஒரு நடிகனாகவே ஏற்றுக்கொள்ள மாட்டான்..

Yoganathan.N said...

//குறிப்பு

நாளைய தினம் வெளியாகும் sify.com இனது box office இல் வேட்டைக்காரனை வெற்றி அடைந்ததாக குறிப்பிடுவார்கள். இவர்கள் சண் நெட் வேர்க்கின் பிரச்சார பீரங்கிகள், இவர்களது box office இல் அனைத்து சண் நெட் வேர்க்கின் படங்களும் ஹிட் ஆனவையே. //

ம்ம்ம்... பார்ப்போம். இவர்கள் என்ன தான் ஹிட் என்று கூவினாலும், சக நடிகர்களின் படங்கள் பெற்ற ஒட்டுமொத்த வசூலிடம் ஒப்பிட்டோமானால், உண்மை புலப்பட்டுவிடும்...
ஆனால், அதெல்லாம் ஒரு விடயமே இல்லை, 'Hit is a Hit' என்று மார்தட்டி பேசுவார்கள்... :P

ஸ்ரீநி said...

yes sir

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//எனக்குத் தெரிந்து பல முன்னால் விஜய் ரசிகர்கள் இன்று அவர்க்கு அவ்வளவு ஆதரவு அளிப்பதில்லை!! மூளை கொஞ்சமாச்சு செயல்பட்டால் அவன் விஜயை ஒரு நடிகனாகவே ஏற்றுக்கொள்ள மாட்டான்.//

எல்லாமே மாறும்
.........................................

Yoganathan.N

//ம்ம்ம்... பார்ப்போம். இவர்கள் என்ன தான் ஹிட் என்று கூவினாலும், சக நடிகர்களின் படங்கள் பெற்ற ஒட்டுமொத்த வசூலிடம் ஒப்பிட்டோமானால், உண்மை புலப்பட்டுவிடும்...
ஆனால், அதெல்லாம் ஒரு விடயமே இல்லை, 'Hit is a Hit' என்று மார்தட்டி பேசுவார்கள்... :P//

எத்தனை நாட்களுக்கு வெறுவாய் சப்புவார்கள்?

....................................

ஸ்ரீநி

//yes sir//

thanks sir

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)