Monday, December 28, 2009

எப்பூடி.... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல்.


 

கிரிக்கெட் 
 இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐந்தாம் போட்டி ஆடுகளத்தின் ஏற்ற இறக்க எகிறல்கள் காரணமாக கைவிடப்பட்டது. இது இலங்கை இந்தியாவில் விளையாடும் போது ஆடுகளங்களின் சீரின்மையால் கைவிடபட்ட இரண்டாவது போட்டியாகும். இதற்கு முன்னர் 1997 ஆம் ஆண்டு இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றது. பின்னர் அன்றையதினம் மிதவேக மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டும் பந்துவீச கண்காட்சிப்போட்டியாக ஒரு போட்டி இடம் பெற்றது. அதே போல் இன்றும் ஒரு போட்டி இடம்பெறும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஆடுகளத்தை தயார் செய்த உறுப்பினர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னைய கொல்கத்தா ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் வீரத் கோளியுடன் இணைந்து அண்மைக்கால இந்தியாவின் சூப்பர் ஸ்டார் கவுதம் கம்பீர் பெற்ற இணைப்பாட்டம் மூலம் முன்னதாக தரங்காவின் உதவியுடன் இலங்கை பெற்ற கொல்கத்தா மைதானத்தின் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி அடித்து போட்டியையும் தொடரையும் வென்றது இந்தியா. 3 :1 என்ற ரீதியிலே இந்தியா இந்தப் போட்டித் தொடரை வென்றது. எதிர்வரும் நான்காம் திகதி இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் பங்குகொள்ளும் முக்கோண ஒருநாள் தொடர் பங்களாதேஷில் இடம்பெற உள்ளது.ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு முறையே பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுடன் boxing day யான மார்கழி 26 அன்று தொடங்கிய டெஸ்ட் போட்டிகளில் எந்த சதங்களும் பெறப்படவில்லை. boxing day யில் பெறப்படும் சதம் கிறிஸ்தவ நாடுகளில் சிறப்பாக கருதப்படும். சைமன் கட்டிச் 98 , ஓட்டங்களையும் , வொட்சன் 93 ஓட்டங்களையும், கலிசும் ஸ்மித்தும் தலா 75 ஓட்டங்களும் பெற்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கிந்த்ய தீவுகளுடனான போட்டித்தொடர் ஆரம்பம் முதல் பாகிஸ்தானுடனான முதல் இனிங்க்ஸ் வரை 20 அரைச்சதங்களை பெற்றாலும் ஒரு சதமேனும் பெறவில்லை. கட்டிச் அதிக பட்சமாக 99 ,98 ஓட்டங்களை பெற்றுள்ளார். இரண்டு போட்டிகளின் முடிவுகளும் அடுத்த ஸ்போர்ட்ஸ் ஸபெஷலில் தரப்படும்.

------------------------------------------------------------------------------------------------------------

 

புட் பால்
 இங்கிலாந்தின் premier league போட்டிகளில் நேற்றையதினம் இடம்பெற்ற முக்கிய ஆட்டமான ஆர்சனலுக்கும் அஸ்டன் வில்லாவுக்கும் இடையிலான போட்டியில் ஆர்சனல் அணித்தலைவர் Fabregas அடித்த இரட்டை goal கள் மூலம் 3:0 என்ற ரீதியில் போட்டியை வென்ற ஆர்சனல் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பிடித்தது,ஆனால் இன்று ஹல் சிட்டியுடனான் ஆட்டத்தை 3 :1 என்ற ரீதியில் வென்ற மன்சஸ்டர் யுனைற்ரட் அணி இரண்டாமிடத்தை ஆர்சனலிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது.புதன்கிழமை போட்ஸ் மவுத்துடன் இடம்பெறும் போட்டியில் வெல்லும் பட்சத்தில் ஆர்சனல் இரண்டாமிடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.புள்ளிகள் அடிப்படையில் தொடர்ந்தும் செல்ஸி முதலிடத்தில் இருந்து வருகிறது.அதே போல ஸ்பெயினின் ( la ligaa ) league போட்டிகளில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பார்சிலோனா ரியல் மட்ரிட்டை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் இதுவரை இடம் பெற்ற போட்டிகளில் வலன்சியாவின் டேவிட் வில்லா அதிகூடிய goal களை (12) பெற்றுள்ளார். நடந்து முடிந்த ஜூரோ கப் போட்டிகளிலும் அதிகூடிய goal களை பெற்றவர் இவர்தான்.
------------------------------------------------------------------------------------------------------------

 

டென்னிஸ்முன்னாள் பிரெஞ் ஓபன் சாம்பியனும் (2008) செர்பியா நாட்டின் முதலாவது முதல்த்தர வீராங்கனையுமான இவாநோவிக் ( Ivanovic ) கடந்த இரண்டு ஆண்டுகளாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார் . குறிப்பாக இவர் கிராண்ட் சிலாம் போட்டிகளின் நடுவிலே காயம் காரணமாக தொடரை விட்டே வெளியேறி விடுகிறார். இதற்கு காரணம் இவரது உடற்தகுதி, உடற்சக்தி என்பன 2008 ஆம் ஆண்டுக்காலப்பக்தியில் இருந்தது போல தற்போது இல்லை என்பதேயாகும் . இதற்கு முடிவு கட்டுமாற்போல் தற்போது தனது உடற்பயிற்சியாளராக ( fitness trainer ) Damian Prasad என்பவரை நியமித்துள்ளார்.இவர் Australian Institute of Sport tennis program இற்கும் முன்னணி வீரர்களான Nadia Petrova மற்றும் Nicolas Kiefer ஆகியோருக்கும் உடற் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது துணையுடன் இவாநோவிக் ஆஸ்திரேலியன் ஓபெனில் கலக்குவாரா என்று பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------

 

போர்முலா 1பெராரி ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள ஷுமேக்கர் தொடந்தும் தனக்கு அவர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பதின்நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பெராரியுடனான பந்தத்தை முடித்து கொள்ளும் ஷுமேக்கர் இந்த ஆண்டு பெராரிக்கு எதிராக மெர்சிடிசில் களமிறங்குகிறார். இவரது சகவீரராக ஜெர்மனியின் நிக்கல் ரோஸ்பேர்க் மேர்சிடிசின் இரண்டாம் வீரராக பந்தயங்களில் கலந்து கொள்வார், கடந்த ஆண்டு வில்லியம்ஸ் அணிக்காக கலந்து கொண்ட ரோஸ்பேர்க் 34 .5 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை பெற்றிருந்தார்.

5 வாசகர் எண்ணங்கள்:

Yoganathan.N said...

//ஸ்பெயினின் ( la ligaa ) league போட்டிகளில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பார்சிலோனா ரியல் மட்ரிட்டை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது. //

இந்த வருடமும் சாம்பியன் பட்டம் பார்சிலோனாவிற்கே...

நண்பரே - உங்களுக்கு பிடித்த க்லப் & நாடு எது???

மயில்வாகனம் செந்தூரன். said...

எல்லா விளையாட்டுத் தகவல்களையும் தந்திருக்கிறீர்கள்.. நல்லது.. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்... உங்கள் பதிவுகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்...

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//நண்பரே - உங்களுக்கு பிடித்த க்லப் & நாடு எது???//

England - arsenal
spain - barca
Germany - Bayern Munich
National - Germani , France for henry

உங்களுக்கு பிடித்த மீதி அணிகள்?
......................................

மயில்வாகனம் செந்தூரன்.

//எல்லா விளையாட்டுத் தகவல்களையும் தந்திருக்கிறீர்கள்.. நல்லது.. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்... உங்கள் பதிவுகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்...//

நன்றி

Yoganathan.N said...

உங்களுக்கு பிடித்த மீதி அணிகள்?

Spain - Barca (My most favourite. Started liking it for Ronadinho. I still like it without him...)
EPL - Manchester Utd
Serie A - Juventus
German - N/A (Normally, I don't follow)

National - Argentina (for Maradona, Messi, Requlme and the whole team. Hehe), Brazil(for Ronaldinho, Kaka, ROnaldo, and a few others)

பி.கு: நமக்கிடையே ஒரு ஒற்றுமை - பார்சிலோனா. மிகவும் மகிச்சி :D

அ.ஜீவதர்ஷன் said...

//National - Argentina (for Maradona, Messi, Requlme and the whole team. Hehe), Brazil(for Ronaldinho, Kaka, ROnaldo, and a few others)//

இவர்களில் எனக்கு மெசியை மட்டும் பிடிக்காது, இவர் அதிகமாக செல்பிஷ் கேம் ஆடுவது நன்றாக தெரியும்.

மற்றயபடி உங்களுக்கு பிடித்த் அணிகளில் மான் யுனைட்டட் மட்டும் எனக்கு பிடிக்காது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)