Thursday, December 24, 2009

மணியண்ணையும் மாஸ்டர் பிளானும்....இந்த சம்பவங்கள் எத்தனை வீதம் உண்மை என்று தெரியாது, ஆனால் ஒரு உறவினர் சொல்லி சிரித்திருக்கிறோம்.அதனை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்

மணியண்ணை என்பவர் ஒரு சமயோகித புத்தியுள்ள நகைச்சுவை உணர்வுள்ள ஒரு நடுத்தர குடும்பஸ்தர். இவர் ஒரு சிறிய சாப்பாட்டுக்கடை வைத்திருந்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சினை மும்மரம் அடைந்த காலப்பகுதி, அந்தக்காலப்பகுதியில் எதோ ஒரு கலவரம் அவரது கடைக்கு அருகில் இடம்பெற்றுவிட்டது, அதனால் இராணுவ அதிகாரி அழைத்ததாக கூறி ஒரு சாதாரண இராணுவவீரர் மணியண்ணையை அழைத்துப் போக வந்திருக்கிறார். இப்போது போனால் சிக்கல் என்று மணியண்ணைக்கு தெரியும். கமாண்டர் கோபத்தில் இருப்பார் பின்னர் செல்லலாம் என்று ஜோசித்தவர் அழைக்கவந்த இராணுவவீரரிடம் "கடையில நிக்கிற பொடியனை நம்பேலாது எதுக்கும் இருக்கிற சாமான்களை எண்ணிவைத்துவிட்டு வாறன் " என்று கூறினார்.

சரியென்று இராணுவவீரரும் காத்திருந்தார், மணியண்ணை பலகாரங்களை எண்ணத்தொடங்கினார். முதலில் வடை பின்னர் தோசை,இடியப்பம்,பரோட்டா... என இருந்த அனைத்தையும் எண்ணி முடித்துவிட்டார், அவ்வளவு நேரமும் வெறுப்புடன் காத்திருந்த இராணுவ வீரர் ஒருவழியாக மணியண்ணை வரப்போகிறார் என்று நினைக்கும் போது மணியண்ணை அருகிலிருந்த பெரிய வாளியில் இருந்த அவித்த கெளப்பியை (தானியம்) ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒவ்வொன்றாக எண்ணத்தொடங்கினார்....... எப்படி இருந்திருக்கும் அந்த ராணுவவீரருக்கு?

அதேபோல் வேறொருநாள் சில காரணங்களுக்காக ஊர் பதற்றமாக காணப்பட்டது. நண்பனை சந்திப்பதற்காக சென்றிருந்த மணியண்ணையின் மகனும் வேறு சில இளைஞர்களும் பொலிசாரினால் மறித்து தடுத்து வைக்கப்பட்டிருந்தான். இதனைப்பார்த்த பெரியவர் ஒருவர் மணியண்ணையிடம் வந்து விடயத்தை கூறினார். சிறிதுநேரம் ஜோசித்த மணியண்ணை உடனடியாக தனது மகனை தடுத்து வைத்திருந்த இடத்திற்கு சென்றார், அங்கு அவரது மகன் ஒரு மரத்திற்கு கீழே இருத்தி வைக்கப்பட்டிருந்தான்.

திடீரென மரத்திலிருந்து ஒரு தடியை முறித்த மணியண்ணை நேராக மகன் இருக்குமிடத்திற்கு சென்று " உன்னை என்ன வேலைக்கு அனுப்பிவைத்தனான்? நீ இங்க வந்து மரத்துக்கு கீழ சும்மா குந்திக்கொண்டிருக்கிறியா? கெதியா வீட்டுக்கு போ " என்று கூறியபடி கண்மூடித்தனமாக அடிக்க தொடங்கினார். மகனுக்கு விளங்கிவிட்டது, அவனும் கதறியபடி ஓடத்தொடங்கினான். காவலுக்கு நின்ற போலிஸ்காரர்கள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப்போயிருந்தார்.......

3 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

நிஜமாகவே நடந்ததா... நல்லா இருக்கு..,

ஞானப்பழம் said...

நல்ல சிரிப்பூட்டும், சிந்திக்க வைக்கும் மணியண்ணை..... ஆனால் இது உண்மையாய் இருக்க, வாய்ப்புகள் கம்மி... உங்கள் "ஓர்மி" அவ்வளவு லேசுப் பட்டவங்களா? (loosu பட்டவங்கன்னு தெரியும்!! :P)

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//நிஜமாகவே நடந்ததா... நல்லா இருக்கு..,//


இது நடந்ததாக கூறும் காலப்பகுதியில் எனக்கு வயது 1, சொன்னவர் 100 % உண்மை பேசுபவர் இல்லை, ஆனால் காமடியாக இருந்தது.


.....................................

ஞானப்பழம்


//"ஓர்மி" அவ்வளவு லேசுப் பட்டவங்களா? (loosu பட்டவங்கன்னு தெரியும்!! :P)//

நீங்கள் சொல்வது சரி, 1983 களில் அன்றைய இராணுவம் பெரிதாக பலமான ராணுவமாக இருக்கவில்லை.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)