Tuesday, December 22, 2009

சுறா மாபெரும் வெற்றி !இளையதளபதி விஜய் நடிக்கும் ஐம்பதாவது படமான சுறா முன்னைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது . S.P. ராஜ்குமார் இயக்கும் விஜயின் ஐம்பதாவது படமான சுறாவிற்கு மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழகம் முழுவதும் 500 பிரிண்டுகள் போடப்பட்ட முதல் திரைப்படம் சுறா (இதற்கு முன்னர் 800 ,900 பிரிண்டுகள் போடப்பட்ட படங்கள், செல்லாது.....செல்லாது..... ) என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்த ஹீரோவுக்கும் இல்லாத அளவு ஒப்பினிங் சுறாவிற்கு கிடைத்துள்ளது. இதுபற்றி கருத்து கூறிய அபிராமி ராமநாதன் உலக சினிமா வரலாற்றிலேயே படம் ரிலீசாகமலே அனைத்து சாதனைகளையும் முறியடித்த முதல்ப்படம் சுறாதான் என பெருமையாக கூறினார், அது தவிர இனிவரும் காலங்களில் பெயர் வைத்தவுடனேயே விஜய் படங்கள் அனைத்து வசூல்களையும் உடைத்துவிடும் என்றும் திருவாய்மலர்ந்தார்.

வேட்டைக்காரன் ரிலீசாகி அடுத்தநாளே மெகாஹிட் ஆகும் போது சுறா ரிலீசாகாமலேயே ஹிட்டாக கூடாதா என்ன ?

வாழ்க இளையதளபதி , வாழ்க சண் நெற்வேர்க் ...............


வேட்டைக்காரன் விமர்சனம் கீழே 


11 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

நியாயமான கேள்வி!!

ஆனா போட்ட காசை எடுத்தாலே.. அது வெற்றிதான். அதைச் செய்யுமா படம்னு.. நீங்கதான் சொல்லனும்.

எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

Yoganathan.N said...

//வேட்டைக்காரன் ரிலீசாகி அடுத்தநாளே மெகாஹிட் ஆகும் போது சுறா ரிலீசாகாமலேயே ஹிட்டாக கூடாதா என்ன ? //

இதே கேள்வி தான் எனக்கும்... படம் ஹிட் அல்லது ஃலோப் என்பது ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து தானே தெரியும்... படம் ரிலீசாகிய மறு நாளே, மெகாஹிட் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் தோள் தட்டி பேசிக்கொள்கின்றனர்... இது கண்டிப்பாக சாத்தியம் இல்லை.
இதில் பெரிய காமெடி என்னவென்றால், இதனை பற்றி எதாவது கேட்டால், நாம் 'வைத்தெரிச்சல் பார்டிகள்' என்று ஏளனமாக சிரிக்கிறார்கள்...

//வேட்டைக்காரன் விமர்சனம் கீழே //
"A picture worth thousand words" என்கிறார்களே... அது இது தானா... Hehe

Unknown said...

ஹா.., ஹா.., படத்துலையே விமர்சனமா கலக்கல் தான் போங்க..,

ஞானப்பழம் said...

சன் பிக்ச்சர்சுன்னு ஒன்னு இருக்கற வரைக்கும் நல்ல படங்களெல்லாம் ஓடாது... எழுதி வெச்சுக்கோங்கோ...

அ.ஜீவதர்ஷன் said...

ஹாலிவுட் பாலா

//நியாயமான கேள்வி!!

ஆனா போட்ட காசை எடுத்தாலே.. அது வெற்றிதான். அதைச் செய்யுமா படம்னு.. நீங்கதான் சொல்லனும்.

எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.//

சண் படத்தை வாங்கியதால் போட்டகாசை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் போட்ட காசை எடுத்துவிட்டதாகவே சொல்லப்போகிறார்கள், இதற்கு ஆங்கில இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் இவர்களது தொலைக்காட்சி பத்திரிகைகளும் உதவியாக இருக்கும்

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//சன் பிக்ச்சர்சுன்னு ஒன்னு இருக்கற வரைக்கும் நல்ல படங்களெல்லாம் ஓடாது... எழுதி வெச்சுக்கோங்கோ...//

அதே போல் மோசமான படங்கள் ஓடாவிட்டாலும் விளம்பரத்தால் ஓட்டப்படும், பின்னர் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படும்

............................

பேநா மூடி

//ஹா.., ஹா.., படத்துலையே விமர்சனமா கலக்கல் தான் போங்க..,//

நன்றி

...........................

Yoganathan.N

//இதே கேள்வி தான் எனக்கும்... படம் ஹிட் அல்லது ஃலோப் என்பது ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து தானே தெரியும்... படம் ரிலீசாகிய மறு நாளே, மெகாஹிட் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் தோள் தட்டி பேசிக்கொள்கின்றனர்... இது கண்டிப்பாக சாத்தியம் இல்லை.
இதில் பெரிய காமெடி என்னவென்றால், இதனை பற்றி எதாவது கேட்டால், நாம் 'வைத்தெரிச்சல் பார்டிகள்' என்று ஏளனமாக சிரிக்கிறார்கள்...//

சாதரணமாகவே விஜய் படத்தை வெளியிட்டு அடுத்தநாளே வெற்றி என்று அறிவிப்பவர் , கூடவே சண் டிவி அப்படின்னா சொல்லவும் வேண்டுமா?//"A picture worth thousand words" என்கிறார்களே... அது இது தானா... Hehe//

):

Pras said...

டே மானக்கெட்ட நாய எழுதரக்கு எடம் கெடச்ச எழுதுவியா

அ.ஜீவதர்ஷன் said...

Pras

//டே மானக்கெட்ட நாய எழுதரக்கு எடம் கெடச்ச எழுதுவியா//

மானத்தை பற்றி யார் யாரெல்லாம் பேசுகிறதென்ற விவஸ்தையே இல்லாமபோச்சு, கோமாளித்தம்பி முதல்ல உனக்கு பிடிக்காத் கருத்தை ஏற்க்க பழகு அப்புறம் கருத்தை ஏற்க்க பழகு அப்புறம் பின்னூட்டம் போடலாம்.

இடம் கிடச்சா எழுதக் கூடாது என்று ஒரு சட்டமும் இல்லையே....

பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் அவரவர் உரிமை.அதற்கான ஒரு எல்லை உண்டு, நான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் நான் அந்த எல்லையை தாண்டவில்லை. அதை பிடித்திருந்தால் படிப்பா இல்லாவிட்டால் வாயையும், சூ......யும் பொத்திக்கொண்டு போப்பா.

Paarvai said...

PRAS
First of all vijay fans need to know one thing. They should accept the fact by making these types of movies will not satify neutral fans. Vijay had female fans alot and its fading away now days with all his stunts. vijay fans may like the movie just because of the actor. But as a neutral fan I would rate this movie 2/10. 2 just for his dance steps. Its not only actor him self claimed, the movie is mega hit, also his fans are saying its Block Buster of the year. Based on Shredhar Pillai(Chennai Times)Twitter, She said the collection dropped by 40% on 2nd day it self. If anybody writes anything bad about the actor vijay, The claim its either Superstar fans or Ajith fans. Now Surya fans also join the list. Please grow up Vijay fans. Treat the actors as an actors Only on Screen. Don't go beyond that.

Yoganathan.N said...

//If anybody writes anything bad about the actor vijay, The claim its either Superstar fans or Ajith fans.//

உண்மை நன்பரே... சரியாக சொன்னீர்கள்...

r.v.saravanan said...

சுறா ரிலீஸ்க்கு அடுத்த நாள் போட வேண்டிய பதிவை இப்பவே
போட்டுடீங்களே நீங்கள் தீர்க்கதரிசி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)