Sunday, December 20, 2009

எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல்

கிரிக்கெட் இந்திய இலங்கை அணிகளுக்கிடயிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றியுடன் அடுத்த போட்டியை நாளையதினம் சந்திக்க உள்ளனர். இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடிய இலங்கையின் சகலதுரைவீரர் மத்தியூஸ் காயம் காரணமாக அடுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டார். அதே போல இந்தியாவின் டோனி மெதுவாக பந்து வீசியதற்காக அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார், இவருக்கு பதில் சேவாக் இந்தியாவுக்கு தலைமை வகிக்கிறார் .அதேபோல் பன்றிக்காய்ச்சல் அறிகுறி,மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடாத யுவராஜ் இந்தப் போட்டியில் ஆடுவார் என்றே தெரிகிறது. அதே போல் இலங்கையின் மலிங்க காயம் குணமடைந்ததால் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரளி வரிசையில் சனத்தும் இந்தத்தொடரில் காயம் காரணமாகவே விளையாட வில்லையாம்.(நம்புறம் சார்) தென்னாபிரிக்க இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இறுதிநேர விறுவிறுப்பிற்கு பின்னர் சமநிலையில் முடிவடைந்தது. (தென்னாபிரிக்கா 418 , 301/7 இங்கிலாந்து 356 , 228 /9 ). தென்னாபிரிக்கா சார்பில் முதலாவது இனிங்க்சில் கலிஸும் இரண்டாவது இனிங்க்சில் ஆம்லாவும் சதமடித்தனர். இங்கிலாந்து சார்பாக முதலாவது இனிங்க்சில் ஸுவான் 85 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்க்சில் பீற்றர்சன் 81 ஓட்டங்களையும் பெற்றனர். 364 ஓட்டங்களை இறுதி இனிங்க்சில் பெறவேண்டிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 27 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை இழந்து தடுமாறியதாகினும் பின்னர் ஜோடி சேர்ந்த தென்னாபிரிக்க வீரர்களான பீற்றர்சன் , த்ரோத் ஜோடியின் இணைப்பாட்டமும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் தடுப்பாட்டமும் இங்கிலாந்தை சரிவிலிருந்து காப்பாற்றி போட்டியை சமநிலைக்கு இட்டுச்சென்றது. இறுதிப்பந்துவரை கதிரையின் நுனியில் ரசிகர்களை அமரவைத்த இந்த மாதிரியான ஆட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரிசியத்தை மேலும் வலுப்படுத்தும். இறுதிநாளான இன்று 50 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஒரு விக்கட் மாத்திரமே கையிருப்பில் வைத்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி மேலதிகமாக 15 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா தொடரை 2 -0 என கைப்பற்றியது,இந்தத்தொடரில் விசேடம் என்னவென்றால் ஆஸ்திரேலியர்கள் யாரும் சதமடிக்கவில்லை என்பதுதான். ஆஸ்திரேலியா - 520 (கட்டிச் 99 , வொட்சன் 89 , கடின் 88 , ஹசி 82 ) , 150 (பிராவோ 42 / 4) மேற்கிந்திய தீவுகள் - 312 ( கெயில் 102 ) , 323 ( டியோனரையின் 82 ) பாகிஸ்தான் , நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1 -1என சமநிலையில் முடிவடைந்தது. மூன்றாவது போட்டியில் நியூசிலாந்துக்கு வெற்றிவாய்ப்பு இருந்தபோதும் மழை காரணமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இந்தப் போட்டித்தொடரின் சிறப்பம்சம் உமர் அக்மால்தான், வெறும் பத்தொன்பது வயதேயான் உமர் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடியதைப்பார்க்கும் போது பாகிஸ்தான் இனிவரும் காலங்களில் உமரை நம்பித்தான் என்பது தெளிவாக தெரிகிறது. முதல் போட்டியிலேயே சதமடித்த உமர் அக்மல் மேலும் மூன்று அரைச்சதங்களை இந்தத் தொடரில் பெற்றிருந்தார். பாகிஸ்தான் - 213 ( இம்ரான் பராட் 117 ) , 455 ( யுஹான 89 , உமர் அக்மல் 77 ) நியூசிலாந்து - 471 (விட்டோரி 134 , மக்கலம் 89 ,டபி 80) , 90 /௦0 ( வாட்லிங் 60 ) கால்ப்பந்து இங்கிலாந்து முன்னணி இருபது கழகங்களுக்கிடையிலான கால்பந்து போட்டிகளில் (English Premier leauge ) கடந்த இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்ற மஞ்சஸ்டர் யுனைற்ரட் கழகம் இந்த ஆண்டு சாம்பியனாகும் வாய்ப்பு சந்தேகமாகியுள்ளது. இன்று புல்ஹாம் அணியுடன் நடந்த போட்டியில் 3 -௦0 என தோல்வியடைந்த மஞ்சஸ்டர் அணி முதலிடத்திலிருக்கும் செல்ஸி அணியை விட 4 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெளியேற்றம் பின்னடைவை கொடுத்தாலும் மைக்கல் ஓவன் அவரது இடத்தை ஓரளவேனும் சரிக்கட்டியுள்ளார். தவறு முன்வரிசை வீரர்களிடம் இல்லை,வழமையாக சிறப்பாக இருக்கும் இவர்களது தடுப்பு (Back) வீரர்கள் இந்த ஆண்டு சரியான முறையில் சோபிக்காததே இவர்களது பின்னடைவுக்கு காரணம். இவர்களை விட ஒரு போட்டி குறைவாக ஆடியுள்ள ஆர்சனல் அந்தப்போட்டியை வெல்லுமிடத்து மஞ்சஸ்டர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மிகவும் அதிர்ச்சியான விடயம் லிவர்ப்பூலின் வீழ்ச்சி. கடந்த ஐந்து வருடங்களாக முதல் நான்கு இடங்களுக்குள் வந்த லிவர்பூல் இந்த ஆண்டு பின்தங்கி எட்டாவது இடத்திலே உள்ளது. அரைவாசி போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவது மிகக்கடினம், இதனால் இங்கிலாந்து கழகங்களில் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் அணிகள் தெரிவாகும் UEFA போட்டிகளில் அடுத்த ஆண்டு லிவர்பூல் விளையாட முடியாத நிலை ஏற்படலாம், இங்கிலாந்து கழகங்களில் அதிக UEFA கிண்ணங்களை வென்ற அணி லிவபூல் (6) என்பது குறிப்பிடத்தக்கது. டெனிஸ் கடந்த ஆண்டு டெனிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முதல்தர டெனிஸ் வீராங்கனையான பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வருகிறமாதம் ஆரம்பிக்க உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டெனிஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். 7 கிரான்ட்ஸிலாம் போட்டிகளில் வென்றுள்ள ஹெனின் தரவரிசையில் முதலிடத்திலிருந்தபோதே தனது 25 ஆவது வயதில் ஒய்வுபெற்றவர். தற்போது மீண்டும் களம் காண காத்திருக்கும் ஹெனின் பயிற்சிப்போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகிறார். கடந்த ஆண்டு இவரது சகநாட்டு வீராங்கனையான கிம் கிளைஸ்டர் ஒய்வுபெற்ற பின்னர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று அமெரிக்கன் ஓபன் டெனிஸ் பட்டத்தை வென்றது நினைவிருக்கலாம் . போர்முலா 1 ஷூமேக்கர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சூமி மீண்டும் களமிறங்குவது 90 % உறுதியாகிவிட்டது, மெர்சிடிஸ் (சென்ற ஆண்டு பிரவுன்) அணிக்காக பந்தயங்களில் கலந்து கொள்வார் என தெரிகிறது.மெர்சிடிஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பிலுள்ள லூக்கா டி மொண்டேஜிமொலோ என்பவருக்கு தொலைபேசி மூலமாக சூமி தனது வருகையை கூறியபோதும் நேரடியாக் சூமி ஊடகங்களுக்கு தெரிவிக்காததால் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் ஷூமியின் வருகை உறுதிசெய்யப்படலாம்.

6 வாசகர் எண்ணங்கள்:

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் வரலாமே?

ஸ்ரீநி said...

ungal email id kidaikkuma

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீநி சொன்னது…
ungal email id kidaikkuma

mail2eppoodi@gmail.com

shiva said...

Luca di montezmolo is the chief of Ferrari, not Mercedes

அ.ஜீவதர்ஷன் said...

shiva

//Luca di montezmolo is the chief of Ferrari, not Mercedes//

thanks for the correction

Anonymous said...

very nice articles

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)