Monday, December 28, 2009

எப்பூடி ....கோலிவுட் ரவுண்ட் அப்

தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 'குட்டி' படப்பாடல்கள் சென்றவாரம் வெளியிடப்பட்டது.இது இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது படம்.முதல்ப்படமான 'யாரடி நீ மோகினி' பெரும் வெற்றிபெற்றது.அதே போன்று குட்டியும் ஒரு தெலுங்கு ரீமேக்.குடும்பத்துடன் பார்க்ககூடிய ஜனரஞ்சகமான படமாக இது அமையும் என கூறிய ஜவகர் "ஆயிரத்தில் ஒருவன் வேறுவகையான படம் ஆதலால் இரண்டு படங்களுக்கும் போட்டி இருக்காது" என கூறினார்.இவர் செல்வாராகவனின் உதவியாளர் என்பதுடன் இவரின் முதல்ப்படம் செல்வா இயக்கிய தெலுங்குப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுமுன்தினம் சென்சார் பண்ணப்பட்ட குட்டிக்கு யு சர்டிபிகட் வழங்கிய அதிகாரிகள் படம் சிறப்பாக வந்துள்ளதாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து வெற்றிப்படங்களாக வழங்கி கொண்டிருக்கும் தனுஷுக்கு குட்டி இன்னொரு வெற்றிப்படமாகுமா என்பதே அனைவரதும் கேள்வி.பொங்கலுக்கு விடை கிடைத்துவிடும். இந்த வருடத்தின் மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன விக்ரமின் கந்தசாமி விமர்சகர்களால் காய்ச்சி எடுக்கப்பட்டாலும் ஓரளவு வசூலை பெற்றிருந்ததது.ஆனால் தயாரிப்பு செலவு,இரண்டு வருட எதிர்பார்ப்பு என்பவற்றுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக இது ஒரு வெற்றிப்படமல்ல.ஆனால் தோல்விப்படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடும் லேட்டஸ்ட் கோலிவூட் பாரம்பரியத்துக்கு அமைய விக்ரம், ஸ்ரேயா, சுசிகணேசன், தாணு மற்றும் கந்தசாமியின் உருவாக்கத்துக்கு உழைத்தவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.கந்தசாமி தொடக்க விழாவின்போது கந்தசாமி படக்குளுவால் தத்தெடுக்கப்பட்ட கிராமமக்கள் கேடயத்தை வழங்கினார்கள் .தோல்விப்படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவது தாணுவுக்கு ஒன்றும் புதிதல்ல.ஏற்கனவே சச்சினை இருநூறு நாட்கள் ஓட்டி ஜெயா டிவியிடம் வருடத்தின் பெரும் வெற்றி என கேடயம் வாங்கியது நினைவிருக்கலாம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய பீமா,கந்தசாமி தொடர் வீழ்ச்சிகளை தொடர்ந்து மணிரத்னத்தின் ராவணவில் நடித்து முடித்திருக்கும் சீயான் சத்தமில்லாமல் செல்வராகவனின் பெயரிடப்படாத படத்திலும் யாவரும்நலம் புகழ் விக்ரம்குமாரின் இயக்கத்தில் '24'என்ற படத்திலும் நடித்து வருகிறார்.ஒரேநேரத்தில் இரு படங்களிலும் நடிப்பதால் நிச்சயமாக 2010இல் விக்ரமை வெள்ளி திரையில் இருமுறையேனும் காணமுடியும்.அப்படி இரண்டு படங்களும் வெளியாகும் பட்சத்தில் 2003க்கு பின் விக்ரமின் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வருவது முதல்முறை.குருவி,கந்தசாமி வரிசையில் நம்ம ஆதவன் அண்ணாச்சியும்,வேட்டைக்கார அங்கிளும் வெற்றிவிழாவுக்கு தயாராவதாக கேள்வி. யாருப்பா அங்க சட்டுபுட்டென்று மேடைய போடுங்க. அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிவிட்டார் பாலா.சேது, நந்தா,பிதாமகன் என்று ஹாட்ரிக் அடித்த பாலாவுக்கு நான்கடவுள் சிறிய சறுக்கலே.பாலாவுக்கு பெரியஹீரோக்கள் தேவையில்லை.அவர் படத்தில் நடித்த ஹீரோ பெரியஹீரோ ஆகிவிடுவார்.பாலசந்தருக்குப் பின் இரண்டு முன்னணி நாயகர்களை உருவாக்கிய பெருமை பாலாவுக்கே.ஆனால் ஆர்யா விடயத்தில் இது பொய்த்தது என்னமோ உண்மைதான்.விட்டகுறைய தொட்டகுறையினைப் போக்க மீண்டும் ஆர்யாவினை நாயகனாக்கி இருக்கிறார்.கூடவே நம்ம தளபதியும்!அட புரட்சி தளபதி விஷால்.(ஒரு நிமிஷத்தில அப்படியே ஷாக்ஆகி இருப்பிங்களே).நாயகியை தேடி தேடி ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டார்.நம்ம நாட்டாமை பொண்ணு வரலக்ஸ்மிதான் கதாநாயகி.முதல் அறிமுகமே அமர்க்களம்.சீக்கிரம் ஆரம்பித்து சீக்கிரம் முடிக்கணும்னு கண்டிஷனாம் பாலாவுக்கு.சிங்கத்துக்கே கடிவாளம்? பையா பட டிரைலர் இப்போது ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.ஏற்கனவே 'அவன் இவன் இல்லடா யூவண்டா' என்று சொல்லும்படி பாடல்கள் அமர்க்களம்.பருத்திவீரனுக்கு பின் கார்த்தி,யூத் சென்சேஷன் தமன்னா,மாஸ்ஹீரோக்களுடன் சறுக்கினாலும் சாதாஹீரோக்களை மாஸ்ஹீரோவாக மாற்றும் வித்தை தெரிந்த லிங்குசாமி, எல்லாமே டிரைலரில் பிரதிபலிக்கிறது.பாடல்கள் படமாக்கி இருக்கும் விதம் நன்றாக இருப்பதால் டிவீகளில் அடிக்கடி காண்பது உறுதி.ஆயிரத்தில் ஒருவன் முந்தி கொண்டதால் பையா அனேகமாக பெப்ரவரி ரிலீஸ் ஆகலாம்.பருத்திவீரனில் அமீருடன் மனகசப்பு ஏற்பட்டபோது,கார்த்திதான் பருத்திவீரன் என நிரூபிக்க அடுத்த படங்களை வெற்றிப்படங்களாக கொடுக்கவேண்டும் என சிவகுமார்,சூர்யா தரப்பு கங்கணம் கட்டியதாக ஞாபகம்.ஆனால் ஆயிரத்தில் ஒருவனும் பையாவும் செல்வாவினதும் லிங்குசாமியினதும் படமாகவே பார்க்கப்படும்.எனவே கார்த்திக்கு முக்கியமான படம் 'நான் மகான் அல்ல',அட அது தலைவர் பட டைட்டில்,விடுங்கப்பா.

3 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

நல்ல பதிவு...

////கூடவே நம்ம தளபதியும்.அட புரட்சி தளபதி விஷால்.(ஒரு நிமிஷத்தில அப்படியே ஷாக் ஆகி இருப்பிங்களே)////

ஒரு நிமிடம் நானும் ஷாக் ஆயிட்டேன்!! :P

மயில்வாகனம் செந்தூரன். said...

பையா படப் பாடல்கள் சுப்பர்.. அதேபோலத்தான் பவானி படப்பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன.. நல்லதொரு பதிவு ... தொடருங்கள்.. வாழ்த்துக்கள்...

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//நல்ல பதிவு... //

நன்றி.

..........................................

மயில்வாகனம் செந்தூரன்.

//பையா படப் பாடல்கள் சுப்பர்.. அதேபோலத்தான் பவானி படப்பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன.. நல்லதொரு பதிவு ... தொடருங்கள்.. வாழ்த்துக்கள்...//

அமாம் , உங்கள் வருகைக்கு நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)