Tuesday, December 15, 2009

கிரிக்கெட்டின் அழிவுகாலம் ஆரம்பம்

இன்று இந்தியா அதிகமாகன ஓட்டங்களை குவித்தது,இலங்கை அதை துரத்தியது,இறுதியில் தோல்வியடைந்தது இவை அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட மொட்டையான ஆடுகளங்களில் போட்டிகளை நடாத்தி இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை காசு பார்க்கப்போகிறது? இன்று நேற்றல்ல இது பல வருடங்களாக நடக்கும் ஒரு கூத்துத்தான் என்றாலும் தற்போது இந்தமாதிரி ஆடுகளங்களை தயார் செய்வது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 280 - 320 வரையான ஓட்டங்களை பெறக்கூடிய ஆடுகளங்கள் இன்று 400 ஓட்டங்களுக்குமேல் இரு அணிகளும் பெருமளவிற்கு மாறியுள்ளமை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்றால் மிகையாகாது. T/20 போட்டிகளென்றால் இந்தமாதிரி ஆடுகளங்கள் பரவாயில்லை அது பொழுதுபோக்கிற்கான பணம் சம்பாதிக்கும் ஆட்டம்,அதனை ரெஸ்லிங் போன்று ஒரு ஷோவாக பார்த்துவிட்டு மறந்துவிடலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளிலும் T/20 க்கு போடுவது போல ஆடுகளங்களை தயார்பண்ணுவது,எல்லைக்கோடுகளை சிறிதாக்குவது என்பன எதிர்கால சந்ததியினரின் கிரிக்கெட் பார்வையினை மாற்றிவிடும்.குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான அபிப்பிராயத்தை குறைத்து அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிவிடும்.அதைவிட கொடுமை பந்துவீச்சாளர்களுக்கு கிரிக்கெட்டில் என்ன பங்கு என்பதே தெரியாமல் போய்விடும்.(பந்துவீச்சாளர்களின் கஷ்டத்தை பற்றி ஒரு பதிவு விரைவில் ) இவ்வாறான ஆடுகளங்கள் இன்று இந்தியா,பாகிஸ்தானில் அதிகமாக போடப்பட்டாலும் நியூசிலாந்து,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் அண்மைக்காலங்களாக இவ்வாறான ஆடுகளங்களை போடுவது துக்கமான விடயமே. அதற்காக ஒரேயடியாக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் போடப்படவேண்டும் என்பது அர்த்தமில்லை, பந்துவீச்சாளர்,துடுப்பாட்டவீரர் இருவருமே ஒரு போட்டியில் தங்களால் ஒரு ஆட்டத்தின் போக்கை மாற்றகூடிய ஆடுகளங்கள் ஒருநாள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தும். (அதிகமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆடுகளங்கள் எல்லாத்தரப்பினரும் தமது பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவை) தொடர்ந்தும் இவ்வாறான மொக்கையான ஆடுகளங்கள் கிரிக்கெற்றை ஒரு ஷோவாக மாறினாலும் ஆச்சரியமில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சாபையினரே தயவு செய்து வருமானம் அதிகமாக வருகிறது என்று கிரிக்கெட்டை விபச்சாரமாக்காதீர்கள்.

14 வாசகர் எண்ணங்கள்:

ARV Loshan said...

அருமை.. சொல்லவேண்டிய, கிரிக்கெட் ரசிகர்கள் உணரவேண்டிய விடயத்தைப் பதிந்துள்ளீர்கள்..

பாவம் பந்துவீச்சாளர்கள்..

அ.ஜீவதர்ஷன் said...

LOSHAN

//அருமை.. சொல்லவேண்டிய, கிரிக்கெட் ரசிகர்கள் உணரவேண்டிய விடயத்தைப் பதிந்துள்ளீர்கள்..//

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்


//பாவம் பந்துவீச்சாளர்கள்..//

நிதர்சனமான உண்மை

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

கிரிக்கெட batsman களுக்காக மட்டுமே,,,,

Unknown said...

இன்று நேற்று அல்ல , எவளவுதான் நல்ல பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் எதுவுமே செய்ய முடியாமல் இருக்கு,

அண்ணே இன்னும் ஒன்று , சங்ககாரா லஞ்சம் வாங்கிவிட்டதாக ஒரு கதை வருகிறது , உண்மையா ? not to lose the match,but to drop Murali.

Unknown said...

நிதர்சனமான உண்மை..,

calmmen said...

சூப்பர் சார்
அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்
இதுவரை யாருமே யோசிக்காத விஷயம்

அ.ஜீவதர்ஷன் said...

BONIFACE

//கிரிக்கெட batsman களுக்காக மட்டுமே,,,,//

true words.

............................................

பேநா மூடி

//நிதர்சனமான உண்மை..,//


நன்றி

..........................................

dialog

//அண்ணே இன்னும் ஒன்று , சங்ககாரா லஞ்சம் வாங்கிவிட்டதாக ஒரு கதை வருகிறது , உண்மையா ? not to lose the match,but to drop Murali.//

லஞ்சம் வாங்கியதாக வந்த செய்தியை நானும் கேள்விப்பட்டேன்,ஆனால் அது எந்த ஊடகங்களிலும் வெளிவராததால் உறுதியாக கூற இயலாது. ஆனால் முரளி,வாஸ் போன்ற வீரர்களை சங்ககார சாட்டை செயாததன் பலனை இப்போது அனுபவிக்கிறார்,தொடர்ந்தும் அனுபவிப்பார். முரளியை தொடர்ந்தும் சீண்டிவரும் சங்கக்கார தலைவராக உள்ள இலங்கை அணிக்கு எனது ஆதரவு இனிவரும் காலங்களில் இல்லை, அடுத்த தலைவருக்காக காத்திருக்கிறேன் .

...................................

BOSS

//சூப்பர் சார்
அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்
இதுவரை யாருமே யோசிக்காத விஷயம்//

நன்றி

யோ வொய்ஸ் (யோகா) said...

உண்மை கிரிக்கட்டை மல்யுத்தமாக மாற்றிவிடுவார்கள் என்பதை சொல்லியிருக்கிறீர்கள், இப்படி போனால் எதிர்காலத்தில் துடுப்பாட் வீரர்களுக்கு பந்து வீச யாருமே இருக்கமாட்டார்கள்..

அ.ஜீவதர்ஷன் said...

யோ வொய்ஸ் (யோகா)

//உண்மை கிரிக்கட்டை மல்யுத்தமாக மாற்றிவிடுவார்கள் என்பதை சொல்லியிருக்கிறீர்கள், இப்படி போனால் எதிர்காலத்தில் துடுப்பாட் வீரர்களுக்கு பந்து வீச யாருமே இருக்கமாட்டார்கள்..//

ஒவ்வொரு அணியும் மாதத்திற்கொரு பந்துவீச்சாளர்களை மாறிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும்

எட்வின் said...

அட... நான் இன்று தான் இதனைக் குறித்து ஒரு பதிவிட்டேன். இரு தினங்களுக்கு முன்னரே உங்களுக்கும் அதே எண்ணம்.

எல்லாம் வியாபாரமாகிப் போனது தான் கவலை தரும் விஷயம்.

அ.ஜீவதர்ஷன் said...

எட்வின்

//அட... நான் இன்று தான் இதனைக் குறித்து ஒரு பதிவிட்டேன். இரு தினங்களுக்கு முன்னரே உங்களுக்கும் அதே எண்ணம்.

எல்லாம் வியாபாரமாகிப் போனது தான் கவலை தரும் விஷயம்.//


உங்கள் பதிவு நன்றாக உள்ளது

priyamudanprabu said...

சரியா சொன்னீங்க

அ.ஜீவதர்ஷன் said...

பிரியமுடன் பிரபு

//சரியா சொன்னீங்க//

உண்மைதானே... உங்கள் கருத்துக்கு நன்றி

ம.தி.சுதா said...

காசுக்காக என்ன வெல்லாம் பண்றாங்ப்பா...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)