Monday, December 14, 2009

விடுகதை

ஒரு ஹெலிக்கொப்டர் சில விலங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு காட்டிலிருந்து வேறொரு காட்டிற்கு செல்கிறது. அப்போது ஒரு மிகப்பெரிய குளத்தை கடக்கும் பொது ஒரு குரங்குக்குட்டி தவறி கீழே விழுந்து விடுகிறது. விழுந்த குரங்குக்குட்டி குளத்தின் நடுவே இருந்த ஒரு சிறிய மரத்தில் தாவிப்பிடித்துக்கொள்கிறது. ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களுக்கு குரங்குக்குட்டி கீழே விழுந்தது தெரியாது.மிக ஆழமான குளம்,மக்கள் நடமாட்டம் எதுவுமில்லை,எந்தவிதமான கடற்போக்குவரத்துமில்லை,குரங்குக்குட்டிக்கு நீச்சல் தெரியாது. குளத்தின் கரையை அடைய எந்த உதவியும் குரங்குக்குட்டிக்கு இல்லை எப்படி அந்த குரங்குக்குட்டி கரையை அடையும்? விடைதெரியாதவர்கள் இந்த வரிக்கு கீழுள்ள பகுதிகளை select செய்யுங்கள், விடை அடுத்த வரியிலே உள்ளது. கூர்ப்படைந்த இந்தப்பெரிய குரங்கு உங்களுக்கே தெரியவில்லை, எப்படி அந்த சின்ன குரங்குக்குட்டிக்கு தெரியும்? ஜோசிக்கவேன்டாமா? ...

7 வாசகர் எண்ணங்கள்:

ஸ்ரீநி said...

குரங்குக்குட்டிக்கு நீச்சல் தெரியாது. -- சரி .... அது உங்களுக்கு எப்படி தெரியும் ( மாமனுக்கு மீசைல மண் ஒட்டலைல .... ஹ ஹ )

கலையரசன் said...

ஹி.. ஹி.. ஹி...
அய்யா கேள்வி கேக்குறாரு இல்ல? பதில் சொல்லுங்கப்பா!!

எப்பூடி ... said...

ஸ்ரீநி

//குரங்குக்குட்டிக்கு நீச்சல் தெரியாது. -- சரி .... அது உங்களுக்கு எப்படி தெரியும் ( மாமனுக்கு //

நீங்கதான் ஒருதடவை எனக்கு சொன்னதாக ஞாபகம்,எப்பூடி....hi hi hi

எப்பூடி ... said...

கலையரசன்

/ஹி.. ஹி.. ஹி...
அய்யா கேள்வி கேக்குறாரு இல்ல? பதில் சொல்லுங்கப்பா!!//

கடுப்பு, ஹி ஹி ஹி

ஞானப்பழம் said...

எந்தவித இணைப்பும் இல்லாம விடையை பதிவுலையே ஒளிச்சு வெச்சீங்களே... அருமை.. ஆனா இதுகூட குரங்கு குட்டி வேல மாதிரிதான் தெரியுது... ஹி ஹி..

எப்பூடி ... said...

ஞானப்பழம்

//எந்தவித இணைப்பும் இல்லாம விடையை பதிவுலையே ஒளிச்சு வெச்சீங்களே... அருமை.. ஆனா இதுகூட குரங்கு குட்டி வேல மாதிரிதான் தெரியுது... ஹி ஹி..//

): நன்றி

r.v.saravanan kudandhai said...

குரங்கு குட்டியை கேட்டா சொல்லிட போகுது

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)