Wednesday, December 23, 2009

சங்கதி சொன்னது ஸ்ரீநி......
தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்? தொடர் பதிவில் பாகம் மூன்று எழுதி முடித்தவுடன் தனது கருத்தை பதிவு செய்த தோழர் ஸ்ரீநி தனது கருத்தை மின்னஞ்சல் மூலம்அனுப்பிவைத்துள்ளார். இதனை பின்னூட்டமாக போடாமல் ஒரு பதிவாக போடலாமென்று நினைக்கின்றேன். இந்தப்பதிவு முழுக்க முழுக்க பதிவர் ஸ்ரீநி (http://sangadhi.blogspot.com/) அவர்களால் எழுதப்பட்டது. பதிவர் ஸ்ரீநி க்கு நன்றிகள்

இதோ அது


"இந்தப் பதிவில் மூன்று பிரிவாக ஏனைய ஊடங்கங்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று பகுத்து காரணங்களை பார்த்தோம். முழுமனதோடு பாத்தால் இந்த பட்டியலில் மிக முக்கியமான காரணம் ஒன்று விட்டு போனதை காண முடிகிறது.

இந்த பட்டியலை பூரணம் ஆக்குவது இன்னொரு காரணி -
(1)குடிமியல் காரணிகள் ...
(2) ரசிகனின் வளர்ச்சி . . . .. . . . .

ஐயோ நீங்கதான் மிஸ்டர் பொது ஜனம்

என்னடா இது கூத்து ... படத்தின் தோல்விக்கு நாம எப்புடி காரணம்னு நீங்க கேக்கலாம்
இன்றைய சினிமா ரசிகனின் ஊடக தொடர்பு அதிகரிப்பு, தமிழக கரையோரம் உக்காந்து அவதார் பட சூழலை, அந்த படத்தின் நுணுக்கங்களை, தொழில்நுட்பத்தை விமர்சிக்கும், ரசிகன் இந்த 21 நூற்றாண்டின் ரசிகன் மட்டுமே. நமக்கு முந்தைய காலங்களில் இத்தகைய ரசிகர்கள் மிகவும் , மிகமிக குறைவு.

உலகமேண்ட்கும் சென்று படம் பார்க்கிறோம், ஹாலிவுட், பாலிவுட், கொரியா, ஜப்பான், சீனா, ஸ்பானிஷ், பிரெஞ்சு என்று எங்கு வெளியாகும் அல்லது வெளியாகிய திரைப் படம் என்றாலும் நம்ம மக்கள் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு ரீமேக் படம் வெளி வந்த அத கத்தி இல்லாம கிளிசுடுவோம் நாம இன்னிக்கி ஆனா அந்த கால ரசிகனுக்கு " எங்க வீட்டுப் பிள்ளை ( 1965 )" ரீமேக் ன்னு எதனை பேர்க்கு தெரியும், இல்ல அந்த படத்தின் ஒரிஜினல் ராமுடு பீமுடு (1964 ) என்ற அண்டை நாட்டு தெலுகு படம் எத்தனை தமிழ் ரசிகர்கள் பாத்திருக்க முடியும். அதையும் தாண்டி இந்த இரண்டு திரை படங்களின் தாத்தா The Corsican Brothers (1941 ) அலெக்சாண்டர் டுமாஸ் எழுதிய ஓர் மேற்கத்திய படம் என்பது அந்த படங்களில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைங்கர்களுக்கு தெரியுமென்றால் அது மிகப் பெரும் விஷயம். இன்று நாம் கஜினி தமிழ் , ஹிந்தி அதன் தாத்த மொமெண்டோ இங்கிலீஷ் எல்லாமே அத்துப்படி நம்மக்கு என்றால் அது மிகைஅல்ல

ஒரு கலை அதற்க்கு வரவேற்ப்பு கிடைக்கிறது என்று பார்த்தல் அது கண்டிப்பாக சமகாலத்தை விட உயரமாக அல்லது ஒரு புது அடையாளத்துடன் இருந்தால் மிக எளிமையாக வெல்லும். சிந்திக்க வைப்பதாக, பிரமிப்பூட்டுவதாக, ஈர்க்க கூடியதாக இருப்பது எந்த கலையானாலும் வெல்லும்.

சினிமா வின் ஆரம்பங்களில் , சினிமாவே உரு பிரம்மிப்பு, முதலில் ஒலி இல்லாமல், பின்பு ஒலியுடன் அந்த பிரம்மிப்பு ஐம்பதுகளின் இறுதிவரை மக்களை கட்டி இழுத்து வந்திருக்கிறது , அதில் வந்தவை எல்லாமே ராமாயணம், மகாபாரதம், மாயா பஜார், ஹரிதாஸ் போன்ற படங்களுக்கு இடையில் சில சிந்தனை சார்ந்த பராசக்தி, அந்த நாள், போன்ற படங்கள் . அதன் பின் புராணங்கள் குறைந்தாலும் சினிமா தன்னை கருப்பு வெள்ளை நிரந்களிருந்து , ஈஸ்ட்மேன் கலருக்கு மெருகேற்றி மக்களை உள்ளிளுபதில் தவறவில்லை . இந்த காலங்களிலும் சமுதாய கதைகளுக்கிடையில் கர்ணன், கந்தன் கருனைபோன்ற புராண படங்கள் உண்டு. அது அளவுதினும் அற்புத விளக்கு வரை தொடர்ந்து நம்மை பிரமிக்க வைத்து வந்தது

எழுபதுகளில் வெளியான மிகுதியான திரைப்படங்கள் மக்களின் சிந்தனையை / சமுதாய நிகழ்வுகளை கேள்விகுரியாக்கின் . புவனா ஒரு கேள்விக் குறி, அபூர்வ ராகங்கள், தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான். என்று சமகாலத்தை விட உயரமாகவோ, தனி அடையாலதுடனோ சினிமாக்கள் செயல் பட்டன. இது 1990 களின் இறுதி வரை இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ரசிகனின் வளர்ச்சி தமிழ் சினிமாவை விட வேகமாய் வளர்ந்திருக்கிறான்
இன்றைய ரசிகன் படைப்பாளிக்கு இணையாய் சிந்திக்கிறான், தன்னை உலக சினிமாவுக்கு தயார் செய்து கொண்டுவிட்டோன். படைப்பாளி இன்னும் இருபது வருட பழைய ரசிகனுக்கு படமெடுக்கிறான்."


0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)