Friday, December 4, 2009

தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்? இறுதிப்பகுதி

இந்தப்பதிவுடன் தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்? தொடர்ப்பதிவை முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் அந்தவகையில் நான்காவது முக்கிய காரணகர்த்தாக்கள் யாரென்றால் நம்ம பதிவர்கள் மற்றும் பின்னூட்டதாரிகள். குறிப்பு இது சம்பத்தப்பட்ட பதிவர்களுக்கும் பின்னூட்டதாரிகளுக்கும் மட்டும் பொருந்தும்,தொப்பி அளவாக உள்ளதென்று நீங்களாக எடுத்து மாட்டினால் நான் பொறுப்பாளியல்ல. அதிகமான பதிவர்கள் குறிப்பிட்ட ஓரிரு நடிகருக்கு சார்பானதாகவே தமது தளங்களில் எழுதுவார்கள்.இதனால் தமக்கு பிடிக்காத ஹீரோவின் படங்கள் அல்லது தமக்கு பிடித்த ஹீரோவுக்கு எதிரான ஹீரோக்களின் படங்கள் வரும்போது அந்தப்படங்களை முடக்குவதற்கு இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பார்கள்.பிடிக்காத படமொன்று ரிலீஸ் ஆகின்றதென்றால் உடனடியாக திரைவிமர்சனம் என்ற பெயரில் நேர்மறையான கருத்துக்களை மறைத்தோ அல்லது பட்டும்படாமலோ சொல்லிவிட்டு எதிர்மறையான கருத்துக்களை எதுகை மோனையுடன் போட்டுத்தாக்குவது இவர்களுக்கு கைவந்தகலை. இப்படியே ஒருவர்மாறி ஒருவர் தமக்கு பிடிக்காத ஹீரோக்ளையும் அந்தஹீரோக்களின் படங்களையும் தமது விமர்சனங்கள்மூலம் பழிவாங்குவார்கள்.இவர்களுக்கு எதிரான நடிகர்களுக்கும் இவர்களுக்கும் அப்படி என்னதான்பகை? உண்மையில் இது நட்பு வட்டத்துக்குள் உள்ள ஈகோவால் வந்தவினை என்பதே உண்மை ,ஒவ்வொருவரும் தமது நாயகனை உயர்வாக காட்டவேண்டும் என்பதற்காக தமக்குப்பிடித்த நாயகனுக்கு போட்டியாக உள்ள நாயகனை வீழ்த்த அவர்கள் நடிக்கும்படங்களை தோல்வியாக்குவதற்காக இவர்கள் இணையங்களை பயன்படுத்திவருகின்றனர். நாம இந்த லிஸ்டில இருக்கிறது கவலையாய்தான் இருக்கு,இனிவரும் காலங்களில் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்,போனது போகட்டும் வேட்டைக்காரனில் இருந்து நேர்மையான விமர்சனத்தை எதிர்பாருங்கள் .........(யாரப்பா அங்க அப்பிடி சிரிக்கிறது.. ) இன்னுமொரு குரூப்பு இருக்கு, அது எந்தப்படம் வந்தாலும் அந்தப்படங்களை உலக சினிமாக்களுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தியே விமர்சனம் எழுதும்.தாம் இதே தமிழ்ப்படங்களை பார்த்துத்தான் சினிமாஅறிவை வளர்த்ததை மறந்து பிறந்ததிலயிருந்து உலக சினிமாவைமட்டும் பார்த்து வந்தவர்கள்மாதிரியும் ஏதே வெளிநாட்டுவிமர்சகர்கள் நம்ம படங்களை விமர்சனம் பனுகிறமாதிரியும் நம்ம படங்களை வெளிநாட்டு படங்களின் தரத்துடன் ஒப்பிட்டு ஒரு பில்டப்போடையே விமர்சனங்களை எழுதுவாங்க.அதற்காக உலகத்தரத்துடன் நம்ம சினிமாவை ஒப்பிடக்கூடாதென்றில்லை,அதததுக்கேன்று சில படங்கள் இருக்கு, உதாரணத்துக்கு விஜய படம் எப்படி வருமென்று எல்லோருக்கும் தெரியும், ஆனா நம்மாளுங்க சிலபேர் விஜய்படத்தை உலகசினிமாவுடன் ஒப்பிட்டால் தப்பு யார்மேல? அடுத்து சில பின்னூட்டதாரிகள்,இவர்கள் தங்களுக்கு பிடிக்காத ஹீரோக்களின் படங்களின் நடுநிலையான் விமர்சனங்களுக்கு கூட பின்னூட்டம் போடும்போது சில சொற்களை பயன்படுத்துவார்கள். அவற்றில் சில 1 )"அப்ப படம் பாக்கத்தேவையில்லை எண்டு சொல்லுறீங்க!" 2 )"நல்லகாலம் 100 ரூபா தப்பிச்சுது." 3 )"அப்ப இந்தப்படமும் போச்சா?" 4 )"மூணு மணித்தியாலம் வேஸ்டாப்போச்சு." 5 )"காப்பத்தீற்றிங்க தலைவா." இப்படி பலவிதமாக பின்னூட்டங்கள் மூலமாக தம்மாலான பங்களிப்பை செய்து படங்களின் தோல்விக்கு ஒத்தாசை புரிபவர்க்களுமுண்டு . இவற்றைத்தவிர 1 )கதைகளை விடுத்து நடிகர்களின் கால்சீட்டுக்காக மட்டும் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள். 2 )திரையரங்குகளின் கட்டண உயர்வு. 3 )திருட்டு vcd. 4 )இணையத்தளங்களில் ஓரிடுநாட்களில் திரைப்படங்கள் வெளியாகின்றமை. என்பனவும் ஏனைய காரணங்களாகும். நன்றி

1 வாசகர் எண்ணங்கள்:

r.v.saravanan said...

தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு

கதை தேர்வு, தெளிவான திரைக்கதை ,வித்தியாசமான காட்சி அமைப்பு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)