Thursday, December 3, 2009

விஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.

இது ஒன்னும் சீடியஸ் மேட்டரில்ல, ஆனா பொய்யான மேட்டருமில்ல 1 . இரண்டு பேரும் வாரிசு நடிகர்கள், இவர்கள் இருவரும் சினிமாக்கு அப்பாக்களால் வந்தாலும் இரண்டு பேருக்கும் பிரச்சினையே அந்த அப்பாக்கள்தான். 2. விஜய் தன்னை நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்( Next Superstar ) என்றும்,சிம்பு தன்னை லிற்றில் சூப்பர்ஸ்டார்( Little Superstar ) என்றும் தமக்குத்தாமே பில்டப்பண்ணி நொந்து நூடில்ஸ் ஆனவர்கள். 3 . சொல்லிவைத்தாற்போல் இவர்கள் இருவரும் இறுதியாக நடித்த மூன்று படங்களும் இவர்களை ஏமாற்றிவிட்டது. விஜய் (அழகியதமிழ்மகன்,குருவி,வில்லு),சிம்பு(வல்லவன்,காளை,சிலம்பாட்டம்) 4 . இருவரும் ஐந்து பாடல்களுக்கு நடனமாடுவதற்காக 2 .30 மணிநேரம் படம் நடிப்பவர்கள்(?). 5 . இருவரும் எந்தத் தோல்விப்படமாக இருந்தாலும் நூறு அல்லது நூற்றியைம்பது நாட்கள் படத்தை ஒட்டாமல் ஓயமாட்டார்கள். இதில் விஜய் கில்லாடி இவர்மாதிரி தோல்விப்படங்களுக்கு யாரும் வெற்றிவிழா கொண்டாடமுடியாது. 6 .இவர்களது ஒருபடம் ரிலீஸ் என்றால் இவர்களது காலடிபடாத தமிழ்த்தொலைக்காட்சி கலையகங்களே இருக்காது,எல்லா கலையகங்களுக்கும் ஒரு ரவுண்டு கிளம்பிடுவாங்க. 7 . படம் வெளியான அடுத்தநாளே "இந்தத் திரைப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி " அப்பிடின்னு ஒரு அறிக்கை விடுறதில இந்த இரண்டுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை. 8 . இவர்கள் இருவரும் பஞ்ச்டயலாக் பேச ஆரம்பித்தால் வடிவேலுவையே ஒரம்கட்டிவிடுவார்கள், அம்புட்டு காமடியாயிருக்கும்.

11 வாசகர் எண்ணங்கள்:

பேநா மூடி said...

:-)

dialog said...

this is same for most of the actors, because of their nature of the profession.

Sakthi T Vel said...

கமல்ஹாசன் வழியில் நடப்பது கடினம்தான்,
ஆனால் திறமையான நடிகர்கள் இப்படி தொடர்வது துரதுஷ்ட வசமானது..!

எப்பூடி ... said...

பேநா மூடி

//:-)//

:-):-):-)

........................

dialog said

//this is same for most of the actors, because of their nature of the profession.//

ok but vijay and simpu are the top 2 guys

.............................


Sakthi T Vel

//கமல்ஹாசன் வழியில் நடப்பது கடினம்தான்,
ஆனால் திறமையான நடிகர்கள் இப்படி தொடர்வது துரதுஷ்ட வசமானது..!//

புரியல

என் நடை பாதையில்(ராம்) said...

கடந்த வாரம் மன்மதன் படம் பார்த்தேன். சிம்புவிடம் திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் செல்லும் பாதை தான் மகா கேவலம். விஜய்- நோ கமெண்ட்ஸ்

Prabah said...

annachchi silampaaddam Hit film

எப்பூடி ... said...

என் நடை பாதையில்(ராம்)

//சிம்புவிடம் திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் செல்லும் பாதை தான் மகா கேவலம். விஜய்- நோ கமெண்ட்ஸ்//

தாங்களே தங்கள் தலையில மண்ணை அள்ளி போட்டா யார்தான் என்னசெய்ய முடியும்.

........................
Prabah

//annachchi silampaaddam Hit film//

நீங்க காமடிகீமடி பண்ணலையே,ஓகோ ! அப்ப நீங்க சிம்பு சொன்னத நம்பீற்றீங்க போல?

Chitra said...

இவங்க கலைபூனைகள். கண்ணை மூடிக்கிட்டு உலகமே இருண்டுடுச்சி என்பாங்க......

எப்பூடி ... said...

Chitra

//இவங்க கலைபூனைகள். கண்ணை மூடிக்கிட்டு உலகமே இருண்டுடுச்சி என்பாங்க......//

நீங்கள் சொவது சரி இவர்கள் கலைப்பூனைகள் மட்டுமல்ல கள்ளப்பூனைகளும் கூட

Arun said...

silampaaddam Hit padam

எப்பூடி ... said...

உண்மைய சொல்லிடுங்க சிம்பு,நீங்க தானே அருண் என்ற ஐ டி வச்சு கமெண்ட் போடறது,சிலம்பாட்டம் பப்படம் ஆனது நாடறிந்த செய்தி, வருகைக்கு நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)