Friday, December 18, 2009

புலிகேசியும் கிரிக்கெட்டும்

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி காலத்தில் கட்டப்பட்டு பின்னர் உக்கிரபுத்தனால் எரிக்கப்பட்ட ஜாதிச்சண்டை மைதானங்களில் எஞ்சிய மைதானங்களை கண்டுபிடித்து அவற்றில் கிரிக்கெட் குத்துச்சண்டை போட்டியை நடாத்திவரும் இன்றைய 24 ஆம் புலிகேசியான இந்திய கிரிக்கற்கட்டுப்பாட்டு சபை நடாத்தும் இரண்டாவது குத்துச்சண்டை போட்டியில் இலங்கை குத்துச்சண்டை அணி வெற்றி பெற்றது. முதல் சண்டையில் விட்ட தவறை இந்த சண்டையில் இலங்கை குத்துசண்டை வீரர்கள் விடவில்லை.முதல் சண்டை நடந்த மைதானத்தின் அளவை விட சற்று பெரிய மைதானம் ஆகையால் முதலாவது போட்டியில் விழுந்த குத்துக்களை விட குறைவான குத்துக்களே இந்த சண்டையில் விழுந்தன. இந்திய வீரர் டோனியானந்தம் சகவீரர் ரெயினானந்தத்துடன் இணைந்து இலங்கை வீரர்களை புரட்டி எடுத்தார், ஆனால் பதிலுக்கு திருப்பி அடிக்க தயாரான இலங்கை குத்துசண்டை வீரர்களில் டில்ஷானந்தம் முன்னணியிலும் மத்தியுஸாநந்தம் பின்னணியிலும் நின்று தாக்கி இந்திய கிரிக்கெட் குத்துசண்டை வீரர்களை கதிகலங்க வைத்தனர். 23 ஆம் புலிகேசியை அவ்வப்போது வந்து வாழ்த்தும் அந்த இரண்டு ஆசாமிகளைபோல, இங்கு இந்திய குத்துசண்டை வீரர்களின் புகழை மூச்சு விடாது பாடிக்கொண்டிருந்த ரவி சாஸ்திரியானந்தம் மற்றும் கவாஸ்கரானந்தம் இறுதியில் இலங்கை வென்றதும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். இறுதியில் பல வீரர்களின் தாக்குதல்களை தடுத்து கடுமையான பதில் தாக்குதல் நடாத்தி பலருக்கும் அல்லையில் குத்திய டில்ஷானந்தம் ஆட்டநாயகனாக தேர்வானார். பணத்தாசை பிடித்த 24 ஆம் புலிகேசியான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் குத்துசண்டை மைதானங்களை சீர்திருத்த மங்குனி அமைச்சரான சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்பதே கிரிக்கெட் குத்துசண்டையை பார்த்த அனைவரதும் கேள்வி.

மீண்டும் அடுத்த கிரிக்கெட் குத்துசண்டை எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் புலிகேசி காலத்து கட்டாக் ஜாதிச்சண்டை மைதானத்தில் இடம்பெறும்.

2 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

ஹி ஹி....
போட்டுத்தாக்கு... வரவங்க பூரா போட்டுத்தாக்கு...

யாரு வென்றாலும் எனக்கு கவலையில்லை... ரெண்டுமே எனக்கு பிடிக்காத அணி!!!

எப்போ "அமெரிக்கா" கிரிக்கெட் விளையாடுதோ, அப்பத்தான் நான் கிரிக்கெட் பாக்க ஆரம்பிப்பேன்!!

எப்பூடி ... said...

ஞானப்பழம் சொன்னது…


//யாரு வென்றாலும் எனக்கு கவலையில்லை... ரெண்டுமே எனக்கு பிடிக்காத அணி!!! //

நீங்களுமா சார் ?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)