Saturday, December 26, 2009

2009 ஆம் ஆண்டின் பல்துறைக் கலைஞர்இந்த ஆண்டில் பல துறைகளிலும் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி இருந்தாலும் நடிப்பு , இயக்கம் , கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, எடிட்டிங் என ஏழு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட ஒருவருக்கு பல்துறை கலைஞர் விருது எப்பூடியின் சார்பில் வழங்கப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை, மதிப்பிற்குரிய(?)நமது தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே.

சிறந்த நடிப்பு

சிவாஜி, கமல் என பல முன்னணி நடிகர்கள் தங்கள் நடிப்பால் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்ல, ஆனால் ஒரு இனமே கதறிக்கதறி அழுமளவிற்கு அற்புதமாக நடித்த கலைஞர் எமது கலைஞர். இலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிடுக்கும் போது இவர் தினம்தினம் ஒவ்வொரு மாறுவேடம் போட்டு வசனங்களை மாற்றி மாற்றி உச்சரித்த அழகை என்னவென்று சொல்வது?அதிலும் குறிப்பாக சாப்பிட்டது செமிக்காமல் கடல்க் காற்று வாங்க மனைவிகள் சகிதம் வந்த இவர் மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் என்ற பெயரில் உலக தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றிய நடிப்பை என்னவென்று சொல்வது? அப்பேற்பட்ட நடிகருக்கு வழங்காமல் சிறந்த நடிகருக்கான விருதை யாருக்கு வழங்குவது?

எடிட்டிங்

சாதாரணமாகவே திரைப்படங்களின் காட்சிகளை துண்டாடுவது எடிட்டர்க்கு கடினமான வேலை, அனால் தனது பிளைகளுக்கு பிரச்சினை வரக்கூடாதென்பதற்காக வட தமிழகத்தை ஸ்டாலினுக்கும் தென் தமிழகத்தை அழகிரிக்கும் உத்தியோகபூர்வமற்ற முறையில் பிரித்து கொடுத்துள்ள கலைஞர் சிறந்த எடிட்டருக்கான விருதையும் தட்டிச்செல்கிறார்....

இப்படியும் நடக்கலாம் : கலைஞர் காலத்தின் பின்னர் ஆந்திரமக்களே வாயில் கைவைக்கும் அளவிற்கு கலைஞரின் வாரிசுகள் தமிழகத்தை பிரித்தாலும் ஆச்சரியமில்லை....

கதை

நம் மவுன வலி யாருக்கு தெரியப் போகிறது ? என்ற தலைப்பில் உண்மை சம்பவம் என்று கூறி எழுதிய அந்த நகைச்சுவைப்படைப்பு சிறந்த கதையாக தெரிவாகியுள்ளது, " நாம் மவுனமாக அழுவது யார்காதில் விழப்போகிறது; நம் மவுனவலிதான் யாருக்குத் தெரியப்போகிறது?" என்ற பகுதி அனைத்து தரப்பினராலும் வாய்விட்டு சிரிக்க கூடிய அளவிற்கு அருமையாக இருந்தது. இதற்காக கலைஞருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது வழங்கப்படுகிறது.

திரைக்கதை

தனக்கும் இலங்கை தமிழர்கள் மீது அக்கறை உள்ளது என்பதை காட்டிக்கொள்ள T.R.பாலு தலைமையில் திருமாவளவன், கனிமொழி அடங்கிய குழுவை அனுப்பி முகாம்களை பார்வையிட்டு, அதேநேரம் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசுக்கு சார்பாக முகாம் நன்றாக உள்ளது என அறிக்கைவிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய திரைக்கதையை என்னவென்று சொல்வது ? இதற்கு எப்படி விருது கொடுக்காமல் இருப்பது?

வசனம்

ஆங்காங்கே பல வசனங்கள் பேசினாலும் உண்ணாவிரத நாடகத்திற்கு பின்னர் "யுத்தம் நிறுத்தப்பட்டதாக தாங்கள் கூறியபின்னரும் இலங்கையில் யுத்தம் நடைபெறுகின்றதே "என்று பத்திரிகயாளர்கள் கேட்ட கேள்விக்கு "மழை நின்ற பின்பும் தூறல் போல ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்கள் இருக்கத்தான் செய்யும் " என்ற வசனம் ஒரு பொய்யை கூறிவிட்டால் பின்னர் எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு முன்னுதாரணம். அதற்காகவே இந்த விருது கலைஞர் அவர்களுக்கு...

இயக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளவோட்டுக்கள் எப்படி போடுவது, மத்தியில் எப்படி பேரம்பேசுவது , அமைச்சர் பதவிகளை எப்படி குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டிக்கொடுப்பது , எதிர்க்கருத்துகளை எப்படி பொய்யை சொல்லி சமாளிப்பது , பொது விழாக்களில் எப்படி சமூகமளிப்பது , தனக்கு தானே எப்படி விருது கொடுப்பது , முல்லைபெரியாறு முதல் தந்தை பெரியாரு வரை எப்படி அரசியல் செய்வது என்ற விடயங்களை கலைஞர் தனது தெளிவான செயற்பாடுகள் மூலம் நிரூபித்திருப்பார் . அதற்காகவே இந்த இயக்குனர் விருது கலைஞருக்கு....

தயாரிப்பு

இந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நினைவுதினம், தமிழகஅரச விருதுகள் வழங்கல் , கலைமாமணி விருதுகள் வழங்கல் என கலைஞர் தனக்கும் , தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் விருது வாங்கியும் கொடுத்தும் தமிழக அரசு சார்பில் நிகழ்த்திய நிகழ்வுகளுக்காகவும், தனது புகழை தமிழ் அறிஞர்களின் வாயால் காதுகுளிர கேட்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அடுத்த ஆண்டு 'உலக தமிழ் மாநாடு' நடத்த திட்டமிட்டதற்காகவும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருது கலைஞர் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்த ஏழு விருதுகள் தவிர நடிகர்களுக்கு சார்பாக கட்டப்பஞ்சாயத்து , பத்திரிகைகளுக்கு கவிதை , புதிய படங்களை பார்த்தல் , நடிகயருடனான சந்திப்புக்கள் என்று பல நாட்டுக்கு தேவையான முக்கிய விடயங்களையும் செய்து வரும் கலைஞருக்கு எப்பூடி சார்பாக மேலும் பாராட்டுக்கள்.

வேறு ஏதாச்சும் விருது விடுபட்டால் பின்னூட்டல் மூலமாக நீங்களும் கொடுக்கலாம்

13 வாசகர் எண்ணங்கள்:

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு அருமையான சிந்தனை :-)

ஸ்ரீநி said...

சிறந்த ஒப்பனை - SPECTRUM ஒப்பனைக்காக
வாழ்நாள் சாதனையாளர் - இது விவரிக்க ஒரு தனி பதிவு போடணும்.
நகைசுவை - மாற்றி மாற்றி பேசி, குழம்பி, குழப்பி, நமக்கே புரியாம சிரிக்க வச்சதுக்கு

Unknown said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

//நல்ல பகிர்வு அருமையான சிந்தனை :-)//

நன்றி
.................................

ஸ்ரீநி சொன்னது…
சிறந்த ஒப்பனை - SPECTRUM ஒப்பனைக்காக
வாழ்நாள் சாதனையாளர் - இது விவரிக்க ஒரு தனி பதிவு போடணும்.
நகைசுவை - மாற்றி மாற்றி பேசி, குழம்பி, குழப்பி, நமக்கே புரியாம சிரிக்க வச்சதுக்கு

சரியான விருதுகள்

....................................

பேநா மூடி

//விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

பெற்றவருக்கு

ஞானப்பழம் said...

எங்கள் மதிப்புக்குரிய முதல்வருக்கு நீங்கள் அளித்த அனைத்து விருதுகளுக்கும் நன்றி.. இப்படியே daily வந்து bittu bitta போடுங்க... கருணாநிதிக்கு விருது வாங்குவதுதான் சாப்பாடு சாப்பிடற மாதிரி. அதில்லாட்டி செத்துருவான் பாவம்..

பத்தாததுக்கு அந்த கருமம்புடிச்ச மாநாட்ட எங்க ஊர்ல நடத்துறான்! மாநாட்ட்ல என்ன பண்ண போறான்னு எல்லாத்துக்கும் தெரியும்.. எல்லாரும் வந்து அவனுக்கு ஜால்ரா அடிப்பாங்க.. அப்படி பேசறவுங்குக்குதான் பேச அனுமதி தருவாங்க.. தமிழுக்கோ தமிழருக்கோ ஒரு மைத்தையும் புடுங்கப் போறதில்ல!! முதல்ல அவனப் போட்டுத்தள்ளனும்.. என்று கூறி, எங்கள் அருமை முதல்வருக்கு பரிசுகள் அளித்தமை(குவித்தமை)க்காக மீண்டும் நன்றி கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்..

Bebedores do Gondufo said...

Good.
http://abebedorespgondufo.blogs.sapo.pt/
Portugal

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//எங்கள் மதிப்புக்குரிய முதல்வருக்கு நீங்கள் அளித்த அனைத்து விருதுகளுக்கும் நன்றி.. இப்படியே daily வந்து bittu bitta போடுங்க... கருணாநிதிக்கு விருது வாங்குவதுதான் சாப்பாடு சாப்பிடற மாதிரி. அதில்லாட்டி செத்துருவான் பாவம்.. //நான் அவருக்கு விருது குடுத்தா நாளைக்கு அவர் என்னைப்பற்றி கவிதை படித்தாலும் படிக்கலாமெல்ல...
ஹி ஹி ஹி .....

ஞானப்பழம் said...

நான் அவருக்கு விருது குடுத்தா நாளைக்கு அவர் என்னைப்பற்றி கவிதை படித்தாலும் படிக்கலாமெல்ல...
ஹி ஹி ஹி .....////

அருமை.. அடுத்த கலைஞர் ready!!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//அருமை.. அடுத்த கலைஞர் ready!!//

ஒரே ஒரு கலைஞர் தான் , அவரை மாதிரி யாராலும் மொள்ளமாரித்தனம் பண்ணமுடியாது.

"நம் மவுனவலிதான் யாருக்குத் தெரியப்போகிறது?"

தமிழ் உதயம் said...

உயிரோட இருக்கிறவர்க்கு அவர் கவிதை எழுத மாட்டாரு. நகைசுவைக்காக கூட அந்த மாதிரி ஆட்கள பத்தி பேசக் கூடாது.

அ.ஜீவதர்ஷன் said...

tamiluthayam

//உயிரோட இருக்கிறவர்க்கு அவர் கவிதை எழுத மாட்டாரு. நகைசுவைக்காக கூட அந்த மாதிரி ஆட்கள பத்தி பேசக் கூடாது.//


நீங்க வேற, தனக்கு காரியம் ஆகனுமின்னா பிறக்கபோற பிள்ளைக்கும் கவிதை எழுதுவாரு இந்த மானங்கெட்ட தமிழன்.

ஞானப்பழம் said...

தமிழன்னு சொல்லாதீங்க..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//தமிழன்னு சொல்லாதீங்க..//

தப்புதான்,தமிழின துரோகிண்ணு வந்திருக்கணும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)