Wednesday, December 30, 2009

கோலிவூட் 2009 [பகுதி1]2009 இல் தமிழ்சினிமா வர்த்தகரீதியாக பின்னடைவையே சந்திதித்தது என்பதனை மறுக்க முடியாது.நூற்றுக்கும் மேலான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனபோதும் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களே தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தருக்கும் லாபம் தந்த படங்கள்.ஆனால் சிறிய பட்ஜட்டில் எடுக்கப்பட்டு விமர்சகர்களின் பாராட்டை மட்டுமன்றி நல்ல வசூலையும் பெற்ற பலபடங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தது புதிய படைப்பாளிகளுக்கு ஒரு உந்துகோலே.

2009இல் தமிழ் சினிமாவினை மூன்றுபகுதிகளாக தரலாம் என நினைக்கிறேன். முதற் பகுதி இங்கே.

பகுதி1.

2009இல் திரைப்படங்கள்

2009 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் சன்குழுமத்தின் ஆதிக்கம் நிலவியது என்பதை மறுப்பதற்கில்லை.சுமாரான படங்களை ஓரளவு ஓடவைத்த பெருமை இவர்களையே சாரும்.காதலில் விழுந்தேன் மூலம் படங்களை ரெடிமேட்டாக வாங்கி "சன் பிக்சர்ஸ் வழங்கும்" என வெளியிட ஆரம்பித்ததிலிருந்து இவ்வருட தொடக்கத்தில் படிக்காதவன் முதல் இப்போது வேட்டைக்காரன் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது இவர்களின் சேவை !!!.முதன் முதலாக சன் குழுமம் நேரடியாக தயாரிக்கும் படம் எந்திரன்.அனேகமாக இது 2010இல் வெளியாகலாம்.அதுவரை இவர்கள் ஏராளமான படங்களை கையில் வைத்திருப்பதாக தகவல்.ஆனாலும் சன் வெளியிடும் அநேகமான படங்கள் சப்பையாக இருப்பது இவர்களின் தெரிவுப்பிழையா? அல்லது அப்படிப்பட்ட படங்களை இவர்கள் கரைசேர்த்து விடுவார்கள் என்று தயாரிப்பளர் விற்றுவிடுகிறாரா? எது எப்படியோ நமக்கல்லவா ரோதனை.வசூல்ரீதியாக வெற்றிபெற்ற படங்கள் என்று பார்த்தால் "சன் பிக்சர்ஸ் வழங்கிய" அனைத்துமே சூப்பர்ஹிட் படங்கள்தான்.நாம் உண்மையாக ஓடி ஹிட்டான படங்கள் பற்றி பார்ப்போம்.

1.அயன்: இந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படம் இதுதான்.இதுவும் "சன் பிக்சர்ஸ் வழங்கிய" படம் ஆயினும் இது வெற்றிபெற காரணம், கே வி ஆனந்தின் விறு விறு திரைக்கதை.ஹரிசின் அமர்க்களமான மெட்டுக்கள்,சூர்யாவின் துள்ளலான நடிப்பு,தமன்னாவின் இளமைத்துடிப்பு(ஆகா நமக்குள்ளேயும் ஒரு T.R )ஜெகனின் டைமிங் காமடி என பலவற்றைக் கூறலாம்.ஆனாலும் இப்படம் பெரியளவில் வெற்றியடைய காரணம் சன் டிவி என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

2.உன்னைப்போல் ஒருவன்: கமல் மோகன்லால் போன்ற சூப்பர் ஆக்டர்கள்,வித்தியாசமான கதைக்களம் போன்றவற்றின் மூலம் அனைத்து விமர்சகர்களாலும் பாரட்டப்பட்ட படம்.இருந்தும் பாடல்கள்,காமடி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பெரியவெற்றியை அடையமுடியவில்லை.எனினும் இதுஒரு கிளீன்ஹிட்.

3.நாடோடிகள்:சசிகுமார் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்.உன்னை சரணடைந்தேன்,நெறஞ்ச மனசு படங்கள் மூலம் தன்னை நிரூபிக்க தவறிய சமுத்திரக்கனி இப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் முதல் வெற்றியைப் பெற்றிருந்தார்,சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரத்தில் வில்லனாக கலக்கியவர் இயக்குனராக ஜெயித்த படம்.ஜனரஞ்சகமான படமாக வந்து அனைவரது வரவேற்பையும் பெற்றது .இப்போது இந்தப் படத்தை சமுத்திரக்கனி தெலுங்கில் இயக்கி வருகிறார்.4.பசங்க: சசிக்குமார் தயாரிப்பில் வெளியான படம்.பாண்டிராஜின் இயக்கத்தில் வெளிவந்து விமர்சகர்களால் பாராட்டப்படடதோடு நல்ல வசூலையும் பெற்றது.சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.நேர்த்தியான திரைக்கதையும், புதியதொரு கதைக்களமும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர காரணமாய் இருந்தது.(நம்ம தளத்தோட பேருக்கும் இந்த படத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் ஹி ஹி )

5.பேராண்மை: ஜனநாதனின் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம்.ஆங்கில படங்களுக்கு நிகரானதொரு படமாக இயக்கி அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தார் ஜனநாதன்.ஜெயம் ரவியை இன்னொரு பரிணாமத்தில் காட்டிய படம்,ஐங்கரனின் மூன்று சறுக்கல்களின் பின்னர் அவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

வெண்ணிலா கபடி குழு,ஈரம்,ரேணிகுண்டா,நான் கடவுள் என்பன நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவு வெற்றி பெறாதவை.சிவா மனசுல சக்தி,கண்டேன் காதலை போன்றன காதலை மையமாக வைத்து எடுக்கப் பட்ட ஜனரஞ்சகமான படங்கள்.சுமாரான வசூலையும் திரட்டின.எதிர்பார்ப்பை எகிறவைத்து டர்ரான படங்கள் என்று பார்த்தால் வில்லு ,படிக்காதவன், சர்வம்,பொக்கிஷம்,கந்தசாமி,ஆதவன்,வேட்டைக்காரன் என்பவற்றைக் கூறலாம்.இவற்றில் சிலவற்றை சம்பந்தப்பட்டவர்கள் வெற்றியென மார்தட்டினாலும் அவை கிளீன்ஹிட்ஸ் அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். வேட்டைக்காரன் ரிலீசாகி பத்து நாட்களே ஆனாலும் இதன் இரண்டாவது வாரவீழ்ச்சி இது விஜய்க்கு இன்னொரு தோல்விப்படமே என்பதை உறுதி செய்கிறது. "2009"இல் நடிகர்கள்" பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்


13 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

உங்களுக்கு ஆங்கிலப் படங்கள் மாதிரி எனக்குத் தமிழ் படங்கள்.

வருஷம் 1-2 பார்த்தால்/பார்க்க முடிந்தால் அதிசயம்.

Unknown said...

தொடர்ந்து கலக்குங்கள்...,

வெற்றி said...

//(நம்ம தளத்தோட பேருக்கும் இந்த படத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் ஹி ஹி ) //

உங்க பதிவ பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒரு சின்னபையன் காதுக்குள் எப்பூடி என சொல்வது போல் இருக்கும்..
அதுக்கு இதுதான் காரணமா..ம்ம்ம்..

அ.ஜீவதர்ஷன் said...

ஹாலிவுட் பாலா

//உங்களுக்கு ஆங்கிலப் படங்கள் மாதிரி எனக்குத் தமிழ் படங்கள்.

வருஷம் 1-2 பார்த்தால்/பார்க்க முடிந்தால் அதிசயம்.//

நல்லவேளை தப்பித்து விட்டீர்கள்

..............................

பேநா மூடி

//தொடர்ந்து கலக்குங்கள்...,//

நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//உங்க பதிவ பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒரு சின்னபையன் காதுக்குள் எப்பூடி என சொல்வது போல் இருக்கும்..
அதுக்கு இதுதான் காரணமா..ம்ம்ம்..//

ஒரு பதிவை பார்க்கும் போதே தெரிந்து விட்டால் பிறகெதற்கு எல்லாப்பதிவையும் பார்த்தீங்க பெரிய மனிதரே ? சின்னபுள்ள சமாச்சாரம் என்று தெரிந்தும் தொடர்ந்தும் பதிவுகளைப் படிக்க உங்களுக்கு வேற வேலவெட்டி இல்லையா?

Paarvai said...

As you said Sify have declared SUN Movies are hits on their Hits and Misses column.
Eppadi ithellam ungala mudiyuthu

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//உங்க பதிவ பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒரு சின்னபையன் காதுக்குள் எப்பூடி என சொல்வது போல் இருக்கும்..
அதுக்கு இதுதான் காரணமா..ம்ம்ம்..//


நீங்கள் எனது தளத்தை சின்னப்புள்ளைத்தனமாக உள்ளது என்று கூறுகிறீர்கள் என்று நான் கருதியதால்தான் முதலில் உங்களுக்கு கோபத்தில் பின்னூட்டம் போட்டேன்.

ஆனால் ஒரு ஆங்கிளில் பார்க்கும் போது நன்றாக சொல்வது போலும் இருக்கிறது. எது எப்பிடியோ உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நான் பிழையாக விளங்கியிருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன். நான் சரியாக விளங்கியிருந்தாலும் முன்னர் போட்ட பின்னூட்டத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

வெற்றி said...

உங்களுக்கு இவ்ளோ கோவம் வருமா? நான் இப்போதான் உங்களுடைய பதிலை பார்த்தேன்.நான் உங்களின் பதிவுகள் எனக்கு பிடித்தமையால் தான் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தேன்.

//உங்க பதிவ பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒரு சின்னபையன் காதுக்குள் எப்பூடி என சொல்வது போல் இருக்கும்..
அதுக்கு இதுதான் காரணமா..ம்ம்ம்..//

இது எனக்கு தோன்றிய ஒரு உணர்வு.அவ்வளவே.சிறுவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை ஆனதால் அதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு மனபிம்பம் ஏற்படும்.இதுதான் நான் சொல்ல வந்தது.

மனதில் இருந்ததை ஒளிக்காமல் பேசியதற்கு நன்றி.மன்னிப்பெல்லாம் எதற்கு கேட்கிறீர்கள் அண்ணா?

அ.ஜீவதர்ஷன் said...

வெற்றி

//மன்னிப்பெல்லாம் எதற்கு கேட்கிறீர்கள் அண்ணா?//

உப்பு திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேண்டும் , அதேபோல் தப்பு செய்தவன் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும் , im toooooooo sorry ......

அ.ஜீவதர்ஷன் said...

velanaiTamilan

//As you said Sify have declared SUN Movies are hits on their Hits and Misses column.
Eppadi ithellam ungala mudiyuthu//

sify பக்க சார்பான இணையதங்களில் முதலிடத்திலிருக்கும் ஒரு தளம்,அவதானித்துப் பார்த்தீர்களானால் தெரியும். நீங்கள் சொன்ன பின்னர்தான் நான் பார்த்தேன், ரொம்ப நன்றி....

ஞானப்பழம் said...

பேராண்மை முதல்நாள் முதல் காட்சி பார்த்தேன்(ஆதவனுக்கு டிக்கெட் கிடைக்காமல்தான்!).. படம் எனக்குப் பிடித்திருந்தது... சற்று வித்தியாசமாக இருந்தாலே என்னை கவர்ந்துவிடும்.. ஆனால் அது கண்டிப்பாக flop ஆகும் என்றே நினைத்தேன்! நம் மக்களுக்கு அதெல்லாம் புரியாது என்று நினைத்தேன்.. ஆனால் இந்த அளவுக்கு ஓடியதே அதிசயம்!!

Ramesh said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அ.ஜீவதர்ஷன் said...

Ramesh

//இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//

நன்றி , உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)