Wednesday, December 23, 2009

சரித்திர நாயகன்மக்கள் திலகம், புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்(வாத்தியார்) அவர்களின் 22 ஆவது நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி 22 விடயங்கள்.

1) எம்.ஜி.ஆர் என்பதன் விரிவாக்கம் - மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

2) பிறந்தது - 17 /1 /1917 நாவலப்பிட்டிய , இலங்கை.

3) மறைந்தது - 24 /12 /1987 சென்னை,இந்தியா

4) முதல்ப்படம் - சதிலீலாவதி

5) இறுதிப்படம் - மதுரயை மீட்ட சுந்தர பாண்டியன்

6) தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருது பெற்ற நடிகர் , ரிக்சாக்காரன் படத்துக்காக,1972

7) எம்.ஜி.ஆர் 136 படங்கள் நடித்திருந்தாலும் 'எங்கவீட்டுப்பிள்ளை' திரைப்படம் இவரது உச்ச வெற்றிபெற்ற படமாகும்.

8) ஜப்பான்,சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு முதல் முதல் படப்பிடிப்புக்காக சென்ற முதல் நடிகரும், அங்கு ரசிகர் மன்றங்கள் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட நடிகரும் எம்.ஜி.ஆர் அவர்களே .

9 ) நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என்பன எம்.ஜி.ஆரே இயக்கி நடித்த மிகப்பெரும் வெற்றிப்படங்கள்.

10) இவர் சரோஜாதேவி, ஜெயலலிதாவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 27 படங்கள்

11) இவர் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி , ஆனால் இந்தப்படம் சரியாகப்போகவில்லை.

12) யாழ்ப்பாணத்துக்கு ஒரே ஒரு தடவை சரோஜாதேவி சகிதம் எம்.ஜி.ஆர் சென்றுள்ளார், அப்போது வீதியெங்கும் திரண்ட மக்கள் அவருக்கு அமோக வரவேற்ப்பு வழங்கினர்.

13) எம்.ஜி.ஆர் தனது கலைவாரிசாக இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களை அறிவித்திருந்தார்.

14) எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின்னரே எம்.ஜி.ஆர் ஆல் வசனங்களை சரியாக உச்சரிக்க முடியாமல் போனது. சுடப்பட்டபின்னரும் சுடப்படமுன்னருமாக எம் .ஜி.ஆர் வசனம் பேசிய படம் காவல்க்காரன்.

15) இறக்கும்வரை ஒரு துப்பாக்கி குண்டை தனது தொண்டைக்குழியில் தாங்கியபடியே சினிமாவில் நடித்தும் , அரசியலில் ஜெயித்தும் வந்தார்.

16) எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்துள்ளார்.

17) தொடர்ந்து மூன்று முறை முதல்வரான ஒரே தமிழக முதல்வர் இவர்தான்.

18) எம்.ஜி.ஆர் முதல்வராகிய மூன்று தடவைகளும் வேறு வேறு தொகுதிகளிலேயே ஜெயித்துள்ளார். அரிப்புக்கோட்டை ,மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி என்பனவே அவர் ஜெயித்த தொகுதிகள்.

19) எம்.ஜி.ஆர் இறக்கும் வரை எம் .ஜி.ஆர் ஆல் உருவாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க ஒரேயொரு லோக்சபா தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்தது ,1980

20) தமிழ் இயக்கங்களுக்கு , குறிப்பாக புலிகளுக்கு பணமாகவும், வேறு தார்மீக உதவிகளாகவும் எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் இன்றும் அவர்களால் நன்றியுடன் பேசப்படுகிறது

21) சென்னை மற்றும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகங்கள் எம்.ஜி.ஆருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுத்து கௌரவித்தன.

22) எம்.ஜி.ஆர் இறந்த பின்னர் இந்திய அரசால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

16 வாசகர் எண்ணங்கள்:

Paarvai said...

Thanks for the info. I always had question about where did he born.
I am one of your Blog reader, and I really enjoying your writings. Keep up the good work brother.

அ.ஜீவதர்ஷன் said...

velanaiTamilan

//Thanks for the info. I always had question about where did he born.
I am one of your Blog reader, and I really enjoying your writings. Keep up the good work brother.//

thanks,wel come

Unknown said...

எல்லோருக்கும் பார்க்கும்படியாக படம் நடித்த ஒரே நடிகர்.

சிறுவர் முதல் பெரியவர் வரை மதிக்கும் கலைஞர

Yoganathan.N said...

மூன்றெழுத்தில் என் மூசிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் - எம்.ஜி.ஆர் எப்போதும் தமது படங்களின் மூலம் நம்முடனே இருப்பார்...
உங்களுக்காக:

http://www.starajith.com/media_display.php?id=1524

http://www.starajith.com/News/dec2409dm.jpg

கிரி said...

MGR பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி..

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவரை தவிர எவருமில்லை (ஒரு சில குற்றசாட்டுகள் இருந்தாலும்)

Unknown said...

ஒரு சந்தேகம் எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்துக்காக தேசிய விருது பெற்றதாக படித்த ஞாபகம்... ஒரு தடவை சரி பார்க்க முடியுமா...

ஞானப்பழம் said...

முதலில், "எம்.ஜி.ஆர் இலங்கைத் தமிழனா?" எனக்கு இத்தனை நாள் தெரியாது!! அதனால்தான் புலிகளுக்கு அவ்வளவு ஆதரவு அளித்தாரா?

நாவலபிட்டிய, தமிழர் பகுதியா? கண்டி? ஏனென்றால் கண்டியில் ஒரு முருகன் கோவில் உள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன்..

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//எல்லோருக்கும் பார்க்கும்படியாக படம் நடித்த ஒரே நடிகர்.

சிறுவர் முதல் பெரியவர் வரை மதிக்கும் கலைஞர//

எம்.ஜி.ஆரை விமர்சித்தவர்கள் பலர் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அவர்களை கண்டுகொள்வதில்லை

....................................

கிரி

//MGR பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி..

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவரை தவிர எவருமில்லை (ஒரு சில குற்றசாட்டுகள் இருந்தாலும்)//

உண்மைதான்...

...................................

பேநா மூடி

//ஒரு சந்தேகம் எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்துக்காக தேசிய விருது பெற்றதாக படித்த ஞாபகம்... ஒரு தடவை சரி பார்க்க முடியுமா...//

நீங்கள் 100 % நம்பலாம் எம்.ஜி.ஆர் ரிக்சாக்காரனுக்கே தேசிய விருது வாங்கியவர், அதேபோல் மந்திரி குமாரி படத்திற்காக ஜனாதிபதி சிறப்புப்பரிசு பெற்றிருக்கிறார்.

................................
ஞானப்பழம்

//முதலில், "எம்.ஜி.ஆர் இலங்கைத் தமிழனா?" எனக்கு இத்தனை நாள் தெரியாது!! அதனால்தான் புலிகளுக்கு அவ்வளவு ஆதரவு அளித்தாரா?//

இல்லை இவர் ஒரு இந்திய வம்சாவளி இலங்கை பிரஜை ,

//நாவலபிட்டிய, தமிழர் பகுதியா? கண்டி? ஏனென்றால் கண்டியில் ஒரு முருகன் கோவில் உள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன்..//

மலைநாடில் இருக்கும் இடங்களே இவை ,இங்கு அதிகமாக இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றார்கள் ,இவர்கள் போத்துக்கீசர் காலங்களில் இலங்கைக்கு தேயிலை செய்கைக்காக கொண்டுவரப்பட்டவர்கள் .

உண்மையை சொன்னால் இவர்களை இலங்கை தமிழர்களை விட மோசமாகவே இலங்கை அரசாங்கம் நடத்துகின்றது ,இதற்கு காரணம் இவர்களது பச்சோந்தித்தனமான மலையக தலைமையே.

..................................

Yoganathan.N

//மூன்றெழுத்தில் என் மூசிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் - எம்.ஜி.ஆர் எப்போதும் தமது படங்களின் மூலம் நம்முடனே இருப்பார்...//


நிச்சயமாக

ஞானப்பழம் said...

எல்லா விதமான தமிழ் மக்களையும் சேர்த்து, இலங்கையில் தமிழார் மட்டும் எத்தனை சதவீதம் இருப்பார்கள்?

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//எல்லா விதமான தமிழ் மக்களையும் சேர்த்து, இலங்கையில் தமிழார் மட்டும் எத்தனை சதவீதம் இருப்பார்கள்?//

17.8 வீதமான தமிழர்கள் ( 3500000 ) வாழ்வதாக 2001 ஆம் ஆண்டு கணிப்புக்கள் கூறினாலும் ,இந்த தொகை புலம்பெயர்ந்த ,மற்றும் யுத்தத்தில் இறந்தவர்களால் குறைவாகவே இருக்குமென்று நம்புகிறேன் .

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

//புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)//


உங்களுக்கும் எனது புதுவருட நல் வாழ்த்துக்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து விருதளித்ததற்கு நன்றிகள்

அஹோரி said...

பொன்மனச் செம்மல் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது.

அ.ஜீவதர்ஷன் said...

அஹோரி

//பொன்மனச் செம்மல் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது.//

நிச்சயமாக

r.v.saravanan said...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இந்த வரிகளை உண்மையாக்கியவர்

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan kudandhai

//இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்//

இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)