Sunday, November 8, 2009

T.R vs முதலை

இது நகைச்சுவைக்காக மட்டுமே அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டு திண்ணையில் T.R ம் சிம்புவும் தேநீர் பருகியபடி இருக்கிறார்கள் சிம்பு : அப்பா நாம வெளியிலபோய் ரொம்பநாளாச்சு ரெண்டுநாள் எங்கயாவது ஜாலிய போயிட்டு வரலாமா? T.R : ஆமாடா சிம்பு நானும் அதுதான் யோசிக்கிறன், நாம ஒருத்தரோட ஒருத்தர் பேசியே ரொம்ப நாளாச்சு அப்பிடியே ஜாலியா பேசிட்டே போகலாம், ஆனா வேறயாராவது நம்மகூடவந்தா இன்னும் நல்லாயிருக்குமே. சிம்பு : கவலைப்படாதிங்கப்பா நம்ம சந்தானம்கூட இன்னிக்கு சும்மாதான் இருக்கான்.போகும்போது அவனையும் கூட்டீற்றுப்போகலாம். T.R : சரிடா சிம்பு எங்க போறது? சிம்பு : கேரளாவரை போயிற்று வரலாம்பா. T.R : ஏன்டா நயன்தாரா ஞாபகம் ஏதாச்சும் வந்திச்சாடா? சிம்பு : நீங்கவேற அந்தப்பொண்ணு பிரபுதேவா வீட்டில ரம்லத்தோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்குது அதப்போய்..... சரி சீக்கிரம் புறப்படுங்கப்பா. இருவரும் சந்தானத்தையும் கூட்டிக்கொண்டு கேரளா போகும்வழியில் வாகனத்தினுள்ளே. சிம்பு : அப்பா நான் உங்க வீராசாமி பார்த்தேன் நீங்க தொழில்நுட்பத்தில இன்னும் வளரணும்பா. சந்தானம் : தொழில்நுட்பத்தில மட்டுந்தானாடா ? சிம்பு : நீவேற, அப்பா நீங்க நிறைய உலகசினிமா பாக்கணும் T.R : உலக சினிமான்னா? சந்தானம்: காலங்காத்தால இது உனக்கு தேவையா? சிம்பு : அப்பா வெளிநாட்டு படங்கப்பா? T.R : வெளிநாட்டுகாரங்கள்ல என்னமாதிரி கதை, திரைக்கதை..............................தயாரிப்புன்னு எட்டு வேலையையையும் யாராச்சும் ஒருத்தன் பாப்பானா? சந்தானம் : எட்டு வேலையும் யாரும் பாக்க மாட்டாங்க ஒரு வேலையையாவது உருப்படியா பாப்பாங்க. T.R : டேய் சந்தானம் நான் T.R அடா எனக்கு இணை ஆரடா? சந்தானம் : (மனதுக்குள்) ஆரம்பிச்சிட்டாண்டா சிம்பு : சரிப்பா நான் உங்ககிட்ட நடிச்ச படங்களைவிட நான் நடிச்சதில எதப்படம் உங்களுக்கு ரொம்பப்பிடிச்சபடம்? T.R : படம் என்னடா படம் ஜோடி நம்பர் வண்னில நடிச்சியேடா ஒரு நடிப்பு அத ஆஸ்கார்காரன் பாத்தான்னா ரகுமான்கிட்ட இருக்கிற ரெண்டு கப்பையும் புடுங்கி உங்கிட்டையே குடுத்திடுவாங்கடா? சந்தானம்: இப்பதான் ரொம்ப சரியாபேசிறீங்க சார். ஒரு அழகான குளத்தைக்கண்ட T.R வண்டியை நிறுத்தச்சொல்கிறார், மூவரும் இறங்கி குளத்தருகில் செல்கின்றனர். T.R : குளம் சுத்தமா இருக்கிடா சிம்பு ஒருநீச்சல் போடுவமா? சிம்பு : அதுக்கென்ன குளிச்சிட்டாப்போச்சு சந்தானம் : (மனதுக்குள் ) இன்னிக்காச்சும் குளியிங்கடா உள்ள நாத்தம் தாங்கமுடியல. மூவரும் குளிக்க தயாராகியபோது அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் ஓடிவந்து இந்தக்குளத்தில் ஒரு முதலை இருக்கிறது அது குளிக்கச்செல்பவர்களுக்கு கடிக்கக்கூடாத இடத்தில கடிச்சுப்போடும், அப்பிடிக்கடிச்சால் ஒரு நாள் முளுக்க குவாகுவா என்று கத்தியபடிதான் இருப்பீர்கள் என்று அறிவுரை கூறியும் கேளாமல் முதலில் சந்தானம் குளத்தினுள் பாய்கிறார். சிறிதுநேரம் சென்றபின் சந்தானம் குவாகுவா என்று கத்தியபடி கரைக்கு வருகிறார். இதைப்பார்த்த ஊர்க்காரர்கள் முதலிலேயே சொன்னோம் கேட்டீர்களா என்று கிண்டல் செய்கின்றனர். T.R : சிம்பு இவனுகளுக்கு நாம யாரெண்டு காட்டனும் நீ முதல்ல குளத்தில இறங்கு அப்புறமா நான் இறங்கிறன். சிம்பு : நீங்க முதல்ல இறங்கவேண்டியதுதானே என்னைஎதுக்கு முதல்ல போகச்சொல்றீங்க? T.R : படத்திலையிலும் சரி நியத்திலும் சரி நான்தாண்டா பைனல்டச் குடுப்பன்டா நீ முதல்லஇறங்கு. சிம்பு குளத்தில் குதிக்கிறார், சிறிது நேரத்தில் சிம்புவும் குவாகுவா என்று கத்தியபடி மேலேவருகிறார்.அருகிலிருந்தவர்கள் மேலும் கடுப்பேற்ற கோபமடைந்த T.R குளத்தினுள் பாய்கிறார். 15 நிமிடங்களுக்கு பிறகு T.R சாவகாசமாக சிரித்தபடி கரைக்கு வருகிறார், ஊர்க்காரர்களுக்கு எல்லாம் ஆச்சரியம்! திடீரென்று குளத்தின் மறுபக்கத்தில் ஒரு பெரியசத்தம், அனைவரும் ஆச்சரியத்தோடு அங்குபார்க்கையில்! அந்தமுதலை குவாகுவா என்று கத்தியபடி குளத்தைவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு ஓடுகிறது! அப்பிடின்னா நம்ம T.R ............ ? அட போங்கப்பா இதக்கூட நான்தான் சொல்லனுமா ?

6 வாசகர் எண்ணங்கள்:

Think Why Not said...

super sar... பின்னூறீங்க...

அ.ஜீவதர்ஷன் said...

Thinks Why Not - Wonders How


//super sar... பின்னூறீங்க...//

thanks

Admin said...

nice........

அ.ஜீவதர்ஷன் said...

இரா.சுரேஷ் பாபு

//nice........//

thanks for your complement.

r.v.saravanan said...

T.R : படம் என்னடா படம் ஜோடி நம்பர் வண்னில நடிச்சியேடா ஒரு நடிப்பு அத ஆஸ்கார்காரன் பாத்தான்னா ரகுமான்கிட்ட இருக்கிற ரெண்டு கப்பையும் புடுங்கி உங்கிட்டையே குடுத்திடுவாங்கடா?

ha....ha....

Kiruthigan said...

உலக சினிமான்னா..!!!?
சூப்பர்...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)