Thursday, November 19, 2009

சாதனைகளும் மைல்கற்களும்

இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. (இந்தியா 426/9,412/4 இலங்கை 760/7 ) 32 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து இந்தியா திணறியபோது இலங்கை இந்தியாவில் தனது கன்னி டெஸ்ட் வெற்றியை பெறப்போகின்றதோ என்றஎண்ணத்தை டிராவிட் யுவராஜ்,டோனியுடன் சேர்ந்து பெற்ற இணைப்பாட்டங்கள் மூலம் தகர்த்தார்.அதேபோல் இந்தியா பெற்ற ஓட்டங்களான 426 ஐ தாண்டி 344 ஓட்டங்களை மேலதிகமாக இலங்கை பெறுமென்று யாரும் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்கள்.இலங்கைக்கு அந்த சமயத்தில் வெற்றி வாய்ப்பு மீண்டும் உருவாகியதாயினும் சேவாக் , கம்பீர் ஆரம்ப இணைப்பாட்டமும் தொடர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்த கம்பீரின் ஆட்டமும் தொடர்ந்து ஆடிய சச்சின் , லக்ஸ்மனின் இணைப்பாட்டமும் இலங்கையின் கைகளில் இருந்த ஆட்டத்தை சமநிலைக்கு இட்டுச்சென்றது. முதல் நாள் ஆட்டத்தின் முதல் 15 ஓவர்கள் மட்டுமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த அகமதாபாத் ஆடுகளம் பின்னர் துடுப்பாட்டவீரர்களுக்கு சாதகமாக மாறியது. இதனால் துடுப்பாட்ட வீரர்கள் பந்துவீச்சாளர்களை வாட்டி வதைத்து விட்டனர் என்றே சொல்லலாம்.குறிப்பாக மஹேல, பிரசன்ன ஜோடியும் டிராவிட், டோனி ஜோடியும் சச்சின் லக்ஸ்மன் ஜோடியும் இந்திய இலங்கை பந்துவீச்சாளர்களையும் களத்தடுப்பாளர்களையும் வாட்டி எடுத்துவிட்டார்கள். மஹேல ஜெயவர்த்தன மகேலாவை ஆடவந்த தொடக்கத்தில் வேகப்பந்துவேச்சாளர்கள் ஆட்டமிழக்க செய்யும் சந்தர்ப்பம் உண்டு தவறவிட்டால் Match சை மறக்கவேண்டியதுதான் என்று நான் முன்னர் "கலக்கப்போவது யாரு " பதிவிலே குறிப்பிட்டதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.தன்னை இலங்கையின் டெஸ்ட் வரலாற்றின் தலை சிறந்தவீரரென மஹேல மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளார்.இவர் பெற்றுக்கொண்ட 275ஓட்டங்கள் இவரது டெஸ்ட் வரலாற்றில் பெற்றுக்கொண்ட ஆறாவது இரட்டிச்சதம் மற்றும் 12ஆவது 150+ ஓட்டமாகும்.இவர் பிரசன்ன ஜெயவர்தனவுடன் இணைந்து பெற்ற ஆறாவது விக்கட்டுக்கான 351 ஓட்டங்கள் இணைப்பாட்ட சாதனையுடன் மஹேல டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 இணைப்பாட்ட சாதனைகளில் தனது பெயரை இடம்பெறசெய்துள்ளார். 1.எந்தவொரு விக்கட்டுக்குமான சாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன் 2. மூன்றாம் விக்கட்டுக்கான சாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன் 3. நான்காம் விக்காட்டுக்கான சாதனை 437 ஓட்டங்கள்,திலான் சமரவீராவுடன் இணைந்து கராச்சி மைதானத்தில் பாகிஸ்தானுடன் 4. ஆறாம் விக்காட்டுக்கான சாதனை 351 ஓட்டங்கள் , பிரசன்ன ஜெயவர்த்தனவுடன் இணைந்து அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுடன் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 1.ஆறாம் விக்கட்டுக்கான சாதனை 218 ஓட்டங்கள், மகேந்திரசிங் டோனியுடன் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆபிரிக்கஅணியுடன். இன்னும் நிறைய விடயங்கள் மஹேலவைப்பற்றி எழுதவேண்டும், அதனை ஒரு தனிப்பதிவாக தரலாம் என்று நினைக்கிறேன். இப்போது நடந்து முடிந்த ஆட்டத்தைப் பற்றி பார்த்தோமானால் இந்த போட்டியிலே சில சாதனைகளும் சில மைல்கற்களும் புதிதாக உருவாகயுள்ளன. அவற்றை மேலோட்டமாக பார்த்தால் ...... இந்த ஆட்டத்தில் இடம்பெற்ற சாதனைகள் 1. ஆறாம் விக்கட்டுக்காக 72 ஆண்டுகளுக்கு முன்னர் டொன் ப்ரட்மனும் பின்கிலேடனும் பெற்ற இணைப்பாட்டமான 346 ஐ முறியடித்து மஹேல, பிரசன்னா ஜோடி 351 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று புதிய ஆறாம்விக்காட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை படைத்தது. 2.மஹேல 150 ஓட்டங்களை தாண்டியபோது ஆசிய நாடுகள் நான்கிலும்(இலங்கை, இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்) 150+ ஓட்டங்களை பெற்ற முதல் வீரரானார். 2. இந்தியாவில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டம் 760 /7 , இதற்கு முன்னர் இந்தியா 1986 ஆம் ஆண்டு கான்பூரில் இலங்கைக்கு எதிராக பெற்ற 676 /7 என்பதே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. 3.மஹேல பெற்றுக்கொண்ட 275 ஓட்டங்கள் இந்தியாவில் விருந்தினர் ஒருவர் ஒரு இன்னிங்சில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம், இதற்கு முன்னர் யூனிஸ் கான் 267 ஓட்டங்களை பெற்றிருந்தார். 4.இந்தப்போட்டியில் மொத்தமாக ஏழு சத்தங்கள் பெறப்பட்டன, இவை ஆசிய நாடுகளில் ஒரு போட்டியில் பெறப்பட்ட அதி கூடிய சத்தங்கள் ஆகும். 5. மிஸ்ரா 58 ஓவர்கள் பந்து வீசி வழங்கிய 203 ஓட்டங்கள் அகமதாபாத்தில் ஒரு பந்து வீச்சாளர் ஒரு இன்னிங்சில் கொடுத்த அதி கூடிய ஓட்டமாகும், இதற்கு முன்னர் விட்டோரி 57ஓவர்கள் பந்துவீசி 200 ஓட்டங்களை விட்டுகொடுத்திருந்தார். 6.இரண்டாம் விக்கட்டுக்காக டில்சானும் சங்ககாரவும் பெற்ற 112 ஓட்டங்கள் இணைப்பாட்டம் அகமதாபாத்தில் இரண்டாம் விக்கட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும் . 7.இந்தப் போட்டியில் மொத்தமாக 1598 ஓட்டங்கள் பெறப்பட்டது, இது அகமதாபாத் மைதானத்தில் பெறப்பட்ட அதிக ஓட்டமாகும்.மற்றும் இந்தியாவில் பெறப்பட்ட இரண்டாவது கூடிய ஓட்டமாகும், முன்னர் பாகிஸ்தான்,இந்தியா அணிகள் பெங்களூரில் 1609 ஓட்டங்களை பெற்றிருந்தனர். மைல்கற்கள் 1. டிராவிட் 177 ஓட்டங்களை பெற்றவேளையில் 11000 ஓட்டங்களை தனது டெஸ்ட் வரலாற்றில் பெற்றுகொண்டார், இதனை சாதித்த 5 ஆவது வீரர் இவர் , இதற்குமுன்னர் போடர், லாரா, சச்சின், பாண்டிங் ஆகியோர் 11000 ஓட்டங்களை பெற்றவீரர்கள் பட்டியலில் உள்ளனர். 2. மஹேல 253 ஓட்டங்களை பெற்றவேளையில் 9000 ஓட்டங்களை கடந்தார் , 9000 ஓட்டங்களை பெற்ற 9 ஆவது வீரர் இவர்,மற்றும் 9000 கண்ட முதல் இலங்கை வீரர் மற்றும் 4 காவது ஆசியவீரர் என்ற பெருமையையும் தனதாக்கி கொண்டார் ,முன்னர் சச்சின், டிராவிட், கவாஸ்கர் 9000 கண்ட ஏனைய ஆசியவீரர்கள். 3 . தோனி 2000 ஓட்டங்களை கடந்தார் 4. ஹர்பஜன் 1500 ஓட்டங்களை கடந்தார், இதன் மூலம் 1500 ஓட்டங்களுக்கு மேலும் 300 விக்கட்டுக்கு மேலும் பெற்ற சகலதுரைவீரர்கள் பட்டியலில் 12 ஆவது வீரராக தன்னை பதிவு செய்துகொண்டார். 5.மகேலாவும் டிராவிட்டும் தமது 27 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டனர் இதன்படி அதிகசதம் பெற்றவர்கள் பட்டியலில் கரி சோபசை முந்தி 9 ஆம் இடத்தில் உள்ள ப்ரட்மனுடன் தம்மை இணைத்துள்ளனர் , அதே போல் மஹேல தான் பெற்ற ஆறாவது இரட்டை சத்தத்துடன் அதிக இரட்டைசதம் பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள மியான்டாட்,அத்தபத்து ,சங்ககார ஆகியோருடன் தன்னை இணைத்துள்ளார். 6 . டிராவிட் தனது 76 ஆவது சென்சரி இணைப்பாட்டத்தை பெற்றுக்கொண்டார். 7.சச்சின் சர்வதேச அரங்கில் தனது 30000 ஓட்டங்களை பூர்த்திசெய்தார். 8 . மஹேல, பிரசன்னா இந்தியாவுடனும் டிராவிட்,டோனி,கம்பீர் இலங்கையுடனும் தமது அதிகூடிய ஓட்டங்களை பெற்று கொண்டனர். 9. பிரசன்னா ஜெயவர்த்தன தனது முதல் 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 10.மஹேல இந்த ஆட்டத்தில் பெற்ற 275 ஓட்டங்களுடன் இந்த ஆண்டு ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்துள்ளார், சமரவீர முதலில் ஆயிரம்ஓட்டங்களை கடந்தவீரர். 11. வெலகெதர 4 /87 எனும் தனது சிறந்த பந்துவீச்சு பெறுதியை பெற்றுக்கொண்டார். மட்டையான ஆடுகளம்( dead pitch ) என வர்ணனையாளர்கள் கூறினாலும் இந்திய , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆடுகளங்களில் 80% ஆன ஆடுகளங்கள் இப்படித்தான் இருக்கும் , அதனால்தான் இந்தியா , பாகிஸ்தானில் போட்டிகள் அதிகமாக வெற்றிதோல்வியின்றி முடிவடைகின்றன . அடுத்த போட்டிக்கு சிறப்பான ஆடுகளத்தை தயார் படுத்துகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

2 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

சாதனைகள் ஓகே , என்றாவது ஒருநாள் இன்னும் ஒருவர் கைக்கு போகும், பட் ...... ஒரு விடயம் ... சச்சின் டெண்டுல்கர் இந்த மட்சில ரொம்ப ரொம்ப கேவலமாய் விளையாடி இருக்றார் . என்பதி ஆறு சதம் எடுத்தும் , ஆசை விடவில்லை. பிரட்மன் ஏன் நூறு சராசரி எடுக்கவில்லை என்று தெரியும் தானே. ஓன்லி ஒன் மோர் இன்னிங்க்ஸ் விளையாடி இருந்தால் போதும் ..... பட் ஹி இஸ் ரியல் கிரிக்கெட்டர்.

சச்சின் - உங்க பெயரில நீங்களே ப்ளக் மார்க் போட்டு கொண்டீங்க

சாரி திஸ் இஸ் ஹுமன் nature

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//சாதனைகள் ஓகே , என்றாவது ஒருநாள் இன்னும் ஒருவர் கைக்கு போகும், பட் ...... ஒரு விடயம் ... சச்சின் டெண்டுல்கர் இந்த மட்சில ரொம்ப ரொம்ப கேவலமாய் விளையாடி இருக்றார் . என்பதி ஆறு சதம் எடுத்தும் , ஆசை விடவில்லை. பிரட்மன் ஏன் நூறு சராசரி எடுக்கவில்லை என்று தெரியும் தானே. ஓன்லி ஒன் மோர் இன்னிங்க்ஸ் விளையாடி இருந்தால் போதும் ..... பட் ஹி இஸ் ரியல் கிரிக்கெட்டர்.//

YAA IT'S TRUE

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)