Tuesday, November 10, 2009

விக்ரமுடன் இலியானா,சுவாதி...!



விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி, விக்ரம் கையைவிட்டுப்போனதாக கூறப்பட்ட "யாவரும் நலம்" புகழ் இயக்குனர் விக்ரம்குமார் இயக்கம் "24 " திரைப்படத்தில் விக்ரமே நடிக்கிறார் என்பதுதான். விக்ரமுக்கு பதில் அஜித் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2005 ஆம் ஆண்டு "அந்நியன்" வெற்றிக்குப்பின் விக்ரம் நடித்த "மஜா", "பீமா" சொதப்பியநிலையில் இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்ட "கந்தசாமி" முழுமையான வெற்றிப்படமாக அமயாததாலும் விக்ரமும் அவரது ரசிகர்களும் பெரியதொரு வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் செல்வராகவனின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் செய்தி பலருக்கு ஏமாற்றத்தையே தந்தது. செல்வராகவன் சிறந்த இயக்குனர்தான் ஆனால் அவர் படம் வெளிவர குறைந்தபட்சம் ஒருவருடமாவது ஆகும்.இந்த நிலையில் விக்ரம் விக்ரம்குமாரின் இயக்கத்தில் நடிக்கஇருந்த "24 " திரைப்படத்தில் விக்ரமுக்கு பதில் அஜித் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.ஆனால் இந்தச்செய்தியில் உண்மை இல்லை என்றும் இப்போது லடாக்கில் படப்பிடிப்பில் இருக்கும் விக்ரம் மார்கழி மாதம் "24" படப்பிடிப்பில் கலந்து கொள்வாரென்றும் கூறப்பட்டுள்ளது.

விக்ரம் இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கிறார், பெயரிடப்படாத செல்வராகவன் படத்தில் "சுப்ரமணியபுரம்" புகழ் சுவாதியும் "24" திரைப்படத்தில் இலியானாவும் விக்ரமுடன் ஜோடி சேர்கின்றனர்.படத்துக்குப்படம் கெட்டப்பை மாற்றும் வழக்கம் கொண்ட விக்ரம் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரேநேரத்தில் இரண்டு பாடங்களில் நடிப்பது இதுவே முதற்தடவை. செல்வராகவன் படம் 2011 வரை இழுபட்டாலும் 2010 இல் ராவணா, "24" என்பன வெளியாகும் பட்சத்தில் விக்ரமுக்கும் அவரது ரசிகர்களுக்கும் 2010 ஒரு நல்ல ஆண்டாக அமையலாம். நீண்டகால போராட்டத்திற்குப்பிறகு கிடைத்தஇடம், தவறவிடமாட்டார் என்று நம்புவோம்......

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)