Saturday, November 21, 2009

மீண்டும் சூ(னா)மி?

ஏழு தடவை உலகசம்பியன், போர்முலாவண்ணின் அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரர் வரலாற்றின் தலைசிறந்த மோட்டார்கார் ஓட்டப்பந்தயவீரர் என வர்ணிக்கப்படும் மைக்கல் ஷூமேக்கர் மீண்டும் போர்முலாவண் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக முன்னாள் போர்முலாவண் காரான ஜோர்டானின் உரிமையாளர் ஜோர்டான் தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு போர்முலாவண் பந்தயத்தில் இருந்து ஒய்வுபெற்றபின்னர் மீண்டும் ஷூமேக்கர் 3 ஆண்டுகள் கழித்து களமிறங்க தயாராகியுள்ளார். ஷூமேக்கரின் ஓய்வின் பின்னர் சோபையிழந்த போர்முலாவண் மீண்டும் சூடுபிடிக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது . ஆனால் இந்ததடவை ஷூமேக்கர் ஓடப்போவது பெராரிக்காக இல்லை, அதற்குபதில் இந்த ஆண்டு பிரவுன் ஜி பி என்ற பெயரில் அறிமுகமாகி சாம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மன் நிறுவனத்திற்காகவே ஓடவுள்ளார். இந்த ஆண்டு பிரவுன் ஜி பி என்ற பெயரில் பந்தயத்தில் கலந்து கொண்ட இந்த நிறுவனம் வரும் ஆண்டுகளில் மெர்சிடிஸ் டீம் என்னும் பெயரில் கலந்து கொள்ளவுள்ளது. ஜெர்மனி தயாரிப்பான மெர்சிடிஸ் பென்ஸ் இஞ்சினை பயன்படுத்திய மக்லாரன் மற்றும் பிரவுன் ஜி பி நிறுவனங்களுக்காக ஓடிய இங்கிலாந்து வீரர்கள் லூவிஸ் ஹமில்டன், ஜென்சன் புட்டன் ஆகியோர் இறுதி இரண்டு ஆண்டுகளும் சம்பியனானதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் இஞ்சினை பயன் படுத்துவதற்கு ஜெர்மனி வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஜேர்மன் நிறுவனமான பிரவுன் (மெர்சிடிஸ் டீம்) இனிவரும் காலங்களில் ஜேர்மன் வீரர்களையே ஒட்டவைப்பது என்று முடிவெடுத்துள்ளது, இதன்படி முதலாவதாக நிக்கல் ரோஸ்பேர்க் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது ஷூமேக்கரிடமிருந்தும் சாதகமான பதில் கிடைத்திருப்பதால் ஷூமேக்கர் முதன்மை டிரைவராக மெர்சிடிஸ் டீம் நிறுவனத்துக்காக ஓடுவார் என்று எதிர்பர்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு மாஸாவுக்கு ஏற்பட்ட காயத்தின் பின்னர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தயாரான ஷூமேக்கர் கழுத்துவலியை காரணம் காட்டி பங்கேற்காவிட்டாலும் உண்மையில் பெராரியுடனான சிலபிரச்சனைகளே ஷூமேக்கர் ஓடாததற்கு காரணம் என்று கூறப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஷூமேக்கர் ஒய்வு பெற்றபோது பெராரிக்கு மனேஜராக இருந்து அதே ஆண்டு பெராரியை விட்டுவிலகிய ரோஸ் பிரவுன்தான் இந்த மெர்சிடிஸ் டீம் நிறுவனத்தின் உரிமையாளர்(இவரது காலத்தில் ஷூமேக்கர் 5 தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்). இதேநேரம் மக்லாரன் நிறுவனத்துடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் இருப்பதால் மெர்சிடிஸ் நிறுவனம் தனது எஞ்சினை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மக்லாரனுக்கு வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சாம்பியனாக வந்த ஹமில்டம், புட்டன் ஆகியோர் மக்லாரனுக்கு ஓடுவது அவர்களுக்கு பலம்,அதேபோல் பெராரியில் ஐந்து ஆண்டுகள் பெராரிக்காக சிறப்பாக ஓடும் மாஸாவும் ஷூமேக்கரின் முன்னாள் போட்டியாளரும் இரண்டுமுறை உலகசாம்பியனுமான அலோன்சோவும் இருப்பது அவர்களுக்கு பலம்(அலோன்சோ பெராரிக்கு ஓடுவது ஷூமேக்கர் மெர்சிடிஸ் டீமில் சேர்ந்ததற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது ). இதனால் அடுத்த ஆண்டு மெர்சிடிஸ் டீம் ,பெராரி,மக்லாரன் அணிகளுக்கிலையில் நிச்சயம் ஒரு மும்முனை போட்டியை காணலாம். மீண்டும் களத்துக்கு வரும் ஷூமேக்கர் தனது பழைய வேகத்துடன் வருகிறார இல்லையா என்பதை 2010 ஆம் ஆண்டு மாசி மாதம் தெரிந்து கொள்ளலாம்.

4 வாசகர் எண்ணங்கள்:

thanu said...

we r warm welcome him-thanushan

எப்பூடி ... said...

thanu said

//we r warm welcome him-thanushan//

iam olso

dialog said...

sorry guys, no more SUMY for F1

எப்பூடி ... said...

dialog said

//sorry guys, no more SUMY for F1//

பிந்திய செய்தி

சுமேக்கரின் மனேஜர் கூறியதாவது "சுமேக்கர் முழு உடற்தகுதியுடன் உள்ளார், அவர் பெராரிக்கே ஓட அதிகமாக விரும்புகிறார், ஆனால் இரண்டு டிரைவர்கள் ஏற்கனவே இருப்பதால் மூன்றாவது டிரைவர் ஓட அதிகளவு பணத்தை பெராரி செலவு செய்யவேண்டிவரும் என்பதால் மேர்சிடிசுக்கு ஓடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது"

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)