Tuesday, November 3, 2009

விஜய்க்கு கிடைத்த கயிறு....

விஜய் தனது ஐம்பத்தோராவது படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க ஜெயம் ராஜா இயக்குவதாக ஆஸ்கார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு பாரிஜாதம் , சிவி படங்களுக்கு இசையமைத்த p.s.தரன் இசையமைக்கிறார். படத்தைப்பற்றிய ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆஸ்கார் தரப்பில் கூறியுள்ளனர். இந்தச்செய்தி விஜய் ரசிகர்களுக்கு வாயில் சக்கரைபோடும் விடயமே. இரண்டு பேருமே remake பிரியர்கள்.ராஜா இதுவரை எடுத்த நான்கு படங்களுமே remake படங்கள். அனைத்துப்படங்களுமே வெற்றிப்படங்கள்.தற்போது அவர் எடுத்துக்கொண்டிருக்கும் தில்லாலங்கடி கூட ஒரு remake படமே. remake பண்ணுவதில் பிரியதர்சனை விட இவர் கில்லாடி.இவர் அளவிற்கு யாரும் இதுவரை 100 வீதம் வெற்றிபெறவில்லை.இவரது சிறப்பம்சம் original படங்களை விட சிறப்பாக தனது remake படங்களை இயக்கியிருப்பார். சுப்பர் ஸ்டாராக ஆசைப்பட்டு action என்னும் கிணற்றில் விழுந்த விஜய் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வர முடியாமல் திண்டாடுகிறார். ஆனால் தொடர்ந்து மூன்று தோல்விகள் கொடுத்தும் சளைக்காமல் தனது அடுத்த இரண்டு படங்களையும் மீண்டும் action படமாகவே நடித்துக்கொண்டுள்ளார் விஜய். ஆனால் என்னஞானம் பிறந்ததோ தெரியவில்லை தனது அடுத்தபடத்தை ராஜாவிடம் கொடுத்துவிட்டார். விஜய்க்கு action என்னும் கிணற்றிலிருந்து வெளியில் வரக்கிடைத்திருக்கும் கயிறுதான் ராஜா. ராஜாவின் படங்கள் ஜனரஞ்சகமானவை action மிகக்குறைவாகவே இருக்கும். ஒரு இதமான் love story படம் முழுவது சுகமாக தொடர்ந்துவரும். ஆஸ்கார் ரவிச்சந்திரனும் அண்மைக்காலங்களில் தரமானபடங்களையே தயாரித்துள்ளார் என்பதால் இந்தத் திரைப்படம் அனைவரையும் கவரக்கூடியதாக அமையலாம். ஆனால் விஜய் ரசிகர்கள் action தான் வேண்டுமென்று அடம்பிடித்தால் ஒன்னும் பண்ணமுடியாது. விஜய் நம்ம கப்டன் மாதிரி போகவேண்டியது தான்.(அவர் தீவிரவாதிகளை வேட்டையாடுவார் இவர் உள்ளூர் ரவுடிகளை வேட்டையாடுவார்). விஜய்க்கு action இமேஜை மாற்றக்கிடைத்த சந்தர்ப்பம் இது. எடுத்த எடுப்பில் பாலா படங்களில் விஜய் நடிக்க முடியாது,அப்படி நடித்தால் விஜய் ரசிகர்களே விழுந்து விழுந்து சிரிப்பார்கள், அதற்காக விஜய் பாலா படங்களில் நடிக்க முடியாதென்றில்லை, படிப்படியாக தனது இமேஜை மாற்றவேண்டும்.ராஜா, முருகதாஸ், ராதாமோகன்,ஜெகநாதன், அமீர்,செல்வராகவன்,சசிகுமார்,கௌதம் மேனன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதன் மூலம் மெதுமெதுவாக விஜய் தன் இமேஜை மாற்றலாம். வேட்டைக்காரன் பற்றி சர்தாஜி ஜோக் அளவிற்கு ஜோக்குகள் இணையதளங்களில் உலாவி படத்தை காமடிபீசாக்கினாலும் படம் சன் வசமுள்ளது வெற்றிவாய்ப்பை கூட்டலாம். வேட்டைக்காரன் வெற்றியடைந்தால் விஜய் ராஜாவிடம் எப்படி கதை சொல்லப்போன கௌதம் மேனனிடம் திருப்பாச்சி,சிவகாசி dvd களை கொடுத்து அதில் உள்ள நல்ல சீன்களை பார்த்து கதை தயார் பண்ண சொன்னாரோ அதேமாதிரி ராஜாவிடம் மகேஷ்பாபு நடித்த ஏதாவதொரு மொக்கை aciton படத்தின் dvd ஐ கொடுத்து "இதமாதிரிப்பண்ணுங்க பாஸ்" என்று கூறாவிட்டால் சரி.

3 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
அ.ஜீவதர்ஷன் said...

எந்த நடிகராக இருந்தாலும் உங்களுக்கு பிடிக்காவிட்டால் கெட்ட வார்த்தையை பின்னூட்டலுக்கு பயன்படுத்தாதீர்கள். குறிப்பிட்ட நடிகர் பற்றி உங்களுக்கு குறைவான அப்பிப்பிராயம் இருந்தால் அதை நாகரீகமாக வெளிப்படுத்துங்கள்.

இது கெட்டவார்த்தை பயன்படுத்தி பின்னூட்டல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)