Sunday, November 29, 2009

சாம்ராட்ஜம் சரிகிறதா?

2005 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை பெடரர் ,நடால் தவிர யாரும் தரவரிசையில் முதலிடத்திற்கு வரவில்லை,அதேபோல் அண்டி முரே மட்டுமே ஓரிரு வாரங்களுக்கு 2 ஆவது இடத்தில் இருந்துள்ளார். பெடரர் 2004 முதல் 2008 நடுப்பகுதிவரை வைத்திருந்த NO 1 ஸ்தானத்தை 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடால் தனதாக்கிகொண்டார். ஆனால் ஒரு வருடத்தினுள் மீண்டும் தனது NO 1 இடத்தை கைப்பற்றிய பெடரர் தற்போதுவரை தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.அதேபோல் 2005 முதல் 2 ஆம் இடத்தில் இருந்துவந்த நடால் 2008 இன் நடுப்பகுதியில் முதலிடத்தை கைப்பற்றினார்,ஆனால் 2009 பிரெஞ்சு தோல்வியின் பின்னர் தனது முதலிடத்தை இழந்த நடால் தனது இரண்டாவது இடத்தையும் அண்டி முறேயிடம் இழந்தார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக ஆட்டாததால் முரே தனது இரண்டாவது இடத்தை மீண்டும் நடாலிடம் பறிகொடுத்தார். 2005 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை நடால் வென்றது முதல் இறுதியாக நடந்த அமெரிக்கன் ஓபன்வரை இடம்பெற்ற 19 கிரான்ஸ்லாம் போட்டிகளில் 17 போட்டிகளை இவர்கள் இருவரில் ஒருவரேனும் வென்றுள்ளனர்(பெடரர் - 11 , நடால்- 6 ).அதே போல் 2004 முதல் ஆண்டுக்கு ஒன்பது போட்டித்தொடர்கள் இடம்பெறும் ATP World Tour Masters 1000 போட்டித்தொடரில் ஆறு அல்லது ஏழு போட்டித்தொடர்களை இருவரில் ஒருவரேனும் கைப்பற்றியிருப்பார்கள். ஆனால் இறுதியாக இடம்பெற்ற நான்கு ATP World Tour Masters 1000 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இவர்களில் ஒருவரேனும் வென்றுள்ளார்(பெடரர்- சின்சினாட்டி ஓபன் ). இறுதியாக தற்போது லண்டனில் இடம்பெற்ற Year-End Championship போட்டித்தொடரில் பெடரர் அரையிறுதியிலும்,நடால் தகுதிகான் சுற்றிலும் தோற்று தொடரைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் போட்டிகளில் இரண்டாம்நிலை வீரர்களான டெவிடன்கோ,டிஜோகொவிக் போன்ற வீரர்களே பட்டங்களை வெல்கின்றனர். நான்கு வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த பெடரர்,நடால் சம்ராட்ஜம் முடிவுற்றுவிட்டதா? இவர்கள் இருவரும் தமது NO1,NO2 ஸ்தானங்களை இழப்பார்களா? இப்படி பலவிதமான கேள்விகள் அதிகமானவர்களுக்கு எழுந்துள்ளது. நடால் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தோல்வியின் பின்னர் காயங்களால் அவதிப்பட்ட நடால் நீண்ட நாட்களுக்கு பின்னரே மீண்டும் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். அவர் மீண்டும் வந்து விளையாடிய 6 போட்டிதொடர்களில் ஒரே ஒருமுறை இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றதே இவரது அதிகூடியபெறுதி. இவரது ஆட்டங்களில் வழமையான போராடும் குணம், மற்றும் தன்னம்பிக்கை என்பன மிஸ்ஸிங். இன்னும் கொஞ்சகாலம் ஓய்வெடுத்திருக்கலாமென்றே தோன்றுகின்றது. இவருக்கு இன்னமும் விளையாட்டை விட்டுபோகும் வயது வரவில்லை , மற்றும் இவருக்கு சாதகமான களிமண்தரை தொடர்கள் (மொண்டி கார்லோ ,ரோம் மாஸ்டர்ஸ்) அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளன ,இன்னமும் அவர் சாதிப்பதற்கு நிறைய இருக்கின்றது, 23 வயது மட்டுமேயான நடால் நிச்சயம் மீண்டுவருவார். பெடரர் நடாலளவிற்கு மோசமாக இவரது பெறுபேறுகள் இல்லை என்றாலும் அமெரிக்கன் ஓபன்வரை நல்லநிலையிலிருந்த இவரது form இறுதியாக இடம்பெற்ற மூன்று தொடர்களிலும் நன்றாக இல்லை, இதற்கு இவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரு போட்டிகளிலும் விளையாடாதது காரணமாக இருக்கலாம். மற்றும் இவர் அண்மைக்காலங்களாக இரண்டாம்நிலை வீரர்களுடன் அதிகமாக தோற்றுவிடுகிறார் , இதற்கு காரணம் இவரது பலமான backhand ஆட்டம் அண்மைக்காலமாக இவருக்கு மோசம் செய்வதே ஆகும். இதனால் இவர் நன்றாக சேவிஸ்போடும் வீரர்களை பிரேக்பண்ண ரொம்பவும் சிரமப்படுகின்றார். சராசரியாக ஒரு டெனிஸ்வீரரின் உச்சதிறனை வெளிப்படுத்தும் வயதை பெடரர் தாண்டிவிட்டார்(28),ஆரம்பகாலங்களில் செலுத்திய ஆதிக்கத்தை பெடரர் அண்மைக்காலமாக செலுத்துவதில்லை, இதனால் பெடரர் ஓய்வை அறிவிப்பது நல்லது என்று பலரும் பெடரருக்கு அறிவுரைகூற ஆரம்பித்த நிலையில், லண்டனில் Year-End Championship போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பேட்டியளித்த பெடரர் " எனது உடற்தகுதி எனக்குதான் தெரியும், எனக்கு டெனிஸ் மீதுள்ள வெறி இன்னமும் குறையவில்லை, நான் விளையாடும் அனைத்துப்போட்டிகளிலும் தோற்றாலும் அடுத்த 4 வருடங்களுக்கு ஓய்வைப்பற்றி சிந்திக்கமாட்டேன் " என்று கூறி கருத்து கந்தசமிகளின் வாயை அடைத்துள்ளார். இவர் டெனிஸ் வரலாற்றின் சிறந்தவீரர் என முன்னணிவீரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் , அதிகளவு கிரான்ஸ்லாம் போட்டிகளில் வென்றவர்,ஆனாலும் பெடரர் இன்னமும் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு. அவற்றில் முக்கியமானவை 1 )ஆகாசியின் அதிக ATP World Tour Masters 1000 வெற்றிகளான 17 வெற்றிகளை முறியடிக்க இன்னமும் இரண்டு ATP World Tour Masters 1000 வெற்றிகள் வேண்டும்(பெடரர்-16). 2 )ATP World Tour Masters 1000 போட்டிகளில் ஷன்காய்,பாரிஸ்,மொண்டி கார்லோ ,ரோம் ஆகிய இடங்களில் ஒரு வெற்றியை கூட பெடரர் இன்னமும் பெறவில்லை, அதிகபட்சமாக ஆகாசி 7 இடங்களில் பெற்ற வெற்றியை முறியடிக்க பெடரர் மேலுள்ள இடங்களில் இரண்டு இடங்களிலாவது வெல்லவேண்டும். 3 )பீட் சாம்ராசின் சாதனைகளான அதிக Year-End Championship பட்டங்களையும்,அதிகமான ஆண்டு இறுதிகளில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததற்கான சாதனையையும் சமன்செய்ய பெடரருக்கு மேலும் ஒரு Year-End Championship பட்டமும், இன்னும் ஒரு ஆண்டு இறுதியில் தரவரிசையில் தரவரிசையில் முதலிடமும் தேவை. 4 )அதிகமான காலங்கள் தரவரிசையில் முதலிடத்திலிருந்தோர் பட்டியலில் சாம்ராசை முந்தி முதலிடத்துக்குவர இன்னமும் கிட்டத்தட்ட 32 வாரங்கள் பெடரர் முதலிடத்தில் இருக்கவேண்டும். இப்படியாக பல சாதனைகளை நெருங்கிக்கொண்டிருக்கும் பெடரர் நிச்சயம் மீண்டுவருவார் என்றே தோன்றுகிறது, பெடரர் கூறியதுபோல் அவரது உடற்தகுதி சிறப்பாகவே உள்ளது, இவரது அண்மைக்கால பிரச்சனைக்கு இவரது form , மற்றும் தன்னம்பிக்கை குறைவான(confidence leval) ஆட்டமுமே காரணம்(இதற்கு அண்மைக்காலமாக இவரது backhand ஆட்டம் கை கொடுக்காததே முக்கியகாரணம்).நிச்சயம் பெடரர் மீண்டுவருவார். 2010 இல் பெடரரும்,நடாலும் மீண்டும் தமது சாதனைகளை தொடர்வார்கள் என்றே தோன்றுகிறது,பார்க்கலாம்......

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)