Saturday, November 14, 2009

பாகிஸ்தானுக்கு சாதனை தென்ஆபிரிக்காவுக்கு சோதனை

டுபாயில் இடம்பெற்ற இரண்டு T/20 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் தான் T/20 சாம்பியன் என்பதை மீண்டுமொருதடவை நிரூபித்துள்ளது. T/20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் இலங்கையில் இரண்டு T/20 போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான் இம்முறை நியுசிலாந்தையும் விட்டுவைக்கவில்லை,முதல் ஆட்டத்தில் இம்ரான் நஸீரும் இரண்டாம் ஆட்டத்தில் உமர் அக்மலும் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியபங்காற்றினர். தொடர்ச்சியாக 7போட்டிகளில் வென்றுள்ள பாகிஸ்தான் தென்னாபிரிக்காவின் சாதனையை சமன்செய்துள்ளது.அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் ஒற்றுமையாகவும் போராட்டக்குணத்துடனும் விளையாடுவதைப்பார்த்தால் அபிரிடிதான் அடுத்த ODI,T/20 captain என சொல்லாமல் சொல்கிறது.விரைவில் அப்ரிடி தலைமையில் மீண்டும் வசீம்காலத்து பாகிஸ்தானை பார்க்கலாமென்றே தோன்றுகிறது. பார்க்கலாம்!.. என்ன சாபமோ தெரியாது தென்னாபிரிக்காவுக்கு இயற்கை எப்போதும் மோசம் செய்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் அது விட்டு வைப்பதில்லை. இன்றைய T/20 போட்டியில் அயர்லாந்துவீரர் மோகன்(85) துணையுடன் கொலிங்வூட்(57) சேர்ந்துபெற்ற இணைப்பாடம் மூலம் இங்கிலாந்து தென்னாபிரிக்காவுக்கு 202 ஓட்டங்களை இலங்க்காக நிர்ணயித்தது. இதில் தென்னாபிரிக்கவீரர் ஜொனத்தன் ட்ரோட்டும் 33 ஓட்டங்களை பெற்றிருந்தார்.பதிலுக்கு ஆடிய தென்னாபிரிக்கா வெற்றியிலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது மழை அறிகுறி தென்பட்டது இதனால் ஒவ்வொரு ஓவரும் எத்தனை ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று score bord இல் காண்பிக்கப்பட்டது. இதன்படி 12 ஓவர்கள் முடிவில் 118 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது தென்னாபிரிக்க 121 ஓட்டங்களை பெற்றிருந்தது. அப்போதே மழை பெய்ய ஆரம்பித்தநிலையில் 13 ஓவர் நிறைவில் 129 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் தென்னபிரிக்காவால் 3 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களையே 13 ஆவது ஓவர் நிறைவில் பெறமுடிந்தது. மேலதிகமாக ஒருவிக்கட்டை இழந்தால் பெறவேண்டிய ஓட்டம் இன்னும் கூடும் என்பதால் விக்கட்டுகளையும் இழக்காமல் ஓட்டங்களையும் பெறவேண்டிய நிலையில் இருந்த தென்னாபிரிக்காவால் அந்த ஓவரில் 129 என்னும் இலக்கை அடையமுடியவில்லை. அந்தநேரம் பார்த்து மழை அதிகரிக்க ஆட்டம் தடைப்பட்டது.பின்னர் தொடர்ந்து மழைபெய்ததால் போட்டி இங்கிலாந்துக்கு (D/L method) வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. மீதி 7 ஓவர்களில் 76 ஓட்டங்களை 7 விக்கட்டுகளை கையில் வைத்திருக்கும் தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்திற்கு சாதகமான எல்லைக்கோடுகள் சிறியதாகஇருந்த மைதானத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தும் மழையால் வெற்றியை தவறவிட்டது.. தான்பிறந்து வளர்ந்த தாய்நாடான தென்னாபிரிக்காவை குறைகூறி இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த பீற்றர்சன் மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்கு படாதபாடுபடுகிறார்.போதிய வீரர்கள் நல்ல form இல் இருப்பதால் பீற்றர்சன் மீண்டும் அணியில் இடம்பிடிப்பது அவளவு சுலபமில்லை என்று இங்கிலாந்து தரப்பு சாடைமாடையாக பீற்றர்சனுக்கு கூறியுள்ளது.தாய்நாட்டுக்கு துரோகம்செய்தால் உருப்படமுடியாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. அடுத்து ஜொனத்தன் ட்றோட்டும் தயாராகுங்கள்......

2 வாசகர் எண்ணங்கள்:

thanu said...

v ll back very soon-thanushan

எப்பூடி ... said...

thanu

//v ll back very soon-thanushan//

wel com

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)