Thursday, November 26, 2009

தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்?

ஆண்டுக்கு ஆண்டு தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கின்றபோதும் வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டே வருகிறது.இதற்கு என்னகாரணங்கள் என்று ஜோசித்தபோது சிலகாரணங்கள் என்மனதில் பட்டன, அவை அனைத்தையும் ஒரேபதிவில் விவாதிப்பது பதிவை பெரிதாக்கும் என்பதால் ஒவ்வொன்றாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தவகையில் முதலாவது காரணமாக நான்நினைப்பது தொலைக்காட்ச்சிகள். தொலைக்காட்சிகள் என்றால் அதுவம் முக்கியமாக சன்,கலைஞர்,ஜெயா ஆகியவை முக்கியமானவை,ஆரம்பகாலங்களில் சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் தாம் ஓளிபரப்பு உரிமையை வாங்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் மற்றைய படங்களை கண்டு கொள்ளாமலும் விட்டன. காலப்போக்கில் சன் ஓளிபரப்பு உரிமையை வாங்கும் படங்களை ஜெயாவும்,ஜெயா ஓளிபரப்பு உரிமையை வாங்கும் படங்களை சன்னும் தோற்கடிப்பதற்கு தமது தொலைக்காட்சிகளை பயன்படுத்தி வந்தன.இதற்கு டாப் 10 பாடல்கள், டாப் 10 படங்கள், திரைவிமர்சனம் போன்ற நிகழ்ச்சிகளை அதிகம் பயன்படுத்திவந்தனர். இந்தக்காலப்பகுதியில் சன்நெட்வேர்க் ஜெயாவைவிட பெரிது என்பதால்,சன் ஓளிபரப்பு உரிமையை வாங்கும் படங்களில் மோசமானபடங்கள் உட்பட அதிகமான படங்கள் நன்றாகபோக ஏனைய படங்கள் நல்லபடங்களாக இருந்தபோதும் அதிகமாக தோல்வியடைந்தன,இந்த நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா உதவியுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு முடிவுக்குவந்தது,அதாவது புதுப்படங்களை திரைவிமர்சனம் செய்யவோ,தரவரிசைப்படுத்தவோ தொலைக்காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்பதே அதுவாகும். இதில் ஜெயலலிதாவின் சுயநலம் இருந்தாலும் திரைப்படங்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் கஷ்டகாலம் யாரைவிட்டது வெறும் மூன்றுமாதகாலத்தில் கலைஞர் ஆட்சி வந்ததும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட சன் தனதுலீலையை மறுபடியும் காட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் மாறன்களுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இடையிலான பிரிவு கலைஞர்தொலைக்காட்சி என்ற புதியதொலைக்காட்சியை உருவாக்கியது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அங்குதான் திரைப்படங்களுக்கு சாபகேடு ஆரம்பமானது, கலைஞர் சன் அளவிற்கு பணத்தை அள்ளி இறைக்கக்கூடிய ஒருதொலைக்காட்சியாக இருந்ததும்,ஆட்சி அவர்கள் பக்கம் இருந்ததும் பல பெரியபடங்களின் உரிமையை வளைத்துப்போட உதவியது. அவளவு நாட்களும் தனிகாட்டு ராஜாவாக இருந்த சன்தொலைக்காட்சியால் கலைஞருடன் போட்டிபோட்டு ஜெயிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் sun picture என்ற பெயரில் படங்களை தாங்களே நேரடியாக வேண்டி வெளியிட ஆரம்பித்தது, இதனால் எந்த நல்லபடங்கள் போட்டிக்கு வந்தாலும் அந்தப்படங்களை முடக்கிவிட்டு தமக்கிருக்கும் ஊடக செல்வாக்கால் தாம் வாங்கும் படங்களை ஓரளவாவது ஓடச்செய்தனர். சன்னும் அதனது ஆதரவு ஊடகங்களும் sun picture வெளியிடும் படங்களை வெற்றி என்று அறிவித்தாலும் ஒருசில படங்கள் தவிர ஏனையவை பெரிதாக போகவில்லை என்பது உண்மை.இதற்கு கலைஞர் தொலைக்காட்சி sun picture படங்களில் இருந்து ஒரு சீனை கூட ஒளிபரப்பாதாதும் ஒருவகை காரணம். சன்னைப்போல் கலைஞர் தொலைக்காட்சி படங்களை நேரடியாக வேண்டி வெளியிடாவிட்டாலும் உதயநிதி தயாரிக்கும் படங்களையும், அழகிரியின் மகன் வாங்கி வெளியிடும் படங்களையும் ஓடவைப்பதற்கு படாதபாடுபடுகிறது , கலைஞர் தொலைக்காட்சியும் அதனது சார்பு ஊடகங்களும் இந்தப் படங்களை வெற்றி என்று கூறியபோதும் அவை எதுவும் வெற்றியடயவில்லை என்பதே உண்மை. இதற்கு சன் அந்தப் படங்களை கண்டுகொள்ளாமை முக்கியகாரணம். இதில் சோகமான விடயம் என்னவென்றால் சன்னோ கலைஞரோ வெளியிடும் அல்லது ஓளிபரப்பு உரிமையை வாங்கும் படங்களாவது ஓரளவு தப்பிவிடும்.ஏனைய படங்களின் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது, என்னதான் நல்ல படமாக இருந்தாலும் இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் அம்பேல்தான் என்னும் நிலைமை உருவாகிவிட்டது.இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஜெயித்த படங்களும் உண்டு என்றாலும் எண்ணிக்கையில் மிக குறைவு(நாடோடிகள்,பசங்க,பேராண்மை). இதனால் பல தயாரிப்பாளர்கள்,திறமையான இயகுனர்கள் மட்டுமின்றி பலபேருடைய உழைப்பும் வீணடிக்கபடுகிறது.மற்றும் மக்களையும் இவர்கள் முட்டாள்கள் ஆக்குகிறார்கள்,உதாரணமாக சொன்னால் சன்னில் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் படம் கலைஞரில் எட்டாவது இடத்தில் இருக்கும் அதுவே ஜெயாவில் நான்காவது இடத்தில் இருக்கும், அதேபோல் கலைஞரில் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் படம் சன்னில் எட்டாவது இடத்தில் இருக்கும் அதுவே ஜெயாவில் மூன்றாவது இடத்தில் இருக்கும். இப்படி மாறிமாறி படங்களை ஓவரு தொலைக்காட்சிகளும் தரவரிசைப்படுத்துவதால் எது நல்லபடம் எந்தப்படம் உண்மையில் ஓடுகின்றது என்ற குழப்பத்தில் அதிகமான மக்கள் திரைஅரங்குகளுக்கு செல்வதற்கு தயங்குகிறார்கள். இந்தத்தொலைக்காட்சிகள் தங்களுக்கு பிடிக்காத நடிகர்கள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களின் படங்களையும் ஒருவளி பண்ணிவிடுவார்கள்.(ஒரு தொலைக்காட்சியுடன் உறவாடினால் மற்ற தொலைக்காட்சிக்கு பிடிக்காது,பாவம் அஜித்தை எந்தத் தொலைக்காட்சிக்கும் பிடிக்காது) இதில் என்ன அநியாயம் என்றால் யாரோ ஒரு தயாரிப்பாளர்,இயக்குனர்,நடிகர்........ என ஒரு பெரிய கூட்டணியின் மாதக்கணக்கிலான உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதியை இருந்த இடத்திலிருக்கும் தொலைக்காட்சிகள் முடிவு செய்வதுதான், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தொலைக்காட்சிகளை விட்டால் வேறு வழியில்லை,தொலைக்காட்சிகளும் தமக்குள் இருக்கும் போட்டிகளை நிறுத்தப்போவதில்லை, இதனால் இனிவரும் காலங்களில் தமிழ் திரைப்படங்கள் அதிகமான தோல்விகளை சந்திக்க வேண்டிவரலாம். இதனால் பாதிக்கபடபோவது அந்த தொலைக்காட்சிகள் அல்ல, தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமாவும்தான். இதற்கு தயாரிப்பாளர் சங்கம்தான் ஒரு முடிவெடுக்கவேண்டும், என்ன செய்வது நம்ம கைப்புள்ள சொன்ன மாதிரி "சங்கமே அபராதத்திலதான் ஓடிக்கிட்டிருக்கு " என்னும் நிலையிலும்,சங்கம் கருணாநிதியின் காலடியில் கிடக்கும் கையாலாகாத பிள்ளையாக இருக்கும் வரையிலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் சினிமாவின் தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கான முதல்க்காரணம் நிச்சயம் தொலைக்காட்சிகள்தான் என்பது எனதுவாதம், அடுத்தகாரணத்தை வேறொருபதிவில் விவாதிப்போம். நன்றி

7 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

அருமையா சொன்னீங்க... இவனுங்க வெட்ட வெளிச்சத்துல போட்ர இந்த நாடகத்த தட்டிக் கேட்க்க ஆளே இல்லை... "மாசிலாமணி" திரைப்படத்த நான் எப்படி பாக்க முடியாம பாத்தேன்னு எனக்குதான் தேரியும்!! அந்த 50 ரூபாய எதாச்சு பிச்சக்காரனுக்கு போட்டிருக்கலாமான்னுகூட நிணச்சேன்.. ஆனா அதே படத்துக்கு சன் டி.வில ஒன்னாவது இடம் தரும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்!!!
அடுத்த காரணத்திர்க்கு காத்திருக்கிறேன்!!

Anonymous said...

//அந்த 50 ரூபாய எதாச்சு பிச்சக்காரனுக்கு போட்டிருக்கலாமான்னுகூட நிணச்சேன்..//

50 ரூபாயோடு பிழைதீர்கள்.. நான் 140 ருபாய் வீணடித்தேன்.. சொன்னா கேட்டாத் தானே... நம்ம கூட்டாளிங்க சரி இல்ல..

Unknown said...

இன்னும் சன் டிவி இல் நம்பர் ஒன் வருகிறதை பார்த்து நம்புற சனம் இருக்கு .....

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//அடுத்த காரணத்திர்க்கு காத்திருக்கிறேன்!!//

நன்றி,பதிவுதயார்.

....................

dialog

//இன்னும் சன் டிவி இல் நம்பர் ஒன் வருகிறதை பார்த்து நம்புற சனம் இருக்கு .....//


இன்னும் கொஞ்ச நாளைக்குதான்.

Yoganathan.N said...

//பாவம் அஜித்தை எந்தத் தொலைக்காட்சிக்கும் பிடிக்காது//

உண்மை நண்பரே... நான் அறிந்தவரை, அவர் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி தராததே காரணம் என்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை??? உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால், சொல்லுங்களேன்.
நன்றி.

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//உண்மை நண்பரே... நான் அறிந்தவரை, அவர் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி தராததே காரணம் என்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை??? உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால், சொல்லுங்களேன்.
நன்றி.//

அஜித் தொலைக்காட்சிகளின் காலையகங்களிற்கு வராததும் விஜய் ஒரு தொலைக்காட்சிவிடாமல் அனைத்து கலையகங்களுக்கும் சென்றதும் முக்கிய காரணம்.

chosenone said...

சிறப்பான பதிவு நண்பா !

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)