Wednesday, November 25, 2009

வைரமுத்து நல்லவரா கெட்டவரா?

முதலில் ஒருவிடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், எனக்கு கண்ணதாசனைவிட வைரமுத்துவைத்தான் அதிகம்பிடிக்கும்.வைரமுத்து அளவிற்கு விஞ்ஞானம்,தொழில்நுட்பம் , உலக அறிவு,வரலாறு தெரிந்த கவிஞர்கள் யாருமில்லை.ரகுமானின் வளர்ச்சியில் 30௦% ஆன பங்கு வைரமுத்துவினுடயது எனபதில் உறுதியாக இருப்பவன் நான்.வைரமுத்துவின் "கவிதை தொகுப்பு" மற்றும் அதனது ஒருபிரிவார "இந்தப் பூக்கள் விற்பனைக்கு இல்லை " என்பன எனது All Time Favourite.மற்றும் வைரமுத்துவை விமர்சிக்குமளவு தமிழறிவும்,கவதை ஞானமும் இல்லாதவன் நான்,ஆனால் எனக்கு சிலசந்தேகங்கள், அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தபதிவு. வைரமுத்துவின் உதவியாளராக அறிமுகமாகி பின்னர் பாடலாசிரியராகி "அவரவர் வாழ்க்கையில்"பாடல் மூலம் பிரபலமாகி "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு"பாடல் மூலம் விமர்சனங்களையும் சந்தித்த சினேகன் வைரமுத்து மீது ஒரு குற்றம் சுமத்தியுள்ளார், அதாவது தனக்கு இதுவரை பல இடங்களிலிருந்தும் பாராட்டுகள் வந்தபோதும் வைரமுத்துவிடமிருந்து இதுவரை ஒரு பாராட்டு கூட வரவில்லை என்பதே அதுவாகும். சினேகன் கூறிய வருத்தம் அவரது சொந்த அனுபவம்,ஆனால் இது வைரமுத்துமீது விழும் முதல் குற்றச்சாட்டல்ல.வைரமுத்து இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்துவதில்லை என்ற குற்றசாட்டு பலதடவை வந்துள்ளது.மற்றும் அதிகமான இளம்கவிஞர்கள் வைரமுத்துவுடன் நல்ல மாதிரியாக இல்லாமை வைரமுத்து புதுக்கவிஞர்களுக்கும் தனக்குமிடையில் ஒரு இடைவெளியை வைத்திருப்பது போல் தோன்றுகிறது. எனக்கு வைரமுத்து கவிஞனாக உயர்ந்து நிற்கும் அளவிற்கு நல்லமனிதனாக இல்லையோ என்ற ஐயமுள்ளது. ஏன் என்றால் இதுவரை தனக்கு முந்தியகால எந்த கவிஞரையும் வைரமுத்து பெரிதாக புகழ்ந்து பேசியதில்லை,சில இடங்களில் நேர்காணல்களில் கட்டாயமாக பதில் கூறவேண்டியநேரங்களில் பட்டும் படாமலும் பதில்கூறி சமாளித்திருக்கிறார்.கவியரசு என்ற கண்ணதாசனின் பட்டத்தின் இடையில்"பேர்" என்ற சொல்லை சேர்த்து கவிப்பேரரசு என்று கலைஞர் வழங்கிய பட்டத்தை தனக்கு போட்டுகொள்வது இவர் தன்னை கண்ணதாசனை விட பெரியவர் என்று காட்டிக்கொள்ள என்று கூறுபவர்களும் உண்டு. இளம்கவிஞர்களை வைரமுத்து மதிக்கவில்லை என்பதற்கு மஜ்னு படத்தில் அவர்எழுதிய "இருக்கும் கவிஞர்கள் இம்சைபோதும் என்னையும் கவிஞன் ஆக்காதே " என்றவரிகள் சான்று. இவரது தமிழிலும்,உச்சரிப்பிலும்,தோற்றத்தில் இருக்கும் கம்பீரம் இவரது நடத்தையில் இல்லை என்றே தோன்றுகிறது.இதற்க்கு உதாரணம் ஜெயலலிதாவுக்கு வீரப்பனை கொன்றதற்கு நடந்த பாராட்டுவிழாவில் ஜெயலலிதாவை பாராட்டிபேசியதற்காக கருணாநிதி வைரமுத்துவை ஓரம்கட்டுவதற்காக பா.விஜய்க்கு "வித்தக கவிஞர்"பட்டம் கொடுத்தார். இதனால் எங்கே கருணாநிதியிடம் இருந்த ஆதரவு போய்விடுமோ என்று பயந்து இன்றுவரை கருணாநிதி செல்லுமிடமெல்லாம் சென்று அவர் புகழை பாடிவருகிறார்.இந்த விடயத்தில் கண்ணதாசன் உண்மையான கவிஞனாக தன்னை அடையாளம் காட்டிகொண்டுள்ளார், தனது கருத்துக்கு முரண்பாடாக இருந்தால் அண்ணா,எம்.ஜி.ஆர்,கலைஞர் என்றெல்லாம் பார்ப்பதில்லை நேருக்கு நேர் தாக்குவார் (பாடல்களிலும்,பத்திரிகைகளிலும் ) முக்கியமான விடயம் இளையராஜாவுடனான பிரிவு, நான் இங்கு வைரமுத்துவிலா இளையராஜாவிலா பிழை என்பதை பற்றி வாதாடவரவில்லை. ஆனால் ஒருவிடயம் 12 வருடங்களாக வராத பிரச்சினை மணிரத்தினம் ராஜாவுடன் பிரச்சினைப்பட்டு ரகுமானை அறிமுகப்படுத்தியபோது வைரமுத்துவுக்கு வந்ததுதான் ஜோசிக்கவைக்கிறது. அதுதவிர வைரமுத்து வேறு யாருடனும் மனஸ்தாபப்படவில்லையா? அல்லது மீண்டும் சேரத்தான் இல்லையா? இளையராஜா பற்றியும் அவரது சுபாவம் பற்றியும் மற்றவர்களுக்கு தெரிந்ததைவிட வைரமுத்துவுக்கு அதிகமாக தெரிந்திருக்கும்,அப்படி இருந்தும் என் இந்த ஈகோ? வைரமுத்துக்கு இளையராஜாவின் தேவை தீர்ந்துவிட்டதால்தான் ஏறிவந்த ஏணியை தள்ளிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் கேட்கலாம் வைரமுத்துவின் வரிகள் இளையராஜாவுக்கு உதவவில்லையா என்று,நிச்சயமாக இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வந்த பாடல்கள் போல் அதற்கு முதல் வந்ததுமில்லை இனிமேல் வரப்போவதுமில்லை.ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் 12 வருடங்களுக்கு முன் ராஜா வைரமுத்துவை நிழல்கள் (1980) படத்தில் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் தன்னை நிரூபிக்க 12 வருடங்கள் காத்திருந்திருக்கவேண்டும் (1992 இல் ரகுமான் இவரை பயன்படுத்தும் வரை ). ராஜாவின் மெட்டுக்கு பாட்டெழுத வாலி,புலமை பித்தன், முத்துலிங்கம் என பலகவிஞர்கள் இருந்தார்கள் ஆனால் வைரமுத்துவின் வரிகளுக்கு மெட்டுபோட யார் இருந்தார்கள்? பிழை யார் மீது வேண்டுமென்றாலும் இருக்கட்டும் ஆனால் வைரமுத்து வயதிலும் அனுபவத்திலும் ராஜாவை விட இளையவர், மற்றும் ராஜாவை விட நன்கு படித்தவர், அறிவாளி இவர் நினைத்திருந்தால் இந்தப்பிரச்சினைக்கு ஒரு முடிவெடுத்திருக்கலாம் ஏனோதெரியவில்லை அந்த எண்ணம் வைரமுத்துவிடம் இருப்பதாக தெரியவில்லை,அவரது மகனின் திருமணத்திர்காவது ராஜாவை நேரில் சென்று அழைப்பார் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.இப்படி பலவிடயங்களில் எனக்கு வைரமுத்துவைப் பற்றி தவறான எண்ணங்கள் இருந்தாலும் வைரமுத்துவை என்னால் வெறுக்கமுடியவில்லை, அதுதான் அவரது தமிழின் பலம் என்று நினைக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் நான் வைரமுத்துவை விமர்சிக்கவில்லை,எனது எண்ணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவளவுதான்.

12 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

நல்ல பதிவு..

Gurusamy said...

I strongly agree with your comments

அஹோரி said...

//இப்படி பலவிடயங்களில் எனக்கு வைரமுத்துவைப் பற்றி தவறான எண்ணங்கள் இருந்தாலும் வைரமுத்துவை என்னால் வெறுக்கமுடியவில்லை, அதுதான் அவரது தமிழின் பலம் என்று நினைக்கிறேன்.//

நல்லவன் , கெட்டவன் ன்னுலாம் பாக்க தேவை இல்ல ... தமிழ வளைச்சு வளைச்சு பேசுனா போதும் . அப்படித்தான?
நானும் விமர்சனம் பண்ணல. என் கருத்தை தெரிவிச்சிக்கிறேன் அவ்வளவுதான்.

thanu said...

viramuthu santhrpavathi avalavu than.thanushan

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//நல்ல பதிவு..//

நன்றி

-------------------------------------------

அஹோரி said...

//நல்லவன் , கெட்டவன் ன்னுலாம் பாக்க தேவை இல்ல ... தமிழ வளைச்சு வளைச்சு பேசுனா போதும் . அப்படித்தான?
நானும் விமர்சனம் பண்ணல. என் கருத்தை தெரிவிச்சிக்கிறேன் அவ்வளவுதான்.//

தனிப்பட்டபண்பு என்பது வேறு திறமை என்பது வேறு,ஒருவரை தனிப்பட்ட ரீதியில் பிடிக்காவிட்டாலும் அவரது திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும், இதுவும் என் சொந்த கருத்து.

--------------------------------------
Gurusamy

//I strongly agree with your comments//

thanks a lot

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் ஒரு பிழைக்கத் தெரிந்தவர்.
எங்கும் எப்படியும் 'கரை'வார்.

அ.ஜீவதர்ஷன் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris)

//இவர் ஒரு பிழைக்கத் தெரிந்தவர்.
எங்கும் எப்படியும் 'கரை'வார்.//


--------------------------

thanu said

//viramuthu santhrpavathi avalavu than.thanushan//

-------------------------

both of you are correct, thank for your visit

அஹோரி said...

//ஒருவரை தனிப்பட்ட ரீதியில் பிடிக்காவிட்டாலும் அவரது திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்//


அடேங்கப்பா.
மூஞ்சில யாராவது பலமா ஒரு குத்து விட்டா கூட , அவரு பலத்த பாராட்டுற நீங்க ரொம்ப நல்லவர்.

அ.ஜீவதர்ஷன் said...

//அடேங்கப்பா.
மூஞ்சில யாராவது பலமா ஒரு குத்து விட்டா கூட , அவரு பலத்த பாராட்டுற நீங்க ரொம்ப நல்லவர்.//

மூஞ்சில பலமா குத்துவது உங்க ஊரில திறமையோ ?

ஞானப்பழம் said...

ஹிஹி.. மூஞ்சில குத்து!!.. இந்த மாதிரி எதாவது அக்ஷன் காட்டுங்கப்பா!!

வைரமுத்து ஒரு அடங்காப்பிடாரிதான்!! எழுதும் கவிதை அழகாய் இருந்தாலும் அவனுக்கு தப்பெருமை அதிகம்!! சாரி.. மரியாதை தெரியாதவனுக்கு என் மரியாதை அவ்வளவுதான்!!

ஆனால், "வானம் எனக்கொரு போதிமரம்.. நாளும் எனக்கது சேதி தரும்.." என்ற வரிகளில் சிலிர்க்காத தமிழரும் உண்டோ?(உண்டு என்றால் அதை இங்கே சொல்லி தயவு செய்து எனக்கு நோஸ்-கட் தரவேன்டாம்!! :P)

'எப்புடி.." யின் கருத்தை வரவேற்கிறேன்

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//ஆனால், "வானம் எனக்கொரு போதிமரம்.. நாளும் எனக்கது சேதி தரும்.." என்ற வரிகளில் சிலிர்க்காத தமிழரும் உண்டோ?(உண்டு என்றால் அதை இங்கே சொல்லி தயவு செய்து எனக்கு நோஸ்-கட் தரவேன்டாம்!! :P) //

"அஹோரி" கிட்ட சொல்லுங்க அவர்தான் ரொம்ப பயங்கரமான ஆள். hi..hi..hi .....

அஹோரி said...

//மூஞ்சில பலமா குத்துவது உங்க ஊரில திறமையோ ?//

உதாரணம் சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது ...

//"வானம் எனக்கொரு போதிமரம்.. நாளும் எனக்கது சேதி தரும்.." என்ற வரிகளில் சிலிர்க்காத தமிழரும் உண்டோ?//

" இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது " ங்கிற வரிய கேட்டு கூட ரொம்ப பேர் சிலிர்த்து இருக்காங்கோ ...

என்னமோபா இளையராஜாவ மதிக்க தெரியாதவன் எல்லாம் மனுஷனே இல்ல.
அம்புட்டுதேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)