Tuesday, November 10, 2009

சென்னைக்கு பறந்துவந்த தனுஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் மதுரையில் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த தனுஸ் திடீரென்று சென்னைக்கு புறப்பட்டு வந்துவிட்டார். என்ன ஏதென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அவர் மாப்பிள்ளை திரைப்படத்துக்கான photo shoot க்கு வந்துள்ளாரென்று.ரஜினி நடித்த மாப்பிள்ளையின் ரீமேக்கில் நடிக்கும் தனுசின் மாமியாராக முன்னர் ஸ்ரீவித்யா நடித்த முக்கிய வேடத்தில் ஜெயப்பிரதா நடிக்கிறார். குட்டியை sun picture வாங்கிய சந்தோசத்திலிருக்கும் தனுஸ் மாப்பிள்ளையும் Hitesh Jabak புண்ணியத்தால் sun picture வசம் போகப்போகிறது என்பதால் இரட்டை சந்தோசத்திலுள்ளார்.பொல்லாதவன்,யாரடி நீ மோகினி , படிக்காதவன் என்று ஹிட்டுமேல ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் தனுஸ் சென்றவாரம் தனது மகனின் 2 ஆவது பிறந்தநாளை மாமனார் ரஜினயுடனும் குடும்பத்தினருடனும் சேர்ந்து கொண்டாடியுள்ளார். எல்லாம் யாத்ரா பிறந்த நேரம்....

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)